சினிமா cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சினிமா cinema லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 16 மே, 2025

தூத்துக்குடி திரையரங்கில் 'வாத்தியார்குப்பம்' – ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

Tamil Nadu updates photo news by Arunan journalist 


தூத்துக்குடி திரையரங்கில் 'வாத்தியார்குப்பம்' – ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!


தூத்துக்குடி மக்களின் வாழ்க்கையை பின்னணியாகக் கொண்டு உருவான 'வாத்தியார்குப்பம்' திரைப்படம், திரையரங்குகளில் வெற்றிக்கொடி நாட்டி ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதன் வெற்றியை  கொண்டாடும் நிகழ்ச்சி, தூத்துக்குடி கிளியோபேட்ரா திரையரங்கில் நேற்று 15-5-2025 சிறப்பாக நடைபெற்றது.




, திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் மணிகண்டன்  தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

"வாத்தியார் குப்பம்" நம்ம ஊருக்கே சொந்தமான வெற்றி!!!

 படத்தின் இயக்குநர் ரஹ்மத் சாகிப் வந்ததும், அவரை திரைப்பட நடிகர்கள் பொன்னாடை அணிவித்து மரியாதையுடன் வரவேற்றனர். இயக்குநர் உரையில், "இந்த வெற்றி, தூத்துக்குடி மக்களின் ஆதரவு இல்லாமல் சாத்தியமில்லை. இது நம்ம ஊருக்கே சொந்தமான வெற்றி!" என்றார்.

நிகழ்வின் முக்கியத் தருணமாக, படத்தில் வில்லன் வேடத்தில் அசத்திய Dr. VPM, நடிகர்கள் மகேஷ்குமார், மாரிமுத்து, சக்திவேல் உள்ளிட்ட பலர்  ஒன்றுகூடி, வெற்றிக்கேக் வெட்டி ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டனர்.



விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள், படத்தில் தங்கள் பகுதிகள், மக்களின் உணர்வுகள், சம்பவங்கள் வர்ணிக்கப்பட்டிருக்கின்றனவென்று பெருமையுடன் தெரிவித்தனர். "இந்தப் படம் நம்ம ஊரு குரலை உலகுக்குச் சொல்லுது!" என ஒருவர் பெருமிதத்துடன் கூறினார்.,


வாத்தியார் குப்பம் திரையுலக வரலாற்றில் ஒரு மறக்கமுடியாத திரைப்படமாக பதியப்போகிறது.


தூத்துக்குடி லீக்ஸ் 

வெள்ளி, 6 செப்டம்பர், 2024

தளபதி vs இளைய தளபதி கோட் திரைப்படம் விமர்சனம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by Arunan journalist 

🤷🏼‍♀️ லீக்ஸ் சினிமா விமர்சனம்!!!

2024 செப் 5திரைக்கு வந்த நடிகர் விஜய் நடித்து வெங்கட் பிரபு இயஙகிய

கோட் விமர்சனம் 



விஜய் சினேகா ஜோடி குடும்ப மாக வெளிநாடு செல்ல அங்கு விஜயை எதிரிகள்  துரத்த தனது மகனை இழந்ததும் விஜய் சினேகாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க அது வளர்ந்தும் விஜய் சினேகா 

பேசி கொள்ளவே மாட்டார்களாம்??



பின்பு விஜய் வெளிநாடு சென்ற போது இறந்த போன் மகனை அவரது சாயலுடன Ai தொழில்நுட்ப உதவியுடன் இன்னொரு இளமை விஜய்  பாத்து அதிர்ச்சி ஆகி தன் மகன் விஜய் என அறிந்து வில்லன் கூட்டத்தில் இருந்து தப்பித்து தனது குடும்பத்துடன் சேர்க்கிறார்?





ஆனால்?

இளமை தோற்றம் உள்ள மகன் விஜய் அப்பாவிற்கு எதிராக அவர் வில்லன் ஆளாக மாறி ஒவ்வொராக கொலை செய்ய தொடங்கிறார்.?



ஒரு கட்டத்தில் வயதான அப்பா விஜய்க்கு  தெரிய வர இறுதியில் வில்லன் பக்கம் நிற்காதே...

 தனது மகனை திருந்த சொல்லி 

"என் ரத்தம் டா நீ "

என்று அப்பா விஜய் கெஞ்சி யும் கேட்கவில்லை  so கிரிக்கெட் மைதானத்தில் பாம் வைக்கும் மகன் விஜயை தனது மகனை துப்பாக்கியால் சுட்டு தள்ளுகிறார் 

கதை முடிகிறது??!!!!

பிரசாந்த் நடிப்பு!!!

இதில் வயதான விஜய் -ன் ரா உளபிரிவு ஃப்ரண்ட்ஸ் ஆக  பிரபுதேவா பிரசாந்த் பாஸாக ஜெயராம் 

இதில் விஜய் ஃப்ரண்ட்ஸ் ஆன பிரசாந்த் நடிப்பு ஒகே விஜய் உடன் எதிரிகளுடன் சண்டை யிடுகிறார் விஜய் உடன் சேர்ந்து  நல்லா டான்ஸ் ஆட்டம் போகிறார்?

 துக்கத்தில் அழுகிறார் அவ்வளவே!




வில்லன் மோகன்!!

தனது மனைவி மகன் இறந்த வில்லன் மேனன் கேரக்டரில் மைக் மோகன் நடித்துள்ளனர் 



நடிகை திரிஷா!!!

இதில் ஒரு குத்து பாட்டுக்கு நடிகை திரிஷா மகன் விஜயை உடன் ஆடியுள்ளார் முன்னாள் நடிகை லைலா மற்றும் மாளவிகா மேனன் வந்து போகிறார்கள் 

கேப்டன் விஜயகாந்த் 

படம் ஆரம்பத்தில் ரயில் சேஸிங் ..Ai தொழில்நுட்ப மறைந்த கேப்டன் விஜயகாந்த் வந்து போகிறார் 

அரிசியல் டயலாக்!!!

படம் அரசியல் என்றால்?

தளபதி vs இளைய தளபதி 

இடைவேளை கார்டு போடுகிறார்கள் 

தளபதி vs இளைய தளபதி 
தளபதி க்கு விடுக்கும் சவால்???என்றுஎடுத்து கொள்ளலாமா!!! 


வழக்கம் போல விஜய் வெயிட்டீங் என விஜய் டயலாக் வேற உள்ளது ?

வாகன சோதனையில் நடிகர் பிரேம்ஜி போலீஸில் மாட்டி கொண்டதும் பவர் பற்றி உதார் விட விஜய் கட்சி யின் கட்சி பெயர் கூட சொல்ல கூடாது ன் னு சொல்லிட்டாரே என கலாய்க்கிறார்கள்

யோகி பாபு வழக்கமான செல் போன் திருடனாய் நடித்து செல்போன் விற்க காந்தி நேரு இந்திரா காந்தி என கலாய்க்கிறார்கள்.

கிளைமாக்ஸ் சீனில் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தோனி சிவகார்த்திகேயன் ஆகியோர் வந்து போகிறார்கள் 

கடைசியில் ..பாத்ரூம் ல சிவகார்த்திகேயன் கஸ்டடியில் இருக்கும் வில்லன் மோகன் என்ன ஆனார் என்றே தெரியவில்லை?


பாக்கலாம் கோட் 

இடைவேளை வரை மட்டுமே!!!  

தல அஜித்  ?code வேர்டாம்

கடைசியில்.. இயக்குனர் வெங்கட் பிரபு வின் பஞ்ச் டயலாக் 

 விஜய் சொல்லும் டயலாக் 

ஏம்மா நீ யார் ஃபேன் ம்மா தல என சொல்ல ..?

தல என்பார் 

விஜய் ரசிகர்களுக்கு செம கடுப்பை உண்டு விட்டார் 

இயக்குனர் வெங்கட் பிரபு டோட்டல் டேமேஜ் பண்ணிவிட்டார் என்பது ரசிகர்கள் புலம்பல் 


புதன், 8 நவம்பர், 2023

கருப்பு பக்கம் திரைப்படம் விமர்சனம்

thoothukudileaks 9-11-2023

photo news by arunan journalist

திரைப்பட விமர்சனம்



நடிகர் & நடிகைகள்


வஜ்ஜுரா

பாபா சங்கர்

ராஜ் குமார்

சுமங்கலி சதீஷ்

கன்மேன் மீசை ஜெகதீஸ்

வக்கீல் செங்குட்டுவன்

நடிகைகள்

லீன்சி

சுகந்தி கோமஸ் 


இயக்குனர்

பிராட் வே சுந்தர் 


கருப்பு பக்கம்

கதை!!!...?


1

நாம் அன்றாடம் வாழ்வில் பயன் படுத்தி வரும் செல்போன் பற்றிய விழிப்புணர்வு 


2ஆதார் கார்டு க்யூ ஆர் கோடு யாருக்கும் எந்த விஷயத்திற்கும் பகிர்வு பயன்படுத்தி கூடாது 

3குறிப்பாக இளம் பெண்கள் தங்கள் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பதிவிடுவதால் அதன் மூலம் மொபைல் ஹேக்கர்கள் பேஸ் புதிய தொழில்நுட்ப முலம் ஆபாசமாக மார்பிங் செய்து பணம் பறிக்கலாம்

4  வேலை இல்லாமல் சுற்றும் இளைஞர்கள் லோன் ஆஃப் முலம் லோன் வாங்கினால் அவர்களின் தரவுகள் ஆதார் கார்டு சீனா கார்ன் வாங்கி வருவதாகவும் தைவான் ல் நாட்டில் இருந்து இளைஞர் பேரில் போதை மருந்து அனுப்பிவிட்டது போல் டெல்லி கஸ்டமஸ் மாட்டி விட்டதாகவும் ஜெயில் போகாமல் காப்பாற்ற பணம்  செல்போன் மூலம் பணம் அனுப்ப ஒன்லி பரிவர்த்தனை மிரட்டல் செய்யும் நெட் வொர்க் இருக்கிறது என்றும்?


5 ஒத்துவராத வர்கள் பிடித்து கையில் பச்சை குத்துதல் போல க்யூ ஆர் கோடு குத்தி அவர்களை தங்கள் கன்ட்ரோல் ஆக்டிவேட் பண்ணுவது போலவும் இது போன்ற எல்லாவற்றையும் காப்பாற்ற லோக்கல் எஸ்பி மாறுவேடம்அணிந்து கொலைசெய்து  காப்பாற்றி விடுகிறாரரர்ரரர்ர்

என் று சொல்ல இப்படி ஏகப்பட்ட கதைக்கரு வை எடுத்து சொல்ல முயற்சி எடுத்து உள்ளார்.


 இப்படி ஏகப்பட்ட கதை கருவை மக்களிடையே விழிப்புணர்வு செய்ய முயன்ற இருக்கிறார் இதற்காக வே இயக்குனர் பிராட்வே சுந்தர் பாராட்டலாம்..


இனி ...?

திரைப்பட த்தை போற்றி பாட்டுடி பெண்ணே ரேஞ்சல  பக்க வாத்திய மேளங்கள் யாராவது இருந்தால் படிக்காமல் இப்பவே.... ஜகா வாங்கி டுங்கள் 



பட் சிம்பிளாக ஒரேயொரு கதை கருவை எடுத்து கதையை டெவலப் பண்ணி இருந்தால் திரைப்படம் பார்த்து மக்கள் ரசிக்கும்படியாக இருந்து இருக்கும்


ஒரே  படத்தில் திரைப்படத்தில் ஏகப்பட்ட கதைக்கரு செலுத்த முயன்று முடியாமல் திணறியது அப்பட்டமாக தெரிகின்றது.


இரு நண்பர்களுக்கு மட்டுமே அடிக்கடி? செல்போன் மூலம் பணம் பறிக்க நடிகை பெயரில் பெண் குரல் பின்பு ஆண் குரல் மூலம் மிரட்டல் மீண்ட அவர்கள் திருந்தாமல் ஒவ்வொரு தடவையும் மிரட்டல் ஆளாவதும் ....



(டேய் வஜ்ஜுரா வை போய் பார்ப்போம்டா இரவில் மட்டுமே பைக்ல சுற்றும் இளைஞர்கள் பேசும் டயலாக் )

உடனே அடுத்த வீட்டில் குடியிருந்து வருபவர் போல ஹீரோ கண்ணாடி போட்ட எஸ்.பி யை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள் அவரும் அவுன்ஸ் வீதம் இல்லாமல் லிட்டர் கணக்கில்...அட்வைஸ் பண்ணி ஒரு கட்டத்தில் அவரே ஆன்லைன் மோசடி களை கண்காணிக்க அவ்வளவு போலீஸ் இல்ல கழட்டி விடுகிறார்.



ஒய்வு சைபர் கிரைம் அதிகாரி பாத்துதான் அவர் தான் வில்லன் யார் என்பதை ஹேக் கிங் செய்து கண்டுபிடிக்கிறாராம் ?

படத்தில் இது ஒன்று தான் நல்ல காமெடி 


பின் கிளைமாக்ஸ் ல உங்கள் அழிக்க ஒருத்தன் வருவான்டா... வருவான்டா கிழவன் ஒவர் பில்டப் நாமும் ஆர்வமுடன் பாத்தா? பெருத்த உடம்புடன் பாகுபலி கட்டப்பா நீண்ட வாள் உடன் ...

அட காமெடி கண்ணாடி எஸ்பி ? அங்கு மாணவியை சுற்றி யிருக்கும் சூசுகி பீட்ஸா டெலிவரி பாய்ஸ் ஆக தோற்றம் அளிக்கும்  நாலைந்து பேர் களை வாளை கொண்டு போட்டு தள்ளி மாணவியை காப்பாற்றுகிறாராம்?

 இதில் முகமுடி வேற  முகத்தில் இருபக்கமும் கருப்பு கரியை பூசி சகிக்க முடியல ..

இச்சம்பவம் உடனே டிவியில் வர மக்கள் பார்த்து பரவசம்  படத்தில் பாதியில் காணாமல் போன பாதிப்பு பெண்களும் டிவியில் பார்ப்பவதாக ஒரு வழியாக முடித்து உள்ளார்கள்.


ஆனா 

வில்லன் சைடில்

நெட் வொர்க் கேங்  சஊசகஇபஆய்ஸ்கள்  ஒருவர் கூட குறுந்தாடி வில்லன் உட்பட எந்த ஆயுதமும் இன்றி சுற்றுவார்களா!? நவீன காலத்தில் துப்பாக்கி  இருக்காதா ?

 இரண்டு நண்பர்கள் லேசாக அடித்தாலும்  தொப் என்று விழுந்து கெஞ்ச தொடங்கி விடுகிறார்கள்

வில்லன் ஆட்கள் அவ்வளவு வீக்?

 

 கடைசி வரை ஒரேயொரு சூட்கேஸ் தள்ளி செல்லும் வில்லனும் தொப் என்று விழ கட்டப்பா வாளால் சொருகி விடுகிறார்.

 


படத்தில் கதாநாயகி என்று யாராவது இருக்கிறாரா என தேடுகிறோம்.சுத்த வேஸ்ட்  படத்தில் பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் சில நடிகைகள் வந்து போகின்றன .


குறிப்பு

கருப்பு பக்கம் திரைப்படம் குறிப்பிடும் காட்சி அம்சமாக... துப்பாக்கி இல்லாத ? நம்ம கண்ணாடி காமெடி எஸ்பி அருகில் இருக்கும் பெரிய மீசையுடன் வலம் வரும் கன் மேன் ஜெகதீஸ் தான் 

ஆனால் இவருக்கு சின்ன டயலாக் கூட இல்லாமல் பிரேமில் அடிக்கடி வந்து அசத்தியுள்ளார்.



குசேலன் திரைப்படத்தில் வரும்  வைகைப்புயல் வடிவேலு வுக்கு டப் கொடுக்கிறார் 

வருங்கால ஜனாதிபதி அண்ணன் முருகேசன் வாழ்க வாழ்க ஸாரி வருங்கால அண்ணன் ஜெகதீஸ் வாழ்க வாழ்க வளமுடன் !!!!



இப்படி எல்லாம் கன்மென் ஜெகதீஸ் சொல்ல சொன்னதை சொல்லிட்டோம்.



செல்போன் ஹேக் பற்றி நடிகர் சிவா நடித்த திரைப்படம் மற்றும் விஷால் இரும்பு திரை வரிசையில் இந்த கருப்பு பக்கம் இடம் பிடிக்கிறது


பொறுமையுடன் ..

பார்க்க லாம்.




.

புதன், 6 ஏப்ரல், 2022

இளைய தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு பா ம க எதிர்ப்பு

 தமிழ்நாட்டில் பீஸ்ட் படம் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக வேண்டுகிறோம்.

ஒரு விசயத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லும்,பேசப்படும் ஒரு அளவற்ற ஆற்றல் மிக்க துறை சினிமாத்துறை. நல்ல விசயங்களை கருத்தாக சொன்னால் சிறப்பாக இருக்கும்.



ஆனால் மதங்களை,சாதி,சமயங்களை இழிவாக காட்டும் வழக்கம் தற்போது அதிகமாக உள்ளது.

அதில் நடிக்கும் நடிகர்கள் பல கோடிகள் சம்பளமாக பெற்றாலும் தான் நடிக்கும் படத்தில் யாரையும் புண்படுத்தாமல் நடிப்பதை தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.

குறிப்பாக விஜய்,சூர்யா போன்றோர் கவனிக்க வேண்டும்.உங்களுக்கு ரசிகர்கள் குறிப்பிட்ட மதம்,சாதியை சார்ந்தவர் அல்லாமல் அனைத்து மதம்,சாதிகளை சார்ந்த ரசிகர்கள் உள்ளனர்.

விஜய் நடித்த பீஸ்ட் படம் இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக காட்டி வெளிவருவதாகவும் அதனால் குவைத்தில் வெளியிட தடை உள்ளதாக தகவல் வருகிறது.இப்படி தகவல் பரவ விட்டால்தான் தங்கள் படம் ஓடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.இப்படத்தில் ஒருவேளை இச்செய்தி உண்மையாக இருப்பின் சர்ச்சைகுறியதை நீக்கி வெளியிடுங்கள்.இல்லையேல் தமிழக அரசு வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்..

முனைவர் ஷேக்முகைதீன்

மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர்

பாட்டாளி மக்கள் கட்சி

இவ்வாறு தெரிவித்துள்ளார்.




திங்கள், 17 ஜனவரி, 2022

இடிந்து போன ரஜினிகாந்த் dhanush ishwariya divorce

 


நடிகர் தனுஷ் - ஜஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ஆண்டு நடைபெற்றது இவர்களுக்கு யாத்ரா - லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திடீர் விவாகரத்து அறிவிப்பு திரையுலகில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனுஷ் மனைவி. ஜஸ்வர்யா சூப்பர் ஸ்டார் .ரஜினிகாந்தின் முத்தமகள் என்பதால் கூடுதல் அதிர்ச்சி தந்துள்ளது.




தற்போது தனுஷ் மற்றும் அவரது மனைவியும் ரஜினியின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதற்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் வெளியாகி சோஷியல் சமூக வலைதளங்களில் அதிர வைத்து வருகின்றன.


தனுஷிற்கும், ஐஸ்வர்யாவிற்கும் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில் தாங்கள் பிரிவு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், புரிந்து கொள்ள தங்களுக்கு போதிய கால அவகாசம் தேவை எனவும் இருவரும் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 ஆனால் இவர்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என பல விதமான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது.



 

 சினிமா நடிகைகள் தான் காரணமா? 



நடிகர் தனுஷ் பற்றி வந்த கிசு கிசுக்களில் பல உண்மையாகி உள்ளது.

நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கப்பட்டார் தனுஷ்.

 மேலும் இரவு பார்ட்டிகளில் தனுஷ் பிரபலமுன்னணிநடிகைகளுடன் திரிஷா - நயன்தாரா ஸ்ரேயா மற்றும் சுருதி ஹாசன் விஜய் டிவி  D Dதிவ்யதர்ஷினி ஆகியோர் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. 

இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், நான் அப்படியெல்லாம் இல்லை..

இனிமேல் இதுமாதிரி பிரச்சனை வராது என சமானம் செய்து விட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி வந்துள்ளார். இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் ஐஸ்வர்யா அதிரடி முடிவுகளை எடுத்து தனுஷ் இனி தப்பிக்க முடியாதவாறு அதிரடியாக செயல்பட்டார். 

அதில் இனி சென்னை தவிர்த்து வெளியில் எங்கே படப்பிடிப்புக்கு சென்றாலும் அவருடனே கூட செல்வது, இரவு பார்ட்டிகளுக்கு கணவன் உடன் செல்வது, குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் படப்பிடிப்புகளில் அவரும் கலந்து கொள்வது என முடிவு செய்து இதற்கு ஒப்பு கொள்ளவில்லை என்றால் விவாகரத்து செய்துவிடுவதாக தனுஷை எச்சரித்து, அதன்படி சமீப காலமாக செயல்பட்டு வந்தார்.


ஆனால் இருவரும் திருமணமாகி 16 ஆண்டுகள் சந்தோஷமாக தான் சமீபத்தில் தான் கடந்த இரண்டு வருடங்களாக இருவருக்கு இடையே பிளவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 



சமந்தா

தங்கமகன் படத்திற்கு பிறகு சமந்தாவுடன், தனுஷ் நெருக்கம் காட்டி வருவதாகவும், அதனால் ஐஸ்வர்யா - தனுஷ் இடையே மனகசப்பு உருவாகியதாகவும் கூறப்படுகிறது. சமந்தா - நாகசைதன்யா விவகாரத்து சமயத்திலும் அதன் பின்னணியில் தனுஷ் இருப்பதாக சில தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது.


 ரஜினி இளைய மகள் போட்ட ட்வீட


அதோடு சமீபத்தில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா, சமீபத்தில் நடிகர் சிம்புவிற்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதற்கு வாழ்த்து கூறி இருந்தார். 

ஏற்கனவே சிம்புவும், ரஜினியின் மகளும் காதலித்து வந்ததாக ஒரு வதந்தி பரவியது. சிம்புவுடனான காதல் முறிந்த பிறகு தான் ஐஸ்வர்யா, தனுஷ் திருமணம் நடைபெற்றதாகவும், ரஜினி மகளை திருமணம் செய்ய போகிறார் என்ற காரணத்தால் தான் ஆரம்பத்தில் சிம்பு, லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. இந்த விவகாரம் சமீபத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது தான் தற்போதைய விவாகரத்து முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.



இந்நிலையில் தான் மாமானார் ரஜினியின் வற்புறுத்தலின் பேரில் தான் போயஸ் கார்டனில் தனுஷ், பிரம்மாண்ட வீட்டை கட்டி வருகிறாராம். இதனால் கடன் பிரச்சனையில் தனுஷ் சிக்கியதாகவும், அந்த சமயத்தில் உதவாமல் ரஜினி கை விரித்து விட்டதாகவும், அதனால் மனவருத்தம் மற்றும் விரக்தியில் இருந்த தனுஷ், கடன் பிரச்சனையை சமாளிக்க ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த பிரச்சனையும் அவர்களின் விவாகரத்திற்கு காரணம் என கூறுகிறார்கள்.

இன்று காலை முதல் ரஜினிகாந்த் போயல்கார்டன் வீட்டில் இல்லை என்று கூறப்படுகிறது நடிகர் ரஜினி நிம்மதி தேடி எங்கேனும் சென்றிருப்பாரோ என்று கேள்வி எழுகிறது. தனது இளைய மகள் செளந்தர்யா விவகாரத்து அவருக்கு கவலை கொடுத்த நிலையில் மறுமணம் பண்ணி வைத்து சற்று ஓய்ந்த நிலையில் நேற்று முத்தமகள் ஜஸ்வர்யா தனுஷ் விவாகரத்து விஷயத்தால் ரொம்பவே மனதளவில் இடிந்து போயுள்ளார்!