வஉசி ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வஉசி ஐயா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 செப்டம்பர், 2021

மாணவ, மாணவிகளுக்கு மெகா ஓவியப்போட்டி நடத்தி தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் வ.உ.சி யின் 150வது பிறந்த தின கொண்டாட்டம்!!!

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் கப்பலோட்டிய தமிழன் , செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.



முன்னதாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மெகா ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. அதில் 21 பள்ளிகளைச் சேர்ந்த 320 மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.



அதில் ஆறு சிறந்த ஓவியங்களை அப்பள்ளி ஓவிய ஆசிரியர் .முரளிதரன் அவர்  தேர்ந்தெடுத்தார்

அதில் துவக்கப்பள்ளிகளுக்கான பிரிவில் சாத்தான்குளம் செயின்ட் ஜோசப் பெண்கள் ஆரம்பப் பள்ளி மாணவி நிதர்சனாஸ்ரீ -ன் ஓவியம் முதல் பரிசையும், சி.வா. மாநகராட்சி ஆரம்பப் பள்ளி மாணவன் ராம்சுந்தரின் ஓவியம் இரண்டாவது பரிசையும், ஜின் ஃபேக்டரி ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவி கன்னிகாவின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.

நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி களுக்கான பிரிவில் தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் மாணவி சமிக்ஷாவின் ஓவியம் முதல் பரிசையும், சாமுவேல்புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மதுமிதாவின் ஓவியம் இரண்டாம் பரிசையும் சிவந்தா குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் சரணின் ஓவியம் மூன்றாவது பரிசையும் பெற்றது.

பின்னர் ஓவியப்போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.

பள்ளி தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தூத்துக்குடி வ.உ.சி கல்வியியல் கல்லூரி முதல்வர் கனகராஜ் அவர்கள் வ.உ.சி யைப் பற்றி சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.


போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்களும் ஆறுதல் பரிசுகளும் பங்கு கொண்ட பள்ளிகளுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.


சிறப்பு விருந்தினர்களாக  பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர் கந்தசாமி , பழைய மாணவர்கள் ராஜா, சதீஸ் மற்றும் பலர் கலந்துகொண்டனர் நிகழ்ச்சிகளை ஆசிரியை.ரமா தொகுத்து வழங்கினார். ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார். 

கனி மொழி MP மகிழ்ச்சி தெரிவிப்பு !!! தூத்துக்குடியில் இன்று வ.உ.சி சாலையை (Voc Road) திறந்து வைத்து மகிழ்ச்சி தெரிவித்தார்!!! ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லம் சென்று, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.!!!!

 thoothukudileaks:- 05-09- 2021  5. PM

தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஐயா வ.உ.சி அவர்களின் 150 பிறந்தத நாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என கூறி 14  அறிவிப்பு வெளியிட்டார்.

அதையொட்டி இன்று 2021 செய் - 5

செக்கிழுத்த செம்மல்

ஐயா வ.உ.சி  150 - - வது பிறந்தநாள் தமிழகமெங்கும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் ஐயாவின்  150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று (05/09/2021) தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள வ.உ.சி நினைவு இல்லம் சென்று, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி.





 பின்பு திமுக கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி   அப்பகுதியில் வ.உ.சி அவர்களின் திருவுருவ படங்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்தார்!




இந்நிகழ்ச்சியில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கீதா ஜீவன் எம்எல்ஏ, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.செந்தில்ராஜ்,  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து வ.உ.சிதம்பரனார் ஐயா  150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்டம், தேரடி‌ பகுதியில் உள்ள சைவ வேளாளர் சங்க மஹாலில் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் கழக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக நாடாளுமன்றக்குழு துணைத் தலைவருமான கனிமொழி கருணாநிதி எம்பி 





பின்பு அப்பகுதியில் அன்னதானம் நடைபெற்றது.


தூத்துக்குடி பழைய நகராட்சி பகுதியில் உள்ள ஐயா  வ.உசி திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.




இதற்கு முன்பாக தூத்துக்குடி யில் VOC Road  வ.உ.சி சாலை திறந்து வைத்து அரசு விழா நிகழ்ச்சி யில் கலந்து கொண்டார் கனிமொழி M.P




இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாநகராட்சி ஆணையர் சாரு ஸ்ரீ,  மற்றும் பொதுமக்கள்  பலர் கலந்துகொண்டனர்.








செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்!!!

தூத்துக்குடி லீக்ஸ் : 2021செப் 5 

11-55 AM

      தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 150வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அ.தி.மு.கவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



     இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆர்.சுதாகர், அ.தி.மு. மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணை செயலாளர் பெருமாள்சாமி, மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட அதிமுக் அவைத்தலைவர் திருப்பாற்கடல்,





 முன்னாள்மீன் வளர்ச்சி கழக வாரிய தலைவர் அமிர்த கணேசன், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் சத்யா இலட்சுமணன், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக் ராஜா, மாவட்ட மாணவர் அணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் முனியசாமி, சரவணன், அரசு வழக்கறிஞர் கோமதி மணிகண்டன், மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன், இலக்கிய அணி செயலாளர் நடராஜன், மாவட்ட தகவல் தொழில்நுட்பபிரிவு சகாயராஜ், சிறுபான்மை பிரபாகரன், மாவட்ட அதி.மு.க. இணைசெயலாளர் செரீனா, அமைப்புசாரா ஓட்டுநர் அணி தலைவர் கே.ஏ.பி.ராதா, துணைச்செயலாளர் பொன்னம்பலம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், சாம், மகளிரணி சண்முகத்தாய், சந்திரா,மற்றும் ஜான்சன்  தேவராஜ், முன்னாள்மாமன்ற உறுப்பினர்கள் சுடலைமணி, செல்லபா, மனோகரன், தவசி, வளர்மதி, சந்தன பட்டு, பொறுப்பாளர்கள் வெங்கடேஷ், உலகநாதன், ரமேஷ் கண்ணன், முருகானந்தம், சுரேஷ், மைதீன், அசோகன், உட்பட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

    இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் லட்டு வழங்கினார்.



வெள்ளி, 3 செப்டம்பர், 2021

வ உ சிதம்பரனார் 150 பிறந்தநாள் அரசு விழா!! தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் 14 பரபரப்பு அறிவிப்புகள்!!!

செக்குயிழுத்த 

செ ம்மல்  

வ உ சிதம்பரனார் அவர்களுடைய  150-வது பிறந்த நாள் (செப்டம்பர் 5) விழாவினையொட்டி

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்

மு.க. ஸ்டாலின் அவர்கள் 

14 அறிவிப்புகளை வெளியிட்டார்.

தூத்துக்குடியில் உள்ள ஐயா வ.உ.சி அவர்களின் திருவுருவ சிலை 


thoothukudileaks  03-09-2021

இதுபற்றி அரசு செய்தி குறிப்பு தெரிவித்திருப்பாவது:-


மாண்புமிகு முதலமைச்சர் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே

இங்கே

பேசியிருக்கக்கூடிய

பல்வேறு

கட்சியினுடைய

தலைவர்கள்

அயோத்தியதாசர் அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்ற அறிவிப்புக்கு

வாழ்த்து சொல்லியிருக்கிறீர்கள்: நன்றியும் தெரிவித்திருக்கிறீர்கள்பாராட்டும்தெரிவித்திருக்கிறீர்கள்.

அதேநேரத்தில், நம்முடைய மாண்புமிகு உறுப்பினர் திரு. ஈஸ்வரன் அவர்கள்

வஉ.சி.அவர்களுடைய 150-வது பிறந்த நாள் வருகின்றது. 


எனவே, அதனை அரசு விழாவாக, அவரைப் பெருமைப்படுத்தக்கூடிய வகையில் நாம் செயலாற்ற வேண்டுமென்று ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 



என்னுடைய முதல்

சுதந்திர தின உரை - நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, என்னுடைய முதல்

சுதந்திர தின உரையிலேயே நான் குறிப்பிட்டிருக்கிறேன்


வ.உ.சி. அவர்களுடைய 

பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும்  என்று நான் அறிவித்திருக்கிறேன்

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு அவரது 150-வது ஆண்டாக வருகிற காரணத்தால். 14 அறிவிப்புகளை

நான் இப்போது அறிவிக்க விரும்புகிறேன்.


சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ உ. சிதம்பரனார் அவர்கள்

சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய ...

மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது

மார்பளவு சிலை திறந்து

வைக்கப்படும். (சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மேசையைத் தட்டும் ஒலி)

தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான ....

மேல பெரிய காட்டன்

சாலை, (W.G.C Road) 

இனி

 "வ.உ சிதம்பரனார் சாலை"

என அழைக்கப்படும்

முதல்வர் ஸ்டாலின் சொல்லவும் 

(சட்டமன்ற உறுப்பினர்கள் உற்சாகத்தில் மேசையைத் தட்டும் ஒலி)


தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவைச் சிறையிலே கழித்த

வ.உ.சிதம்பரனார்

அவர்களுடைய

முழு

உருவச் சிலையானது

கோயம்புத்தூர்

வ.உசிதம்பரனார்

பூங்காவில்

அமைக்கப்படும்

(மேசையைத் தட்டும் ஒலி)



திருநெல்வேலி

மாவட்டத்தில்

உள்ள

மனோன்மணியம்

சுந்தரனார்

பல்கலைக்கழகத்தில் வஉசிதம்பரனார் அவர்களின் பெயரில் புதிய

ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும். சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டும் ஒலி)

வ உ.சிதம்பரனார் அவர்கள் எழுதியுள்ள அனைத்துப் புத்தகங்கள்

புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் மூலம்

குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்

(சட்டமன்ற உறுப்பினர்கள் மேசையைத் தட்டும் ஒலி)

திருநெல்வேலியில் வஉசிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த

பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும்

நினைவு நுழைவு வாயில் 1.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்

(சட்டமன்றத்தில் மேசையைத் தட்டும் ஒலி)


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி விருது



கப்பல் கட்டுமானம். தொழில்நுட்பம். போக்குவரத்து ஆகிய கப்பல்

தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர்

ஒருவருக்கு 'கப்பலோட்டிய தமிழன் வ உசி விருது' ஆண்டுதோறும்

வழங்கப்படும். (சட்டமன்றத்தில் மேசையைத் தட்டும் ஒலி) விருதுத் தொகையாக

இலட்சம் ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.



_நவம்பர் 8 தியாக திருநாள்_


கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் மறைந்த நவம்பர் 18 ஆம்

தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும். சட்டமன்றத்தில்

மேசையைத்

தட்டும் ஒலி)


செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வஉசிதம்பரனார்

அவர்கள் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள

வ.உசிதம்பரனார் அவர்களுடைய மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு


அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து

பயனடையும் வகையில், ஒலி-ஒளி காட்சி அமைக்கப்படும்.


வ உசிதம்பரனார் அவர்கள் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும்

திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும்

வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்

இந்த ஆண்டு செப்டம்பர் 5 2021 முதல் அடுத்த வருடம் செப்ம்பர் 5  2022 வரை தூத்துக்குடியிலும் திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்கள் பெயர் சூட்டப்பட்டும் (சட்டமன்றத்தில் மேசையை தட்டும் ஒலி)   

பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில்  போக்குவரத்து துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பனார் அவர்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும்...கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும் (சட்டமன்றத்தில் மேசை தட்டும் ஒலி)

தமிழ் பல்கலைகழகத்தின் வாயிலாக வ.உ.சிதம்பரனார் குறித்த இணைய வழி கருத்தரங்கம் நடைபெறும்.



தமிழ் நிகர் நிலை கல்வி கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்து பிரதிகள் ஆகியவை இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.

தூத்துக்குடி லீக்ஸ்

பதிவு

Date 03-09-2021

time 5.45pm