அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 செப்டம்பர், 2026

மாவட்ட செயலாளர் ஏசாதுரை உட்பட சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு பரபரப்பு

 சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் இணைப்பு

தூத்துக்குடி செப் 9

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK ) சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட வி.கே. சசிகலா ஆதரவாளர்கள், அக்கட்சியில் இருந்து விலகி தாய்க்கழகமான அதிமுகவில் இணைந்தனர்.

தூத்துக்குடி லீக்ஸ்

thoothukudi Leaks


தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில், அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுக கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இதில் வி.கே. சசிகலா ஆதரவாளர்களான செல்வராஜ், பட்டுக்கனி, சாந்தி, ரெஜினா, ஜான்சி ராணி, சுப்புலட்சுமி, பொயாளி பாண்டியன், மாரியப்பன், ஆறுமுகத்துரை, ராஜதுரை, இல. ஜெயராமன், ஜெயபால், வேல்சாமி, பரணி செல்வம், தங்க இசக்கி ராஜா, முத்துமாலை செல்வராஜ், சபிக்குமார் மகாராஜன், ரமேஷ், எம்.ஜி.ஆர். கணேசன், கணேசன் உள்ளிட்ட பலர் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் கழக அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன், மாநில வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் பிரபு, தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி கழக செயலாளர் ஜெய்கணேஷ், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் ஆனந்தராஜ், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் முத்துக்கனி, நவ்சாத், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் மெஜூலா, சந்திரா, ராஜு மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ், சொக்கலிங்கம், எம்.டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சசிகலா ஆதரவாளர்கள் கூண்டோடு விலகி அதிமுகவில் இணைந்த நிகழ்வு, தூத்துக்குடி மாவட்ட அதிமுக வட்டாரத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2026

அதிமுக கட்சியில் குழப்பம் விளைவிக்கும் 4 பேரை நீக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் பேச்சு! விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம் செய்துவிட்டது! தூத்துக்குடி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு!

 

நாள்: 15.08.2026 | இடம்: தூத்துக்குடி

விவசாயிகளுக்கு தவெக அரசு துரோகம் செய்துவிட்டது!

தூத்துக்குடி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் குற்றச்சாட்டு!

தூத்துக்குடி: வாக்குறுதி அளித்தபடி அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடன்களையும் முழுமையாக ரத்து செய்யாமல் ஏமாற்றி வரும் விஜய் தலைமையிலான தவெக அரசைக் கண்டித்தும், மேகதாது அணை விவகாரத்தில் மெத்தனம் காட்டி காவிரியின் உரிமையை மீட்கத் தவறியதைக் கண்டித்தும் தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.


அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமியின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் நேற்று (14.08.2026) கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. 

thoothukudileaks


இதன் ஒருபகுதியாக, ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட அதிமுக சார்பில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே காலை 11 மணியளவில் இப்போராட்டம் நடைபெற்றது.

தேர்தலுக்கு முன் ஒன்று... பின் ஒன்று...

இவ்வார்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு-தெற்கு மாவட்டச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசியதாவது:

"தேர்தல் வாக்குறுதியில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடனும், 5 ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50% கடனும் ரத்து செய்யப்படும் என தவெக அரசு அறிவித்தது. ஆனால், தற்போது வெறும் ₹75,000 மட்டுமே தள்ளுபடி செய்து விவசாயிகளை வஞ்சித்துள்ளது. இதற்கு சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டே சாட்சி.

ஜெயலலிதா உச்சநீதிமன்றம் வரை போராடி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டினார். ஆனால், மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சிக்கும் வேளையில், தவெக அரசு அதைத் தடுக்க துப்பில்லாமல் சட்டமன்றத்தில் தீர்மானம் என்ற நாடகத்தை நடத்துகிறது. முதல்வர் விஜய் ஒரு பொம்மை முதல்வராகச் செயல்படுகிறார்."

மேலும், "அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் மகளிர் கணக்கில் மாதம் ₹2,500 மற்றும் வங்கி கணக்கில் ₹10,000 டெபாசிட் செய்யப்பட்டிருக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

கட்சியில் குழப்பம் விளைவிக்கும் 4 பேரை நீக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ சிங்காரம் பேச்சு!

இதனைத் தொடர்ந்து அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சிங்காரம் பேசுகையில், கட்சியின் உள்கட்சி விவகாரங்கள் குறித்து அதிரடியாகப் பேசினார்:

"முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிமுகவை பலவீனப்படுத்த நினைக்கிறார். கட்சியிலிருந்து விலகி மீண்டும் பொதுச்செயலாளர் எடப்பாடியாரிடம் மன்னிப்புக் கடிதம் கொடுத்து இணைந்த சிலர், மீண்டும் கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.

20-25 ஆண்டுகள் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளை அனுபவித்துவிட்டு, இப்போது கட்சிக்கு துரோகம் செய்கிறார்கள். எம்.எல்.ஏ பதவி பறிபோய்விடும் என்பதால் தாங்களாகவே வெளியேறாமல், கட்சியிலிருந்து தம்மை நீக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

54 ஆண்டுகால கழகத் தொண்டனாகவும், அமைப்புச் செயலாளராகவும் பொதுச்செயலாளருக்கு நான் வைக்கும் வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான்—கட்சியில் குழப்பத்தை விளைவித்து வரும் எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விசுவநாதன், கே.பி. அன்பழகன் ஆகிய 4 பேரை நீக்கினாலே இயக்கத்தின் அனைத்துக் குழப்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஏழை எளிய சாமானியனின் இயக்கமான அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது!"


thoothukudileaks

thoothukudileaks

 

திரளான நிர்வாகிகள் பங்கேற்பு

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள் சாமி, மாவட்ட அவைத் தலைவர்கள் திருப்பாற்கடல், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் என்.கே.பெருமாள், மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்கள் இரா.ஹென்றி, செங்கான், இலக்கிய அணி இணைச்செயலாளர் முடிமண் ராமசாமி, வழக்கறிஞர் பிரிவு ஈஸ்வரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு முஸ்தப்பா, முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, மாவட்டப் பொருளாளர் சேவியர் வெம்பூரார், சந்தானம், முருகேஸ்வரி, செரினா, ராமகிருஷ்ண கார்த்திக்,

மாவட்ட சார்பு அணிச் செயலாளர்கள் எம்.பெருமாள், கே.விஜயகுமார், பில்லா விக்னேஷ், டேக் ராஜா, ஜெயச்சந்திர பிரபாகர், நடராஜன், டார்சன், ஜே.ஜே. தனராஜ், எம்.ஆர்.வி கவியரசன், அருண்ஜெபக்குமார், பத்மாவதி கனகசுந்தரம், என்.ஜி.ராஜேந்திரன், ஜாக்சன் துரைமணி, டாக்டர் எஸ்.எம்.ஏ.கோசல்ராம்ராஜா, சோலைசாமி,  பால கணேசன், லட்சுமண பெருமாள் தலைமைக் கழக பேச்சாளர்கள் எஸ்.டி.கருணாநிதி, முரகானந்தம், எஸ்.ஆர்.சுகந்தன்ஆதித்தன், இளங்கோ, சரவணபெருமாள், கல்வி குமார், நிலா சந்திரன், கே.என்.ஆனந்தராஜ், பகுதி செயலாளர்கள் முருகன், ஜெய்கணேஷ், சுடலைமணி, நட்டார்முத்து, நகரச் செயலாளர்கள் விஜயபாண்டியன், மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், ராஜ்நாராயணன், அப்பாதுரை, மனோகரன், குணசேகரன், செல்வகுமார், வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், அழகர்சாமி, போடுசாமி, பால்ராஜ், தனஞ்செயன், தனவதி, மகேஷ், ராமசந்திரன், கால்வாய் பரமசிவம், ஜவஹர், பேரூராட்சி செயலாளர்கள் வேதமாணிக்கம், செந்தில் ராஜகுமார், துரைசாமிராஜா, அசோக்குமார், அரசகுரு, அறுமுகநயினார், கிங்ஸ்லி ஸ்டாரிலிங், கோபாலகிருணணன்,  வீரவெற்றிவேல், மாரிமுத்து, ராஜ்குமார், ஆண்டி, முத்துராஜ், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரைபாண்டியன், சுரேஷ்பாபு, மனுவேல்ராஜ், வெங்கடேஷ், அங்கமங்கலம் பாலமுருகன், ராஜா நேரு, ஜோஷ்வா அன்புராஜ், ஐடியல் பரமசிவன், கே.கே.பி.விஜயன், கணேசன், கொம்பையா, ஹார்பர் பாண்டி, எஸ்.கே.மாரியப்பன், ஆத்தூர் சுப்பிரமணியன், சோமசுந்தரம், மகளிர்கள் நிர்வாகிகள் முன்னாள் மேயர் அந்தோணிகிரேஸி, தேவவிண்ணரசி, ஜெயராணி, ரம்யாநாராயணன், ஞானபுஷ்பம், மெஜூலா, ஷாலினி, ஸ்மைலா, முத்துலெட்சுமி, ஜெயசுதா, மற்றும் சொக்கலிங்கம், பண்டாரவிளை பாஸ்கர், திருத்துவசிங், வெள்ளையா, சுரேஷ், பால்துரை, வக்கீல் ராஜ்குமார் புதுக்கோட்டை முருகன், நல்ல மலை செல்லத்துரை உள்ளிட்ட  அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.





 

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ?தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு அதிமுக இப்போது தூய சக்தி யாக மாறிவிட்டது???

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசினார் வீடியோ இச் செய்தியின் கடைசியில் உள்ளது
.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

thoothukudileaks




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

தூத்துக்குடி, ஆக.8:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான சித.செல்லப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய போது 


thoothukudileaks
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய போது...
thoothukudileaks
 முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசிய போது...




கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய வீடியோ 

கூட்டம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதால், நிகழ்ச்சி எழுச்சிமிகு முறையில் நடைபெற்றது.

செவ்வாய், 21 ஜூலை, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

.தூத்துக்குடி ஜூலை 21


அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது

thoothukudileaks


 தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

வியாழன், 16 ஜூலை, 2026

ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக அறிவிப்பு

 Tamil Nadu updates,

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமனம் – ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பை கவனிப்பார்

தூத்துக்குடி, ஜூலை 16:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சமீபத்தில்  கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.பி. சண்முகநாதன், தற்போது காலியாக உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

thoothukudileaks


இதன் மூலம், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பை எஸ்.பி. சண்முகநாதன் கவனிப்பார் என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கழக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.