Tamil Nadu updates,
தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமனம் – ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பை கவனிப்பார்
தூத்துக்குடி, ஜூலை 16:
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.பி. சண்முகநாதன், தற்போது காலியாக உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பை எஸ்.பி. சண்முகநாதன் கவனிப்பார் என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கழக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக