வெள்ளி, 17 ஜூலை, 2026

முன்னாள் எம்.எல்.ஏ. பங்கேற்கும் நாடார் பேரவை சார்பில் காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா மற்றும் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 18:

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை சார்பில், பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா, ஆயிரம் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மாணவ–மாணவிகளுக்கான பாராட்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை (ஜூலை 19) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.




தூத்துக்குடி மணி நகர் 4-வது தெருவில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ராமலட்சுமி திருமண மண்டபத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பி.எம். அற்புதராஜ் தலைமை தாங்குகிறார்.


மாநில தொழிற்சங்க செயலாளர் எஸ். ஜெயராஜ் டேவிட், மாநில துணைப் பொதுச் செயலாளர் ரெ. காமராசு நாடார், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் ஏ. அந்தோணிபிச்சை ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். நாடார் பேரவை மாநில தலைவர் எஸ்.என்.பி. அருண் சுரேஷ்குமார் வரவேற்புரை ஆற்றுகிறார்.


இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. ஏ. நாராயணன், மாநில பொதுச் செயலாளர் ...

டி.ஆர். சந்திரசேகர், மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் நாராயணன் உள்ளிட்ட பல்வேறு மாநில, மாவட்ட நிர்வாகிகள் சிறப்புரையாற்றுகின்றனர்.

thoothukudileaks


மேலும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுவதுடன், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளன.


இந்நிகழ்ச்சியில் சமத்துவ மக்கள் கழகம் – நாடார் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக