சமத்துவ மக்கள் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமத்துவ மக்கள் கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 மார்ச், 2026

தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கழகம் 11ஆம் ஆண்டு துவக்க விழா

Tamil Nadu updates 11-3-2026

தூத்துக்குடி, மார்ச் 11:

சமத்துவ மக்கள் கழகத்தின் 11ஆம் ஆண்டு துவக்க நாள் விழா தூத்துக்குடி மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட் கட்சிக் கொடியேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

thoothukudileaks


 மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை மற்றும் மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட நிர்வாகிகள் அனைவரும் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

thoothukudileaks


 தொடர்ந்து மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் கேக் வெட்டி விழாவை கொண்டாடினார். பின்னர் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

வீடியோ பார்க்க 

இந்த நிகழ்ச்சியில் ...

அருண் சுரேஷ் குமார், டேனியல் ராஜ், வழக்கறிஞர் அணி தலைவர் வக்கீல் குணசேகரன், வக்கீல் வைகுந்த், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் அந்தோணி சேவியர், அருள்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் பாலமுருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



மேலும் மகளிர் அணி நிர்வாகிகள் ஜேசு செல்வி, சாந்தி, ராசாத்தி, பிரம்மசக்தி, கன்னியம்மாள், ரேவதி, மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சண்முககுமார், மாநகரச் செயலாளர் முத்து செல்வம், மாநகர அவை தலைவர் மதியழகன், மாநகர பிரதிநிதிகள் சாமுவேல், ஞானராஜ், மாநகர மாணவரணி செயலாளர் விஜய் கார்த்திக், மாநகர வர்த்தக அணி செயலாளர் தொம்மை குரூஸ், வர்த்தக அணி துணைச் செயலாளர் முத்துக்குமார் மற்றும் மாநகர வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச் செய்தியில் புகைப்படம் வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 22 டிசம்பர், 2025

திருவைகுண்டம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் எர்ணாவூர் நாராயணன் போட்டியிடுவது உறுதி சமத்துவ மக்கள் கழக மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு விழா வில் அறிவிப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 22

திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் போட்டியிட சமத்துவ மக்கள் கழகம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றிய செய்தியாவது:-

இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாவட்ட அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு–2026 விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ் தலைமை வகித்தார்.



தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர் நல வாரியத் தலைவரும், சமத்துவ மக்கள் கழக நிறுவனத் தலைவருமான எர்ணாவூர் நாராயணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் கேக் வெட்டி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

“திருவைகுண்டம் தொகுதியில் நானே போட்டி” – எர்ணாவூர் நாராயணன் உறுதி

விழாவில் பேசிய எர்ணாவூர் நாராயணன்,

“தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெருமை அடைகிறேன். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த ஆண்டு 2026-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், சமத்துவ மக்கள் கழகம் சார்பில் திமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு தொகுதிகளை கேட்க உள்ளோம். இதில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் (திருவைகுண்டம்) சட்டமன்ற தொகுதியில் போட்டியிட நாம் இப்போதே தயாராக உழைக்க வேண்டும்.



மாவட்ட செயலாளர் அற்புதராஜ் தலைமையில், நிர்வாகிகள் அனைவரும் திருவைகுண்டம் தொகுதி முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். பாகம் வாரியாக கணக்கெடுத்து, வெளியூரில் இருக்கும் வாக்காளர்களையும் அடையாளம் காண வேண்டும். இந்த பணிகளை முடித்து வாக்காளர் பட்டியலை என்னிடம் வழங்கினால், சீட் வாங்குவது எனது பொறுப்பு. அந்த தொகுதியில் நானே போட்டியிட உள்ளேன்” என உறுதியாக தெரிவித்தார்.

நிர்வாகிகள் பெருமளவில் பங்கேற்பு!!!

இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் வழக்கறிஞர் கண்ணன், தலைமைச் செயலக முன்னாள் அதிகாரி ரவீந்திரன், மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் அந்தோணிபிச்சை, மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சகாயராஜ், மாவட்ட துணை செயலாளர்கள் அருள்ராஜ், அந்தோணி சேவியர், பொதுக்குழு உறுப்பினர் ஜோசப், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெயகசமாடன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் குருவம்மாள், சந்திரா, ஜேசுச்செல்வி, ஜெபராணி, ராதா லட்சுமி, பனிமதி, சாந்தி, பிரம்மசக்தி, பாத்திமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் சதீஷ் மூர்த்தி, உடன்குடி ஒன்றிய செயலாளர் பாலாஜி, கருங்குளம் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், கயத்தார் ஒன்றிய செயலாளர் சவரி மிக்கேல், திருச்செந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜ், திருச்செந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ், மாநகர அவைத்தலைவர் மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

— தூத்துக்குடி லீக்ஸ்

சனி, 6 டிசம்பர், 2025

முதல்வர் காமராஜர் குறித்து பேச்சு…தூத்துக்குடியில் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் நடவடிக்கை கோரி புகார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் சமத்துவ மக்கள் கழகத்தின் முறையீடு

தூத்துக்குடி.டிச 7
தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் குறித்து YouTube-ல் அவதூறாக பேசியதாக கூறப்படும் YouTuber முக்தாருக்கு எதிராக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது

thoothukudileaks

.



இந்தப் புகாரை  அருண் சுரேஷ் குமார்  தலைமையில் கழக நிர்வாகிகள் இணைந்து அளித்தனர்.

இந்நிகழ்வில்

  • மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட்,
  • மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் சுப்பையா,
  • அசோக்,
  • மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல்,
  • மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ்,
  • மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ்,
  • வக்கீல் பெஸ்டஸ்,
  • மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம்,
  • மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர்,
  • மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார்,
  • மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ்


ஆகியோர் கலந்து கொண்டனர்.




வியாழன், 1 மே, 2025

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்: வெற்றி பெற்றபுதிய தலைவர் வாரியார் -க்கு தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் சிறப்பு பாராட்டு விழா

தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கத் தேர்தல்: புதிய தலைவர் வாரியார் வெற்றி பெற்றார் 


தூத்துக்குடி, மே 2:

 தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தின் சமீபத்திய தேர்தலில் வழக்கறிஞர் வாரியார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

இந்நிகழ்வைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் அவருக்கு சிறப்பு பாராட்டு விழா நடைபெற்றது.



மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் புதிய தலைவருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். இந்நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



நிகழ்ச்சியில்....

 மத்திய வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் தெர்மல் ராஜா, பொருளாளர் விக்னேஷ், சமத்துவ மக்கள் கழகம் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, மாவட்ட அவை தலைவர் கண்டி வேல், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.


புதிய தலைவர் வாரியார் தனது வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்து, வழக்கறிஞர் சமூகத்தின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என உறுதியளித்தார்.


_________________________________________________

திங்கள், 21 ஏப்ரல், 2025

தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றுப்பால புனரமைப்பு கோரி மக்கள் கழகம் மனு

 # தூத்துக்குடி: தாமிரபரணி ஆற்றுப்பால புனரமைப்பு கோரி மக்கள் கழகம் மனு


தூத்துக்குடி, ஏப்ரல் 21: கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட கனமழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் உண்டான பெரும் வெள்ளப்பெருக்கால் ஆத்தூரில் புதிதாக கட்டப்பட்ட ஆற்றுப்பாலத்தின் தூண் ஆற்றிற்குள் புதைந்து, பாலம் சேதமடைந்து போக்குவரத்து தடைப்பட்டு 18 மாதங்களாக மூடப்பட்டுள்ளது.



தற்போது, முன்பு கட்டப்பட்ட பழைய பாலத்தில் போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.


 இந்த பழைய பாலம் தடுப்பு சுவர் இன்றி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதுடன், மிகவும் போக்குவரத்து நெரிசலையும் ஏற்படுத்துகிறது.


இந்நிலையில், மத்திய மாநில அரசுகள், நெடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் உடனடியாக பழுதடைந்த பாலத்தை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த மனு அளிப்பு நிகழ்வில், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து, மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


இந்த 18 மாத கால போக்குவரத்து இடையூறு தொடர்பாக பெரும் அவசர நடவடிக்கை தேவை என்று சமத்துவ மக்கள் கழகத்தினர் தங்கள் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

வெள்ளி, 18 ஏப்ரல், 2025

தூத்துக்குடியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் அனுசரிப்பு

 # தூத்துக்குடியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினம் அனுசரிப்பு


தூத்துக்குடி, ஏப்ரல் 19:


தினத்தந்தி அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் சின்னையா சிவந்தி ஆதித்தனாரின் 12வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தூத்துக்குடி வ.உ.சி. மார்க்கெட்டில் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.



மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் மற்றும் நாடார் பேரவை சார்பில் மாவட்டத் தலைவர் அருண் சுரேஷ் குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டார். 



மேலும் நாடார் பேரவை மாவட்ட செயலாளர் டேனியல் ராஜ், மாவட்ட பொருளாளர் சுப்பையா, சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசை முத்து, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகரச் செயலாளர் உதயசூரியன், ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 13 ஏப்ரல், 2025

சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

 டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த தினத்தை முன்னிட்டு....


 இன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது முழு உருவ சிலைக்கு மாவட்ட துணைச் செயலாளர் சூசைமுத்து அவர்கள் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் பழனிவேல்  முன்னிலையில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை,நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.




 இவ்விழாவில் மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார் மாநகரச் செயலாளர் உதயசூரியன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மகளிர் அணி தலைவி சந்திரா மகளிர் அணி துணைச் செயலாளர் ஜேசுசெல்வி ராசாத்தி கன்னியம்மாள் மாநகர அவைத்தலைவர் மதியழகன் ,ஸ்ரீராம் உள்பட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

திங்கள், 7 ஏப்ரல், 2025

அரசு பேருந்துகள் ராமசாமிபுரம் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு



அரசு பேருந்துகள் ராமசாமிபுரம் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாவட்ட ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி, ஏப்ரல் 8:

திருச்செந்தூரிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராமசாமிபுரம் மற்றும் முத்துநகர் கிராமங்களில் சுமார் 200 வீடுகளும், 800க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். அங்குள்ள பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் வேலைக்குச் செல்வோர், தினமும் திருச்செந்தூர், சாத்தான்குளம், திசையன்விளை, நாகர்கோவில், திருநெல்வேலி போன்ற நகரங்களுக்கு அரசு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.



ஆனால், ராமசாமிபுரம் பேருந்து நிறுத்தத்தில் நாகர்கோவில் மற்றும் திசையன்விளை நோக்கிச் செல்லும் அரசு பேருந்துகள் நிற்காததால், அப்பகுதி மக்கள் 3 கிலோ மீட்டர் தூரம் நடந்துசென்று திருச்செந்தூர் பேருந்து நிலையம் அடைந்து பஸ்சில் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மிகவும் மோசமான கால விரயம் மற்றும் போக்குவரத்து சிரமங்களை சந்திக்கிறார்கள்.


இதனால், “ராமசாமிபுரம் பஸ்ஸ்டாப் அரசு பேருந்துகள் நிற்கும் இடமாக அறிவிக்கப்பட வேண்டும். அங்கு அனைத்து அரசு பேருந்துகளும் நின்று பொதுமக்களை ஏற்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கையுடன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம், தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் இன்று திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.


இந்த மனுவை மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர்கள் சூசைமுத்து, அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், விவசாய அணி துணைச் செயலாளர் சின்னத்துரை, முருகன், சுந்தர் உள்ளிட்ட பலர் சமர்ப்பித்தனர்.

ஞாயிறு, 6 ஏப்ரல், 2025

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட கோரிக்கை

தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட கோரிக்கை

தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டு மருத்துவ மக்கள் கழகம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தது.

இந்த நிகழ்வில்..., சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர். 



மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், விவசாய அணி துணை செயலாளர் சின்னத்துரை, மேலும் சுந்தர், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



முன்னாள் முதல்வர்காமராஜர் பெயரில் நூலகம் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

காமராஜர் பெயரில் நூலகம் – தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பு

திருச்சியில் ரூ.290 கோடி மதிப்பீட்டில் உருவாக உள்ள மாபெரும் நூலகத்திற்கு, முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பெயர் சூட்டப்பட இருப்பதை வரவேற்று,.... தமிழ்நாடு முதல்வர்  மு.க. ஸ்டாலின் மற்றும், தமிழக அரசுக்கும் தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இந்த நன்றித் தெரிவிப்பு நிகழ்வு, 

மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் நடைபெற்றது. 



இதில் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை, நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ்குமார், மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட அவை தலைவர் கண்டிவேல், பொருளாளர் பழனிவேல், வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும், வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், விவசாய அணி செயலாளர் கனகராஜ், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாநகர அவை தலைவர் மதியழகன், வேல்முருகன் காமராஜ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இவர்கள்  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்   கீதாஜீவனை  நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியைத் தெரிவித்தனர்.


 இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் மற்றும் ரவீந்திரனும் பங்கேற்றனர்.

புதன், 2 ஏப்ரல், 2025

ச.ம.க சார்பில் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு

 #சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடியில் கோடை வெயிலில் பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கும் நிகழ்வு


தூத்துக்குடி, ஏப்ரல் 2 சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர்  எர்ணாவூர் நாராயணன்  ஆணையின்படி,... தூத்துக்குடி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களின் தாகத்தைத் தீர்க்கும் வகையில் தர்பூசணி மற்றும் தண்ணீர் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமை தாங்கினார்

நாடார் பேரவை மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தர்பூசணி மற்றும் தண்ணீர் பழங்களை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்டத் துணைச் செயலாளர்கள் அருள்ராஜ், சூசைமுத்து, மாவட்ட இளைஞரணி செயலாளர் முருகன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், மாநகரச் செயலாளர் உதயசூரியன், மாவட்ட தொழிலாளர் அணி துணைச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், மாவட்ட மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், நாடார் பேரவை மாவட்ட மகளிர் அணி தலைவி சந்திரா, மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர்கள் ஜேசு செல்வி, ஜெப ராணி, ராசாத்தி, ஜெப செல்வி, மல்லிகா, ஆழ்வை மேற்கு ஒன்றிய செயலாளர் தினகரன் மற்றும் செல்வராஜ், சண்முக குமார், ஸ்ரீ ராம், சுரேஷ், முத்துச்செல்வம், சின்னத்துரை, மதன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


கடும் வெயில் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 26 செப்டம்பர், 2024

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம்

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

27-9-2024 

photo news 

Arunan journalist 

தூத்துக்குடியில் மத்திய மாநில அரசை வலியுறுத்தி மீனவர்களுக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கழகம் ஆர்ப்பாட்டம் 




இது பற்றிய செய்தியாவது:-


கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தமிழக மீனவர்கள் 22 பேரை விடுதலை செய்ய மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 27 -9-2024  காலை 10 மணியளவில் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆதரவாக தூத்துக்குடி சிதம்பர நகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.




 ஆர்ப்பாட்டத்தில் சமத்துவ மக்கள் கழகம் மாநில இளைஞர் அணி செயலாளர் கார்த்திக் நாராயணன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை பாத்திமா பாபு சங்கு குளி தலைவர் இசக்கிமுத்து மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர்  உறவினர்கள் கலந்து கொண்டனர் 


இவன்: சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்டம்.