தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பெயர் சூட்ட கோரிக்கை
தூத்துக்குடி சர்வதேச விமான நிலையத்திற்கு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டு மருத்துவ மக்கள் கழகம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு அளித்தது.
இந்த நிகழ்வில்..., சமத்துவ மக்கள் கழகம் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.
மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மகளிர் அணி தலைவி சந்திரா, மாநகரச் செயலாளர் உதயசூரியன், விவசாய அணி துணை செயலாளர் சின்னத்துரை, மேலும் சுந்தர், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக