Tamil Nadu updates, photo news by Arunan journalist
உத்தரகோசமங்கை கும்பாபிஷேகம் விழாவில் மாபெரும் அன்னதானம் — அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் ஏற்பாடு
இராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் அமைந்துள்ள உலகின் முதல் சிவன் ஆலயமாகக் கருதப்படும் அருள்மிகு மங்களநாதசுவாமி உடனுறை மங்களேஸ்வரி அம்மன் திருக்கோயிலில், அஷ்டபந்தன கும்பாபிஷேக பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவை சமஸ்தான ராணி கொடி அசைத்து துவக்கி வைத்தார். தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து, சந்தனக்காப்பு அகற்றப்பட்ட நடராஜரை காணும் பாக்கியத்தை பெற்றனர்.
விழாவின் ஒரு பகுதியாக, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான வி ழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் இருந்து அன்னத்தை பெற்றுச் சென்றனர்.
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். விழா ஏற்பாடுகளை மாநில முதன்மை செயலாளர் சரவணன் ஜி தலைமையில் சிவக்குமார், நாகா, முரளி, சக்தி, முத்துவேல்பாண்டியன் உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக முன்னெடுத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக