ஒபிஎஸ் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஒபிஎஸ் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 29 செப்டம்பர், 2025

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

 # கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தூத்துக்குடி: செப் 29

 கடந்த 27.09.2025 அன்று கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த 40 பேருக்கு  தூத்துக்குடியில் இன்று அஞ்சலி செலுத்தினர்.



இது பற்றிய செய்தியாவது 

கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) எம்.எல்.ஏ. ஆணையின்படி இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


### அஞ்சலி நிகழ்வு


தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில்...

தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வைக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


வீடியோ 1 பார்க்க 

### கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்


மாவட்ட பொறுப்பாளர்கள்:

- மாவட்ட கழக துணை செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்

- மேற்கு பகுதி கழகச் செயலாளர் கே.எஸ். செல்லத்துரை

- மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்

- மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல்

- மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தங்க மாரியப்பன்

- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் 

இரா.இல. ஜெயராமன்


அணி தலைவர்கள்:

- மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன்

- மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன்

- வடக்கு பகுதி அம்மா பேரவை தலைவர் பொய்யாமொழி

வீடியோ 2 பார்க்க

இணைப் பொறுப்பாளர்கள்:

- மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜதுரை

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் செல்வராஜ், மந்திரம்

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் டி. வேல்சாமி

- மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்



உள்ளூர் பொறுப்பாளர்கள்:

- தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம்.ஜி. முனியசாமி

- காமராஜ் நகர் ஜெபக்குமார்

- வட்டக் கழக செயலாளர் கருப்பு


உள்ளிட்ட பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டினர்.


### இரங்கல் செய்தி


கரூர் பொதுக்கூட்ட நெருக்கடியில் உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 29.09.2025

புதன், 29 மே, 2024

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என பாஜ மாநில தலைவா் அண்ணாமலை பாஜ எம்பி வேட்பாளா் தமிழிசைசௌந்தா்ராஜன் ஆகியோா் பேசி வருவது முற்றிலும் தவறானது ஒபிஎஸ அணி புகழேந்தி ஆவேசம்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

முத்த பத்திரிகையாளர் 


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என பாஜ மாநில தலைவா் அண்ணாமலை பாஜ எம்பி வேட்பாளா் தமிழிசைசௌந்தா்ராஜன் ஆகியோா் பேசி வருவது முற்றிலும் தவறானது ஒபிஎஸ அணி புகழேந்தி ஆவேசம் 

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி அருகே திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்த  புகழேந்தி   செய்தியாளா்களை  சந்தித்தாா்.




  அப்போது  அவா்  கூறும் போது ...      முதல்வா் மு.க.ஸ்டாலின்  ஆட்சியில் பெண்களுக்கு இலவசபேருந்து பயணம் .மாணவா்களுக்கான  திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில்  எந்த தயக்கமும் இல்லை  என்றாா்  


முன்னாள் முதல்வா்  ஜெயலலிதாவை  இந்துத்துவா தலைவா் என  பாஜ மாநில தலைவா்  அண்ணாமலை  பாஜ  எம்பி வேட்பாளா்  தமிழிசைசௌந்தா்ராஜன்  ஆகியோா் பேசி வருவது  முற்றிலும் தவறானது  


அவா் ராமஜென்ம பூமிக்கு கரசேவா்களை  அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானது  


அவா் மதத்தினருக்கும் சாதியினருக்கும்  தலைவராக  இருந்தாா்  அவரைப்பற்றி  இவ்வாறு  கூறுவதை ஒரு நாளும்  ஒருபோதும்  நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்  என்றாா்


 தூத்துக்குடியில்  ஓ.பி எஸ் அணி மாநில கொள்கை பரப்பு செயலாளா்  புகழேந்தி    அருகில் மாவட்ட செயலாளா்  ஏசாதுரை  பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ்  .தெற்கு பகுதி செயலாளா்  லோகு .மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிாிவு செயலாளா் சாமுவேல் உட்பட பலா் உடன் இருந்தனா்.

வெள்ளி, 1 செப்டம்பர், 2023

தூத்துக்குடியில் புலித்தேவர் சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை .

 thoothukudileaks 2-9-2023

த.சண்முகசுந்தரம் 

மூத்த பத்திரிகையாளர்


தூத்துக்குடி மாநகரில் மாமன்னர் புலித்தேவர் திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்..



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை படி சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்க மிட்ட மாமன்னர் புலித்தேவரின் 308வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் அருகேயுள்ள அருள்மிகு சிவனடி சாஸ்தா திருக்கோவில் வளாகத்தில் உள்ள புலித்தேவரின் திருவுருவ சிலைக்கு ஓபிஎஸ் அணியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை, தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார்கள்.



    இந்நிகழ்ச்சியில் ..

தூத்துக்குடி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் மாடசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்கள் மந்திரம், மாரியப்பன், அண்ணா தொழிற்சங்க துணைச்செயலாளர் சோலையப்பன், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஜீவா, மகளிர் அணி செயலாளர் சித்ரா, ஜெ பேரவை துணைச்செயலாளர்கள் ராஜதுரை, ஆறுமுகம், முத்துபட்டன், கனிஷ்டன், சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் ஜெயராமன், பகுதி செயலாளர்கள் லோகு கணேசன், செல்லத்துரை, இலக்கிய அணி இணைச்செயலாளர் சிவசூரியன், ஜெ பேரவை இணைச்செயலாளர் ஆறுமுகம், மகளிர் அணி இணைச்செயலாளர்கள் சாந்தி, தேன்மொழி சிவஞானம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் சுதாகர், பகுதி எம்.ஜி,ஆர் மன்ற இணைச்செயலாளர் கண்ணன், தொழிற்சங்க துணைச்செயலாளர் வேல்மணி, சிறுபான்மைபிரிவு தலைவர் இக்பால்பாட்ஷா, பொருளாளர் அப்துல்லாஹாசன், நிர்வாகிகள் ஷேக்முகம்மது, சின்னத்தம்பி, முத்துமரைக்காயர், சுபிக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.