அதிமுக ஒபிஎஸ் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அதிமுக ஒபிஎஸ் அணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 4 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 9ஆம் ஆண்டு நினைவு நாள் — மாலை அணிவித்து அஞ்சலி, அன்னதானம் வழங்கல்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: டிச 5

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி, அம்மா ஜெ. ஜெயலலிதா  9ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்று தூத்துக்குடியில் மரியாதையுடன் நடைபெற்றது.

thoothukudileaks


மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு, கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர், தமிழக முன்னாள் முதல்வர் ஐயா ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ  ஆணையின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழக அலுவலகம் அருகில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

நிகழ்வில் தூத்துக்குடி மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் எஸ். ஏசா துரை தலைமையில், அம்மா அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்

  • மாவட்ட அவைத் தலைவர் எம். எஸ். மாடசாமி
  • மாவட்டக் கழக துணைச் செயலாளர் பட்டுக்கனி
  • கழக செயற்குழு உறுப்பினர் ஸ்ரீவை சந்திரா
  • மேற்கு பகுதி கழக செயலாளர் கே. எஸ். செல்லத்துரை
  • வடக்கு பகுதி கழக செயலாளர் பொய்யாமொழி
  • தெற்கு பகுதி கழக செயலாளர் வெள்ள பாண்டி
  • மத்திய தெற்கு பகுதி கழக செயலாளர் வி. பி. முத்து
  • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழகச் செயலாளர் இரா. இல. ஜெயராமன்
  • மாவட்ட ஐ.டி பிரிவு செயலாளர் சாமுவேல்
  • மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்
  • மாவட்ட இளைஞரணி செயலாளர் சுதாகர்
  • மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் முத்துப்பட்டன்
  • மாவட்ட கலை இலக்கியப் பிரிவு செயலாளர் ஜெயபால்
  • மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்
  • மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மாரியப்பன்
  • மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் ராஜதுரை, அங்குசாமி (சுசீந்திரன்)
  • தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம். ஜி. முனியசாமி
  • மாவட்ட இளைஞர்–இளம்பெண்கள் பாசறை தலைவர் மகாராஜன்
  • மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் மந்திரம், செல்வராஜ்
  • மேற்கு பகுதி எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன்
  • வட்டக் கழகச் செயலாளர் செல்வகுமார்
  • பொன் அம்சம், மாரி தங்கம்
  • மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்


அனைவரும் ஒன்று கூடிச் செம்மையான மரியாதை செலுத்தி, அம்மாவின் சேவை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

வெள்ளி, 17 அக்டோபர், 2025

அஇஅதிமுக 54ஆம் ஆண்டு விழா – தூத்துக்குடியில் ஒபிஎஸ் மா.செ. ஏசாதுரை தலைமையில் கழகத்தினர் உற்சாக கொண்டாட்டம்

📰 தூத்துக்குடி லீக்ஸ்

அஇஅதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழா – தூத்துக்குடியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது

தூத்துக்குடி, அக் 17

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 54ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (17.10.2025) தூத்துக்குடியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.



கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளர், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவரது ஆணையின்படி, தூத்துக்குடி சிவன் கோவில் தேரடி சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை மற்றும் பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.




இந்நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ். ஏசா துரை  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு உற்சாகமாகக் கொண்டாடினர்.


📸 புகைப்பட விளக்கம் :

தூத்துக்குடி:
அஇஅதிமுக 54ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் மாநகர மாவட்ட கழகச் செயலாளர் எஸ். ஏசா துரை மற்றும் நிர்வாகிகள்.


🏷️ தூத்துக்குடி நிகழ்ச்சி:

  1. அஇஅதிமுக 54ஆம் ஆண்டு விழா – தூத்துக்குடியில்  ஒபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்!
  2. எம்.ஜி.ஆர்., அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை – எஸ். ஏசா துரை தலைமையில் நிகழ்வு
  3. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அஇஅதிமுக 54ஆவது ஆண்டு விழா – பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

திங்கள், 29 செப்டம்பர், 2025

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

 # கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு  அஞ்சலி தூத்துக்குடியில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்

தூத்துக்குடி: செப் 29

 கடந்த 27.09.2025 அன்று கரூரில் நடைபெற்ற நடிகர் விஜய்  பிரச்சார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில் உயிரிழந்த 40 பேருக்கு  தூத்துக்குடியில் இன்று அஞ்சலி செலுத்தினர்.



இது பற்றிய செய்தியாவது 

கழக ஒருங்கிணைப்பாளர், கழக பொருளாளர் மற்றும் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்.) எம்.எல்.ஏ. ஆணையின்படி இந்த அஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.


### அஞ்சலி நிகழ்வு


தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில்...

தூத்துக்குடி சிவன் கோயில் தேரடி அருகே வைக்கப்பட்ட உயிரிழந்தவர்களின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.


வீடியோ 1 பார்க்க 

### கலந்துகொண்ட முக்கியஸ்தர்கள்


மாவட்ட பொறுப்பாளர்கள்:

- மாவட்ட கழக துணை செயலாளர் பழனிச்சாமி பாண்டியன்

- மேற்கு பகுதி கழகச் செயலாளர் கே.எஸ். செல்லத்துரை

- மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன்

- மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல்

- மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தங்க மாரியப்பன்

- தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக செயலாளர் 

இரா.இல. ஜெயராமன்


அணி தலைவர்கள்:

- மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மகேஸ்வரன்

- மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன்

- வடக்கு பகுதி அம்மா பேரவை தலைவர் பொய்யாமொழி

வீடியோ 2 பார்க்க

இணைப் பொறுப்பாளர்கள்:

- மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜதுரை

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்கள் செல்வராஜ், மந்திரம்

- மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற பொருளாளர் டி. வேல்சாமி

- மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சபிக்குமார்



உள்ளூர் பொறுப்பாளர்கள்:

- தாளமுத்து நகர் ஊராட்சி கழகச் செயலாளர் எம்.ஜி. முனியசாமி

- காமராஜ் நகர் ஜெபக்குமார்

- வட்டக் கழக செயலாளர் கருப்பு


உள்ளிட்ட பலர் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டினர்.


### இரங்கல் செய்தி


கரூர் பொதுக்கூட்ட நெருக்கடியில் உயிரிழந்த 40 பேரின் குடும்பத்தினருக்கு அ.தி.மு.க தூத்துக்குடி மாவட்டத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி, 29.09.2025

புதன், 29 மே, 2024

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என பாஜ மாநில தலைவா் அண்ணாமலை பாஜ எம்பி வேட்பாளா் தமிழிசைசௌந்தா்ராஜன் ஆகியோா் பேசி வருவது முற்றிலும் தவறானது ஒபிஎஸ அணி புகழேந்தி ஆவேசம்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

30-5-2024

செய்தி புகைப்படங்கள்  

த.சண்முகசுந்தரம்

முத்த பத்திரிகையாளர் 


முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவை இந்துத்துவா தலைவா் என பாஜ மாநில தலைவா் அண்ணாமலை பாஜ எம்பி வேட்பாளா் தமிழிசைசௌந்தா்ராஜன் ஆகியோா் பேசி வருவது முற்றிலும் தவறானது ஒபிஎஸ அணி புகழேந்தி ஆவேசம் 

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி அருகே திருமண வரவேற்பு நிகழ்விற்கு வருகை தந்த  புகழேந்தி   செய்தியாளா்களை  சந்தித்தாா்.




  அப்போது  அவா்  கூறும் போது ...      முதல்வா் மு.க.ஸ்டாலின்  ஆட்சியில் பெண்களுக்கு இலவசபேருந்து பயணம் .மாணவா்களுக்கான  திட்டங்கள் போன்றவைகளை பாராட்டுவதில்  எந்த தயக்கமும் இல்லை  என்றாா்  


முன்னாள் முதல்வா்  ஜெயலலிதாவை  இந்துத்துவா தலைவா் என  பாஜ மாநில தலைவா்  அண்ணாமலை  பாஜ  எம்பி வேட்பாளா்  தமிழிசைசௌந்தா்ராஜன்  ஆகியோா் பேசி வருவது  முற்றிலும் தவறானது  


அவா் ராமஜென்ம பூமிக்கு கரசேவா்களை  அனுப்பியதாக கூறுவதும் முற்றிலும் பொய்யானது  


அவா் மதத்தினருக்கும் சாதியினருக்கும்  தலைவராக  இருந்தாா்  அவரைப்பற்றி  இவ்வாறு  கூறுவதை ஒரு நாளும்  ஒருபோதும்  நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்  என்றாா்


 தூத்துக்குடியில்  ஓ.பி எஸ் அணி மாநில கொள்கை பரப்பு செயலாளா்  புகழேந்தி    அருகில் மாவட்ட செயலாளா்  ஏசாதுரை  பொதுக்குழு உறுப்பினா் ரமேஷ்  .தெற்கு பகுதி செயலாளா்  லோகு .மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிாிவு செயலாளா் சாமுவேல் உட்பட பலா் உடன் இருந்தனா்.

செவ்வாய், 7 மே, 2024

போராட்டம் அறிவிப்பு கூட்டுறவு வங்கிகளில் குளறுபடிஓபிஎஸ் அணி ஏசாதுரை கண்டனம் தெரிவித்து.அறிக்கை வெளியிட்டுள்ளார்

Photo news by sunmugasunthram Reporter 

     தூத்துக்குடி தமிழக முன்னாள் அதிமுக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் எம்.எல்.ஏ, அணியின் தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ் ஏசாதுரை வௌியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

     மறைந்த முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா ஆட்சி காலத்தில் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி கிராம பகுதியில் உள்ள ஊராட்சி பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசின் சாா்பில் கூட்டுறவு வங்கி தேர்தல் முறையாக நடைபெற்றது .



அதற்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அதிமுக ஆட்சி காலத்தில் நல்ல முறையில் இயங்கி ஏழை எளிய நடுத்தர மக்களின் நலன் காக்கும் வகையில் சிறு தங்கநகைக்கடன், விவசாய கடன், சிறு தொழில், வியாபார மானிய கடன் வங்கியில் வைப்பு தொகை சேமிப்பு கணக்கு இவை அனைத்தும் 1991ம் ஆண்டு முதல் கணினி மயமாக்கப்பட்டு பல்வேறு வகையில் வழங்கப்பட்டு செயலாற்றியது.


இந் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தால் 5 சவரன் வரை கூட்டுறவு வங்கியில் கடன் பெற்றவர்கள் தொகை தள்ளுபடி செய்யப்பட்டு 5 சவரன் நகை திருப்பி வழங்கப்படும் என்ற தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக வழங்கியது 


ஆனால் ஆட்சிக்கு வந்த பின்பு அதில் சில நடைமுறைகளை பின்பற்றினால் தான் வழங்க முடியும் என்று திமுக அரசு கூறி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத காரணத்தால் பல தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 



   இந்நிலையில் மாவட்டத்தில் எதிா்பாராத கன மழை பெய்து வௌ்ள பாதிப்பு ஏற்பட்டது. 

அதில் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.


 கூட்டுறவு வங்கிகளில் தலைவர்களின் பதவிக்காலம் முடிவு பெற்றுள்ளதால் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்து வருகின்றன.


 இதில் மாநகராட்சி பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கி அவர்களது நேரடி பார்வையில் இருந்து இயங்குவதால் அதிகாாிகள் மூலம் பல்வேறு வகையான கடன்கள் வழங்குவதற்கு வாய்ப்புகள் ஏற்படுகிறது. 


ஊராட்சி பேரூராட்சி பகுதிகளில் இயங்கும் கூட்டுறவு வங்கிகளுக்கு தேர்ந்ெதடுக்கப்பட்ட தலைவர்கள் இல்லாத காரணத்தால் வங்கிகளுக்கு கடன் உதவி கேட்டு வருபவர்களுக்கு வழங்க முடியாத நிலை வருகிறது. 


இதை கருத்தில் கொண்டு திமுக அரசு துறை சார்ந்த அதிகாாிகள் கூட்டுறவு துறை அமைச்சர் சக்கரபாணி, ஆகியோர் ஏழை எளிய மக்களின் நலன் கருதி அதற்கான உத்தரவு களை பிறப்பித்து கடன்கள் வழங்குவதற்கு வழிவகை செய்ய வேண்டும். 

வங்கி தீடீர் முடக்கம்!!!

கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வங்கியின் மென்பொருள் மாற்றப்பட்டு அதன் பின் வங்கி சேவைகள் சாிவர செய்ய முடியாமல் ஊழியர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

எதிர்ப்பு போராட்டம் !!!

 அதனால் வங்கியின் பதிவுகள் சேமிப்பு கணக்கு சேவை முதலீடுக்கான வட்டி வழங்குதல் நடைமுறையில் தவறுகள் ஏற்படுகின்றன.


 இதனால் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.


 இதற்கு நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என்று தவறும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி முன்பு அதிமுக முன்னாள் முதலமைச்சரும் எம்.எல்.ஏவுமான ஓ.பன்னீர்செல்வம் அனுமதி பெற்று போராட்டம் நடத்தப்படும். என்று ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

ஞாயிறு, 11 பிப்ரவரி, 2024

SDPl தூத்துக்குடி மா.செ ஒபிஎஸ் கட்சி க்கு தாவல்

முன்னாள் முதல்வர் எடப்பாடி  பழனிச்சாமி இடம்   SDPI கட்சி கூட்டணி வைத்ததால் தூத்துக்குடி மாவட்ட SDPIகட்சி மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத் அக்கட்சியில் இருந்து விலகி முன்னாள் முதல்வர் கழக ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் கட்சி யில் தனது ஆதரவாளர்கள் உடன் தூத்துக்குடி மா செ ஏசாதுரை முன்னிலையில் இணைந்தார் .



இது பற்றிய செய்தியாவது;-

தூத்துக்குடி மாவட்டSDPl கட்சியின் மாவட்ட செயலாளர்  மின்னல் அம்ஜத்  அக்கட்சியில் இருந்து விலகி கழக ஒருங்கிணைப்பாளர்  முன்னாள் முதல்வர் ஓ.பி பன்னீர் செல்வம் தலைமை ஏற்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  முன்னிலையில் தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டார்.



 அருகில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணைச் செயலாளர் இரா இ ல ஜெயராமன்  மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா  மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மாரி மகேஸ்வரன்  மத்திய தெற்கு பகுதி இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் சபிக்குமார் உடனிருந்தனர்.

இதனால் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சனி, 30 டிசம்பர், 2023

ஆயிரம் ரூபாய் வாங்க மறுத்து தருவைகுளம் கிழக்கு கடற்கரையில் சாலை மறியல் !!! பொதுமக்கள் உடன் கழக மாநகர செயலாளர் ஏசாதுரை பங்கேற்பு !!! ரூபாய் 6 ஆயிரம் வேண்டும் என தருவைக்குளம் கயத்தாறு புதிய முத்தூர் என தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவை குளம் பகுதியில் வெள்ள நிவாரண நிதியாக தமிழக அரசால் வழங்கப்படும்  ரூபாய் 6000 வழங்காமல் வெறும் ஆயிரம் மட்டும் வழங்கி வருகிறார்கள் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் திமுக அரசை கண்டித்து நேற்று (29-12-2023) பொதுமக்கள்  சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தை
அப் பகுதியில் குவிந்த போலீசார் 

வீடியோ பார்க்க
தருவைகுளம் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் சாலைமறியல் பொது மக்கள் உடன் அமர்ந்த கழக மாநகர செயலாளர் ஏசாதுரை 





இதில் கழக ஒருங்கிணைப்பாளர் கழகப் பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர்  ஓபிஎஸ் ஆணையின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  கழக நிர்வாகிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு  ஆதரவாக அதிகாரிகள் உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

தருவைகுளம் இடிந்து விழுந்த வீடுகள் 


இப் பகுதியில் 2300 குடியிருப்புகள் உள்ளன இதில்  பல வீடுகள் கனமழையால் அன்றைய தினம் இடிந்து விட்டது 

கால் நடைகள் பாதிப்பு இப்படி பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு உரிய  நிவாரண தொகை தமிழக அரசு வழங்க வேண்டும் என பேசினார் மாநகர செயலாளர் ஏசாதுரை கோரிக்கை வைத்தார்.


இதே போல் தூத்துக்குடி மாவட்டம் புதிய முத்தூர் கயத்தாறு பகுதி மக்களும் அரசு தரும் ஆயிரம் வாங்கவில்லை 6 ஆயிரம் தர வேண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் நேற்று ஆயிரம் வாங்க மறுத்து தங்களுக்கு 6ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சாலை மறியல் செய்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது.


 


ஞாயிறு, 24 டிசம்பர், 2023

மறைந்த புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர் நாள் 36 ஆம் ஆண்டு நினைவு நாள் தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்ஜிஆர்  36 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கழக ஒருங்கிணைப்பாளர் கழக பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்  ஆணையின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ் ஏசா துரை  தலைமையில் தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டிடம் வளாகத்தில் உள்ள புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திருவுருவச் சிலை க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்

அதன் பின்னர் தூத்த்துக்குடி சத்திரம் பஸ் ஸ்டாப் அருகே உள்ள புரட்சித் தலைவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது



இந்நிகழ்ச்சியில் ஏராளமான தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.



தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் ஜோசப்

மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தர்ம சீலன்

மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார்

தெற்கு பகுதி கழகச் செயலாளர் லோகு கணேசன்

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஜெபாலன்

மாவட்ட அம்மா பேரவை இணை செயலாளர் முத்துப்பட்டன்

மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் சுதாகர்

மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துறை

மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேலுச்சாமி

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணை செயலாளர் ஜெயராமன்

மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன்

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் ராஜதுரை, செல்வராஜ்

வட்டக் கழகச் செயலாளர்கள்vp. முத்து, ஜெயபால், வேல்சாமி, மணிகண்டன்

லிட்டில் ராஜேஸ்வரன் கிழக்குப் பகுதி தலைவர்

மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன்

ஐயன்யடைப்பு ஊராட்சிகிளை செயலாளர் பாலன்

நிர்வாகிகள் கண்ணன் ,சபிக் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொணடனர்

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினர்

 thoothukudileaks 15-9-2023

Photo news by arunan journalist 

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினர்.

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர் எஸ். ஏசாதுரை தலைமையில் பேரறிஞர் அண்ணா வின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து லட்டு வழங்கினர்



புரட்சித்தலைவர் பொன்மனச் செம்மல் டாக்டர் எம்ஜிஆர்  கழகத்தின் நிரந்தர பொது செயலாளர் மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் அரசியல் வாரிசு  கழக ஒருங்கிணைப்பாளர்  கழகப் பொருளாளர் தமிழக முன்னாள் முதல்வர் ஐயா ஓபிஎஸ்  ஆணையின்படி காஞ்சியில் பிறந்த கருப்பு காந்தி தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 


 15/9/23 இன்று காலை 10 மணி அளவில்  தூத்துக்குடி பழைய மாநகராட்சி கட்டட வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட கழக செயலாளர்  எஸ். ஏசாதுரை  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் 


video பார்க்க 

 இந்நிகழ்ச்சியில். தூத்துக்குடி மாநகர் மாவட்ட அவைத்தலைவர் எம்.எஸ். மாடசாமி

மாவட்ட பொருளாளர் ஜோசப்

மத்திய தெற்கு பகுதி கழகச் செயலாளர் என் ரமேஷ்

மாவட்டம் மகளிர் அணி செயலாளர் சித்ரா

மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார்

கிழக்குப் பகுதி தலைவர் லிட்டில் ராஜேஸ்வரன்

மாவட்ட மீனவர் அணி செயலாளர் வின்சென்ட்

மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஆறுமுகத்துரை

மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள்

மந்திரம்.ஜெயபாலன். மாரியப்பன்

மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் இக்பால் பாஷா

மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் மாரி மகேஸ்வரன்

மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளர் சிவசூரியன்

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி கழக இணைச் செயலாளர் இரா இல ஜெயராமன் தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர்கள்

 சோலையப்பன் வேல்மணி

மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேல்சாமி

மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்கள்

ராஜதுரை ஆறுமுகம் செல்வராஜ் இசக்கிமுத்து

அய்ய நடப்பு ஊராட்சி கழகச் செயலாளர் பாலன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்கள்

 பட்டுக்கனி சாந்தி சிவஞானம் தேன்மொழி

வட்டக் கழக செயலாளர் கள் ஜெயபால் விபி முத்து ஈஸ்டர் வேல்சாமி  முனியசாமி எஸ் எம் ராஜன்

நிர்வாகிகள் சுப்பையா.  சேக் Y. சபிக்குமார் மற்றும்  மாவட்ட கழக ஒன்றிய கழக பகுதி கழக வட்டக்நிர்வாகிகள் பிற அணி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்




  

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2023

தூத்துக்குடி யில் திமுக வை கண்டித்து ஒபிஎஸ்அதிமுக &அமமுக கண்டன ஆர்ப்பாட்டம்

thoothukudi leaks 

01/08, 1:03 PM] அருணன் செய்தியாளர்:  

கொடநாடு கொலை கொள்ளை குற்றவாளி கள் மீது நடவடிக்கை எடுக்காத  திமுக‌அரசை கண்டித்து சமீபத்தில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஒபி பன்னீர் செல்வம் மற்றும் அமமுக பொதுசெயலாளர் டிவி தினகரன் இனைந்து ஆகஸ்ட் மாதம் 1 ம் தேதி  கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்தது இருந்தார்கள்



அதன் படி இன்று 1-8-2023 தமிழகம் முழுவதும்  தலைநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராளான கூட்டம் 


தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி 12வது மையவாடி எதிர் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் ஒபிஎஸ் அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தெற்கு மா.செ புவனேஸ்வரன் வடக்கு மா.செ வினோபாஜி..அமமுக மாநகர் மாவட்ட மாவட்ட செயலாளர் பிரைட்டர், அமமுக வடக்கு மாசெ முன்னாள் எம்எல்ஏ சிவபெருமாள் , தெற்கு மா சே மனோகரன் மாவட்ட அவைத்தலைவர் த.மாரியப்பன் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் மகளிர் கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


அதிமுக கட்சி கொடி பயன் படுத்த மாவட்ட காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிட்ட தக்கது.

சென்னையில்...
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் மெத்தனப்போக்கோடு செயல்படும் தி.மு.க அரசைக் கண்டித்து அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டிடிவி .தினகரன் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

வியாழன், 27 ஜூலை, 2023

அதிமுக பெயரை பயன்படுத்தி ஒபிஎஸ் அணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் தெற்கு மாவட்ட அதிமுக வினர் போர்கொடி

 தூத்துக்குடி லீக்ஸ் 28-7-2023

செய்தி புகைப்படங்கள்

அருணன் மூத்த பத்திரிகையாளர் 


அதிமுக பெயரை பயன்படுத்தி ஒபிஎஸ் அணி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வினர் போர்கொடி உயர்த்தியுள்ளது.

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் அதிமுகவினர் 


இதுபற்றி செய்தியாவது -

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரை பயன்படுத்தி, அமமுக கட்சியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்திட முயலும் ஓபிஎஸ் அணியினர்  கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி தரக்கூடாது என தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் கழக வழக்கறிஞர் அணியினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்  மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர்.

தூத்துக்குடி எஸ்.பி அலுவலகத்தில் அதிமுகவினர் 


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி ஓ. பன்னீர்செல்வம் அணியினர் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக விளம்பரம் செய்துள்ளனர். அதில்  தேனியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் உடன் அமமுக கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் பங்கேற்கிறார் என்றும் தூத்துக்குடியில் பாளையங்கோட்டை ரோடு விவிடி சிக்னல் அருகே நடந்திடும் ஆர்ப்பாட்டத்தில் அமமுக கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. 


இதனை கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் பெயரையோ, கட்சிக் கொடியையோ, கட்சியின் சின்னத்தையோ பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தியும், இதனால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு முடிவு கட்ட கன்டன ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி   தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் ஆலோசனையின் பேரில் ..

முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் மனு அளித்தனர். தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் யு.எஸ். சேகர், தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ரூ மணி, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி, வழக்கறிஞர்கள் சரவணபெருமாள், சிவசங்கர், ராஜ்குமார், செண்பகராஜ், வைகுந் சங்கர், ஆதீஸ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திங்கள், 17 ஏப்ரல், 2023

தூத்துக்குடியில் ஓ.பிஎஸ் அணி ஆலோசனை கூட்டம்

thoothukudileaks 18-4-2023

photo news by shanmuga sunthram 

தூத்துக்குடியில் ஓ.பிஎஸ் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்  திருச்சியில் நடைபெறும் முப்பெரும் விழா மாநாடு விழாவில் பங்குகொள்வது குறித்து மாநகர் மாவட்ட ஒ.பன்னீர் செல்வம் அணி சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமை தாங்கி ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, துணைச் செயலாளர்  பழனிச்சாமி பாண்டியன், இலக்கிய அணி செயலாளர் தர்மசீலன், ஜெ பேரவை தலைவர் ஆறுமுகத்துரை, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் முரளி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சாமுவேல், பகுதி செயலாளர்கள் ரமேஷ்,  லோகு கணேசன், செல்லத்துரை, மாவட்ட பிரதிநிதி மாரி மகேஸ்வரன்,  சட்டமன்றத் தொகுதி இணைச் செயலாளர்கள் ஜெயராமன், வெள்ளபாண்டி,  மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் சிவக்குமார், இளைஞர்  துணைச் செயலாளர் பரணி செல்வம், ஜெ பேரவை துணைச் செயலாளர்கள் ராஜதுரை.  லிங்கராஜ், ஜெயபால், முத்து பட்டன், வேல்சாமி, மணிகண்டன், எம்ஜிஆர் மன்ற பொருளாளர் வேல்ச்சாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சுதாகர், ஜெ பேரவை செயலாளர் ரமேஷ் , எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மந்திரம், பகுதி இணை செயலாளர் லதா மேரி, பகுதி செயலாளர் பட்டு கனி, மாவட்ட மீனவர் அணி துணைச் செயலாளர் அந்தோணி ராஜ்,  நிர்வாகிகள் தங்கவேல், முத்துக்குமார், சதீஷ், மாரி பாண்டி, ஜீவா மாரியப்பன், கிறிஸ்துராஜ். கணேசன், சரண், கதிரேசன், மாப்பிள்ளையூரணி கணேசன், அருணாச்சல குமார் சபிக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதன், 5 ஏப்ரல், 2023

ஒ பி எஸ் க்கு பிஎம்டி ஆதரவு ஒபி எஸ் க்கு தலைவர் இசக்கிராஜா வெற்றி வேல் வழங்கல் பரபரப்பு

thoothukudileaks 6-4-2024

photo news by shanmuga sunthram 


தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு  பிஎம்டி நிறுவனத்தலைவர் இசக்கிராஜா தனது ஆதரவை தெரிவித்து வெற்றி வேல் வழங்கினார் பரபரப்பு ஏற்பட்டது.




இதுபற்றி செய்தியாவது 

சமீப காலமாக அதிமுக வில் ஒபி எஸ் அணி இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து இருஅணிகள் செயல்படுகின்றன 

இந்நிலையில்...

   தமிழக முன்னாள் முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர்

 ஒ. பன்னீர்செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் .... 


தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் இசக்கிராஜா தேவர் நேற்று 5-4-2023 

ஒபி எஸ் அவரை‌ நேரில் சந்தித்து வீரவேலான வெற்றி வேல் வழங்கி சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தார்.



      நிகழ்ச்சியில் வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலாளர் ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர் செல்லசக்தி, ஆலோசகர் முருகேசன், சென்னை மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து. மாநில ஐடிவிங்  ராம்குமார், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் இளங்கோ, தென் மண்டல ஐடிவிங் ராதா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருங்குளம் சங்கர், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அருண்குமார்,  மற்றும் செல்லதுரை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

சனி, 4 மார்ச், 2023

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி நிர்வாகி முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் இணைந்தார்.

 thoothukudileaks 5-3-2023

photo news by shanmuga Sundaram 

தூத்துக்குடியில் ஓபிஎஸ் அணி நிர்வாகி  அதிமுக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் முன்னிலையில் இபிஎஸ் அணியில் இணைந்தார்.

இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவது ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளால் அதிமுக ஒபிஎஸ் இபிஎஸ் என இரு அணிகள் உருவாகி அதன் சம்பந்தமான வழக்குகள் நீதிமன்றங்கள் வரை சென்று தற்போது உச்சநீதிமன்றம் இபிஎஸ் நடத்திய பொதுக்குழு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. 


மற்ற சில வழக்குகளும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் இருந்து வருகின்றன. இந்நிலையில் ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்துடன் இபிஎஸ் அணி போட்டியிட்டதால் பலரும் அந்த அணியில் இருந்து வருகின்றனர்.



     இந்நிலையில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வரும் சட்டமன்ற எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையேற்று ஓபிஸ் அணி நாசரேத் நகரசெயலாளர் சாது இம்மானுவல் சிதம்பரநகரில் உள்ள அதிமுக அமைப்பு கழக அலுவலகத்தில் மாநில அமைப்பு செயலாளரும்; முன்னாள் அமைச்சருமான தூத்துக்குடி சி.த.செல்லப்பாண்டியனை சந்தித்து சால்வை அணிவித்து அதிமுகவில் இணைந்தார்.

      ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ராம் கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் குமார், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், போக்குவரத்து தொழிற்சங்க முன்னாள் மண்டல இணைச்செயலாளர் சங்கர், கனிராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.

photo news by shanmuga Sundaram 

புதன், 22 பிப்ரவரி, 2023

அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி காவல்துறை க்கு வாயில் லட்டு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்த அதிமுகவினர் முன்னாள் மேயர்!!!

thoothukudileaks 23-2-2023

news Photo by Roja arunan 

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வார் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 



ஒபி எஸ் தனிகட்சி?

ஒபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்து நம்பி வந்த புதிய மா.செ. மற்றும் தொண்டர்கள் ?

 ஒபி எஸ் அணியினர் நிலைகுலைந்து போயுள்ளனர். இனி ஒபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் பண்ணுவாரா ?!அல்லது ஆளும் கட்சிகளான மத்திய மாநில பாஜக திமுக வில் தன்னை இனைத்து கொள்வாரா ஊடகங்களில் வாதம் அரங்கேறி வருகிறது.

இதுபற்றிய செய்தியாவது -

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

எடப்பாடியார் தரப்பு

விசாரணையில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. 

நிர்வாக ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் அனைத்து தரப்பு ஒப்புதலுக்கு பிறகு தான் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுகவின் உச்ச பட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு தான் அதிமுக பொதுக்குழு ஆகும். எனவே அதற்கு தான் அனைத்து அதிகாரங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

ஒ.பி பன்னீர் செல்வம் தரப்பு

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு, ‘‘அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்பு தான். 

இருப்பினும் அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்று கொண்டு இருந்த போது, தற்போது அவர்களே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளும் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளும் காலியாகும் போது, அடுத்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே இருந்தவர்களால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளால் தான் தொடர்ந்து கட்சி நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் சட்ட விதிமுறை ஆகும்’’ என தெரிவிக்கப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்தி வைத்திருந்தது. இந்தநிலையில் ...மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (23-2-2023)காலை தீர்ப்பு வழங்கியது..

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வார் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. உறுதி செய்த உச்சநீதிமன்றம் .

தூத்துக்குடியில்...




தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடி வருகிறார்கள் 

தூத்துக்குடியில்...காவல்துறையினருக்கு லட்டு வழங்கும் வீடியோ தூத்துக்குடி முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக வுக்கு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  ஈரோடு வேட்பாளர் வெற்றி க்கு அச்சாரமான அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.


செவ்வாய், 17 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாள் மாநகர செயலாளர் ஏசா துரை தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கல்

thoothukudileaks 17-1-2023

தூத்துக்குடியில் எம்ஜிஆர் பிறந்த நாள் மாநகர செயலாளர் ஏசா துரை தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்கள்



இதுபற்றிய செய்தியாவது:- 

மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் 106-வது பிறந்த நாள் இன்று அதிமுகவினர் எம்ஜிஆர் திருவுருவ சிலை மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு கேக் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



 தூத்துக்குடியில் அதிமுக ஒபிஎஸ் அணி‌ மாநகர செயலாளர் ஏசா துரை தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தூத்துக்குடி பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதன் பின்னர் அப்பகுதியில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி னர் 


இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள்  தொண்டர்கள் மற்றும் மகளிர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

வெள்ளி, 13 ஜனவரி, 2023

தூத்துக்குடியில் ஒபிஎஸ் 72 வது பிறந்த நாள் தூத்துக்குடி மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

 thoothukudileaks 14-1-2023

photo news by Arunan 



இன்று (14-1-2023 ) முன்னாள் தமிழக முதல்வர் அதிமுக பொருளாளர் மற்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஒ பி பன்னீர்செல்வம் அவரின் 72 வது பிறந்த நாள் 

அதிமுக ஒபிஎஸ் அணி‌ கட்சியினர் தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி  கொண்டாடி வருகின்றனர்.



தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணி அதிமுக  மாநகர செயலாளர் ஏசாதுரை தலைமையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் ஒபிஎஸ் வாழ்க..வாழ்க கோஷமிட்டவாறு கட்சியினர் திரளாக வந்தனர்.




 பின்பு தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்தனர். பஸ் பயணிகள் ஆட்டோ டிரைவர் மற்றும் பொதுமக்களுக்கு லட்டு வழங்கினார்கள்




அதன் பின்பு தூத்துக்குடி சுகம் ஹோட்டல் பகுதி சத்திரம் ஸ்டாப்‌ மற்றும் தூத்துக்குடி சிவன் கோயில் பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தார்கள்.

சனி, 24 டிசம்பர், 2022

மறைந்த முதல்வர் எம் ஜி ஆர் 35-வது நினைவு தினம் அதிமுக ஒபிஸ் அணி தூத்துக்குடி மாநகரம் சார்பாக ஏசா துரை தலைமையில் எம்.ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு

 thoothukudileaks 24-12-2022

news by Arunan 

தூத்துக்குடியில் மறைந்த தமிழக முதல்வர் எம் ஜி ஆர் அவரின் 35-வது நினைவு தினம் அதிமுக ஒபிஸ் அணி தூத்துக்குடி மாநகரம் சார்பாக ஏசா துரை தலைமையில் எம்.ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் எம் ஜி.ஆர் போட்டோ வுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி ஏற்பாடு செய்திருந்தார்கள்.




இதுபற்றிய செய்தியாவது:-

மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் -ன் 35. வது நினைவு தினம் முன்னிட்டு தமிழகம் முழுவதும் எம் ஜிஆர்  போட்டோ மற்றும் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து கட்சி தொண்டர்கள் நினைவு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

தூத்துக் குடியில் பழைய நகராட்சி முன்பு வளாகத்தில் இருக்கும் ஆளுயர எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு அதிமுக ஒ பிஎஸ் அணி மாநகர செயலாளர் ஏசா துரை தலைமையில் கட்சி தொண்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.



மேலும் தூத்துக்குடி மாநகரம் சார்பாக ஏசா துரை தலைமையில் சத்திரம் ஸ்டாப் எம்.ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிப்பு மற்றும் தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் எம் ஜி.ஆர் போட்டோ வுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.