thoothukudileaks 6-4-2024
photo news by shanmuga sunthram
தமிழக முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வத்திற்கு பிஎம்டி நிறுவனத்தலைவர் இசக்கிராஜா தனது ஆதரவை தெரிவித்து வெற்றி வேல் வழங்கினார் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி செய்தியாவது
சமீப காலமாக அதிமுக வில் ஒபி எஸ் அணி இபிஎஸ் அணி என இரண்டாகப் பிரிந்து இருஅணிகள் செயல்படுகின்றன
இந்நிலையில்...
தமிழக முன்னாள் முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர்
ஒ. பன்னீர்செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் ....
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில தலைவர் இசக்கிராஜா தேவர் நேற்று 5-4-2023
ஒபி எஸ் அவரை நேரில் சந்தித்து வீரவேலான வெற்றி வேல் வழங்கி சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் வைத்தியலிங்கம் எம்.எல்.ஏ, பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்க மாநிலச் செயலாளர் ராஜசேகர், மாநில அமைப்பு செயலாளர் செல்லசக்தி, ஆலோசகர் முருகேசன், சென்னை மாவட்ட செயலாளர் பேச்சிமுத்து. மாநில ஐடிவிங் ராம்குமார், மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் இளங்கோ, தென் மண்டல ஐடிவிங் ராதா பாண்டியன், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருங்குளம் சங்கர், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் முத்துக்குமார், தூத்துக்குடி மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், மற்றும் செல்லதுரை செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக