போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போராட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 மார்ச், 2026

தூத்துக்குடியில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மார்ச் 17

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லபாண்டியன், எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அவை தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நடராஜ், த.மா.க மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், பொருளாளர் சேவியர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி மற்றும் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் போக்குவரத்து கல்வி குமார்,வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

வியாழன், 12 மார்ச், 2026

வேடநத்தம் மாணவி படுகொலை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை


thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி  சுப்புராஜ் —  காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


 இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு  உரையாற்றுகையில், ...

தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

thoothukudileaks



ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத்  கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 

விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது. 

thoothukudileaks

thoothukudileaks


உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ  உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். 


காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

தூத்துக்குடியில் தூய்மை பணியாளர்கள் பட்டினி போராட்டம்: ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் ஆதரவு த

Tamil Nadu updates,

தூத்துக்குடி, மார்ச் 12:

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வரும் தொடர் பட்டினி போராட்டம் இன்று (12-3-2026) இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள் வருகை தந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஊக்கமளித்தனர். 

thoothukudileaks


குறிப்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, புரட்சி பாரதம் கட்சியின் தூத்துக்குடி மாநகர மாவட்ட செயலாளர் மா. மாரிசெல்வம், மாவட்ட துணை செயலாளர் அந்தோணிச்சாமி ஆகியோர் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்தனர்.

மேலும், தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது முழு ஆதரவும் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் ஏஐசிசிடியு (AICCTU) தொழிற்சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

thoothukudileaks




இது தொடர்பாக ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மாவட்ட தலைவருமான மின்னல் அம்ஜத் நன்றி தெரிவித்தார்.

வெள்ளி, 13 பிப்ரவரி, 2026

தமிழக அரசை கண்டித்து தூத்துக்குடியில் 7 கல்லூரிகளை சேர்ந்த 150 பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates  photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்.13:

அரசு நிதி உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலும் இன்று பரபரப்பான போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


கல்லூரி ஆசிரியர்களுக்கான பணி மேம்பாட்டிற்கான அரசாணை எண் 5 கடந்த 11.01.2021 அன்று வெளியிடப்பட்டது. 


இதன்படி அரசு கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 5 ஆண்டுகள் கடந்தும், பணி மேம்பாடு ஆணை வழங்கப்பட்ட நிலையிலும், ஊதியம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாமல் வாய் மொழி உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

thoothukudileaks


கடந்த டிசம்பர் மாதம் உயர்கல்வித்துறை அமைச்சரை சந்தித்தபோது, ஜனவரி மாத ஊதியத்தில் தொகை சேர்க்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும், ஜனவரி மாத சம்பளத்தில் அது சேர்க்கப்படவில்லை. இதனை கண்டித்து மூட்டா மற்றும் ஏயூட்டி அமைப்புகளின் சார்பில் கடந்த 16 நாட்களாக தமிழகம் முழுவதும் அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளில் தொடர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

thoothukudileaks


இதனையடுத்து, 05.02.2026 அன்று உயர்கல்வித்துறை அமைச்சர் சங்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி, பிப்ரவரி மாத சம்பளத்தில் தொகை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாரம் கடந்தும் எந்த முன்னேற்றமும் இல்லாததை கண்டித்து, அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் மூட்டா மூன்றாம் மண்டல பொருளாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. TNGEA மாநில துணைத் தலைவர் முருகன் தொடக்க உரையாற்றினார். மூட்டா மத்திய இணைப் பொதுச் செயலாளர் சிவஞானம் ஆர்ப்பாட்டத்தின் நோக்க உரையாற்றினார்.

TNPTF மாவட்ட செயலாளர் ஆனந்தி, TANSTAC மண்டல செயலாளர் கணேசன், SFI மாவட்ட செயலாளர் ராம்குமார் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். TNGEA மேனாள் இணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் நிறைவுரையாற்றினார். மூன்றாம் மண்டல செயற்குழு உறுப்பினர் வேல்குமார் நன்றியுரை ஆற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 7 கல்லூரிகளைச் சேர்ந்த 150 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு, அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டு ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்குவதோடு, அரசு நிதி உதவி பெறும் கல்லூரிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சனி, 23 ஆகஸ்ட், 2025

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் இன்று 106 வது பிறந்த நாள்

 🤷🏻‍♀️ _தூத்துக்குடி லீக்ஸ்_

23-8-2025 சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் இன்று 106 வது பிறந்த நாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.-

தூத்துக்குடி மாவட்டம்

தியாகி பெஞ்சமின் வாழ்க்கை வரலாறு


பிறப்பு மற்றும் குடும்ப பின்னணி

தியாகி பெஞ்சமின் அவர்கள் 1919-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், ஆலந்தளையில், ஒரு ஏழை மீனவர் குடும்பத்தில் பிறந்தார். வாழ்வு மிகவும் வறுமையான சூழலில் இருந்தபோதும், அவருக்கு சிறுவயதிலிருந்தே தேசபக்தி ஆழமாக வேரூன்றியது.



கல்வி நிறுத்தமும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபாடும்...

அக்காலத்தில் நிலவிய பிரிட்டிஷ் ஆட்சியின் அடக்குமுறை காரணமாக, தனது பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் போனார். 


அதற்குப் பதிலாக, மிக இளமையிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திரப் போராட்ட தலைவர்களான சோமயாஜுலு மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்.


சத்தியாகிரகப் போராட்டமும் சிறைத் தண்டனையும்


ஆலந்தளையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டங்களில் கலந்து கொண்டார். இதற்காக பிரிட்டிஷ் ஆட்சியினர் அவரை கைது செய்து, 6 மாதங்களுக்கு சிறைத் தண்டனை விதித்தனர். சிறைவாசம் முடிந்து வெளியேறிய அவர், “பாரத மாதா தேசிய வாலிபர் சங்கம்” என்ற இளைஞர் அமைப்பை ஆலந்தளையில் தொடங்கினார். இதன் மூலம் மதுக்கடைகள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்தார்.


ஒடுக்குமுறை மற்றும் துன்பங்கள்

அவர்மீது ஏழு பொய்க்கேசுகள் பதிவு செய்யப்பட்டு, பல முறை தூத்துக்குடி மற்றும் மதுரை சிறைகளில் அடைக்கப்பட்டார்.


 மேலும், ஆலந்தளையிலிருந்து அவருடைய ஆதரவாளர்கள் மற்றும் உறவினர்கள் உட்பட சுமார் 50 குடும்பங்களை பிரிட்டிஷ் ஆட்சியினர் பலவந்தமாக வெளியேற்றினர். அவர்கள் திருச்செந்தூர் கடற்கரையருகே தஞ்சமடைந்தனர்.


முக்கிய வழக்குகள்

பெஞ்சமின் அவர்கள், பிரிட்டிஷ் அதிகாரி வில்பிரட் லோன் துரை கொலைச் சம்பவத்தில் தொடர்புடையவர் என குற்றம்சாட்டப்பட்டார். 


அதோடு, குறும்பூர் ரயில்வே நிலையம் எரிப்பு வழக்கு, மெய்ஞானபுரம் சம்பவம் உள்ளிட்டவற்றிலும் தொடர்புபடுத்தப்பட்டு, ஆயுள் தண்டனையையும் பல்வேறு சிறைத்தண்டனைகளையும் பெற்றார்.


சிறப்பான பண்புகள்

அவர் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தார். இதனால், பல இடங்களில் போராட்டம் தொடர்பான தொடர்புகளை விரிவுபடுத்தினார்.


சமூக மற்றும் பொதுப் பணி

சுதந்திரத்திற்குப் பின், ஆல் இந்தியா ஃப்ரீடம் ஃபைட்டர் அசோசியேஷன் (All India Freedom Fighters’ Association) பொதுச் செயலாளராக பணியாற்றினார். 

மேலும், திருச்செந்தூர் அமலிநகரில் அமைக்கப்பட்ட “சுதந்திர ஞாபகப் பாடசாலை” (தியாகி பெஞ்சமின் பள்ளி) அறங்காவலராக இருந்து, கல்வி வளர்ச்சியில் பங்காற்றினார்.


மரியாதைகள் மற்றும் விருதுகள்

அவரது தேசப்பணி மற்றும் தியாகத்தை மதித்து, மத்திய அரசு அவருக்கு “தாமிரபத்திரம்” விருது வழங்கியது.




சுதந்திரத்திற்குப் பின் கூட, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து அவர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். தனது இறப்பு வரை சமூக அக்கறையுடனும் தேசபக்தியுடனும் வாழ்ந்தார்.




---


👉

வியாழன், 14 ஆகஸ்ட், 2025

உப்பளங்களை கையகப்படுத்தும் கப்பல் கட்டும் தள திட்டத்திற்கு எதிர்ப்பு – ஆர்ப்பாட்டம், கடையடைப்பு!

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: 2025 ஆகஸ்ட் 14

தூத்துக்குடி அருகே கடலோர பகுதிகளில் பல தசாப்தங்களாக பார்த்திகள் அமைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. 


இந்நிலையில், புதிய துறைமுகத்தை ஒட்டி முத்தையாபுரம், முள்ளக்காடு, புல்லாவெளி, பழையகாயல் பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி கப்பல் கட்டும் தளம் விரிவாக்கத் திட்டம் தொடங்கப்பட உள்ளது.


"இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அதிமுக கம்யூனிஸ்ட் தவெக நாம் தமிழர் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்து இன்று முத்தையாபுரம் பஜாரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்."




ஆர்ப்பாட்டத்தில் ..

அதிமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்,

 ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, 

தமிழக வெற்றிக் கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், 

நாம் தமிழர் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ், 

கம்யூனிஸ்ட் உப்பு தொழிலாளர் சங்கம் பொன்ராஜ், பேச்சிமுத்து, பரமசிவம், பூமயில், 

மதசார்பற்ற ஜனதா தள மாநில துணைத் தலைவர் வக்கீல் சொக்கலிங்கம், 

காங்கிரஸ் கட்சி கதிர்வேல், 

வணிக சங்க நிர்வாகிகள் தெர்மல் ராஜா,பொன் தனகரன், விநாயகமூர்த்தி,ஜவகர், 

விவசாயிகள் சங்கம் ஜோதிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி செழியன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம், பாண்டியவதி பரதர் நல சங்கம் பொதுச் செயலாளர் ஸ்னோஸ், உப்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் மந்திரமூர்த்தி, செயலாளர் சேகர், பொருளாளர் பொன்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.




உப்பு உற்பத்தியாளர் சங்கங்கள், உப்பளத் தொழிலாளர் சங்கங்கள், மீன்பிடி தொழிலாளர் சங்கங்கள், வியாபாரிகள் சங்கங்கள், விவசாயிகள் சங்கங்கள், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம் ஆகியவை ஆர்ப்பாட்டத்தில் இணைந்தன.


ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவாக முத்தையாபுரம், முள்ளக்காடு, ஸ்பிக் நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார கடைகள் இன்று முழுமையாக அடைக்கப்பட்டன.



--

வெள்ளி, 17 ஜனவரி, 2025

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

photo news by Arunan journalist 

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜன. 17-2025


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமலிநகரில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற இந்திய சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் அவர்களின் 26-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பரதர் குல அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு, தியாகி பெஞ்சமின் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நினைவு தின நிகழ்ச்சியில் தியாகி பெஞ்சமின் அவர்களின் மூத்த மகன் அசோகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். 


இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற தியாகி பெஞ்சமின் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

புதன், 18 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் அடைப்பு: மது பிரியர்கள் திண்டாட்டம்

Tamil Nadu updates,18-12-2024

Photo news by

 Arunan journalist 

தூத்துக்குடியில் டாஸ்மாக் பார்கள் அடைப்பு: மது பிரியர்கள் திண்டாட்டம்



இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களும் இன்று (18.12.2024) அடைக்கப்பட்டுள்ளன. 



பார் உரிமையாளர்கள், காவல் துறையினர் தங்களுக்கு அநீதியாக அழுத்தம் கொடுக்கிறார்கள் என்ற காரணத்தால் போராட்டமாக பார்களை திறக்காமல் வைத்துள்ளனர்.


போராட்டத்தின் பின்னணி:


தமிழக அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூலம் மது விற்பனையை கட்டுப்பாட்டில் வைத்துள்ளதுடன், 

தனிநபர்கள் பார் நடத்த அனுமதி தந்துள்ளது.

பார் உரிமையாளர்களுக்கு விதிமுறைகள் கடைபிடிக்க வேண்டிய கட்டாயம் விதிக்கப்பட்டுள்ளது. 

இதில்,


கழிவறை வசதி,


சுகாதாரமான சூழல்,


தரமான உணவு,


பிளாஸ்டிக் தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் உள்ளன.



ஆனால், பல பார்கள் தமிழக அரசு விதிமுறைகளை மீறியும் அங்கு மதுபாட்டில்கள் விற்பனை யும் அசுத்தமான நிலையில் செயல்படுவதால் போலீசார் திடீர் சோதனைகள் நடத்தி வருகின்றனர்.


மதுபான விவகாரத்தில் விதிமுறைகள் மீறல்:


டாஸ்மாக் கடைகள் காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.



ஆனால், சில பார்கள் முறைகேடாக அதிகாலை முதல் நள்ளிரவு வரை செயல்படுவதால் இது காவல்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், சட்டத்திற்கும் நேரத்திற்கும் மாறாக செயல்படும் பார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.


பார்களின் எதிர்ப்பு:


பார்களால் விதிமுறைகளை மீறியதற்கு தொடர்ச்சியான போலீஸ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால், பார் உரிமையாளர்கள் இது தங்களை அடக்குவதற்கான நடவடிக்கை என குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.


தற்போது, பார்களை அடைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவதன் மூலம் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றனர்.

தலைமறைவாக ...?

இன்று பார் அடைப்பு நடத்தி வரும் வேளையில்...

 பார் உரிமையாளர்கள் காவல்துறைக்கு கண்ணில் படாமல் தலைமறைவாக இருந்து வருகிறார்களாம் 



திங்கள், 2 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் தர்ணா போராட்டம் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அரசு ஓய்வூதியர் கள் ஆக்ரோஷம்!!!

"Thoothukudi news," "Tamil Nadu updates," "Thoothukudi cyclone updates"

அருணன் செய்தியாளர்: 


2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு கண்டித்து தர்ணா போராட்டம் மாநில முழுவதும் நடைபெறுகிறது


 தூத்துக்குடி 12- வது வாசல் மையவாடி எதிராக உள்ள மைதானத்தில் தமிழ் நாடு  அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் 3-12-2024 இன்று காலை 11 மணியளவில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் 



திமுக அரசை கண்டித்து ஆக்ரோஷம்!!!

 2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து தர்ணா போராட்டம்

ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் ஐநூறுக்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டார்கள் 



2024 டிசம்பர் 3 நடைபெற்ற

தர்ணா போராட்டம்!!


தலைமை : தோழர்.இல.இராமமூர்த்தி கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர்,


முன்னிலை : தோழர். பெ.சாம்பசிவன் மாவட்டத் தலைவர். TNRTWA


தோழர்.வை.பாலசுப்பிரமணியன் மாவட்டச்செயலாளர், TNEPWO


தோழர்.மி.டெரன்ஸ் மாவட்டப்பொருளாளர், TNGPA


தோழர்.V.பூபதி மண்டல பொறுப்பாளர், TNSETC - REWA


வரவேற்புரை : தோழர்.M.A.H.முத்தையா கூட்டமைப்பு மாவட்டப்பொருளாளர்,


துவக்கவுரை : தோழர்.


R.ரசல்


மாநில செயலாளர் CITU


வாழ்த்துரை : A.H.சிவனாகரன் தலைவர், வ.உசி.துறைமுக ஓய்வூதியர் சங்கம்


தோழர்.பெ.ராமர் மாவட்டச்செயலாளர். AIBSNL - DOTPA


சிறப்புரை :


தோழர்.N.பர்வதராஜன் பொதுச் செயலாளர்


பொதுச் செயலாளர் தமிழ்நாடுஓய்வுபெற்ற பள்ளி -


கல்லூரி ஆசிரியர் நல சங்கம் TNRTWA


தோழர்.ப.திரவியம்


மாவட்டத்தலைவர்


தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை


ஓய்வூதியர் சங்கம் TNGPA


நிறைவுரை :


தோழர்.M.ஜெயபாண்டியன்


மாநில துணைத்தலைவர்,


தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர்


நல அமைப்பு TNEPWD


தோழர்.சொ.சிவதானுதாஸ்


மாநிலக்குழு உறுப்பினர்,


தமிழ்நாடு போக்குவரத்துக் கழக


ஓய்வுபெற்றோர் நல அமைப்பு TNSTC-REWA


தோழர்.N.வெங்கடேசன்


மாநில துணைப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்






கோரிக்கைகள் ?!!



தமிழக அரசே!


2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!



1. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை


நடைமுறைப்படுத்துக.


2. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குக.


3. தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், மாநில பொதுத்


துறையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்


ரூபாய்.7850/- வழங்கிடுக.


4. மருத்துவக்காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்து. காப்பீட்டில் காசில்லா


மருத்துவம் உறுதிப்படுத்து. மருத்துவக்காப்பீடு நடைமுறையில்இல்லா


ஓய்வுபெற்ற அனைத்து பகுதியினருக்கும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை


வழங்கிடுக.


5. அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பொதுத்துறை


ஓய்வூதியர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கிடுக.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டுமுதல்


2024ஆம் ஆண்டுவரை வழங்காமல் வைத்துள்ள அகவிலைப்படி


நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிடுக.


6. கமுட்டேசன் பிடித்தம்செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு காலமாக குறைத்திடுக.


7. போக்குவரத்து கழகத்தில் ஏப்ரல் 2023முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்


வழங்கிடுக.


மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற கோஷம் எழுப்பினர்.


மாவட்ட பொறுப்பாளர்கள்


ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு


தூத்துக்குடி மாவட்டம்

சனி, 30 நவம்பர், 2024

வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு கண்டித்து தர்ணா போராட்டம் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு அரசுஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகம்

1/12, முற்பகல் 11:19] அருணன் செய்தியாளர்: 


2021 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசு கண்டித்து தர்ணா போராட்டம் மாநில முழுவதும் நடைபெறுவதை முன்னிட்டு தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் தமிழ் நாடு  அரசு ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் பொதுமக்களிடம் அங்கு உள்ள வியாபாரிகள் இடம் ஆதரவு கேட்டு துண்டு பிரசுரம் விநியோகம் செய்தார்கள்

இதனால் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 




டிசம்பர் 3 ல் 

தர்ணா போராட்டம்!!!

தமிழ்நாடு அரசு

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு

தூத்துக்குடி மாவட்டம்.

மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகர்களில்

தர்ணா போராட்டம்

நாள்: 03.12.2024 செவ்வாய்க்கிழமை, காலை 10.30 மணிக்கு

இடம் : தூத்துக்குடி சிதம்பரநகர் பேரூந்து நிறுத்தம் - அருகில்

தலைமை : தோழர்.இல.இராமமூர்த்தி கூட்டமைப்பு மாவட்டச் செயலாளர்,

முன்னிலை : தோழர். பெ.சாம்பசிவன் மாவட்டத் தலைவர். TNRTWA

தோழர்.வை.பாலசுப்பிரமணியன் மாவட்டச்செயலாளர், TNEPWO

தோழர்.மி.டெரன்ஸ் மாவட்டப்பொருளாளர், TNGPA

தோழர்.V.பூபதி மண்டல பொறுப்பாளர், TNSETC - REWA

வரவேற்புரை : தோழர்.M.A.H.முத்தையா கூட்டமைப்பு மாவட்டப்பொருளாளர்,

துவக்கவுரை : தோழர்.

R.ரசல்

மாநில செயலாளர் CITU

வாழ்த்துரை : A.H.சிவனாகரன் தலைவர், வ.உசி.துறைமுக ஓய்வூதியர் சங்கம்

தோழர்.பெ.ராமர் மாவட்டச்செயலாளர். AIBSNL - DOTPA

சிறப்புரை :

தோழர்.N.பர்வதராஜன் பொதுச் செயலாளர்

பொதுச் செயலாளர் தமிழ்நாடுஓய்வுபெற்ற பள்ளி -

கல்லூரி ஆசிரியர் நல சங்கம் TNRTWA

தோழர்.ப.திரவியம்

மாவட்டத்தலைவர்

தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை

ஓய்வூதியர் சங்கம் TNGPA

நிறைவுரை :

தோழர்.M.ஜெயபாண்டியன்

மாநில துணைத்தலைவர்,

தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர்

நல அமைப்பு TNEPWD

தோழர்.சொ.சிவதானுதாஸ்

மாநிலக்குழு உறுப்பினர்,

தமிழ்நாடு போக்குவரத்துக் கழக

ஓய்வுபெற்றோர் நல அமைப்பு TNSTC-REWA

தோழர்.N.வெங்கடேசன்

மாநில துணைப்பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்



கோரிக்கைகள் ?!!

தமிழக அரசே!

2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்று!

1. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத்திட்டத்தை

நடைமுறைப்படுத்துக.

2. 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்குக.

3. தமிழக அரசில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்களுக்கும், மாநில பொதுத்

துறையிலிருந்து ஓய்வுபெற்றவர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம்

ரூபாய்.7850/- வழங்கிடுக.

4. மருத்துவக்காப்பீட்டு நடைமுறையை எளிமைப்படுத்து. காப்பீட்டில் காசில்லா

மருத்துவம் உறுதிப்படுத்து. மருத்துவக்காப்பீடு நடைமுறையில்இல்லா

ஓய்வுபெற்ற அனைத்து பகுதியினருக்கும் மருத்துவக்காப்பீடு திட்டத்தை

வழங்கிடுக.

5. அகவிலைப்படி அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் பொதுத்துறை

ஓய்வூதியர்களுக்கும் ஒன்றிய அரசு அறிவித்த அதே நாளில் வழங்கிடுக.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 2015ஆம் ஆண்டுமுதல்

2024ஆம் ஆண்டுவரை வழங்காமல் வைத்துள்ள அகவிலைப்படி

நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிடுக.

6. கமுட்டேசன் பிடித்தம்செய்யும் காலத்தை 15 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டு காலமாக குறைத்திடுக.

7. போக்குவரத்து கழகத்தில் ஏப்ரல் 2023முதல் ஓய்வுபெற்றவர்களுக்கு பணப்பலன்

வழங்கிடுக.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நடைபெறும்

தர்ணா போராட்டம் வெற்றிபெற பங்கேற்பீர்

- மாவட்ட பொறுப்பாளர்கள்

ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு

தூத்துக்குடி மாவட்டம்



திங்கள், 7 அக்டோபர், 2024

கடுமையான சொத்து உயர்வு வரியை திரும்ப பெற தூத்துக்குடியில் அதிமுக மாபெரும் மனித சங்கிலி போராட்டம்

 

கடந்த 40 மாத காலமாக தமிழக மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.



 இதற்கு காரணமான விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கண்டித்தும், கடுமையாக உயர்த்தப்பட்ட சொத்து வரியை பொதுமக்கள் நலன் கருதி திரும்பப் பெற வலியுறுத்தியும், 


 அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர்  எடப்பாடியார் பழனிச்சாமி தலைமையில் இன்று 8-10-2024 தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது




தூத்துக்குடியில் இன்று 08.10.2024 செவ்வாய்க்கிழமை காலை சரியாக 10.00 மணிக்கு தூத்துக்குடி டபிள்யூ ஜி சி ரோடு குரூஸ் பர்னாந்து சிலை முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்

எஸ்.பி.சண்முகநாதன்  தலைமையில்

மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது 



தூத்துக்குடி சிக்னல் ஜயா குருஸ் பர்ணாந்து சிலை முன்பு 

 தொடங்கி சத்யா ஏஜன்சி வரை நீண்ட நெடிய இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில்  ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டு திமுக அரசின் அராஜக வரி உயர்வை கண்டித்து கோஷமிட்ட வாறு  நின்றார்கள் .



அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய நகரங்களில் மற்றும் ஸ்ரீவைகுண்டம், பெருங்குளம், சாயர்புரம், ஏரல், ஆழ்வார் திருநகரி, சாத்தான்குளம், உடன்குடி, ஆறுமுகநேரி, காணம், ஆத்தூர், தென்திருப்பேரை, நாசரேத் ஆகிய பேரூராட்சி கழகங்களின் சார்பில் அந்தந்த பகுதியில் அதிமுகவினர்  மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது.

திங்கள், 9 செப்டம்பர், 2024

உண்ணாவிரதம் போராட்டம் மீனவர்களுக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு!!!

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

9-9-2024 photo news 

by Arunan journalist 

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தருவைக்குளம் மீனவர்கள் 22

பேரையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்டுத்தரக்கோரி மத்திய, மாநில அரசுகளின்

கவனம் ஈர்க்கும் விதமாக தருவைக்குளம் பொதுமக்கள் சார்பாக

உண்ணாவிரதப் போராட்டம் 

மீனவர்கள் போராட்டத்தில் அதிமுக முழு ஆதரவு தெரிவித்து 

முன்னாள் அமைச்சர்கள் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


இது பற்றிய செய்தியாவது:-


இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை மீட்க வலியுறுத்தி தருவைகுளத்தில் பேருந்து நிறுத்தம் முன்பு உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு  போராட்டம் இன்று 09.09.2024 நடைபெற்று வருகிறது.



காலை 8.30 முதல் மாலை 5.00 மணிவரை...

 உண்ணாவிரதம் போராட்டத்தில் அப்பகுதியில் பொதுமக்கள்  தங்கள்  குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர்.



உண்ணாவிரதத்தில் ஊர் தலைவர்கள் பங்கு தந்தை வின்சென்ட்   இவர்களுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் கள் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் வடக்கு மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜு எம்எல்ஏ, மற்றும் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளர் சித செல்லப்பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் கலந்து கொண்டார்கள்.

இன்று நடைபெற்ற கடையடைப்பு உண்ணாவிரதம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

நாளை9-9-2024 உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், கடையடைப்பு

 தூத்துக்குடி தருவைகுளத்தில்..

 உண்ணாவிரதம், வேலைநிறுத்தம், கடையடைப்பு

நாள்: 09.09.2024,

இடம்: தருவைக்குளம்

திங்கள் காலை 8.30 முதல் மாலை 5.00 மணிவரை...


மத்திய மாநில அரசுகளை கண்டித்து


இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட

தருவைக்குளம் மீனவர்கள் 22 பேரையும்

அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்டுத்தராத

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து

செப்டம்பர் 09ம் தேதி மாபெரும்

உண்ணாவிரதம், வேலை நிறுத்தம், கடையடைப்பு

போராட்டம் நடைபெறுகிறது


பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பம் சார்பாக

தருவைக்குளம் ஊர் பொதுமக்கள்

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் ஆதரவு

சங்கரலிங்கபுரம் நில மீட்பு அறவழி போராட்டத்தின் 38 ஆம் நாள் - ஹென்றி திபேன் நேரில் வந்து ஆதரவு தெரிவிப்பு.




 இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் தாலுகா, சங்கரலிங்கபுரம் ஊர் பொதுமக்களின் அறவழியிலான 

நில மீட்பு போராட்டத்தின் 38ஆம் நாளான 30.08.2024, 


இன்று  மாலை 7.00 மணியளவில் போராட்டக்களத்திற்கு மனித உரிமை செயல்பாட்டாளர் மூத்த வழக்கறிஞர் ஹென்றி திபேன் வழக்கறிஞர் மாடசாமி ஆகியோர் நேரில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.


தகவல்:-

செய்தி தொடர்பு பிரிவு,

மக்கள் கண்காணிப்பகம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

மீனவர்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம்தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் அன்பழகனார் தெரிவித்தார்

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

Photo news by John Bosco 

தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர்  அன்பழகனார் இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்தார்..


நேரில் சென்று ஆறுதல்!!!

   இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாட்டுப் படகு மீனவர்களின் குடும்பங்களை  தமிழக மீனவர் பேரவையின் தலைவர் அன்பழகனார் சந்தித்து ஆறுதல் கூறினார்.

        இலங்கை சிறையில் உள்ள நாட்டுப்படகு மீனவர்களையும், படகுகளையும் மீட்க அரசு வலியுறுத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். 

மீனவர்கள் போராட்டம்!!!

    அதே சமயம் நாட்டுப்படகுகள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்படுவதை தடுக்க, மீனவர்களை திரட்டி விரைவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்தார்.

        இதில் தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஜெரோன்குமார், மற்றும் தமிழ்நாடு மீனவ பேரவையின் மாவட்ட தலைவர் திரு ரெய்மண்ட், நாட்டுப்படகு மீனவ சங்கத் தலைவர்கள்  கொம்பீஸ், ஜெரோமியாஸ்  ஜான், பேட்டன் உள்ளிட்ட பலர் கூட இருந்தனர்.


      இவன்..

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு

வெள்ளி, 28 ஜூன், 2024

ஸ்பிக் எதிராக போராட தயாராகும் தூத்துக்குடி முத்தையா புரம் பொதுமக்கள்!!!

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 29-6-2024 photo news 

by arunan journalist 

தூத்துக்குடியில் நில ஆக்ரமிப்பில் ஸ்பிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என அப் பகுதி பொதுமக்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் வியாபாரிகள் ஸ்பிக் ஆக்ரமிப்பு செய்துள்ள பகுதிகளை மீட்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் வலியுறுத்தி மக்கள் போராட்டத்திற்கு தயாராகி வருகின்றனர் கள்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஸ்பிக் நிர்வாகம்  முத்தையாபுரம் ஊரணி புறம்போக்கு நிலத்தினை ஆக்கிரமித்துள்ளது.

 இதை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு உருவாக்கப்பட்டுள்ளது

 தூத்துக்குடி முத்தையாபுரம் மரியா மஹாலில் சமூக ஆர்வலர்களின் கூட்டம் நேற்று 28/06/2024 மாலை 8 மணி அளவில் நடைபெற்றது

அக் கூட்டத்தில்....

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 59 க்கு உட்பட்ட முத்தையாபுரம் ஊரணி பகுதியை ஆக்கிரமித்துள்ள ஸ்பிக் நிர்வாகத்தை கண்டித்தும்..

 அந்த இடத்தை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதானம் அமைத்து தரவேண்டியும்..

தமிழக அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 M.சண்முகபுரம் ஊர் தலைவர் E.P.சக்திவேல் தலைமை தாங்கினார்..


கலந்து கொண்டவர்கள்!!!


 தெர்மல் ராஜா

 மத்திய வியாபாரிகள் சங்கம் இணை செயலாளர்


 பேச்சிமுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 


சேமா.சந்தனராஜ் 

தமிழர் விடியல் கட்சி  


மாரியப்பன் M.தங்கமாள்புரம் ஊர் தலைவர்... 


செந்தில் தங்கம்மாள்புரம் ஊர் நிர்வாகி


 கணேஷ் அய்யாதுரை முத்தையாபுரம் அம்மன் கோவில்  பொருளாளர்


  கென்னடி விடுதலை சிறுத்தைகள் கட்சி சூசை நகர்


 சின்ன தங்கம் ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்கம் 


தவசி வேல் ஸ்பிக் நகர் வியாபாரிகள் சங்க தலைவர்


 வேல்முருகன் சவேரியார்புரம் வியாபாரிகள் சங்க தலைவர்


 மணிராஜ் முத்தையாபுரம் வியாபாரிகள் சங்க செயலாளர்


 அர்ஜுனன் ஸ்பிக் வியாபாரிகள் சங்க செயலாளர்


 பழனிமுத்து முத்தையாபுரம் அம்மன் கோவில் நிர்வாகி


 மாரிமுத்து சூசை நகர்


 அமுல்ராஜ் தங்கம்மாள்புரம் ஊர் செயலாளர்


 சுயம்பு துரை தொழிலதிபர்


 தங்க சேகர் முத்தையாபுரம்


 முனியசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி


 கசாலி முத்தையாபுரம்


 அன்ன சேகர் ஸ்பிக் வியாபாரிகள் சங்கம்


 முருகேசன் ஆலோசகர் ஸ்பிக் வியாபாரிகள் சங்கம் 


ராஜபாண்டி 

வடக்கு தெரு


மற்றும் முத்தையாபுரம் பகுதி சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்....


கூட்டத்தில்... நிறைவேற்றப்பட்ட 

தீர்மானங்கள் ...


ஜாதி மத பேதமின்றி கட்சி வேறுபாடு இன்றி முத்தையாபுரம் பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழுவில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து போராடுவோம்...


 தூத்துக்குடி மாநகராட்சி 59 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்பிக் நிர்வாகம் ஆக்கிரமித்துள்ள முத்தையாபுரம் ஊரணி புறம்போக்கு நிலத்தினை பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரக்கோரி இந்த தூத்துக்குடி முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு ...


 தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி பொதுமக்கள் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஸ்பிக் நிர்வாகம்  ஆக்கிரமித்து உள்ள இடத்தை மீட்டு விளையாட்டு மைதானம் பூங்கா அமைக்க பாடு பட வேண்டும்...

ஸ்பிக் எதிராக மக்கள் போராட்டம் 


இது சம்பந்தமாக 

01/07/2024 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு கலந்து கொண்டு மனு கொடுப்பது...


அதன் பின் ஜனநாயக ரீதியாக போராடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.....


இவன்....

 முத்தையாபுரம் ஊரணி மீட்பு குழு....