வெள்ளி, 17 ஜனவரி, 2025

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

photo news by Arunan journalist 

சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் 26-வது நினைவு தினம் அனுசரிப்பு

Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜன. 17-2025


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே அமலிநகரில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற இந்திய சுதந்திர போராட்ட தியாகி பெஞ்சமின் அவர்களின் 26-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பரதர் குல அமைப்புகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டு, தியாகி பெஞ்சமின் அவர்களின் வெண்கல திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


நினைவு தின நிகழ்ச்சியில் தியாகி பெஞ்சமின் அவர்களின் மூத்த மகன் அசோகன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள்  கலந்து கொண்டனர். 


இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற தியாகி பெஞ்சமின் அவர்களின் தியாகங்களை நினைவு கூறும் வகையில் அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக