Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி: மார்ச் 17
தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ பார்க்க
ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லபாண்டியன், எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அவை தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நடராஜ், த.மா.க மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், பொருளாளர் சேவியர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி மற்றும் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் போக்குவரத்து கல்வி குமார்,வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அத்துடன் மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.















