விடுதலை சிறுத்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலை சிறுத்தைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மார்ச், 2026

வேடநத்தம் மாணவி படுகொலை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை


thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி  சுப்புராஜ் —  காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


 இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு  உரையாற்றுகையில், ...

தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

thoothukudileaks



ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத்  கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 

விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது. 

thoothukudileaks

thoothukudileaks


உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ  உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். 


காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2025

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்த நாள் இன்று

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: 2025ஆகஸ்ட் 17

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் இன்று (17.08.1962) தனது 63-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அரியலூர் மாவட்டம் அங்கனூரில் பிறந்த திருமாவளவன், தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக களத்தில் இறங்கிய அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர் எனப் பல தளங்களில் செயல்பட்டு வருகிறார். தற்போது சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.



திருமாவளவனின் அரசியல் பயணம் 1980-களில் தொடங்கியது. பின் "விடுதலைச் சிறுத்தைகள்" என்ற பெயரில் தனித்துவமான கட்சியை உருவாக்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரல் கொடுத்தார். 2001-ல் சட்டமன்ற உறுப்பினராகவும், 2009, 2019, 2024 ஆகிய மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வானவர்.

தமிழகத்தில் சாதிய அடக்குமுறைக்கு எதிரான குரலாகவும், தமிழீழ விடுதலை, சமூக நீதி, மதச்சார்பின்மை ஆகியவற்றின் முன்னோடியாகவும், திருமாவளவன் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். “நான் ஒடுக்கப்படும் அனைத்து மக்களுக்காகவும் குரல் கொடுப்பவன்” என்பதே அவரின் அரசியல் வாழ்வின் அடிப்படை கோட்பாடு.

இன்று அவரது பிறந்த நாளை முன்னிட்டு, விசிக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழர் எழுச்சி நாளான இன்றைய தினத்தில், தூத்துக்குடி லீக்ஸ் சார்பாகவும்,
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
🎉



வெள்ளி, 17 மே, 2024

மாணவ மாணவிகளே வாருங்கள் கட்டணமில்லா பயிற்சி திருச்செந்தூரில் திருமா பயிலகம் பயன் அடையுங்கள்

 ▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

17-5-2024

photo news by arunan journalist 



மாணவ மாணவிகளே இந்த ஆண்டு தேர்ச்சி பெறவில்லையே என கவலை பட வேண்டாம்

Don't worry   வாருங்கள் 

கட்டணமில்லா பயிற்சி திருமா பயிலகம் !!!

10, 12ஆம் வகுப்பு 

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்கள் துணை தேர்வில் வெற்றி பெற திருமா பயிலகம், வீடு கல்வி அறக்கட்டளை இணைந்து திருச்செந்தூரில் நடத்தும் 'கட்டணமில்லா பயிற்சி வகுப்புக்கு வந்து சேருங்கள்!

வெற்றி பெறுங்கள் 

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் 

🌊 அலைபேசி எண் 


சு.விடுதலைச்செழியன் 

பெ.தமிழ்ச்செல்வன்


8675590803

8870183041

வெள்ளி, 5 ஜனவரி, 2024

தேனி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்த்துக்குடியில் வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கல்

கன மழை வெள்ளத்தால்

தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட 

சுவாமி விவேகானந்தர் நகர்,பூபாண்டிபுரம் பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் தேனி மேற்கு மாவட்டம் சார்பில்  4-1-2024 அன்று நிவாரண பொருட்கள் வழங்கினார்கள்.





இதுபற்றிய செய்தியாவது 

தேனி மேற்கு மாவட்டம் சார்பாக 

மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி  தலைமையில் நிவாரண பொருட்களை கொண்டு வந்தனர் அவர்களுடன் தமுமுக சகோதரர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பு குழு அகமது இக் பால் மற்றும் 

தூத்துக்குடி மாநகர குழு தலைவர் மெட்ரோ சேக்  ஆகியோர் வீடு

வீடாக சென்று நிவாரண பொருட்களை கடந்த வியாழன் 04/01/2024 அன்று சுவாமி விவேகானந்தர் நகர்,பூபாண்டிபுரம் பகுதிகளில்  பொது மக்களுக்கு வழங்கினார் கள்


இவண் 

அகமது இக்பால் மாவட்ட பொறுப்பு குழு தூத்துக்குடி மாவட்டம்

திங்கள், 9 அக்டோபர், 2023

தூத்துக்குடியில் நாட்டை காப்போம் கூட்டமைப்பு பொதுகூட்டம்

தூத்துக்குடி லீக்ஸ் 9-10-2023


நாட்டை காப்போம்  கூட்டமைப்பு முன்னெடுக்கும் பரப்புரை கலைப்பயணம், பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் 08/10/2023 ஞாயிறு நேற்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

 


விஷமத்தனமான,மதரீதியான பொய் பிரச்சாரத்தை கட்டமைத்து கேடுகெட்ட பரப்புரையை காலங்காலமாக மக்களை பிளவுபடுத்தும் வெறுப்பு அரசியலை களைவோம்.




அடிப்படையில் 

சட்டம் ஒழுங்கு, 

மதநல்லிணக்கம்,

பொது அமைதி, ஏற்படுத்துவோம் பரப்புரை செய்தார்கள் 

சமூக வலைதளங்களில் ஆர்கனைஸ்ட்டாக தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பொய்யை, அவதூறை உண்மைக்கு புறம்பான, செய்தியை மதபிரச்சாரத்தை, வெறுப்பு பிரச்சாரத்தை செய்து மக்களை பிளவுபடுத்துகிற அரசியல் கட்சிகளை புறந்தள்ள வேண்டும் 

பெண்கள், குழந்தைகள், தலித்துகள், மதச்சிறுபான்மையினர், மொழி சிறுபான்மையினர், மீனவர்கள்

அனைத்து வகை தொழிலாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசு பணியாளர்கள், என நமது சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும்

உரிமைகளை கடமைகளை வழங்கும், பாதுகாக்கும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என பொதுகூட்டத்தில் பேசினார்கள் 

இப் பொதுகூட்டத்தில்...

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இக்பால் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார் மற்றும் 

வணிகரணி மாவட்ட அமைப்பாளர் சுலைமான், 

முகாம் பொறுப்பாளர் நூர்,

வழக்கறிஞர் அணி அர்ஜுன், 

முன்னாள் தொண்டரணி அமைப்பாளர் 

பட்டு வளவன்

வழக்கறிஞர் 

அணி இளையவளவன் 

மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.