Police News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Police News லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2026

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்! ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி

 Tamil Nadu updates,

கலெக்டர் அலுவலகம் எதிரே சர்ச்சைக்குரிய பேனர்!

ஒருதரப்புக்கு அனுமதி மறுப்பு... மற்றொரு தரப்புக்கு மட்டும் அனுமதியா? காவல்துறை மாவட்ட நிர்வாகத்துக்கு சமூகத்தினர் கேள்வி ???

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையில் வைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பேனர் சமூக வலைதளங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி பிரையன்ட் நகர் பத்திரகாளி அம்மன் கோவில் கொடை விழாவையொட்டி, வெங்கடேஷ் பண்ணையார் மற்றும் கராத்தே செல்வின் நாடார் ஆகியோரின் புகைப்படங்களுடன் பேனர் வைக்க முயன்றபோது, காவல்துறையினர் அனுமதி மறுத்ததாகவும், வைக்கப்பட்ட பேனர்களை அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.


ஆனால், இதற்கு மாறாக க.பெரியநாயகபுரம் மற்றும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு அருகாமையிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பிரதான சாலையிலும், பசுபதி பாண்டியன் உள்ளிட்ட பலரது புகைப்படங்களுடன் கூடிய பெரிய பேனர் வைக்கப்பட்டுள்ளதாக சமூகத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.

thoothukudileaks


குறிப்பாக, அந்த பேனரில்   ....

” போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருப்பது சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் உள்ளதா? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.

thoothukudileaks


ஒரு தரப்பினரின் பேனர்களுக்கு உடனடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் நிலையில், மற்றொரு தரப்பினர் வைத்துள்ள பேனர்களுக்கு மட்டும் எவ்வாறு அனுமதி வழங்கப்படுகிறது?

.

மேலும், பேனர் வைப்பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைவருக்கும் ஒரே சட்டம், ஒரே விதிமுறை பின்பற்றப்படுகிறதா? அல்லது சமூக அடிப்படையில் வேறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.


சமூகங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படாத வகையில், சர்ச்சைக்குரிய வாசகங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்களுடன் வைக்கப்படும் பேனர்கள் தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒரே மாதிரியான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


— தூத்துக்குடி லீக்ஸ்

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

செய்தி புகைப்படம் ரோஜா அருணன் செய்தியாளர் 

தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா  காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய காவல்துறை கட்டுப்பாட்டு மைய பூத் (Police Control Booth) நேற்று (10-8-2026 )திறக்கப்பட்டது. 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சிவ பிரசாத் பங்கேற்று இந்த பூத்தை திறந்து வைத்தார். 


உடன் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுனில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பணியில் இருந்த டிராபிக் ஆண் -பெண் போலீஸ் பலருக்கு தலைக்கவசம் ஹெல் மேட் வழங்கினர் 

சிக்னலில் (Helmet) அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசாகக்  கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.

அன்பளிப்பு பற்றி...

இருப்பினும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளையும் அதிருப்தியையும் எழுப்பியுள்ளது.

thoothukudileaks


 தனியார் நிறுவன நன்கொடை:

 புதிதாகத் திறக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு மைய பூத் பெட்டி, 'வேலவன் ஹைப்பர் குரூப்' நிறுவனத்தின் அன்பளிப்பு என அந்தப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.


 பரிசுகள் வழங்கிய நகைக்கடை குரூப்: நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஹெல்மெட் மற்றும் கண்ணாடி பரிசுகளை மற்றொரு பிரபல நகைக்கடை நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது என்கிறார்கள்.

 அதிகாரிகள் உடன் தொழிலதிபர் போட்டோஷூட் ...!!!


அன்பளிப்பு வழங்கிய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் காவல் துறை அதிகாரிகளுடன் மிக அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர் 

thoothukudileaks


பொதுமக்களின் கேள்வி:


ஆனால் அரசு துறை அதிகாரிகள் பெறுவது அவசியமா ??


 "காவல்துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வுச் செலவுகளைச் செய்ய தமிழக அரசிடம் நிதி இல்லையா? அரசுத் துறை ஏன் தனியார் தொழிலதிபர்களிடம் கையேந்த வேண்டும்?"


 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கசப்பான வரலாறு நினைவிருக்கிறதா?

"தூத்துக்குடி மக்களுக்கு இந்த 'அன்பளிப்பு கலாச்சாரம்' ஒரு கசப்பான வரலாற்றை நினைவூட்டுகிறது." 

கடந்த காலங்களில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடி காவல்துறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கியது. இதன் காரணமாக, உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை போலீசார் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

அதன் உச்சக்கட்டமாகவே, 

2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது.  பொதுமக்கள் பக்கமாக நிற்க வேண்டிய காவல்துறை, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஈவு இரக்கமின்றி 13 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டு வீழ்த்திய கருப்பு வரலாறு அரங்கேறியது.


அரசு கவனிக்குமா?

தொழிலதிபர்களும், பெரு நிறுவனங்களும் காவல்துறையினருக்கு இதுபோன்று அன்பளிப்புகளை வழங்குவது, மறைமுகமாகச் சலுகைகளைப் பெறுவதற்கான "ஒரு வகை லஞ்சமே" என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.


துறை சார்ந்த தேவைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு இருக்கும் போது, காவல்துறை தனியார் தொழிலதிபர்களின் தயவை எதிர்பார்ப்பது ஏன்?

தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!!!

தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும்  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அரசுத் துறைகளில் ஊடுருவும் இந்தத் தனியார் 'அன்பளிப்பு/நன்கொடை' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? தொழிலதிபர்கள் சலுகை பெற வழிவகுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்பதே தூத்துக்குடி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பும் கேள்வியும் ஆகும்!

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம்!

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் திறந்து வைத்தார் — போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஹெல்மெட் சோதனையை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை

தூத்துக்குடி, ஆக.10:

தூத்துக்குடி மாநகரின் முக்கிய போக்குவரத்து பகுதிகளில் ஒன்றான குருஸ் பர்ணாந்து சிலை அருகே உள்ள சிக்னல் பகுதியில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks


குருஸ் பர்ணாந்து சிலை சிக்னல் பகுதியில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருவதால், குறிப்பிட்ட நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்க நிரந்தர போக்குவரத்து காவல் மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதனையடுத்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையத்தை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் இன்று காலை 11 மணியளவில் திறந்து வைத்தார்.

இந்த மையத்தின் மூலம் அப்பகுதியில் செல்லும் வாகன போக்குவரத்தை காவல்துறையினர் தொடர்ந்து கண்காணித்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் வாகனங்களை ஒழுங்குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளனர்.


video 

மேலும், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்களா என்பது குறித்த சோதனைகளும் நடத்தப்படும். போக்குவரத்து விதிமீறல்களை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் சுனை முருகன் நன்றி கூறினார்.

குருஸ் பர்ணாந்து சிலை அருகே நிரந்தர போக்குவரத்து காவல் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சீரான போக்குவரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி, 31 ஜூலை, 2026

தோட்டக் கிணற்று மண் எடுத்த விவகாரம்: எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு நடந்தது என்ன விளக்கம்

Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர் 

தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, ஜூலை 31:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,

அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 

thoothukudileaks


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.



அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



thoothukudileaks


படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.

சனி, 25 ஜூலை, 2026

காவல் விசாரணையில் உயிரிழந்த இளைஞர் அருணாச்சலம் குடும்பத்துக்கு பிரேமலதா ஆறுதல் தேமுதிக சார்பில் நிதியுதவி வழங்கல்

 தூத்துக்குடி, ஜூலை 25:

தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு, அமுதா நகர் 1-வது தெருவைச் சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம் (24) என்பவரை, எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினர் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

thoothukudileaks


காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்தபோது அருணாச்சலத்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த தகவல் பரவியதும், அவரது உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் முன்பு திரண்டனர். காவல் விசாரணை என்ற பெயரில் போலீசார் தாக்கியதாலேயே அருணாச்சலம் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். மேலும், மரணமடைவதற்கு முன்பு போலீஸ் தாக்குதல் குறித்து அருணாச்சலம் வீடியோவில் பேசியிருப்பதாகவும், சம்பவத்திற்கு காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அருணாச்சலத்தின் தாய் பரமேஸ்வரி, தந்தை நாகராஜ் மற்றும் சகோதரர் சுடலைமணி ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்.


அதனைத் தொடர்ந்து, தேமுதிக தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தயாளலிங்கம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அருணாச்சலத்தின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, தேமுதிக சார்பில் நிதியுதவியை வழங்கினர். மேலும், அருணாச்சலம் உயிரிழப்பு சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தி, உண்மை வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டு, சம்பந்தப்பட்டோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், மாவட்ட துணைச் செயலாளர்கள் சம்சுதீன், லிவிங்ஸ்டன், மாவட்ட பொருளாளர் ராஜன், ஒன்றியச் செயலாளர்கள் ஜெயக்குமார், கணேசன், முருகன், விக்னேஷ் ராஜ், பகுதி செயலாளர்கள் நாராயணமூர்த்தி, வல்லரசு, துறைசார்பு அணி செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அந்தோணி ராஜ், இருளப்பசுவாமி, அருண், சபரீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

வியாழன், 23 ஜூலை, 2026

தூத்துக்குடியில் விசாரணை கைதி அருணாசலம் உயிரிழப்பு குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல் நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணாசலம் உயிரிழப்பு: குடும்பத்தினருக்கு முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. சண்முகநாதன், கீதா ஜீவன் ஆறுதல்  நீதி விசாரணை கோரிக்கை வலுத்தது

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய விசாரணைக்குப் பிறகு உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவரது குடும்பத்தினரை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனும், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி 50-வது வார்டு அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்–பரமேஸ்வரி தம்பதியரின் மகனான அருணாசலம், கடந்த 2026 ஜூலை 17-ஆம் தேதி எஃப்.சி.ஐ. குடோன் எதிரே சட்டவிரோதமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்ததாகக் கூறி, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் தரண்யா தலைமையிலான காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.


விசாரணைக்காக காவல் நிலையத்தில் அடைக்கப்பட்டிருந்தபோது காவல்துறையினர் தாக்கியதால் தலையில் காயம் ஏற்பட்டு மயக்கமடைந்ததாக குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். பின்னர் அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜூலை 23-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இறந்து போனஅருணாசலம்


இதையடுத்து, காவல்துறையினரின் தாக்குதலே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை மற்றும் காவல் நிலையப் பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியதுடன், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த உயர் காவல் அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

எஸ்.பி. சண்முகநாதன் ஆறுதல்

தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு வந்த அதிமுக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அருணாசலத்தின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அருணாசலம் உயிரிழப்பு குறித்து நீதிபதி தலைமையில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும். குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

அப்போது மாவட்ட மாணவரணி செயலாளர் பில்லா விக்னேஷ், அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், வட்ட செயலாளர்கள் பூர்ணசந்திரன், தூத்துக்குடி மணிகண்டன், கொம்பையா, சொக்கலிங்கம், சம்படி பழணி, சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கீதா ஜீவன் 

நீதி கோரிக்கை

இதேபோல், திமுக முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனும் அரசு மருத்துவமனைக்கு சென்று அருணாசலத்தின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் பேசுகையில், "இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டு வர வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

thoothukudileaks


அவருடன் திமுக மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள், திமுக பகுதி செயலாளர்கள், மகளிரணி நிர்வாகிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் உடனிருந்தனர்.

இதற்கிடையில், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் குறித்து முழுமையான உண்மை வெளிவர வேண்டும் என்ற கோரிக்கை அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வலுத்து வருகிறது.

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடியில் மது வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிரம்

தூத்துக்குடி, ஜூலை 23:

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் மதுவிலக்கு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 24 வயது இளைஞர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


இதுதொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

thoothukudileaks
மருத்துவமனையில்
முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் போலீசாருடன் இளைஞர் உயிரிழப்பு குறித்து வாக்குவாதம் செய்தியாளர் இடம் பேட்டி அளித்தார்.


காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, ..

கடந்த ஜூலை 17 அன்று தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாசலம் (24) என்பவர் மதுவிலக்கு அமலாக்க சோதனையின்போது, 180 மில்லி லிட்டர் கொள்ளளவுள்ள 120 மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக கண்டறியப்பட்டது. 



இதையடுத்து, தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் குற்ற எண் 751/2026-ன் கீழ் தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தின் பிரிவுகள் 4(1)(A) மற்றும் 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட பின்னர், சட்டப்படி பின்பற்ற வேண்டிய அனைத்து நடைமுறைகளும் முறையாக கடைபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


 அவரது உடல் சோதனை காணொளியாக பதிவு செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட விவரம் அவரது குடும்பத்தினருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் ...

பின்னர், அதே நாள் மாலை சுமார் 5.50 மணியளவில் அருணாசலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 

மருத்துவ சான்றிதழ்!!!

அவரை பரிசோதித்த மருத்துவர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு உடல்நிலை தகுதியானது என்றும், அவரது உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை என்றும் மருத்துவச் சான்றிதழ் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் லாக் அப்!!!

மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் காவல் நிலையத்திற்கு மீண்டும் அழைத்து வரப்பட்ட அவர், பிற கைதிகளுடன் லாக்-அப்பில் வைக்கப்பட்டார். 

சிசிடிவி கேமரா செக்கப்!!!

அப்போது மற்ற கைதிகளுடன் இயல்பாக பேசிக்கொண்டிருந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும், இந்த சம்பவம் லாக்-அப்பிற்கு முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மயக்கம் முதலுதவி!!!!

உடனடியாக காவல்துறையினர் அவருக்கு முதலுதவி அளித்து, குடிநீர் வழங்கி பாதுகாப்பாக அமர வைத்தனர். மேலும், காவல் நிலைய வரவேற்பு பகுதியில் இருந்த அவரது தாயாரையும் அழைத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவரை உறவினர்களுடன் தொடர் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையில், மருத்துவமனை அருகே அவர் மீண்டும் மயங்கி விழுந்ததாக அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

இன்று உயிரிழந்தார் 

தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருத்துவர்கள் மேற்கொண்ட சிகிச்சை பலனளிக்காமல் ஜூலை 23 அன்று அருணாசலம் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

தீவிர விசாரணையில் காவல்துறை!!!

இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சட்டப்படி விசாரணை நடைபெற்று வருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

செவ்வாய், 14 ஜூலை, 2026

சந்திரசேகர் படுகொலை குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

சந்திரசேகர் படுகொலை: குற்றவாளிகளை கைது செய்யும் வரை உடலை வாங்க மறுப்பு  சட்ட உரிமைகள் கழகம் கடும் கண்டனம்

தூத்துக்குடி, ஜூலை 14:

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks


சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ....

உயிரிழந்த சந்திரசேகரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவரது மனைவி மற்றும் மூன்று பெண் குழந்தைகளுக்கு ஆறுதலை தெரிவித்தார்.


சந்திரசேகருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளதாகவும், அதில் இளைய குழந்தை பிறந்து வெறும் 15 நாட்களே ஆன நிலையில் குடும்பத்தின் ஒரே ஆதாரமாக இருந்தவர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த வேதனையளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ள இத்தகைய சம்பவங்களைத் தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆனந்த கதிரேசன், வெங்கடேசன், ஸ்ரீராம், அருண், நாகராஜ் மற்றும் நிர்வாகிகள் எஸ்தர் ராஜ், உதயசூரியன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு சென்று காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நிலை குறித்து கேட்டறிந்தனர். 



தொடர்ந்து உயிரிழந்த சந்திரசேகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உடலை வாங்க மறுப்பு

இந்தக் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்ய வேண்டும். கொலையின் பின்னணி, முன்விரோதம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.


இதற்கிடையில், குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை உயிரிழந்த சந்திரசேகரின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுக்கு கோரிக்கை

பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மேலும், சந்திரசேகரின் மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி அல்லது நிரந்தர வாழ்வாதார உதவி வழங்க வேண்டும். மூன்று பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால பாதுகாப்பை அரசு ஏற்க வேண்டும். பச்சிளம் குழந்தை மற்றும் தாய்க்குத் தேவையான மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு வசதிகளை உடனடியாக ஏற்படுத்த வேண்டும். குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் இருந்தால் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும்., 

வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், சந்திரசேகர் குடும்பத்திற்கு முழுமையான நீதி கிடைக்கும் வரை சட்டத்திற்குட்பட்ட ஜனநாயக வழிகளில் தொடர்ந்து போராடுவோம் என்று சட்ட உரிமைகள் கழக நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

Dr. S.R. செல்வம் கிறிஸ்டோபர்

நிறுவனத் தலைவர்

சட்ட உரிமைகள் கழகம்


 இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

திங்கள், 15 ஜூன், 2026

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை. ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை நடந்தது என்ன? இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 15:

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தமின்றி, நடுநிலையான மற்றும் சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks




இதுகுறித்து ..

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன் மற்றும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.


மனித நேயம்!!!

அதேநேரத்தில், விசாரணை நிறைவடைவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதல்களுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் !!! நீதி மன்றம் தான் முடிவு செய்யும்!!!

இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலாக விவகாரத்தை மாற்றும் முயற்சிகள் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஊடகங்களோ, அரசியல் மேடைகளோ அல்ல; காவல்துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்தான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மன உளைச்சல் !!!

மேலும், அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதள விவாதங்களால் பாலசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சமூக அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பந்தபடாத ஒரு பெண்ணின் பெயரும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு !!!

அவரது வாக்குமூலம் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவர் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம் அல்லது அவதூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


"நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்றும் கூற வரவில்லை. அரசியல் அழுத்தமில்லாத, ஊடக விசாரணை இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கையாகும்" என்று டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிய வேண்டும்!!!

மேலும், பாலியல் வழக்குகளில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பப் பெண்கள் மற்றும் சாட்சிகளாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் கருத்து வேறுபாடுகளின் பெயரில் குடும்ப உறுப்பினர்களும் பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பாக்ஸ் செய்தி

இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளன

ஒருவர் 

 தனது மனுவில், தனக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குமூலம் அளிக்க மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி தூண்டுதல், அவதூறு பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். தனது உண்மை வாக்குமூலத்தை சட்டப்படி பதிவு செய்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல்,

மற்றொரு ஒருவர் 

 தனது மனுவில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனின் மனைவி எனத் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தம், மீடியா பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள அவதூறுகளால் தனது குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளாகி வருவதாக கூறியுள்ளார்.

 தாமதம் ஏன்???

மேலும், புகாரின் பின்னணியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் உள்ளனவா என்பதையும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வழக்கில் உண்மை நிலை சட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு மனுக்களிலும், எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இன்றி, நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

வியாழன், 11 ஜூன், 2026

கயத்தாறு அருகே இளம் பெண் மரணம்: "ஆணவக் கொலை" என பரவும் whatsapp தகவல்களுக்கு காவல்துறை மறுப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

 Tamil Nadu updates,

தூத்துக்குடி, ஜூன் 11:

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு மயிலோடை பகுதியில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட இணைய தளங்களில் "ஆணவக் கொலை" நடைபெற்றதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் பரவி வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில், ..

தெற்கு மயிலோடை பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் ஒருவர் கடந்த ஜூன் 9-ஆம் தேதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்ததாக தகவல் கிடைத்ததையடுத்து, கயத்தாறு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணை, உடற்கூறு ஆய்வு அறிக்கை மற்றும் சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில், உயிரிழந்த இளம் பெண்ணின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரது தாய் எஸ்தர் பாலின் (36) மற்றும் சகோதரர் சிவஞானம் (20) ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்

thoothukudileaks

.

விசாரணையில்,...

 உயிரிழந்த இளம் பெண் சமூக வலைதளத்தின் மூலம் ஒருவருடன் பழகி வந்தது தொடர்பாக குடும்பத்தில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாக இச்சம்பவம் நடைபெற்றது தெரியவந்ததாக கூறப்பட்டுள்ளது. 

இளம் பெண் கொலை வழக்கு!!!

மேலும், சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் மற்றும் மருத்துவ அறிக்கையின் அடிப்படையில், இளம் பெண்ணின் மரணத்தில் அவரது தாய் மற்றும் சகோதரருக்கு தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.


மேலும், இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இச்சம்பவம் "ஆணவக் கொலை" என உறுதிப்படுத்தும் வகையிலான எந்தவித ஆதாரமும் கண்டறியப்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

வதந்தி பரவியது!!!

 எனவே சமூக வலைதளங்களில் பரவி வரும் "ஆணவக் கொலை" குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படாதவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks


உறுதி செய்யப்படாத மற்றும் தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடிய செயலாகும். இதுபோன்ற வதந்திகள் மற்றும் பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. :::

புதன், 13 மே, 2026

பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை: ஒருவர் கைது 9 கிலோ பொருட்கள் பறிமுதல்

Tamil Nadu updates 13-5-2026

தூத்துக்குடி மே13

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று (13.05.2026) காட்டுநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் (51) என்பவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து, அவரிடமிருந்து 9 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாய், 12 மே, 2026

நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என தனது காதலியை கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்பு

 நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என தனது காதலியை கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்திப்பு பரபரப்பு 

தூத்துக்குடி மே12

தூத்துக்குடி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞர் ஒருவர் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குடிப்பழக்கம் போக சிகிச்சை!!!

கணவரை உறவினர்கள் கடத்தி வைத்து துன்புறுத்தி வருவதாக மனைவி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், “தன்னார்வமாகவே சிகிச்சை பெற்று வருகிறேன்” என கணவர் மருதநாயகம் விளக்கம் அளித்துள்ளார்.

thoothukudileaks


இது பற்றிய செய்தியாவது :-

🪉 தூத்துக்குடி அகாடமி -ல் காதல்!!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சாருமதி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் வடக்கு பகுதியை சேர்ந்த மருதநாயகம் ஆகியோர் தூத்துக்குடியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் படித்தபோது பழகியுள்ளனர். 

சாதி மறுப்பு திருமணம்!!!

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், கடந்த 24.03.2026 அன்று தென்காசி திருமலை கோயிலில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


இதையடுத்து இருவரும் பாளையங்கோட்டையில் வசித்து வந்த நிலையில், மருதநாயகத்திற்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை கிடைத்துள்ளது.


காதலன் திரும்பி வரவில்லை!!!

இந்த நிலையில் கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது சொந்த ஊரான வல்லநாடு அகரத்திற்கு செல்வதாக கூறி மருதநாயகம் சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.


இதுகுறித்து சாருமதி கூறுகையில்,...

 கடந்த 24ஆம் தேதி மருதநாயகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனது தந்தை மற்றும் உறவினர்கள் தாக்கி துன்புறுத்துவதாகவும், தன்னை மீட்டுச் செல்லுமாறும் தெரிவித்ததாக கூறினார்.


இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், பாளையங்கோட்டை துணை ஆணையர் அலுவலகம் மற்றும் முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் தன்னை மிரட்டும் வகையில் காவல்துறையினர் செயல்பட்டதாகவும் சாருமதி குற்றம்சாட்டினார்.


காதலி தனது காதலனை ஆணவ கொலை செய்ய போறாங்க என குற்றச்சாட்டு!!! 

நிஷா பவுண்டேஷன் மீது வீண் பழி  !!!

பின்னர் நெல்லை சரக டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, மருதநாயகம் தூத்துக்குடியில் உள்ள நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் இருப்பதாக போலீசார் கூறி அங்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் கணவரிடம் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.


இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சாருமதி மனு அளித்தார். 


அதில், “எனது கணவருக்கு எந்தவிதமான மது அல்லது போதை பழக்கமும் இல்லை. அவரை உறவினர்கள் ஆணவக் கொலை செய்யும் நோக்கில் போதை மறுவாழ்வு இல்லத்தில் அடைத்து வைத்து துன்புறுத்தி வருகின்றனர். அவரை உடனடியாக மீட்டு தர வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிபோதை மதுப்பழக்கம் விடுபட சிகிச்சை எடுத்து வரும் காதலன் மருதநாயகம் 

நிஷா பவுண்டேஷன் மையம் மீது வீண் பழி போடாதே என காதலி கண்டித்து காதலன் மருதநாயகம் செய்தியாளர் சந்தித்து பரபரப்பு !!


இந்த விவகாரம் தொடர்பாக தூத்துக்குடி டி.ஆர். தெருவில் உள்ள நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வரும் மருதநாயகம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.


அப்போது காதலன் மருதநாயகம் கூறுகையில்,

 “நான் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறேன். சாருமதியை காதலித்து வந்தேன். எனக்கு மதுப்பழக்கம் இருந்தது. தேர்தலுக்காக வீட்டிற்கு சென்றபோது, அந்த பழக்கத்திலிருந்து மீள என் குடும்பத்தினர் என்னை நிஷா போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இங்கு நான் நலமாக சிகிச்சை பெற்று வருகிறேன். 


யாரும் என்னை அடித்து துன்புறுத்தவில்லை. இங்கு சுமார் 85 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை முடிந்த பிறகு, என் எதிர்காலம் குறித்து முடிவு செய்வேன்” என்றார்.

திங்கள், 11 மே, 2026

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் நவீன கண்காணிப்பு: 37 சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்பை எஸ்பி தொடங்கி வைத்தார்

Tamil Nadu updates 11-5-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி | மே 11, 2026

தூத்துக்குடி மாநகரின் முக்கியப் பகுதியான பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில், பொதுமக்கள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் பொது அறிவிப்பு அமைப்பை (PA System) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப.  இன்று திறந்து வைத்தார்.

thoothukudileaks


குற்றத்தடுப்பு நடவடிக்கை

தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தப் பேருந்து நிலையத்தில், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும் காவல்துறை சார்பில் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நவீன தொழில்நுட்ப வசதிகள்

பேருந்து நிலையத்தின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிப்பகுதிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் பின்வருமாறு:

கண்காணிப்பு கேமராக்கள்: பயணிகள் காத்திருக்கும் பகுதி, பேருந்துகள் ஏறும் மற்றும் இறங்கும் இடங்கள் என அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கி மொத்தம் 37 புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒலிபெருக்கி அமைப்பு (PA System): பேருந்து நிலையத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வழங்க உயர்திறன் கொண்ட ஆம்பிளிஃபையர் மற்றும் 8 ஹாரன் ஸ்பீக்கர்கள் நிறுவப்பட்டுள்ளன.

விரிவாக்கம்: பேருந்து நிலையத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஷேர் ஆட்டோ நிறுத்தம் முதல் கண்ணா சில்க்ஸ் வரை இந்த ஒலிபெருக்கி சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

video 

நேரடி கண்காணிப்பு

இந்த கேமராக்கள் மற்றும் ஒலிபெருக்கி அமைப்புகள் அனைத்தும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த நவீன சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் போலீசார் நேரடியாக கண்காணிப்பதோடு, அவசர காலங்களில் ஒலிபெருக்கி வாயிலாக பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

பங்கேற்பாளர்கள்

இந்தத் தொடக்க விழாவில் தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் . சுனில், இந்தத் திட்டத்தை உருவாக்க உதவிய சிக்னல் கோர் சொல்யூசன்ஸ் (Core Techno Solutions) நிறுவனத்தினர்  ஆகியோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி லீக்ஸ் - செய்திகளுக்காக உங்கள் நிருபர்.

செவ்வாய், 14 ஏப்ரல், 2026

குடிபோதை விடுதலையின் புதிய வழி: நிஷா பவுண்டேஷன் மனநல சிகிச்சை மையம் தூத்துக்குடி அலுவலகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு தினம் கொண்டாட்டம் முக்கிய விருந்தினர்கள் பங்கேற்பு

குடிபோதை விடுதலையின் புதிய வழி: நிஷா பவுண்டேஷன் மனநல சிகிச்சை மையம் தூத்துக்குடியில் 1ம் ரயில்வே கேட் அருகே டி ஆர் தெரு வில் இயங்கி வருகிறது 

 2026 ஏப்ரல் 14 இன்று நிஷா பவுண்டேஷன் மனநல சிகிச்சை மையத்தில் தமிழ் புத்தாண்டு தினம் சிறப்பாக நடைபெற்றது அங்கு அனைவரும் மகிழ்ச்சி யுடன் காணப்பட்டனர் பயிற்சி ஊக்குவிப்பு சிறப்பு ரையாளர் ஷாஜகான் மற்றும் சட்டம் ஒழுங்கு மாத இதழ் ஆசிரியர் டாக்டர் சிவதமிழவன்  பத்திரிகையாளர் ரோஜா அருணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்

thoothukudileaks


"முன்னதாக...

 நிஷா பவுண்டேஷன் நிறுவனர் முகமது ஷாநவாஸ் @அஜித் அனைவரையும் வரவேற்று தென் மாவட்டங்களில் இருந்து அதிகம் நபர்கள் குடி போதையை விட முடியாமல் தவித்தவர்கள் இங்கு இனைந்ததும் சிகிச்சை பெற்று பூரணமாக குணமடைந்து செல்கிறார்கள்  இனி குடி போதை அவர்கள் வாழ்க்கையில் இருக்காது என தெரிவித்தார் ஷாநவாஸ் @அஜித்.

குடிபோதை ஆளாகி  நிம்மதி இன்றி இம்சிப்பவர்கள் உங்கள் உறவினர்கள் இருந்தால் இங்கு நிஷா பவுண்டேஷன் மையத்திற்கு அழைத்துச் வாருங்கள்  அவர்கள் குடிபோதையில் இருந்து மனநல சிகிச்சை முறைகள் முலம் முழுவதுமாக விடுபட்டு நல்ல வாழ்க்கையை ஆரம்பிப்பார் கள் என்றார்.

தூத்துக்குடி ஏப்ரல் 14

தென் தமிழகத்தில் குடிபோதை மற்றும் போதைப்பொருள் பழக்கத்தால் அவதிப்படும் பலருக்கு நம்பிக்கையின் விளக்காக திகழ்கிறது நிஷா பவுண்டேஷன் குடிபோதை மற்றும் மனநல சிகிச்சை மையம். 


மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பிடியில் இருந்து தப்பிக்க முடியாமல் தவிக்கும் நபர்கள், இந்த மையத்தில் சேர்ந்து மனநல சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பயிற்சிகளின் மூலம் புதிய வாழ்க்கையை தொடங்கி வருகின்றனர்.


பொதுவாக குடிபோதைக்கு அடிமையானவர்களின் மனநிலை மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். குடும்ப பிரச்சினைகள், வேலை இழப்பு, தனிமை உணர்வு, தன்னம்பிக்கை குறைவு போன்றவை இவர்களை மேலும் போதைப்பொருள் பக்கம் இழுக்கின்றன. பலர் தங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாத நிலைக்குச் சென்று, மன அழுத்தம், கோபம், பதட்டம் போன்ற பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கின்றனர்.


இந்த நிலையில், நிஷா பவுண்டேஷன் மையம் மருத்துவ ரீதியான சிகிச்சையுடன் மனநல ஆலோசனை, தனிநபர் வழிகாட்டுதல், குழு சிகிச்சை (Group Therapy), யோகா மற்றும் தியானம் போன்ற முழுமையான பயிற்சிகளை வழங்குகிறது. நோயாளிகளின் மனநிலையை புரிந்து கொண்டு, அவர்களின் உள்ளார்ந்த பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.



சிகிச்சைக்கு பின் நோயாளிகளில் கணிசமான மாற்றங்கள் காணப்படுகின்றன. 

முன்பு மன அழுத்தம் மற்றும் விரக்தியில் இருந்தவர்கள், தற்போது தன்னம்பிக்கை உடையவர்களாக மாறி, குடும்ப உறவுகளை மீட்டெடுத்து, சமூகத்தில் நல்ல நிலையை அடைந்து வருகின்றனர். 

அவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று, பொறுப்புடன் வாழ்க்கையை நடத்தும் நிலைக்கு திரும்பியுள்ளனர்.

thoothukudileaks
நிறுவனர் ஷாநவாஸ் @அஜித்


குறிப்பாக, இராமநாதபுரம், மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்த பலர், இந்த மையத்தில் சிகிச்சை பெற்று இன்று நல்ல சமூக நிலையை அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


வீடியோ பார்க்க..

குடிபோதை என்பது ஒரு குற்றமல்ல, அது ஒரு சிகிச்சை தேவைப்படும் நிலை என்ற உண்மையை எடுத்துரைக்கும் இந்த மையம், பல குடும்பங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. சரியான வழிகாட்டலும், மனநல சிகிச்சையும் கிடைத்தால் எந்த போதையையும் வெல்ல முடியும் என்பதற்கு நிஷா பவுண்டேஷன் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

thoothukudileaks
thoothukudileaks



திங்கள், 30 மார்ச், 2026

பிரபல தனியார் வங்கி பெயரில் போலி முதலீட்டு மோசடி தூத்துக்குடியில் காவல்துறை எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 30.03.2026

தூத்துக்குடி மாவட்டத்தில் சமீப காலமாக பிரபல தனியார் வங்கிகளின் பெயரில் “Bank Securities” எனப்படும் போலியான முதலீட்டு திட்டங்கள் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் இணைய மோசடிகள் அதிகரித்து வருவதாக மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.


இந்த மோசடியில் ஈடுபடும் நபர்கள் முதலில் பொதுமக்களை WhatsApp குழுக்களில் இணைத்து, அதிக லாபம் கிடைத்ததாக போலியான தகவல்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களை பகிர்ந்து நம்பிக்கை ஏற்படுத்துகின்றனர். பின்னர் அவர்கள் உருவாக்கிய போலியான மொபைல் செயலிகள் மற்றும் வங்கி முதலீட்டு தளங்கள் மூலம் முதலீடு செய்ய வற்புறுத்துகின்றனர். 


இந்த தளங்கள் உண்மையான வங்கி சேவைகளைப் போலவே தோற்றமளிக்கும் வகையில் Bank Logo, Dashboard, Customer Support போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks


இதனை நம்பி பொதுமக்கள் முதலீடு செய்த பின்னர், லாபம் அல்லது முதலீட்டு தொகையை திரும்ப பெற முயற்சிக்கும் போது, மேலும் பணம் முதலீடு செய்தாலே அதிக லாபம் கிடைக்கும் என கூறி தொடர்ந்து மோசடி செய்யப்படுகிறது.



பொதுமக்களுக்கு முக்கிய அறிவுரை:

சமூக ஊடகங்களில் வரும் அதிக லாபம் தரும் முதலீட்டு விளம்பரங்களை நம்ப வேண்டாம்.

அறியப்படாத லிங்குகள் அல்லது செயலிகள் மூலம் முதலீடு செய்ய தவிர்க்கவும்.

SEBI-ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாக மட்டுமே முதலீடு செய்ய வேண்டும்.

DEMAT கணக்கு இல்லாமலே முதலீடு செய்யலாம் என வரும் விளம்பரங்கள் பெரும்பாலும் மோசடி ஆகும்.

உங்கள் DEMAT கணக்கை அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு தளங்களுடன் மட்டுமே இணைக்கவும்.

வங்கி அல்லது நிதி நிறுவன பெயரில் வரும் முதலீட்டு தகவல்களை நேரடியாக அந்த நிறுவனத்துடன் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

புகார் அளிக்கும் வழிகள்:

இத்தகைய சைபர் மோசடிகளில் சிக்கினால் உடனடியாக

 cybercrime.gov.in இணையதளம் லிங் 

 1930 (சைபர் குற்ற உதவி எண்)

மூலம் புகார் அளிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புகார் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, மேலும் நிதி இழப்பை தவிர்க்க முடியும் எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

ஞாயிறு, 29 மார்ச், 2026

தூத்துக்குடி பெட்டிக்கடையில் ரூ 19 ஆயிரம் மதிப்புள்ள சட்டவிரோத புகையிலை பாக்கு விற்பனை பறிமுதல் கடை உரிமையாளர் கைது போலீஸ் நடவடிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மாவட்டம் : 29.03.2026

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நடவடிக்கையில் ரூபாய் 19,000 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


thoothukudileaks


நேற்று (28.03.2026) வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையில் போலீசார், பஜார் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு பெட்டிக்கடையில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.


சோதனையின் போது, அந்த கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவர் இதற்கு காரணமாக இருப்பது போலீசாரால் உறுதி செய்யப்பட்டது.


இதனைத் தொடர்ந்து போலீசார் உடனடியாக விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூபாய் 19,000 மதிப்புள்ள 14 கிலோ 851 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


இந்த சம்பவம் தொடர்பாக வடபாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனைக்கு எதிராக போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செய்தி புகைப்படங்கள் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 




வெள்ளி, 20 மார்ச், 2026

குளத்தூர் சிறுமி கொலை வழக்கு: 25 காவல்துறையினருக்கு நற்பணி சான்றிதழ்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம், மார்ச் 21, 2026

குளத்தூர் காவல் நிலையத்தில் நடைபெற்ற சிறுமி கொலை வழக்கில் திறம்பட விசாரணை மேற்கொண்டு குற்றவாளியை விரைவாக கண்டறிந்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய காவல்துறையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

thoothukudileaks


இவ்வழக்கில் சிறப்பாக பணியாற்றிய 25 காவல்துறை அதிகாரிகளுக்கு, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணன் இ.கா.ப, நேற்று (20.03.2026) திருநெல்வேலி சரக காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நற்பணி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.

video 

இந்தப் பாராட்டைப் பெற்றவர்களில் விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் சக்திவேல், எப்போதும்வென்றான் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, சங்கரலிங்கபுரம் காவல் நிலைய ஆய்வாளர் அசோக்பாபு, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ், தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டியன், முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும் தருவைக்குளம், சைபர் குற்றப்பிரிவு, ஆறுமுகநேரி, மாசார்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், காவல் கட்டுப்பாட்டு அறை பணியாளர்கள் உள்ளிட்ட மொத்தம் 25 பேர் இந்த நற்பணி சான்றிதழ்களை பெற்றனர்.

இந்த நிகழ்வில் காவல்துறையினரின் துல்லியமான விசாரணை மற்றும் விரைவான நடவடிக்கை பொதுமக்கள் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகிறது என பாராட்டப்பட்டது.

வியாழன், 19 மார்ச், 2026

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: கைது விவகாரத்தில் அடுக்குஅடுக்காக பாஜக அண்ணாமலை கேள்விகள் ?

தூத்துக்குடி லீக்ஸ்2026 மார்ச் 19

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகிலுள்ள வேடநத்தம் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மீது பாலியல் தாக்குதல் நடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நடைபெற்றது முதல் பத்து நாட்கள் கடந்தும் குற்றவாளியை கைது செய்யாதது குறித்து பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

thoothukudileaks


இந்த நிலையில், சாயல்குடியைச் சேர்ந்த தர்ம முனீஸ்வரன் என்பவரை கைது செய்துள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த கைது நடவடிக்கையைச் சுற்றி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

கடந்த 2020 ஆம் ஆண்டு தூத்துக்குடி எட்டயபுரம் அருகே 65 வயதான முதிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், 2022 ஆம் ஆண்டு தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டார். 

thoothukudileaks


பின்னர், 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 

இதன் பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டு ஜாமீன் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு கொடூர குற்றத்தில் ஆயுள் தண்டனை பெற்ற நபருக்கு ஜாமீன் கிடைத்தது குறித்தும், அந்த வழக்கை அரசு முறையாக எதிர்கொள்ளாததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

மேலும், பல வழக்குகள் நிலுவையில் உள்ள குற்றப்பின்னணி கொண்ட நபர் ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் அவரை காவல்துறை கண்காணிக்க தவறியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

மேலும், சிசிடிவி காட்சிகள் மூலம் குற்றவாளியை அடையாளம் கண்டதாக கூறப்படும் நிலையில், அந்த காட்சிகளை ஆய்வு செய்ய காவல்துறைக்கு பத்து நாட்கள் எடுத்தது ஏன் என்ற கேள்வியும் பொதுமக்களிடையே எழுந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் தமிழக பாஜக மாநில தலைவர் K. Annamalai தனது ஃபேஸ்புக் பதிவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளார். 

குற்றவாளி கைது செய்யப்பட்ட விதம், முன்னாள் வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட சூழ்நிலை, மற்றும் காவல்துறையின் நடவடிக்கைகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து உண்மை நிலை என்ன என்பதை பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. காவல்துறைக்கு பொறுப்பான தமிழக முதலமைச்சர் M. K. Stalin இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

– தூத்துக்குடி லீக்ஸ்