தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
செய்தி புகைப்படம் ரோஜா அருணன் செய்தியாளர்
தொழிலதிபர்களின் தயவில் இயங்குகிறதா காவல்துறை? 'அன்பளிப்பு' கலாச்சாரமும்... ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு கசப்பான வரலாறும்!
தூத்துக்குடி: ஆகஸ்ட் 11
தூத்துக்குடி குருஸ் பர்ணாந்து சிலை அருகே, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட புதிய காவல்துறை கட்டுப்பாட்டு மைய பூத் (Police Control Booth) நேற்று (10-8-2026 )திறக்கப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) சிவ பிரசாத் பங்கேற்று இந்த பூத்தை திறந்து வைத்தார்.
உடன் காவல் துணை கண்காணிப்பாளர் (DSP) சுனில், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுனை முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், போக்குவரத்து பணியில் இருந்த டிராபிக் ஆண் -பெண் போலீஸ் பலருக்கு தலைக்கவசம் ஹெல் மேட் வழங்கினர்
சிக்னலில் (Helmet) அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு பரிசாகக் கண்ணாடிகளும் வழங்கப்பட்டன.
அன்பளிப்பு பற்றி...
இருப்பினும், இந்த நிகழ்ச்சி பொதுமக்களிடையே பல்வேறு கேள்விகளையும் அதிருப்தியையும் எழுப்பியுள்ளது.
தனியார் நிறுவன நன்கொடை:
புதிதாகத் திறக்கப்பட்ட காவல் கட்டுப்பாட்டு மைய பூத் பெட்டி, 'வேலவன் ஹைப்பர் குரூப்' நிறுவனத்தின் அன்பளிப்பு என அந்தப் பெட்டியிலேயே குறிப்பிடப்பட்டிருந்தது.
பரிசுகள் வழங்கிய நகைக்கடை குரூப்: நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட ஹெல்மெட் மற்றும் கண்ணாடி பரிசுகளை மற்றொரு பிரபல நகைக்கடை நிறுவனம் அன்பளிப்பாக வழங்கியிருந்தது என்கிறார்கள்.
அதிகாரிகள் உடன் தொழிலதிபர் போட்டோஷூட் ...!!!
அன்பளிப்பு வழங்கிய தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உயர் காவல் துறை அதிகாரிகளுடன் மிக அருகில் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்
பொதுமக்களின் கேள்வி:
ஆனால் அரசு துறை அதிகாரிகள் பெறுவது அவசியமா ??
"காவல்துறைக்கான உள்கட்டமைப்பு மற்றும் விழிப்புணர்வுச் செலவுகளைச் செய்ய தமிழக அரசிடம் நிதி இல்லையா? அரசுத் துறை ஏன் தனியார் தொழிலதிபர்களிடம் கையேந்த வேண்டும்?"
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் கசப்பான வரலாறு நினைவிருக்கிறதா?
"தூத்துக்குடி மக்களுக்கு இந்த 'அன்பளிப்பு கலாச்சாரம்' ஒரு கசப்பான வரலாற்றை நினைவூட்டுகிறது."
கடந்த காலங்களில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தூத்துக்குடி காவல்துறைக்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் அன்பளிப்பாக வாரி வழங்கியது. இதன் காரணமாக, உயர் அதிகாரிகள் முதல் கீழ்நிலை போலீசார் வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு விசுவாசிகளாக மாறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
அதன் உச்சக்கட்டமாகவே,
2018-ல் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின் போது. பொதுமக்கள் பக்கமாக நிற்க வேண்டிய காவல்துறை, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு, ஈவு இரக்கமின்றி 13 அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டு வீழ்த்திய கருப்பு வரலாறு அரங்கேறியது.
அரசு கவனிக்குமா?
தொழிலதிபர்களும், பெரு நிறுவனங்களும் காவல்துறையினருக்கு இதுபோன்று அன்பளிப்புகளை வழங்குவது, மறைமுகமாகச் சலுகைகளைப் பெறுவதற்கான "ஒரு வகை லஞ்சமே" என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
துறை சார்ந்த தேவைகளுக்கு அரசாங்க நிதி ஒதுக்கீடு இருக்கும் போது, காவல்துறை தனியார் தொழிலதிபர்களின் தயவை எதிர்பார்ப்பது ஏன்?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்!!!
தமிழக காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அரசுத் துறைகளில் ஊடுருவும் இந்தத் தனியார் 'அன்பளிப்பு/நன்கொடை' கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? தொழிலதிபர்கள் சலுகை பெற வழிவகுக்கும் இதுபோன்ற நிகழ்வுகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்பதே தூத்துக்குடி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பும் கேள்வியும் ஆகும்!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக