திங்கள், 5 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் ஆயிரம் பேர் கைது

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

அங்கன்வாடி ஊழியர்கள்–உதவியாளர்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மாவட்டம் முழுவதும் போராட்டம்

தூத்துக்குடி:டிச6

அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.


thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு நிரந்தர அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்த வேண்டும், ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும், பணி ஓய்வு தொகையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் நடைபெற்றது.


தூத்துக்குடியில் அலைகடலென சாலை மறியல் திரண்ட அங்கன்வாடி பெண்கள் பரபரப்பு வீடியோ பார்க்க 

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் ஒருங்கிணைந்து கோரிக்கைகளை முழங்கினர். நீண்ட ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், அரசு உடனடியாக தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றதாகவும், தொடர்ந்து கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டால் அடுத்த கட்ட போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும் என்றும் அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


"அங்கன்வாடி ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகள்:

அரசு ஊழியர் அந்தஸ்து வழங்க வேண்டும்

ஊதிய உயர்வு (₹21,000 - ₹25,000)

பணி நிரந்தரம்

ஓய்வூதிய வசதி (₹6,750)

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்

மேற்பார்வையாளர் பதவி உயர்வு"


தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அனைவரையும் தூத்துக்குடி மாவட்டம் காவல்துறை கைது செய்து மண்டபம் கொண்டு சென்றனர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக