busstand லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
busstand லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 அக்டோபர், 2023

மீண்டும் தூத்துக்குடி அண்ணா பழைய பேருந்துநிலையத்திலிருந்து மினிபஸ்கள் இயக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் 1-11-2023

photo news by

sunmugasunthram journalist 


மீண்டும் தூத்துக்குடி பேறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் மினி பஸ் இயக்கம் தொடங்கியது மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டார்.



இது பற்றிய செய்தியாவது:-

     தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அண்ணா பழைய பேருந்து நிலையத்தில் மினி பேருந்துகள் நிலையத்துக்கு வந்து செல்வதற்கு ஏதுவாக வாய்ப்பு ஏற்படுத்தி தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்னர்

அதை  தொடர்ந்து மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து பேசினார்கள். 

அப்பொழுது அவர்களிடம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் பேருந்து நிலையத்தின் உள்ளே வந்து செல்வதற்கு அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்திருந்தார். 



இதனையடுத்து காலை முதல் அண்ணா பழைய பேருந்துநிலையத்திலிருந்து மினிபஸ்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. 

இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் நாட்டுமக்கள் நலன் தான் முக்கியம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். 


அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகராட்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. திமுக வை பொறுத்தவரை சொல்வதை நிச்சயமாக செய்வோம் சொல்லாதவற்றை மக்கள் நலன் கருதி பல திட்டங்களை நிறைவேற்றுவோம். என்றும் மக்களுக்காக உழைக்கும் கட்சியாக திமுகவும் தமிழக அரசு இருந்து வருகிறது. 


அதன் படி பழைய பேருந்துநிலையத்தில் மினிபஸ்இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. 

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், பொறியாளர் சரவணன், உதவி ஆணையர் சேகர், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

வியாழன், 5 அக்டோபர், 2023

2023oct 8 ல் தூத்துக்குடி பேருந்து நிலையம் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்.கனிமொழி எம்.பி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அமைச்சர் கீதாஜீவன் தகவல்

 தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் இன்று 6-10-2023 தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி செய்தியாவது:-

       தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது-. அதன் இறுதி கட்டப் பணிகள், வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.



      பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்..


 தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 



ஆனால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. 


தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். 



இதனையடுத்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. 


நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. வந்து பார்வையிட்டு பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். 



தற்போது, இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 


சுமார் ரூ.53 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 


தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது-. 


தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 



பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. 



கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது-. 


பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையில் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் கோவில்கள், பனிமயமாதா பேராலயம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போன்றவை வரையப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பொன்மொழிகளும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் திறக்கப்பட்ட அன்றே இங்கிருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். 


ஏற்கனவே பழைய பேருந்து நிலையமாக இருந்த போது, அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. 


அதே போன்று ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் வரும் 8ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். 


கனிமொழி எம்.பி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

     ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்;சி ஆணையர் தினேஷ்குமார், இணை ஆணையர் ராஜராம், செயற்பொறியாளார் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், சேகர், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.