தமிழன்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழன்டா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜூன், 2025

குழந்தைகளின் பாதுகாப்புக்காக தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!



தூத்துக்குடி லீக்ஸ் | 19 ஜூன் 2025 | தூத்துக்குடி செய்தி

குழந்தைகளின் பாதுகாப்புக்காக தாரை தப்பட்டைகளுடன் விழிப்புணர்வு!

தூத்துக்குடி:
தூத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் சீண்டல்கள், குழந்தை திருமணம், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்  திபு ஆலோசனையின் கீழ், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு சார்பில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.



தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வில், தமிழன்டா கலைக்குழு தலைவர் ஜெகஜீவன் தலைமையில் தாரை தப்பட்டைகளுடன் கிராமிய நடனங்கள், விழிப்புணர்வு பாடல்கள் மற்றும் நாடகங்கள் மூலமாக பொதுமக்களிடம் தெளிவான தகவல்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வுகளில் தூத்துக்குடி மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அனுசியா, தலைமை காவலர்கள் பொன்னரசி, ராஜராஜேஸ்வரி, காவலர்கள் சண்முக பிரியா மற்றும் மணி செல்வியா பங்கேற்றனர்.


 புதுக்கோட்டையில், மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பாமா பத்மினி, உதவி ஆய்வாளர் லதா ஆகியோர் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


சமூக பாதுகாப்பு குறித்து மக்களுக்கு நேரடியாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் இந்த முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.



வெள்ளி, 21 மார்ச், 2025

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம்

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன – திருப்பணி செட்டிகுளத்தில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது 



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி: தமிழர் பண்பாடு, மொழி மற்றும் அடையாளங்களை காப்பாற்ற வேண்டிய தேவையை வலியுறுத்தும் வகையில், திருப்பணி செட்டிகுளத்தில் நாட்டு நல பணித் திட்ட முகாம் சிறப்பாக நடைபெற்றது. சாயர்புரம் டாக்டர் ஜி. யு. போப் பொறியியல் கல்லூரி சார்பாக நடைபெற்ற இந்த முகாமில் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இம்முகாமிற்கு கல்லூரி தாளாளர் வழக்கறிஞர் ரவீந்திர சார்லஸ் தலைமை வகித்தார். முதல்வர் டாக்டர் ஜே. ஜாஃபிந்த் முன்னிலை வகித்தார். முகாமின் சிறப்பு அழைப்பாளராக திருப்பணி செட்டிகுளம் ஊராட்சி தலைவர் சுயம்புலிங்கம் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரையாற்றினார்.

தமிழரின் அடையாளங்கள் – விழிப்புணர்வு உரை

முகாமின் முக்கிய நிகழ்வாக தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். 


"தமிழர் அடையாளங்கள் தமிழர்களால் அழிக்கப்படுகின்றன" என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். இவ்வுரையில், தமிழர் பண்பாடு, மரபுகள், மொழி, கலாச்சாரம் ஆகியவை மெல்ல மெல்ல அழிவுப் பாதையில் செல்லக் காரணமான சமூகச் சூழல், கல்வி மற்றும் பண்பாட்டு மாற்றங்களை அவர் விளக்கினார்.



"தமிழர்கள் தங்கள் அடையாளங்களை இழக்காமல் இருக்க, மரபு, மொழி, வரலாறு ஆகியவற்றை பாதுகாக்கும் பொறுப்பு நம்மிடமே உள்ளது" என அவர் வலியுறுத்தினார். மேலும், இயற்கை உணவு, ஆரோக்கியம், வாழ்வியல் தத்துவங்கள் குறித்து மாணவர்களிடமும் பொதுமக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

முகாமின் முக்கிய நிகழ்வுகள்

  • முதல் நாள்: இயற்கை உணவு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.
  • மாணவர்கள் பங்கேற்பு: பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்களது சமூகப் பணியின் ஒரு பகுதியாக முகாமில் கலந்துகொண்டு பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டனர்.
  • பொதுமக்கள் உற்சாக பங்கேற்பு: ஊர் மக்கள் ஆர்வத்துடன் முகாமில் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு

இந்த முகாமை நாட்டு நல பணி திட்ட அலுவலர் உதவி பேராசிரியர் சா. டென்னிசன் ஒருங்கிணைத்தார். மேலும், எஸ்தர் தங்கம், அந்தோணி உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கினர்.



இம்முகாம், தமிழர் மரபு மற்றும் பண்பாட்டு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை அதிகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு: தூத்துக்குடி லீக்ஸ்

திங்கள், 13 ஜனவரி, 2025

தமிழன்டா சங்கமம் விழா - தூத்துக்குடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், மருத்துவ முகாம்களும்

TamilNadu updates 14-1-2025

Photo news by Arunan journalist 

தமிழன்டா சங்கமம் விழா - தூத்துக்குடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், மருத்துவ முகாம்களும்.....

தூத்துக்குடி: 50 கலை நிகழ்ச்சிகள், 500 கலைஞர்கள் பங்கேற்பு


தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழன்டா சங்கமம் விழா கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 


இது தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையோடு நமது பாரம்பரிய கலைகளையும், உணவுகளையும் முன்னிறுத்தும் ஒரு அரிய விழாவாக அமைந்தது.



விழாவின் நிகழ்ச்சிகள்:


தமிழன்டா சங்கமம் விழாவை பாளையங்கோட்டை திரு இருதய சகோதரர் சபை உயர் தலைவர் ஏ. விக்டர் தாஸ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனுடன் பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருள், விவசாய பொருள், நெல் விதைகள், அரிசி வகைகள் போன்ற கண்காட்சிகள் திறக்கப்பட்டு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற கருத்தில் விழா பேருரைகள் வழங்கப்பட்டன.



தொழிலதிபர்கள், மருத்துவர்களும் பல்வேறு சமூகம் சார்ந்த கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய கலைகளையும், உணவுகளையும், மருத்துவங்களையும் பற்றி உரையாற்றினர்.


பாரம்பரிய சிகிச்சைகள் மற்றும் மருத்துவ முகாம்கள்:


வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், வர்மம் மூலம் நோய்களை நீக்கும் முகாம், அக்குபஞ்சர் மற்றும் சித்த வைத்திய மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், 15 பேர் இயற்கை யோகா மருத்துவத்தை வழங்கினர்.



கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி:


50க்கும் மேற்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள், 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் நிகழ்ந்தது. மதுரை வானவில் மல்லர் கம்பம் குழு அனைவரையும் வியக்க வைத்தது. தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் பச்சை மிளகாய் கடித்து பழைய கஞ்சியை சாப்பிட்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும், கலைஞர்களின் தாரை தப்பட்டைகள், நாயக்கர் ஆட்டம், வில்லிசை, சிறிய வில்லிசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.


கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சாரம்:


விழாவின் நிறைவு விழாவை தமிழ்நாடு மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நடத்தி, நாட்டுப்புற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழன்டா விருதுகளை வழங்கி கௌரவித்தார். திருநெல்வேலி அகில இந்திய வானொலி முன்னாள் அறிவிப்பாளர் கிராமத்து குயில் சந்திரபுஷ்பம் முன்னிலை வகித்தார்.


 சோபியா ராணி தொகுத்து வழங்கிய இந்த விழா, அனைத்து வகுப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் அரிய பங்களிப்பை அளித்தது.


விழாவில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


புதன், 25 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2025: கிராமிய கலை விழா ஜனவரி 11 முதல் 13 வரை பிரமாண்டமாக நடைபெறும் தொடர்புக்கு

Tamil Nadu updates,

26-12-2024

Photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2025: கிராமிய கலை விழா ஜனவரி 11 முதல் 13 வரை பிரமாண்டமாக நடைபெறும் என தலைவர் ஜெகஜுவன் தெரிவித்தார்.



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் 2025 ஜனவரி 11 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. 


இவ்விழா, தமிழன்டா இயக்கம், கலைக்குழு, கலைக்கூடம் உள்ளிட்ட பல அமைப்புகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர். நிகழ்ச்சியின் முதல் நாளில் பாரம்பரிய கிராமிய கலைகள், விளையாட்டுப் போட்டிகள், மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.



இந்த விழாவிற்கு சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்க, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகிக்கின்றனர். மேலும், பல அமைச்சர்கள், எம்பிக்கள், மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள்.

கும்மாட்டம் கரகாட்டம்!!!

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் கரகம், தப்பாட்டம், மயிலாட்டம், காவடி, வில்லிசை போன்ற 100-க்கும் மேற்பட்ட கிராமிய கலைகள் இடம்பெறுகின்றன. 



முதல் நாளில் மல்லர் கம்பம், பட்டிமன்றம், பாரம்பரிய கலை போட்டிகள், மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.


முன்பதிவு செய்ய விரும்புவோர் 

97 917 800 68 

மறுநாளில் கலைஞர்கள் பேரணி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், மற்றும் சாதனைசெய்தவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெறும். விழாவில் பங்கேற்பதற்கும், முன்பதிவு செய்ய விரும்புவோர் 

97 917 800 68 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இம்மாநாடு தமிழர் பாரம்பரிய கலைகள் மற்றும் கிராமிய வாழ்க்கையை மீட்கும் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.



வியாழன், 4 ஏப்ரல், 2024

வேட்பாளர்கள் மீது கொதிப்பு!!தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மேள தாள நாட்டு புற கலைகளை புறக்கணித்து வருவதால் சோகத்தில் கலைஞர்கள் இருக்கிறார்கள் என தமிழன் டா இயக்க தலைவர் ஜெக ஜுவன் ஆவேசம் !

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂4-4-2024

news by 

arunan journalist 

தேர்தல் பிரச்சாரத்தில் வேட்பாளர்கள் மேள தாள நாட்டு புற கலைகளை புறக்கணித்து வருவதால் சோகத்தில் கலைஞர்கள் இருக்கிறார்கள் என தமிழன் டா இயக்க தலைவர் ஜெக ஜுவன் ஆவேசம் 

வேட்பாளர்கள் மீது கொதிப்பு!!!





இதுபற்றி அவர் தெரிவித்ததாவது:-


 தற்போது 2024 நடைபெறும் மக்களவைத் தொகுதி தேர்தலில் தமிழகத்தில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட வேட்பாளர் கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள் 

முன்பெல்லாம் 

வேட்பாளர் கள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தில் பொதுமக்கள் சந்தித்து வாக்கு சேகாிப்பு போது மேள தாளம் ஆட்டம் பாடும் நாட்டுப்புற கலைஞர் கள் பயன்படுத்தி ஒட்டு சேகரிப்பு பணியை மேற்கொள் வார்கள். 


இதனால் மக்கள் மனதில் நம் பாரம்பரிய தமிழ் பண்பாடு கலையும் வெளிப்படுத்த முடிந்தது கலைஞர்களும் வேட்பாளர்களும் பொதுமக்கள் மத்தியில் வெளிச்சத்திற்கு வந்து வெற்றி பெற்றார் கள்


தற்போது வேட்பாளர் கள் நிலை என்ன வென்றால்???

ரொம்ப ரொம்ப கேவலமாக இருக்கிறது!!!!????


சாட்டிலைட் டிவிகள் தினசரி பத்திரிகைகள் போன்றோருக்கு பல லட்சக்கணக்கில் பேக்கேஜ் பணம் பெறப்பட்டு செய்திகள் வெளியிடப்படுகிறது 


ஆனால் நாட்டுப்புற கலைஞர்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு அரசியல் பிரமுகர்கள் தயாராக இல்லை 


தேர்தல் ஆணையமும் இவர்களுக்கு தகுந்த அறிவுரைகளை வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என கொதித்து உள்ளார்.


மேலும் தமிழ் மக்கள் இல்லங்கள் மண்டபத்தில் நடைபெறும் நிகழ்வான


1 பிறந்த நாள் விழா

2 காதணி விழா

3 பூப்பு நன்னீராட்டு விழா

4 நிச்சயதார்த்த விழா 

5 திருமண விழா

6 வளைகாப்பு

7 கோவில் விழாக்கள்

8 நிறுவன திறப்பு விழா

9 பள்ளி, கல்லூரி, அரசியல் விழாக்களுக்கு


மாடு ஆட்டம் மயில் ஆட்டம் குதிரை ஆட்டம் கட்டைக்கால் ஆட்டம் பறையாட்டம் என்று சொல்லக்கூடிய தப்பாட்டம் ஒயிலாட்டம் சாட்டை குச்சி ஆட்டம் கரகாட்டம் சாமி ஆட்டம் இப்படி 50க்கும் மேற்பட்ட ஆட்டங்கள் இருக்கிறது.


தமிழ் நாடு முழுவதும் தமிழர் கலைகளை பரப்பிட, அடுத்த தலைமுறைக்கு எடுத்துக் செல்வோம் கலைகள் தங்களது விழாக்களில் நிகழ்த்த வேண்டுமா? தொடர்பு கொள்ளுங்கள்



9791780068 என கேட்டுக் கொண்டார்.

திங்கள், 11 மார்ச், 2024

தமிழன்டா எஸ் ஜெகஜீவன் -க்குகலைச்சுடர் மணி விருது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங்கல்

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂11-3-2024

தமிழன்டா எஸ் ஜெகஜீவன் -க்கு கலைச்சுடர் மணி விருது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி வழங் கினார்.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை, மாவட்ட கலை மன்றம், தூத்துக்குடி சார்பில் 2022 -   23 ஆண்டில் மாவட்ட அளவில் சிறந்த நாட்டுப்புற பாடகர், சிறப்பு விருது வழங்கப்பட்டது.



தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி

 கலைச்சுடர் மணி என்ற விருது தமிழன்டா எஸ் ஜெகஜீவன் -க்கு வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும்...

 2022 - 2023 ஆம் ஆண்டில் 15 நபர்களுக்கும் 2023 -2024 ஆண்டில் 15 நபர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள் .



 இந்த விழாவில் நாட்டுப்புறக் கலைஞர் சேர்மத்துரை, வீதி  நாடக பயிற்சியாளர் செந்தில், பரதநாட்டிய கலைஞர் மாணிக்கம், நாட்டுப்புற கலைஞர் கருணாநிதி உட்பட 30 கலைஞர்களுக்கு விருதுகள், சால்வைகள் பண முடிப்பு போன்றவை வழங்கப்பட்டது.


 நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன், கலை பண்பாட்டு துறை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தூத்துக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி உட்பட பல முக்கிய அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 20 ஜூன், 2022

தமிழன்டா இயக்கத் தலைவராக மீண்டும் ஜெகஜீவன் தேர்வு புதிய நிர்வாகிகள் பட்டியல்

 தமிழன்டா இயக்கம் செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி அண்ணாநகர் தனியார் அலுவலக வளாகத்தில் இன்று நடைபெற்றது



தூத்துக்குடி நாட்டுப்புற பாடகர் வி மாரிமுத்து தலைமை தாங்கினார் நிகழ்வில் காலாங்கரை நாட்டுப்புற கலைஞர் இசக்கி முன்னிலை வகித்தார்.


இந்நிகழ்வில் மறைந்த நாட்டுப்புறக் கலைஞர் பிரம்ம ராஜ் அவர்களுக்கு செப்டம்பர் 14ஆம் தேதி நினைவு நாளில் படத்திறப்பு விழா தமிழன்டா பாரம்பரிய திருவிழா குறித்தும் விருதுகள் வழங்கும் விழா குறித்தும் இயக்க வளர்ச்சி பணிகள் குறித்தும் நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும்தங்கள் கருத்து களை பேசினார்.

பின்பு புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது.

 


தமிழன்டா இயக்கத் தலைவராக மீண்டும் ஜெகஜீவன் தேர்வு செய்யப்பட்டார் செயலாளராக கதிர்வேல் பொருளாளராக மணிகண்டன் துணைத்தலைவராக நாட்டுப்புற பாடகர் மாரிமுத்து தூத்துக்குடி மாவட்ட மகளிரணி பொறுப்பாளராக கீழக் கரந்தை கிராமிய பாடகி முனியம்மாள் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் தமிழ் கலைஞர் ஆண்டி வடக்கு மாவட்ட தலைவர் சிவ காடு மாரியப்பன் வடக்கு மாவட்ட துணை தலைவர் நாதஸ்வரக் கலைஞர் மந்திரமூர்த்தி காளான் கரைப்பகுதி பொறுப்பாளர் இசக்கி தெற்கு மாவட்ட துணைத்தலைவர் பேச்சி துறை தூத்துக்குடி துணை மாவட்ட செயலாளர் புகைப்படக்கலைஞர் யாக்கோபு உட்பட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்