TamilNadu updates 14-1-2025
Photo news by Arunan journalist
தமிழன்டா சங்கமம் விழா - தூத்துக்குடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளும், மருத்துவ முகாம்களும்.....
தூத்துக்குடி: 50 கலை நிகழ்ச்சிகள், 500 கலைஞர்கள் பங்கேற்பு
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில், தமிழன்டா சங்கமம் விழா கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இது தமிழர்கள் கொண்டாடும் பொங்கல் பண்டிகையோடு நமது பாரம்பரிய கலைகளையும், உணவுகளையும் முன்னிறுத்தும் ஒரு அரிய விழாவாக அமைந்தது.
விழாவின் நிகழ்ச்சிகள்:
தமிழன்டா சங்கமம் விழாவை பாளையங்கோட்டை திரு இருதய சகோதரர் சபை உயர் தலைவர் ஏ. விக்டர் தாஸ், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனுடன் பாரம்பரிய வீட்டு உபயோகப் பொருள், விவசாய பொருள், நெல் விதைகள், அரிசி வகைகள் போன்ற கண்காட்சிகள் திறக்கப்பட்டு, பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற கருத்தில் விழா பேருரைகள் வழங்கப்பட்டன.
தொழிலதிபர்கள், மருத்துவர்களும் பல்வேறு சமூகம் சார்ந்த கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு பாரம்பரிய கலைகளையும், உணவுகளையும், மருத்துவங்களையும் பற்றி உரையாற்றினர்.
பாரம்பரிய சிகிச்சைகள் மற்றும் மருத்துவ முகாம்கள்:
வாசன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம், வர்மம் மூலம் நோய்களை நீக்கும் முகாம், அக்குபஞ்சர் மற்றும் சித்த வைத்திய மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. குலசேகரம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், 15 பேர் இயற்கை யோகா மருத்துவத்தை வழங்கினர்.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி:
50க்கும் மேற்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள், 600க்கும் மேற்பட்ட கலைஞர்கள், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகளுடன் நிகழ்ந்தது. மதுரை வானவில் மல்லர் கம்பம் குழு அனைவரையும் வியக்க வைத்தது. தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் பச்சை மிளகாய் கடித்து பழைய கஞ்சியை சாப்பிட்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும், கலைஞர்களின் தாரை தப்பட்டைகள், நாயக்கர் ஆட்டம், வில்லிசை, சிறிய வில்லிசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் மனதை கவர்ந்தது.
கலை நிகழ்ச்சிகள் மற்றும் கலாச்சாரம்:
விழாவின் நிறைவு விழாவை தமிழ்நாடு மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி. கீதா ஜீவன் நடத்தி, நாட்டுப்புற கலைஞர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தமிழன்டா விருதுகளை வழங்கி கௌரவித்தார். திருநெல்வேலி அகில இந்திய வானொலி முன்னாள் அறிவிப்பாளர் கிராமத்து குயில் சந்திரபுஷ்பம் முன்னிலை வகித்தார்.
சோபியா ராணி தொகுத்து வழங்கிய இந்த விழா, அனைத்து வகுப்பினரையும் ஊக்குவிக்கும் வகையில் அரிய பங்களிப்பை அளித்தது.
விழாவில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக