அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 8 செப்டம்பர், 2026

தூத்துக்குடி கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா? அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

 Tamil Nadu updates

தூத்துக்குடி மாவட்டத்தில் 

கயத்தாறில் கனிம வளக் கொள்ளையா?

அரசுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பா? – முதலமைச்சரிடம் வழக்கறிஞர் பரபரப்பு புகார்

தூத்துக்குடி, செப்.8:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது அவசரமாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான மு. பெச்சிமுத்து, தமிழக முதலமைச்சரிடம் பொது நல புகார் மனு அளித்துள்ளார்.

thoothukudileaks


கட்டபொம்மன் சிலை அருகே அகழ்வு?

சென்னை–கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே, சர்வே எண் 378/1 பகுதியில் கனரக பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் லாரிகளைப் பயன்படுத்தி கனிம வளங்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக இரு நபர்களின் பெயர்களையும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் உரிய அரசு அனுமதியின்றி கனிம வளங்களை வெட்டி எடுத்து, சேமித்து வைத்து பின்னர் கடத்தியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

புகைப்படம், வீடியோ ஆதாரங்கள்

இதுதொடர்பாக புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களுடன் ஏற்கனவே தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து ஆதாரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பகிரப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், ஆதாரங்கள் வழங்கப்பட்ட பின்னரும் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் செயல்பாடு குறித்து கேள்வி

சட்டவிரோத கனிம அகழ்வு தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை தாமதமாகி வருவது ஏன்? சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நிர்வாக ரீதியான ஆய்வு நடத்தப்படுமா? கனிம வளங்களை சட்டவிரோதமாக அகழ்ந்து கடத்தும் நபர்களுக்கு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்த கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் கனிம வள அகழ்வு மற்றும் கனிம கடத்தல் தொடர்பாக மாவட்ட அளவில் சிறப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அரசு அனுமதியின்றி கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்படுவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத கனிம அகழ்வுக்கு அரசு அதிகாரிகள் யாரேனும் உடந்தையாக இருந்தது விசாரணையில் தெரியவந்தால், அவர்கள் மீதும் துறைரீதியாகவும் சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய கேள்விகள்

• அனுமதியின்றி கனிம அகழ்வு நடைபெற்றதா?
• அரசுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் வருவாய் இழப்பு எவ்வளவு?
• புகைப்படம், வீடியோ ஆதாரங்கள் மீது என்ன நடவடிக்கை?
• கனிம கடத்தலுக்கு அதிகாரிகள் உடந்தையா?
• மாவட்டம் முழுவதும் சிறப்பு ஆய்வு நடத்தப்படுமா?

 

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

video 


புகைப்பட கேப்ஷன்:
கயத்தாறு கட்டபொம்மன் சிலை அருகே சட்டவிரோதமாக கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி. (கோப்பு படம்)

குறிப்பு: இச்செய்தியில் இடம்பெறும் குற்றச்சாட்டுகள் வழக்கறிஞர் மு. பெச்சிமுத்து அளித்துள்ள பொது நல புகார் மனுவின் அடிப்படையிலானவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் விசாரணை மற்றும் அதிகாரப்பூர்வ பதில் வெளியாக வேண்டியுள்ளது.

ஞாயிறு, 6 செப்டம்பர், 2026

தூத்துக்குடியில் திறன் போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் யோகாசன நிகழ்ச்சி பிரமிப்பு? நடந்தது என்ன படிக்க

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

திறன் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு அமைச்சர் ஸ்ரீநாத் பரிசு

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ் நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இனைந்து நடத்திய தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மேடையில் மாணவிகளின் பிரமிப்பூட்டும் யோகாசன நிகழ்ச்சி

தூத்துக்குடி, செப்.6:

தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி 2026-இன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவ, மாணவியருக்காக நடத்தப்பட்ட பல்வேறு திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

thoothukudileaks


புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு கடந்த 27.08.2026 முதல் 06.09.2026 வரை, பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

thoothukudileaks


இதில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். “நான் விரும்பும் ஓவியம்” என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும், “வாசிப்பும் வாழ்க்கை” என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டி மற்றும் கதை எழுதும் போட்டியும் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் செப்டம்பர் 5-ம் தேதி வரை தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டன.

thoothukudileaks


இந்தப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கான பரிசளிப்பு விழா தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ. ஸ்ரீநாத் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

thoothukudileaks


அப்போது அமைச்சர் ஸ்ரீநாத் பேசுகையில், ...

மாணவ, மாணவியர் தங்களது தனித்திறன்களை வளர்த்துக் கொள்வது மிகவும் அவசியம் என்றார். புத்தக வாசிப்பு அறிவை விரிவுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், சிந்தனைத் திறனையும் வாழ்க்கை அனுபவத்தையும் மேம்படுத்தும் எனத் தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks


மேலும், இளம் வயதிலேயே வாசிப்புப் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள மாணவர்கள் முன்வர வேண்டும் என்றும், கல்வியுடன் சேர்த்து ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட தங்களது தனித்திறன்களையும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.


இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி தி சென்னை சில்க்ஸ் புத்தகக் கண்காட்சி மேடையில் யோகா மாஸ்டர் சுந்தர்வேல் மற்றும் டாக்டர் கனிஷ்கா ஆகியோரிடம் பயிற்சி பெற்று வரும் மாணவிகளின் சிறப்பு யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் 9-ம் வகுப்பு பயிலும் காமராஜ் மற்றும் தஸ்நேவிஸ் பள்ளி மாணவிகளான அஸ்மா, சுவாணி ஆகியோர் பல்வேறு பிரமிப்பூட்டும் யோகாசனங்களை செய்து காட்டி, அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர். அவர்களின் திறமையான யோகாசன நிகழ்ச்சி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது.




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
பரிசு பெற்ற மாணவ மாணவிகள் 

thoothukudileaks

thoothukudileaks


தி சென்னை சில்க்ஸ் மற்றும் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தி வரும் தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி மூலம் மாணவர்களிடையே வாசிப்பு ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு, ஓவியம், எழுத்து, கதை எழுதுதல் உள்ளிட்ட அவர்களின் தனித்திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


வியாழன், 12 மார்ச், 2026

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவது திமுக தான் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் | தூத்துக்குடி | 13 மார்ச் 2026

தூத்துக்குடி: தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் 73வது பிறந்தநாளையொட்டி, வடக்கு மாவட்ட திமுக சார்பில் 48வது வார்டு கால்டுவெல் காலணியில் சிறப்பான விழா நடைபெற்றது. விழாவிற்கு மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் ராஜேந்திரன் வரவேற்புரையாற்றினார்.

thoothukudileaks


விழாவில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ... தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பேசுகையில்,..

 "மக்களோடு மக்களாக இருந்து உங்களோடு எப்போதும் பணியாற்றுவது திமுக தான். உங்களில் ஒருவராக இருந்தே தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்" என்று தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் கொடுக்கப்படும் புகார்களுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் தண்டனை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

விடியல் பயணம் திட்டத்தின் மூலம் பெண்களை வீட்டுக்குள்ளே முடக்கி வைக்கும் நிலை மாறி, அம்மா வீடு மற்றும் உறவினர் வீடு என பல இடங்களுக்கு சுதந்திரமாகச் செல்லும் நிலை இன்று கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

"ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்கள் தான் நங்கூரமாக இருந்து செயல்படுகிறார்கள். 1996ஆம் ஆண்டு 33 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் நான் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

பின்னர் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக என 30 ஆண்டுகாலம் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உங்களோடு பயணிக்கிறேன்" என்று அமைச்சர் கீதாஜீவன் உரையாற்றினார்.

thoothukudileaks


மகளிர் உரிமைத்தொகையை தேர்தலுக்குப் பின் 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதாக முதலமைச்சர் அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 14 வயதில் கொடி பிடிக்க ஆரம்பித்து, படிப்படியாக உயர்ந்து இன்று கட்சித் தலைவராகவும் தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் ஸ்டாலின் பணியாற்றி வருவதை எடுத்துரைத்த அமைச்சர், 5 ஆண்டுகால ஆட்சியில் தமிழகம் இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்தார். வரவிருக்கும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


மாற்றுத்திறனாளிக்கு அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவாதம்

விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது ஒரு மாற்றுத்திறனாளி, தனக்கு மூன்று சக்கர சைக்கிள் வேண்டும் என்று கோரிக்கை மனு வழங்கினார். அதை படித்துப் பார்த்த அமைச்சர் கீதாஜீவன், உடனடியாக ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்து, தனது உதவியாளரிடம் அந்த மனுவை வழங்கினார்.


விழாவில் மாநில பேச்சாளர் சரத் பாலா பகுதிச் செயலாளர் ராமகிருஷ்ணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், கவுன்சிலர்கள் சரவணகுமார், விஜயகுமார், கந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

photo news by sunmugasuthram press club president 


செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் திமுக ஆட்சியே மீனவர்களுக்கு நல்ஆட்சி அமைச்சர் கீதாஜீவன் பரபரப்பு பேச்சு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி:பெ 11 "எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைகிறதோ அதுதான் மீனவ மக்களுக்கான நல் ஆட்சியாக இருந்து வருகிறது" என்று சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் தெரிவித்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி மீன்பிடி துறைமுக வளாகத்தில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு மீனவர் நல வாரிய தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மீனவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

thoothukudileaks


மீனவர்களின் முக்கிய கோரிக்கைகள்


திரேஸ்புரம், திருச்செந்தூர், அமலி நகர், ஆலந்தலை, பெரியதாழை, ஜீவாநகர், குலசேகரப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரினர். மீனவர்களின் பாதுகாப்பை கருதி கடல் ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும், மீனவ கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


கடல் தொழிலில் ஈடுபட்டு உயிரிழந்த மற்றும் காணாமல் போன மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.


திமுக அரசின் சாதனைகள்


கூட்டத்தில் பேசிய அமைச்சர் கீதாஜீவன், "மீனவ நண்பர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான கஷ்டங்களை கடந்து கடல் தொழில் செய்து வருகின்றனர். அவர்களது கஷ்டங்களை குறைக்கும் வகையில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்" என்றார்.


மீன்பிடி தடைக்காலத்தில் வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு, மீன்பிடி படகுகளுக்கு கூடுதல் டீசல் மானியம், தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் ரூ.150 கோடியில் விரிவாக்கம், தருவைகுளம் மீன் இறங்குதளம் விரிவாக்கம் என பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


எம்பிசி பட்டியல் சேர்க்கை


"மீனவ சமுதாயத்தை மிகவும் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்த்தது கலைஞர் தலைமையிலான திமுக அரசு. அதன் பலனாக எம்பிசி இட ஒதுக்கீட்டில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்கடன் உள்ளிட்ட பயன்களை அதிகமாக மீனவ சமுதாயத்தினர் பயன்படுத்தி பலனடைந்து வருகின்றனர்" என்று அமைச்சர் குறிப்பிட்டார்.


புதிய அறிவிப்புகள்


ஒவ்வொரு மீன்பிடி துறைமுகத்திலும் ஆம்புலன்ஸ் வசதி விரைவில் செய்து தர முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி விரைவில் நிறைவேற்றி தரப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். மீன்பிடி துறைமுகத்தில் சுத்திகரிக்கப்பட்ட ஆர்ஓ குடிநீர் பிளான்ட் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.


"மீனவர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாக செவி சாய்த்து மீனவர்களுக்கு கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மீனவ நண்பர்களும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு தொடர்ந்து ஆதரவு தர வேண்டும்" என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.


மனு வழங்கல்


தொடர்ந்து நடைபெற்ற குறைகேட்பு கூட்டத்தில் மீனவர் ஊர் நலக் கமிட்டியினர், மீனவர் சங்க பிரதிநிதிகள், மீனவர்கள் தங்களது பகுதிகளுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளை மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினிடம் மனுவாக வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட வாரிய தலைவர், விரைவில் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என தெரிவித்தார்.


கூட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி இயக்குநர்கள் புஷ்ராசப்னம், உத்தண்டு, மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, லெனின், மாநில திமுக மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவர் செல்வராஜ், வீரபாண்டியபட்டினம் பங்குத்தந்தை அலாசியஸ், கவுன்சிலர்கள் ரெக்ஸ்லின், ஆறுமுகம், வட்டச் செயலாளர் டென்சிங், மாநகர மீனவரணி துணை அமைப்பாளர் இசக்கிமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

photo by Arunan journalist 

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

வியாழன், 1 ஜனவரி, 2026

புதுவருட முதல் நாளில் தூத்துக்குடியில் 100 இளைஞர்கள் அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைப்பு

தூத்துக்குடி, ஜனவரி 1

தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டைச் சேர்ந்த 100 இளைஞர்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

எட்டையாபுரம் சாலையில் உள்ள வடக்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் அமைச்சருமான கீதாஜீவன் புதிதாக இணைந்த இளைஞர்களுக்கு கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து வரவேற்றார்.



திமுக பிஎல்2 முகவர் அற்புதக்கனி, இளைஞர்கள் மதன்ராஜ், ரெஜிலஸ் ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தூத்துக்குடி மாநகராட்சி 6வது வார்டுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் கீதாஜீவன் உரை

நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் கீதாஜீவன், "திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் இந்தியாவிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறார். எல்லா தரப்பினருக்கும் செய்துள்ள சாதனைகள் ஏராளம். உங்களைப் போன்ற இளைஞர்களை மாநில இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஊக்கப்படுத்தி வருகிறார்" என்று தெரிவித்தார்.

இன்னும் நான்கு மாத காலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதை சுட்டிக்காட்டிய அமைச்சர், "ஒவ்வொருவரும் குடியிருக்கும் பகுதியில் ஏற்கனவே பணியாற்றி வரும் நிர்வாகிகளோடு இணைந்து அரசின் திட்டங்களையும் திமுக கொள்கையையும் அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும். திமுக 7வது முறையாக ஆட்சி அமைப்பதற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் 2வது முறையாக முதலமைச்சராவதற்கும் உங்களுடைய பங்கு அதிகம் இருக்க வேண்டும். உழைப்பிற்கேற்ற அங்கீகாரம் வழங்கப்படும்" என்று கூறினார்.

பங்கேற்றவர்கள்

இந்நிகழ்ச்சியில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமிநாதன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, அயலக அணி அமைப்பாளர் கிறிஸ்டோபர் விஜயராஜ், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் ரவி, சங்கரநாரயணன், இலக்கிய அணி துணை அமைப்பாளர் பால்ராஜ், சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், வட்ட அவைத்தலைவர் ஞானபிரகாஷம், செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் கருப்பசாமி, ஜெயபால், ராஜ், கவுன்சிலர் ஜெயசீலி, முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மணி அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சனி, 27 டிசம்பர், 2025

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் & 2026 புத்தாண்டு விழா – அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு

தூத்துக்குடி, டிச.28:

உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் 2026 புத்தாண்டு விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி போல்பேட்டை கீதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் இன்று (28.12.2025, ஞாயிற்றுக்கிழமை) காலை 12 மணியளவில் விழா நடைபெற்ற

thoothukudileaks



இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதா ஜீவன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். உடன் திமுக தூத்துக்குடி மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்,....

“‘மாற்றுத்திறனாளி’ என்ற சொல்லை உருவாக்கியவர் கலைஞர் கருணாநிதி. மாற்றுத்திறனாளிகள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயல்பட்டு வருவது திமுக அரசே. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகள் மீது அன்பும் கவனமும் கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மாற்றுத்திறனாளி பயனாளர்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ளவர்கள் இதனை பெற்றுக்கொள்ளலாம். இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் ஒன்றிணைந்து கலந்து கொண்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என தெரிவித்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கிஃப்ட் பரிசு வழங்கல் 

இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில், ஷெர்லி மற்றும் மோசஸ் (அன்ன ராஜன்) முன்னிலையில், விழாவில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் அமைச்சர் கீதா ஜீவன் கிப்ட் பரிசுகளை வழங்கினார்.

அமைச்சர் கீதா ஜீவன் -க்கு கலைக்குழு வரவேற்பு!!!

நிகழ்ச்சி முன்னதாக சகாயம் தலைமையிலான கலைக்குழு அமைச்சர் கீதா ஜீவனுக்கு மேளதாளத்துடன் கலைக்குழுவினர் சிறப்பான வரவேற்பு செய்திருந்தனர்.

thoothukudileaks

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியை மாற்றுத்திறனாளிகள் மகளிர் சங்கம் சார்பில் IS. ஷெர்லி மற்றும் J. மோசஸ் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழா முழுவதும் உற்சாகமும், சமூக ஒற்றுமையும் நிறைந்ததாக நடைபெற்றது.


ஞாயிறு, 21 டிசம்பர், 2025

முதலமைச்சர் முக.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் மாவட்ட செயலாளா்களுடன் கலந்துரையாடல் அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

photo news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி டிச22

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் வரைவு வாக்காளா் பட்டியல் சாிபாா்த்தல் குறித்து திமுக மாவட்ட செயலாளா்கள் கூட்டம் சென்னையிலிருந்து காெணாலி காட்சி வாயிலாக நடைபெற்றது. முகாம் அலுவலகத்திலிருந்து பேசிய தமிழக முதலமைச்சா் தமிழ்நாட்டில் 15 சதவீத வாக்காளா்களை 97 லட்சம் வாக்காளா்களை நீக்கி வரைவு வாக்காளா் பட்டியல் வௌியிட்டுள்ளாா்கள். 



இடம் பெயா்ந்தவா்கள் என்று மட்டும் 68 லட்சம் பேரை நீக்கியிருக்கிறாா்கள். எஸ்ஐஆர் பணிகளை ஆரம்பித்தபோதே இது பல்வேறு முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் தமிழ்நாட்டு வாக்காளா்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளது. என்று முன்கூட்டியே எச்சாித்திருந்தோம்




உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறோம் இந்நிலையில் வௌியிடப்பட்ட பட்டியல்களை சாிபாா்த்து அந்த அந்த மாவட்ட செயலாளர்கள் தகுதியான வாக்காளா்கள் யாரும் விடுப்படக்கூடாது என்பதில் கவனமாக இருந்து பணியாற்ற வேண்டும். 

களத்திற்கே வரதா... பாஜக அதிமுக சதி வேலையை முறியடிக்க வேண்டும் 

"இனி தான் உரக்கமின்றி முழு அசுரப்பலத்துடன் பணியாற்ற வேண்டும். சற்று அசந்து இருந்தால் கூட களத்திற்கே வரதா பாஜக அதிமுக சதிவேலைகள் ஏதோ வைத்திருப்பது போல் தொிகிறது என்று கூறியது மட்டுமின்றி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனிடம் மாவட்டத்திற்குட்பட்ட தூத்துக்குடி கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய 3 தொகுதிகளில் ஆற்றிய பணிகளும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் கேட்டறிந்து விரைவாக தகுதியுள்ள அனைத்து வாக்காளா்களையும் புதிய படிவத்தில் விண்ணப்பித்து இணைக்க வேண்டும்" 



அதே போல் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குசாவடிகளுக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாகமுகவா்கள் புதிதாக நியமணம் செய்யப்பட்டு அந்த பணிகளையும் முறைப்படுத்த வேண்டும். என்று கூறினாா்."


பதிலுரையில் அனைத்து பணிகளையும் முன்னெடுத்து மாநில மாவட்ட மாநகரம் ஓன்றியம் நகரம் உள்ளிட்ட நிா்வாகிகள் மட்டுமின்றி களப்பணியாற்றிகொண்டிருக்கும் பிஎல்ஏ 2 மற்றும் பாக முகவா்கள் அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் கீதாஜீவன் தொிவித்தாா்.

செய்தி வீடியோ செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வியாழன், 4 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் ‘சேலம் RR பிரியாணி’ புதிய கிளை திறப்பு — அமைச்சர் கீதா ஜீவன் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் — நாளிதழ் செய்தி

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, டிசம்பர் 04, 2025 — சேலம் தலைமையிடமாக கொண்டு தமிழகம் முழுவதும் பல கிளைகளைக் கொண்டுள்ள சேலம் RR பிரியாணி நிறுவனம், தூத்துக்குடியில் தனது புதிய கிளையை இன்று (வியாழக்கிழமை) காலை 11:30 மணியளவில் திறந்து வைத்தது.





திறப்பு விழாவில் தமிழ்நாடு சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதா ஜீவன்  குத்துவிளக்கு ஏற்றி கடையை  துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் தமிழ் செல்வன் அவர்கள் விழாவை முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் நிறுவன பங்குதாரர்களான ஜெயபிரகாஷ், பால் விகாஸ், சாம், மனோ ஆகியோர் கலந்து கொண்டு வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.

புதியதாகத் தொடங்கப்பட்ட இந்த கிளையில் சுவைமிகு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில்

  • சிக்கன் பிரியாணி — ரூ. 240
  • மட்டன் பிரியாணி — ரூ. 330
    மேலும் சைனீஸ் உள்ளிட்ட பல்வேறு உணவு வகைகளும் கிடைக்கின்றன.

முகவரி:

106, S/15, பழை ரோடு,
மேற்கு சிதம்பரநகர்,
மஹிந்திரா கார் ஷோரூமுக்கு எதிரில்,
தூத்துக்குடி.