பனிமய மாதா ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனிமய மாதா ஆலயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 25 ஜூலை, 2026

444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் OLS Friends பொருட்காட்சி Expo 2026 தொடக்கம்

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 


தூத்துக்குடி, ஜூலை 25: 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை பேராலயத்தின் 444வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, OLS Friends சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட "Expo 2026" பிரம்மாண்ட பொருட்காட்சி, சனிக்கிழமை (25.07.2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி பெல் ஹோட்டல் அருகே உள்ள புனித சவேரியானா இல்ல மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது.

thoothukudileaks


நிகழ்ச்சியில், பொருட்காட்சியின் தலைமை அலுவலகத்தை பரிசுத்த பனிமய அன்னை பேராலய அதிபர் அருட்தந்தை ஜான் செல்வம் (Rev. Fr. John Selvam) மற்றும் புனித சவேரியானா இல்ல அதிபர் அருட்தந்தை சிங்கராயன் (Rev. Fr. Singarayan) ஆகியோர் திறந்து வைத்து சிறப்பித்தனர்.

thoothukudileaks


தொடர்ந்து நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி OLS Friends Expo 2026 பொருட்காட்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். 

மேயர் ஜெகன் பெரியசாமி பரபரப்பு பேச்சு 

அப்போது, 444வது பனிமய மாதா திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் இந்த பொருட்காட்சி பொதுமக்களுக்கு பயனுள்ள வணிக மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை ஒருங்கிணைத்துள்ளதாக அவர் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சியில்.....

 பேரருட்திரு பிரதீபன் லிபோன்ஸ், அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், புனித சவேரியார் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்திரு அமல்ராஜ் அமிர்தநாதன், சட்ட ஆலோசகர் A. செல்வின், தூத்துக்குடி பார் அசோசியேஷன் செயலாளர், தொமுச தொழில்சங்கம் ப்ளோரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குழந்தை மகிழ்ச்சியில் குதுகலிக்க விளையாட்டு உபகரணங்கள் 

OLS Friends Expo 2026 ஏற்பாட்டுத் தலைவர் K. டென்சிங், A.T.S. அருள் Ex MC, செயலாளர் A.P. நிர்மலா, பொருளாளர் மற்றும் OLS Friends பொருட்காட்சி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பொருட்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், மின்சாதனங்கள், ஆடைகள், உணவக அரங்குகள், சிறுவர் விளையாட்டு அம்சங்கள், பல்வேறு வணிக நிறுவனங்களின் அரங்குகள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. 


பனிமய மாதா திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பொருட்காட்சியை பார்வையிடுவார்கள் என  ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

திங்கள், 20 ஜூலை, 2026

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26 ல் கொடியேற்றம் ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

photo news by ரோஜா அருணன் 

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பனிமய மாதா திருவிழா ஜூலை 26-ல் கொடியேற்றம்: ஆகஸ்ட் 5 வரை கோலாகலம்

தூத்துக்குடி, ஜூலை 20:

உலகப் பிரசித்தி பெற்ற தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்தின் 444-வது ஆண்டு பெருவிழா வருகிற ஜூலை 26-ஆம் தேதி கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்குகிறது. தொடர்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் திருவிழா நடைபெறுகிறது.

thoothukudileaks


திருவிழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள், செபமாலை, நற்கருணை ஆராதனை, அன்னையின் திருவுருவ பவனி உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னையின் அருளைப் பெற உள்ளனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்புக் காலை திருப்பலியும், குழந்தைகளுக்கான புதுநன்மை திருவிழாவும் நடைபெறுகிறது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி செபமாலை, நற்கருணை ஆராதனை மற்றும் அன்னையின் மரியாதைப் பவனி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெருவிழா சிறப்பு திருப்பலி மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

thoothukudileaks


திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு, போக்குவரத்து, குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. விழாவில் பக்தர்கள் ஒழுங்குமுறையுடன் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுமாறு பேராலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பெருவிழா நிர்வாக பொறுப்பாளர்கள்:

  • அதிபர்: அருட்பணி. ஜான் செல்வம்
  • உதவிப் பங்குத்தந்தை: அருட்பணி. ஜெரால்டு
  • துணைத் தலைவர்: அன்டோ
  • செயலாளர்: எட்வின் பாண்டியன்
  • பொருளாளர்: ஜோ சார்ல்ஸ்
  • துணைச் செயலாளர்: பெனாட்
thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


புதன், 10 ஜூன், 2026

தூத்துக்குடி பனிமய அன்னை ஆலய திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க வேண்டும்; மக்கள் எதிர்பார்ப்பு

Tamil Nadu updates 10-6-2026

photo news Dias

by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 10:

தூத்துக்குடி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புனித பனிமய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, அன்னையின் அருளைப் பெற வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அன்போடு எதிர்பார்த்து வருகின்றனர்.

thoothukudileaks


உலகப் புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலய திருவிழா, வரும் ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, சவுதி அரேபியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் பக்தர்களும் திரளாக பங்கேற்று வழிபடுவது வழக்கம்.

திருவிழா!!!

திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தங்கத் தேர் பவனி, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.


மேலும், பார் போற்றும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் தாயின் கொடியேற்ற நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.

முதல்வரின் குடும்ப 🫜 வேர்கள்!!!

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் குடும்ப வேர்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தனது சொந்த மண்ணாக கருதப்படும் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பனிமய அன்னை பேராலய திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வீடியோ பார்க்க ...

அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தூத்துக்குடி மக்கள் தங்களின் பேராதரவை வழங்கியுள்ள நிலையில், ...

அந்த அன்புக்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடிக்கு வருகை தருவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.

அழைப்பு!!!

மேலும், பனிமய அன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜாண் செல்வம், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


"THOOTHUKUDI WELCOMES cm JOSEPH VIJAY" என்ற வாசகத்துடன், பனிமய அன்னையின் அருள்பெற தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

திங்கள், 5 ஆகஸ்ட், 2024

தங்க செயின் தொலைத்த சிறுமி தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தொலைந்த தங்க செயின் திருப்பி கொடுத்த காவல்துறை!!!


▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-8-2024 photo arunan 

news by sunmugasunthram Reporter 

தங்க செயின் தொலைத்த சிறுமி 

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் தொலைந்த  தங்க செயின் திருப்பி கொடுத்த காவல்துறை!!!

இதுபற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடியில் உலக பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயம் பத்தாவது நாள் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.



இதையொட்டி இன்றைய தினம் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்கள் பக்தர்கள் மட்டுமல்ல  இலங்கை பிரான்ஸ் போன்ற வெளிநாட்டு பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர் 


இதனால் பனிமய மாதா தரிசிக்க...ஆலய பகுதியில் சுற்றிலும் நெருங்கவே ரொம்ப நெரிசலாக வாகனங்கள் செல்ல இயலாது பொதுமக்கள் பக்தர்கள் அனைவரும் நடந்து தான் செல்ல நேரிடுகிறது.


இன்று 5-8-2024 காலை ஆராதனை ஆலயத்தில் மாதாவை தரிசிக்க குடும்பத்துடன் வந்தார் தூத்துக்குடி கிருஷ்ணா ராஜா புரம் தெருவை சேர்ந்த விவேக்.

 பனிமய மாதாகோவில் தென்புறம் வந்த போது தனது மகள் ஹர்ஷா ( வயது 9)சிறுமி அணிந்து இருந்த தங்க செயின்  எப்படி யோ? இந்த கூட்டத்தில் 

தவறிவிட்டார் .



அந்த நேரத்தில்... அவ்வழியே வந்த தூத்துக்குடி சண்முகபுரம் அந்தோனி (வயது 43) என்பவர் கண்ணில் தட்டுப்பட்டது .

உடனே அந்தோனி 

மேற்படி 9 கிராம் டாலர் செயின் கீழே கிடப்பதாக மாதா கோவில் புற காவல் நிலையத்தில் கொண்டு போய் ஒப்படைத்தார்.


அப்போது தனது மகளுடன் பதற்றமாக புகார் தெரிவிக்க வந்த விவேக் இடம் உங்கள் செயின் கிடைத்து விட்டது அந்தோனி இவர் தான் கண்டெடுத்து ஒப்படைத்தார் என்று கூறி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  சுப்பிரமணியன் உரியவர் இடம் கொடுத்தார்.


தொலைந்த தங்க செயின்  கிடைத்த குடும்பத்தினர் பனிமய மாதா தான் உங்கள் இருவரின் முலம் கிடைக்க செய்துள்ளார்கள் என்று நன்றி தெரிவித்து சென்றனர்.