Tamil Nadu updates 10-6-2026
photo news Dias
by Arunan journalist
தூத்துக்குடி, ஜூன் 10:
தூத்துக்குடி மாநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழும் புனித பனிமய அன்னை பேராலயத்தின் ஆண்டு திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, அன்னையின் அருளைப் பெற வேண்டும் என தூத்துக்குடி மக்கள் அன்போடு எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற பனிமய அன்னை பேராலய திருவிழா, வரும் ஜூலை 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமின்றி, இலங்கை, சவுதி அரேபியா, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வாழும் பக்தர்களும் திரளாக பங்கேற்று வழிபடுவது வழக்கம்.
திருவிழா!!!
திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தங்கத் தேர் பவனி, தூத்துக்குடி மாநகரின் முக்கிய வீதிகளில் கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறும். இந்த அரிய நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும், பார் போற்றும் திவ்ய சந்தமரிய தஸ்நேவிஸ் தாயின் கொடியேற்ற நிகழ்வு, 2026 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.
முதல்வரின் குடும்ப வேர்கள்!!!
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் குடும்ப வேர்கள் தூத்துக்குடி மாவட்டத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் நிலையில், அவர் தனது சொந்த மண்ணாக கருதப்படும் தூத்துக்குடிக்கு வருகை தந்து, பனிமய அன்னை பேராலய திருவிழாவில் ஏதேனும் ஒரு நாளில் கலந்து கொண்டு தரிசனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தூத்துக்குடி மக்கள் தங்களின் பேராதரவை வழங்கியுள்ள நிலையில், ...
அந்த அன்புக்கு நன்றிக்கடனாக முதலமைச்சர் ஜோசப் விஜய் தூத்துக்குடிக்கு வருகை தருவார் என்ற நம்பிக்கையும் மக்களிடையே நிலவுகிறது.
அழைப்பு!!!
மேலும், பனிமய அன்னை பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜாண் செல்வம், தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து திருவிழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
"THOOTHUKUDI WELCOMES cm JOSEPH VIJAY" என்ற வாசகத்துடன், பனிமய அன்னையின் அருள்பெற தமிழக முதலமைச்சர் தூத்துக்குடி வர வேண்டும் என்பதே மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக