பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிறந்த நாள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஜூலை, 2026

காமராஜர் 124-வது பிறந்தநாள் விழா அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூலை 15:

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், பெருந்தலைவருமான காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் (AIPTMMK) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாண்புமிகு அம்மா அவர்களின் உண்மை விசுவாசியும், முன்னாள் பெருநகரக் கழகச் செயலாளரும், முன்னாள் தூத்துக்குடி மேலூர் கூட்டுறவு வங்கி தலைவருமான எஸ். ஏசாதுரை தலைமை வகித்தார்.


thoothukudileaks


விழாவையொட்டி, அந்தோனியார் கோவில் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும், சிவன் கோவில் அருகே மாவட்ட கழக அலுவலகம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி காமராஜரின் பிறந்தநாள் விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் வி.டி. தங்கம், முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் மாரியப்பன், முன்னாள் தொகுதி கழகச் செயலாளர் இரா.இல. ஜெயராமன், முன்னாள் பகுதி கழகச் செயலாளர் வி.பி. முத்து, முன்னாள் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்துக்குமார், முன்னாள் மேற்கு பகுதி எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கணேசன், முன்னாள் பாசறை தலைவர் மகாராஜன், சபிக்குமார் உள்ளிட்ட அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக (AIPTMMK) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜருக்கு புகழஞ்சலி செலுத்தினர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்டவர்கள், கல்வி வளர்ச்சி, நேர்மை, எளிமை மற்றும் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து அவரது புகழை போற்றினர்.



.

ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.


வியாழன், 11 டிசம்பர், 2025

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் பத்திரிகை யாளர்பாரதியார் பிறந்த நாள்… தூத்துக்குடி பிரஸ் கிளப் !

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி டிச11

தூத்துக்குடி மண்ணின் மைந்தர் மகாகவி பாரதியாருக்கு ரோஜாப்பூ மாலை… பத்திரிகையாளர்கள் புதிய உறுதி மொழி!!!

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு
தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி
பாரதியின் தீப்பொறி வார்த்தைகளை நினைவூட்டும் விதமாக
செம்மையாக நடந்தது.

thoothukudileaks


தூத்துக்குடி மண்ணின் மைந்தர்கள் வ உ சிதம்பரனார் உடன் ஆங்கிலேயர் களை எதிர்த்து நின்ற பத்திரிகை போராளி மகாகவி பாரதியார்!!!

முதலில் பாரதியாரின் படத்திற்கு ரோஜாப்பூ மாலை அணிவித்து
மரியாதை செலுத்திய பிரஸ் கிளப் உறுப்பினர்கள்—
தலைவர் த. சண்முகசுந்தரம், துணை தலைவர் சிதம்பரம்,
உறுப்பினர்கள் இசக்கி ராஜா, மாணிக்கம், மாரிமுத்து உள்ளிட்டோர்—
தூத்துக்குடி மண்ணின் பெருமை மகாகவிஞருக்கு மாலை அணிவித்தனர்.

பின்னர் உரையாற்றிய செய்தியாளர் த. சண்முகசுந்தரம்,
“பாரதியார் பிறந்த நாள் என்பது கவிஞரின் பிறந்த நாள் மட்டுமல்ல…
பத்திரிகையாளர்களின் எழுச்சி நாள்!
சாதி, மதம், பாகுபாடுகள் அனைத்தையும் தகர்த்தவர் பாரதி.
பெண்ணுரிமை முதல் தேசபக்தி வரை
சிந்தனைக்கு நெருப்பூட்டியவர்,” எனக் கூறினார்.

thoothukudileaks


அவர் மேலும்,
“பாரதியின் வரிகள் இன்னும் உயிரோடு இருக்கிறது.
நாம் அவர் வாழ்ந்த காலத்தில் இல்லை…
ஆனால் அவர் எழுதிய காலத்தை இன்று நாம்தான் வாழ்கிறோம்!
உண்மை செய்தியை மக்களிடம் கொண்டு சேர்ப்பது
எங்கள் கடமை மட்டும் அல்ல… நமக்கு பாரதியாரின் கட்டளை!”
எனச் சொன்னார்.

thoothukudileaks


செய்தியாளர்கள் ஒன்றிணைந்து
உண்மை மற்றும் நேர்மையைக் காத்து செயல்பட வேண்டும் என
உறுதி மொழி பெறும்படி அவர் அழைப்பு விடுத்தார்.????

ரோஜா அருணன் 
செய்தியாளர், தூத்துக்குடி

வியாழன், 30 அக்டோபர், 2025

தூத்துக்குடியில் பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.அஜிதா ஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

பசும்பொன் தேவர் ஜெயந்தி – குருபூஜை விழா : மரியாதை செலுத்திய தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்

தூத்துக்குடி:அக்:-30
“தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்” என்ற தத்துவத்தை முன்வைத்து வாழ்ந்த தெய்வீக திருமகனார் பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர்  118-வது ஜெயந்தி விழா மற்றும் 63-வது குருபூஜை விழா தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது.



தூத்துக்குடி 3-வது மைல் பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும், தேவர்காலனி பகுதியில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்  A.அஜிதா ஆக்னல்  தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சார்ந்த கௌதம் பாண்டியன், அருண்குமார், சிவகாமி முருகன், வழக்கறிஞர் நிர்மல்சிங், மனோ பாண்டியன், வாசுதேவன், அருண் பிரகாஷ், ஆகாஷ் பாண்டியன், மணிகண்டன் தீனதயாளன், அருள்ராஜ், அருண் பாலா, முனீஸ், மனோ பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பலரும், மகளிர் திரளாக கலந்து கொண்டு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இவ்விழாவில் தேவரின் தெய்வீக தத்துவங்கள் குறித்து பேசப்பட்டு, அவரின் தேசப்பற்றும் சமூகநீதிக்கும் பெருமை சேர்த்தது.

திங்கள், 14 ஜூலை, 2025

முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளையொட்டி புத்தகத் தானம்

தூத்துக்குடி, ஜூலை 14


முன்னாள் தமிழக முதல்வரும் கல்விக்குத் தொண்டளித்தவருமான காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு, தூத்துக்குடி தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு புத்தகத் தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.



பள்ளிகள் மற்றும் கிராமப்புற நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கும் நோக்கில், தூத்துக்குடி மாவட்ட புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காமராஜர் நற்பணி மன்றம் இணைந்து இந்நிகழ்வை ஒருங்கிணைத்தன.

அழைப்பு!!!

இந்நிகழ்வுக்காக பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடம் நல்ல எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை தானமாக வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. 

உதவி!!!

அந்த அழைப்புக்கு ஆதரவளித்து, ஆசிரியர் வள்ளிநாயகி மற்றும் கவிஞர் செல்வராஜ் ஆகியோர் புதிய புத்தகங்களை வாங்கி கொடுத்து உதவினர்.


இவ்வாறு சேகரிக்கப்பட்ட புத்தகங்களை, தூய இஞ்ஞாசியார் மேல் நிலைப் பள்ளி நூலகத்திற்கு, தலைமை ஆசிரியர் ஜேசு அந்தோணி மற்றும் ஆசிரியர் ராஜ்குமாரிடம், புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில் மாரிமுத்து மற்றும் காமராஜர் நற்பணி மன்றம் சார்பில் லாரன்ஸ் ஆகியோர் வழங்கினர்.


நிகழ்வில் ஆசிரியர்கள் நியூட்டன் மற்றும் செல்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



திங்கள், 2 ஜூன், 2025

102வது பிறந்த நாளில் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு மகிழ்ச்சித் திருநாள் – தூத்துக்குடியில் இனிப்புப் பகிர்வு, பொதுமக்கள் கலந்த கொண்டாட்டம்!

Tamil Nadu updates photo news by Arunan journalist 


📰 தூத்துக்குடி லீக்ஸ்
📅 3 சூன் 2025, செவ்வாய்
✍️ சிறப்புச் செய்தி

தூத்துக்குடி:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் வரலாற்று தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் விழாக்கள் நடைபெற்றன.


அவரது சமூகநலப் பணிகளை நினைவுகூரும் விதமாக நகரமெங்கும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அவர்கள் நேரில் சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, "கருணாநிதியின் பிறந்த நாளில் மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அவர் காண்பித்த பாதை தான் எங்களை வழிநடத்துகிறது" என்றார்.







தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் . ஜெகன்  பேருந்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு (லட்டு) வழங்கினார். பேருந்துக்குள் பயணிக்கவிருந்த மக்களிடம் நேரில் சென்று அவர்களிடம் இனிப்பை பகிர்ந்த மேயர், கலைஞர் அவர்களின் சமூகநீதித் தத்துவங்களை நினைவுகூரும் வகையில் மக்கள் சேவையில் ஈடுபடுவது முக்கியம் என்றார்.


📸 புகைப்படம் விளக்கம்:
தூத்துக்குடி கணேஷ் ஹோட்டல் அருகில் நடைபெற்ற நிகழ்வில், மேயர் ஜெகன் பெரியசாமி மக்களுக்குத்  இனிப்பு வழங்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.



மேயரிடம் மருத்துவ உதவி கேட்கும் மூதாட்டி !!!


மேலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில், திமுக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கருணாநிதியின் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடினர். அந்த இடத்தில் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தனர், இது அவரின் பணி மற்றும் பாதிப்பை மக்கள் மனதில் இன்னும் உயிரோடு வைத்திருப்பதை உறுதிபடுத்துகிறது.





📸 புகைப்படம் 2 விளக்கம்:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 
“தளபதி காபி & டீ ஸ்டால்” முன் நடைபெற்ற இந்த காட்சியில், திமுகவின் நகர நிர்வாகிகள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கருணாநிதியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதைக் காணலாம்.

video அழுத்தி பார்க்க 



இவ்வாறு, தூத்துக்குடி நகரமெங்கும், கலைஞரின் பிறந்த நாள் விழா மகிழ்ச்சியாகவும், பொதுமக்கள் பங்கேற்பு அதிகமாகவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.



திங்கள், 25 நவம்பர், 2024

அமைச்சர் கீதா ஜீவன் தூத்துக்குடி சக்திவநாயகபுரத்தில் பொது மக்கள் பயன் பெற இலவச பொது சேவை மையம் திறந்து வைத்தார்

தூத்துக்குடியில், திமுகவின் பவள விழாவையொட்டி மற்றும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு பயன்படும் இலவச பொதுசேவை மையம் திறந்து வைக்கப்பட்டது. 



அமைச்சர் கீதா ஜீவன்!!!

அமைச்சர் கீதா ஜீவன் இதனைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு அரசின் பல்வேறு சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவித்தார்.




மக்கள் பயன்பெறும் வகையில் அரசின் காப்பீட்டு அடையாள அட்டை, பான் கார்டு, கணினி பட்டா போன்ற சேவைகள் வழங்கப்பட்டன. திமுக ஆட்சி பொற்காலம் என்று குறிப்பிட்ட அவர், மக்கள் பணியை முன்னிலைப்படுத்தி தொடர்ந்து உதவுவோம் என்று உறுதியளித்தார்.



இந்நிகழ்ச்சியில் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளை முன்னெடுத்தனர்.


இலவச பொதுசேவை மையம்!!

தூத்துக்குடி மாநகராட்சி 4 மற்றும் 11வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சக்திவிநாயகபுரம் பகுதியில் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

 கலந்து கொண்டோர் !!!

விழாவில், 

மாநகர திமுக சுற்றுசூழல் அணி தலைவர் வினோத் மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாவட்ட பிரதிநிதி நாராயணன், மாநகர சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர்கள் மகேஸ்வரன்சிங், நைஸ் பரமசிவம், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், வார்டு தலைவர் அற்புதராஜ், வட்டச்செயலாளர் சதீஸ்குமார், துணை செயலாளர் மணிராஜ்குமார், வட்டபிரதிநிதிகள் பாஸ்கர், புஷ்பராஜ், மகளிரணி பானுபிரியா மற்றும் சுதன்கீலர், பெருமாள் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

photo news 🗞️ by sunmugasuthram Reporter 


வியாழன், 5 செப்டம்பர், 2024

போராட்ட தாத்தா வ உ சிதம்பரனார் 153 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

5-9-2024 photo news 

by Arunan journalist 

செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை 153 வது பிறந்தநாள் 

 திமுக அதிமுக மற்றும் அரசியல் கட்சிகள் பல் வேறு அமைப்புகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி வேட்டி சேலை நலத் திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இது பற்றிய செய்தியாவது 


கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரனார் அவரின் 153 வது பிறந்தநாள் 

தமிழகம் முழுவதும் அரசு விழாவாக கொண்டாடி வருகின்றனர் 

போராட்ட தாத்தா தான் எங்கள் முன்னோடி!!

அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள்  போராட்ட உணர்வாளர்கள் தமிழகத்தில் தங்கள் முன்னோடியாக எதற்கும் அடிபணியாத நேர்மை வைராக்கியம் குணம் உறுதி மிகுந்த தங்கள் போராட்ட தாத்தா என்றழைத்து இன்று கோஷமிட்டு செக்கிழுத்த செம்மல் ஜயா வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகிறார்கள்.


அரசு விழா

தூத்துக்குடியில்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு இன்று (05.09.2024) ஒட்டப்பிடாரத்தில்

உள்ள அன்னாரது இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்

க.இளம்பகவத், இ.ஆ.ப.,  ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா  மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் திரு.ஆல்பர்ட் ஜான் இ.கா.ப.,  ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் எல்.ரமேஷ்

வ.உ.சிதம்பரனார் அவர்களின் வாரிசுதார் உ.செல்வி  ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திமுக !!!



அதிமுக 




சிஜடியூ



பனை வாரியம் நலத் தலைவர் எர்ணாயூர் நாராயணன் 


பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் உணர்வார்கள் கூட்டமைப்பு 





போராளிகளின்தாத்தா கோஷமிடும் வீடியோ பார்க்க...
தமிழக வெற்றி கழகம் 
மற்றும் தேசிய கட்சிகள் பாஜக,காங்கிரஸ்  மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல வளாகத்தில் அமைந்துள்ள..



 கப்பலோட்டிய தமிழன் ஜயா வ உ சிதம்பரம் அவரது திருவுருவ சிலை முன்பு பட்டாசு வெடித்து மாலை அணிவித்து இனிப்பு மற்றும் நலத் திட்டம் வழங்கி னார்கள்.


திங்கள், 15 ஜூலை, 2024

தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122- வது பிறந்தநாள் விழா பெருந் தலைவரின் திருவுருவ வெண் கல சிலைக்கு 122 மகளிர் கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம்

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

15- 7-2024 photo news 

by Arunan journalist 

தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122- வது பிறந்தநாள் விழா   

பெருந் தலைவரின் திருவுருவ வெண் கல சிலைக்கு 122 மகளிர் கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம்

 


இதுபற்றிய செய்தியாவது :-


முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக அமைப்புகள் இன்று பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் 


தூத்துக்குடியில்.. தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2- வந்து தெரு பத்திரகாளியம்மன் கோவில் முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியை துவக்க வைத்தார் 



122 மகளிர் கள் பால் குடம் எடுத்திட... தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் காமராஜர் காய்கறி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் பண்ணினார்கள்


தமிழ் நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகு மந்திரி, மாநில தலைவர் ஞான செல்வன் தலைமை தாங்கினார் .


உடன் மாநில ஆலோசகர் ஜெயபாலன் மாவட்ட ஆலோசகர் பிக் அப் தனபாலன், மாநில பொருளாளர் பாலமுருகன் மாவட்ட பொருளாளர் மாரியப்பன், மாநில இனை செயலாளர்  பொன் ராஜ் தமிழ் நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமாராசு நாடார் சட்ட ஆலோசகர் ஆல்ட்ரின் தென் மண்டல செயலாளர் ரமேஷ் பாலன் மாவட்ட தலைவர் கன்னிராஜ் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு 122 மகளிர் கள் எடுத்து வந்த பால்குடம் அபிஷேகம் செய்தனர் .பின்பு தேசிய தலைவர் காமராசர் திருவுருவ சிலைக்கு ஆளுவுயர ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .



மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் 

முன்னதாக 122 மகளிர் கள் பால் குடம் ஊர் வலமாக எடுத்து வந்த போது ...மாணவ மாணவிகள் சாலையில் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் கலைநிகழ்ச்சி நடத்தினர் 

 அன்னதானம் !!!

அடுத்ததாக ...

ஆயிரம் பேருக்கு அப் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் வழங்கல்!!

 அண்ணா நகர் கிங்ஸ் டீ கடை முன்பாக கடை உரிமையாளர் கிங்ஸ் ஏற்பாட்டில் தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் ..

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு ஊக்க தொகை நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் டிபன் பாக்ஸ் வழங்கினார்கள்.



பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவி வழங்குதல் !!!

 அடுத்ததாக  சேலை- வேட்டி,தையல் இயந்திரம் மிக்ஸி கிரைண்டர் அயன் பாக்ஸ் இட்லி குக்கர் ஆகியவை பொதுமக்கள் நலத் திட்ட உதவிகள் தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் வழங்கப்பட்டது.




இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.