திங்கள், 15 ஜூலை, 2024

தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122- வது பிறந்தநாள் விழா பெருந் தலைவரின் திருவுருவ வெண் கல சிலைக்கு 122 மகளிர் கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம்

▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

15- 7-2024 photo news 

by Arunan journalist 

தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடியில் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122- வது பிறந்தநாள் விழா   

பெருந் தலைவரின் திருவுருவ வெண் கல சிலைக்கு 122 மகளிர் கள் பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம்

 


இதுபற்றிய செய்தியாவது :-


முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் 122 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சமுக அமைப்புகள் இன்று பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் 


தூத்துக்குடியில்.. தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் தூத்துக்குடி பிரையன்ட் நகர் 2- வந்து தெரு பத்திரகாளியம்மன் கோவில் முன்பு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி பால் குடம் எடுக்கும் நிகழ்ச்சியை துவக்க வைத்தார் 



122 மகளிர் கள் பால் குடம் எடுத்திட... தூத்துக்குடியில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் எதிரே இருக்கும் காமராஜர் காய்கறி சந்தையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு பாலாபிஷேகம் பண்ணினார்கள்


தமிழ் நாடு காமராஜர் பேரவை மாநில பொதுச் செயலாளர் அழகு மந்திரி, மாநில தலைவர் ஞான செல்வன் தலைமை தாங்கினார் .


உடன் மாநில ஆலோசகர் ஜெயபாலன் மாவட்ட ஆலோசகர் பிக் அப் தனபாலன், மாநில பொருளாளர் பாலமுருகன் மாவட்ட பொருளாளர் மாரியப்பன், மாநில இனை செயலாளர்  பொன் ராஜ் தமிழ் நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமாராசு நாடார் சட்ட ஆலோசகர் ஆல்ட்ரின் தென் மண்டல செயலாளர் ரமேஷ் பாலன் மாவட்ட தலைவர் கன்னிராஜ் மாவட்ட செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலையில் பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ சிலைக்கு 122 மகளிர் கள் எடுத்து வந்த பால்குடம் அபிஷேகம் செய்தனர் .பின்பு தேசிய தலைவர் காமராசர் திருவுருவ சிலைக்கு ஆளுவுயர ரோஜா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள் .



மாணவ மாணவிகள் சிலம்பாட்டம் 

முன்னதாக 122 மகளிர் கள் பால் குடம் ஊர் வலமாக எடுத்து வந்த போது ...மாணவ மாணவிகள் சாலையில் சிலம்பாட்டம் ஒயிலாட்டம் கலைநிகழ்ச்சி நடத்தினர் 

 அன்னதானம் !!!

அடுத்ததாக ...

ஆயிரம் பேருக்கு அப் பகுதியில் அன்னதானம் வழங்கப்பட்டது.

நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் வழங்கல்!!

 அண்ணா நகர் கிங்ஸ் டீ கடை முன்பாக கடை உரிமையாளர் கிங்ஸ் ஏற்பாட்டில் தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் ..

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அதிக மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு ஊக்க தொகை நோட்டு புத்தகம் பேனா பென்சில் ஸ்கூல் பேக் லஞ்ச் பாக்ஸ் டிபன் பாக்ஸ் வழங்கினார்கள்.



பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவி வழங்குதல் !!!

 அடுத்ததாக  சேலை- வேட்டி,தையல் இயந்திரம் மிக்ஸி கிரைண்டர் அயன் பாக்ஸ் இட்லி குக்கர் ஆகியவை பொதுமக்கள் நலத் திட்ட உதவிகள் தமிழ் நாடு காமராஜர் பேரவை சார்பில் வழங்கப்பட்டது.




இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக