பதவியேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதவியேற்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 21 நவம்பர், 2024

பதவிப்பிரமாணம் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

பத்திரிக்கை செய்தி

20.11.2024 அன்று மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா தூத்துக்குடி நாடார்கள் மகமை K.S.P.S திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. 





விழாவிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில துணைத்தலைவரும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்தின் வழிகாட்டியுமான பொன் தனகரன் தலைமை உரையாற்றினார்கள்.

மாநில தலைவர் த. வெள்ளையன் மறைவுக்குப் வீர வணக்கம்!!!

பட திறப்பு 

நிகழ்ச்சி யில்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் நிறுவனத் தலைவரும், வணிகர்களின் பாதுகாவலரும்,சுதேசி நாயகனுமான மறைந்த  த.வெள்ளையன்   திருவுருவப்படத்தினை திறந்து வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. 


விழாவின் வரவேற்புரையை தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க முன்னாள் பொதுச் செயலாளர் பாஸ்கர் ஆற்றினார்கள்.

பதவிப்பிரமாணம்!!!

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்க தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட .J. ஜவகர் க்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில தலைவர்  S.சௌந்தர்ராஜன் (எ) ராஜா  பதவி பிரமாணம் செய்து வைத்தார்கள். 


போட்டியின்றி பொதுச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட  தெர்மல்.சொ.ராஜா B.A.,L.L.B., அவருக்கு மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குனரும், வழக்கறிஞரும்,மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பின் தேசிய செயலாளரருமான .ஹென்றி திபேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள் 


 ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்ட மத்திய சங்க பொருளாளர் R. விக்னேஷ் -க்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் மாநில துணைத்தலைவர் பொன் தனகரன்  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்கள்.



கலந்து கொண்டோர் 

விழாவில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் மாநில அமைப்பாளரும் செயல் தலைவருமான டாக்டர்.L.M.டேவிட்சன் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு , PUCL மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாவட்ட தலைவர் முனைவர் ச. தெ. செல்வராஜ் , அரவிந்த் ஆட்டோ ஏஜென்சி மற்றும் ஆசீர் மாருதி உரிமையாளருமான தொழிலதிபர் ராஜ்குமார்  தூத்துக்குடி  வழக்கறிஞர் சங்க தலைவர்  தனசேகர் டேவிட் ,மூத்த வழக்கறிஞருமான மாரிமுத்து ,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் ராமநாதபுரம் மாவட்ட தலைவர் சிக்கல்.சுரேஷ் பாபு  மாவட்ட செயலாளர் முகமது அபுபக்கர் மற்றும் மாநில செய்தி தொடர்பாளர் ஆல்பர்ட் அந்தோணி  கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து வழங்கினார்கள்.

வாழ்த்துக்கள் தெரிவித்தோர் 

60 கிளை சங்க பிரதிநிதிகள் 

                       &

தூத்துக்குடியில் உள்ள பொது நல அமைப்புகள் இயக்கங்கள்!!!


விழாவில் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கத்திற்கு உட்பட்ட 60 கிளைச் சங்கங்களின் தலைவர், செயலாளர், பொருளாளர், மத்திய சங்கப் பிரதிநிதி மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள். 


தூத்துக்குடியில் உள்ள பொது நல அமைப்புகள் இயக்கங்கள் நேரில் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். 

நன்றி தெரிவிப்பு!!!

விழாவிற்கு வந்த அனைவருக்கும் V.V.D ரோடு,அண்ணா நகர் K.V.K,நகர் மேற்கு பகுதி அனைத்து வியாபாரிகள் சங்கச் செயலாளரும்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொருளாளர் R.நவமணி தங்கராஜ் நன்றி உரை  வழங்கினார்கள்.

புதன், 2 அக்டோபர், 2024

தலைவர் வெள்ளையன் மறைவுக்கு பின் மாநில புதிய பொதுச் செயலாளராக மெஸ்மர்காந்த் பொறுப்பேற்பு தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை

 ▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

3-10- 2024 

photo news 

Arunan journalist 

தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுச் செயலாளராக மெஸ்மர்காந்த் வெள்ளையன் பொறுப்பேற்றார்.



தூத்துக்குடியில் மாநில இளைஞர் அணி தலைவர் தெர்மல் ராஜா உடன் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சங்க வியாபாரிகளை

மெஸ்மர்காந்த் வெள்ளையன் சந்தித்தார் .



இது பற்றிய செய்தியாவது:-

  

கடந்த மாதம் வணிகர் சங்க பேரவை

தலைவர் வெள்ளையன் 

நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ( 10-9-2024) அன்று 

பிற்பகல் 02.30 மணிக்கு காலமானார்.

இவர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் ஆக இருந்து வந்தார்.


பொறுப்பேற்பு!!!

இவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் 

மெஸ்மர்காந்த் வெள்ளையன்  மாநில பொது செயலாளர் ஆக பொறுப்பேற்றார் .

இளைஞர் அணி தெர்மல் ராஜா உடன் தூத்துக்குடி வருகை!!!

இந்நிலையில்... நேற்று 2-10-2024 மாநில இளைஞர் அணி தலைவர் தெர்மல் ராஜா உடன் மெஸ்மர் காந்த் வெள்ளையன் 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே வருகை தந்தார் .



தளபதி ஜெபஸ்டியான் வரவேற்பு!!!

அப்போது  தூத்துக்குடி பேருந்து நிலையம் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில்  துனைத் தலைவர் பீட்டர்  செயளாலர் தளபதி செபஸ்தியான் பொருளாளர் எட்வர்ட் துனைச் செயளாலர்கள் செல்வராஜ்  இசக்கியப்பன்  பொன்னுமனி  மற்றும் நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து ஒவ்வொருவராக சால்வையை அணிவித்தனர் 


பின்னர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் சுற்றி பார்த்து அங்கு உள்ள சங்க வியாபாரிகளை சந்தித்து அளாவினர்.

"உங்களுக்காக நானிருக்கிறேன்" "எந்த பிரச்சனையும் சரி பண்ண முடியும் என்னிடம் தெரிவியுங்கள்"

 என மெஸபர் காந்த் வெள்ளையன் வியாபாரிகள் இடம் கேட்டு கொண்டார்.


தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய முத்த வியாபாரி பீட்டர் அவருக்கு  மெஸ்மர் காந்த் வெள்ளையன் சால்வை அணிவித்து கெளரவித்த போது எடுத்த புகைப்படம்

முத்த வியாபாரிக்கு மரியாதை!!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் சங்க துனை தலைவரும் அப் பகுதி முத்த வியாபாரியுமான பீட்டர் அவருக்கு சால்வை அணிவித்து கெளரவ படுத்தினார் மெஸ் பர் காந்த் வெள்ளையன்.




வெள்ளி, 3 நவம்பர், 2023

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பதவியேற்றார்

thoothukudileaks 4-11-2023

photo news by sunmugasunthram 

தூத்துக்குடி காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சு.ஞான்ராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.






     தூத்துக்குடி மாநகராட்சி மையப்பகுதியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் தனியார் காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவராக சி.த.சுந்தரபாண்டியன் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்தார்.

     இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவர்   இயற்கை எய்தினார் 

அதையொட்டி நேற்று 3-11-2023 அன்று 

தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது

இதில் மறைந்த சுந்தரபாண்டியன் மகன் சி.த.சு. ஞான்ராஜ் தலைவராகவும், சி.த.சு மணிராஜ் செயலாளராகவும், செபத்தையாபுரம் பிடி பரமசிவன் பொருளாளராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர்.



பினபு முன்னாள் தலைவர் சி.த.சுந்தரபாண்டியன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் புதிய நிர்வாகிகள் பொறுப்பாளர்களுக்கு கம்பெணியின் இயக்குநர்கள் பங்குதாரர்கள் வாழ்த்து தெரிவித்தார் கள்.


 இந்நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட அதிமுக சிறுபான்மை அணி செயலாளர் பிரபாகர் சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலை சூடி அற்புதராஜ், மார்க்கெட் மேலாளர் நியூட்டன், துணை மேலாளர் ரவி, தொழிலதிபர்கள் பொ.தி பொன்ராஜ், பிரேம் ஆனந்த், பிச்சமுத்து, பிரபாகர், செல்வகுமார், ஜெயபாண்டி, ஜெயராஜ், மற்றும் ரவி, ராஜன், தாளமுத்து, ஜெபஸ்டின், கோயில்ராஜ், ராதா, சந்தோஷ், ஜெஸ்வின், சாம், உள்பட வியாபாரிகள் தொழிலாளர்கள் ஊழியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

வெள்ளி, 6 ஜனவரி, 2023

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ் 2023-ல் புதிய தலைவராக அட்வகேட் சுபாசினி வில்சன் பதவியேற்பு

 thoothukudileaks 6-1-2023

news & photo by shanmuga Sundaram 

 தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்  2023-ல் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட அட்வகேட்  சுபாசினி வில்சன் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி ஜேசிஐ பியர்ல் சிட்டி குயின் பீஸ்   புதிய தலைவராக அட்வகேட்  சுபாசினி வில்சன் தேர்வு செய்யப்பட்டார்.

இன்று (6-1-2023) புதிய தலைவரான அட்வகேட்  சுபாசினி வில்சன் பதிவியேற்பு நிகழ்ச்சி தூத்துக்குடி டிஎஸ்எப் கிராண்டு பிளசாவில்  நடைபெற்றது. 


 பதவியேற்பு நிகழ்ச்சியில்  ஜே.சி.ஐ. செனேடர் .டி. செந்தில் கண்ணன் தலைமை வகித்தார்.

மற்றும் ஜேசிஐ செனேடர். என்.கார்த்திக், மண்டல தலைவர் மண்டலம் 18  கெளரவ விருந்தினராக கலந்து கொண்டார்.

மண்டல துணைத் தலைவர் ஜே.எப்.எம். ஆர். அன்பு தனபாலன் மற்றும் ஜேசிஐ செனேடர்.ஜே.வளன் தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

மண்டல அலுவலர்கள் ஜேசிஐ. PPP. சி.வில்சன் அமிர்தராஜ், ஆர்.ஸ்ரீதரன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.  இந்த ஆண்டு தலைவர் ஜேசி.ஹச் .ஜி. எப். டி. ஜெர்லின்  தினகரனும் அடுத்த ஆண்டு தலைவராக  பதவியேற்க உள்ள ஜே.எப்.எம். அட்வகேட்  வி.சுபாசினி வில்சன் அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

 


பின்னர் புதிய தலைவர் தலைவர் பதவிக்கான ஏற்புரையை வழங்கினார். இந்த ஆண்டின் கருப்பொருளாக "குழந்தையை காப்பாற்றுவது"  என்று தேர்வு செய்யப்பட்டது. 

மேலும் பத்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டனர்.  தூத்துக்குடியில் உள்ள ஆசிரமத்திற்கு 25 கிலோ அரிசி "அண்ணபுர்னா" என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.

 செயலாளர் ஜேசி. ஹச். ஜி. எப். அ. ஆயிஷா இப்ராஹிம்  நன்றியுரை வழங்கினார்.