ADMK news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ADMK news லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 7 ஆகஸ்ட், 2026

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ?தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேச்சு அதிமுக இப்போது தூய சக்தி யாக மாறிவிட்டது???

 Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடியில் அ.தி.மு.க. அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம்!

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசினார் வீடியோ இச் செய்தியின் கடைசியில் உள்ளது
.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எஸ்.பி.சண்முகநாதன், சித.செல்லப்பாண்டியன் பங்கேற்பு 

thoothukudileaks




thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

தூத்துக்குடி, ஆக.8:

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி  ஆணைக்கிணங்க, தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அம்மா பேரவை சார்பில் எழுச்சிமிகு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி நீதிமன்றம் எதிரே உள்ள கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று (08.08.2026) சனிக்கிழமை காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும், கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த நிர்வாகியுமான சித.செல்லப்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டு, கட்சி நிர்வாகிகள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

thoothukudileaks
முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசிய போது 


thoothukudileaks
முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய போது...
thoothukudileaks
 முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பேசிய போது...




கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள், கட்சியின் அமைப்பு பணிகள், மக்கள் நலப் பணிகள் மற்றும் கழகத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதிமுக வின் காவல் தெய்வம் யார் தெரியுமா ? கெட்டதெல்லாம் திமுக -தவெக விற்கு போயிற்று? இப்போது அதிமுக தூய சக்தியாக மாறிவிட்டது!!!
தூத்துக்குடி வடக்கு தெற்கு ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ஆன பிறகு முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பேசிய வீடியோ 

கூட்டம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றதால், நிகழ்ச்சி எழுச்சிமிகு முறையில் நடைபெற்றது.

செவ்வாய், 21 ஜூலை, 2026

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அதிமுக அமைப்பு செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

.தூத்துக்குடி ஜூலை 21


அதிமுகவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் சென்னை தலைமைக் கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது

thoothukudileaks


 தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டத்தின் போது அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை வரவேற்று பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் போது தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர்.

வியாழன், 16 ஜூலை, 2026

ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக எஸ்.பி. சண்முகநாதன் அதிமுக அறிவிப்பு

 Tamil Nadu updates,

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு அதிமுகவில் கூடுதல் பொறுப்பு

தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராக நியமனம் – ஒருங்கிணைந்த மாவட்ட பொறுப்பை கவனிப்பார்

தூத்துக்குடி, ஜூலை 16:

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அதிமுக) முன்னாள் அமைச்சரும், கழக அமைப்புச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


சமீபத்தில்  கழக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த எஸ்.பி. சண்முகநாதன், தற்போது காலியாக உள்ள தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழகப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

thoothukudileaks


இதன் மூலம், ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பை எஸ்.பி. சண்முகநாதன் கவனிப்பார் என்று அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் தூத்துக்குடி மாவட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மாவட்டத்தில் கழக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அஇஅதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



திங்கள், 13 ஜூலை, 2026

பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் கட்டுப்பாட்டில் தவறியதாக குற்றச்சாட்டு தவெக அரசை கண்டித்து ஜூலை 18 ஆம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

Tamil Nadu update 

சென்னை, ஜூலை 13:

பெண்களின் பாதுகாப்பில் போதிய அக்கறை செலுத்தாததையும், போதைப்பொருள் பழக்கத்தை கட்டுப்படுத்த தவறியதாக தவெக அரசை கண்டித்தும், ஜூலை 18-ஆம் தேதி புள்ளம்பாடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.


இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

thoothukudileaks


இந்தக் குற்றச்சாட்டுகளை வலியுறுத்தும் வகையில், புள்ளம்பாடியில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

செவ்வாய், 7 ஜூலை, 2026

அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூலை 8:

அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் தூத்துக்குடி வருகையை முன்னிட்டு, தொழிற்சங்க வளர்ச்சி மற்றும் வரவேற்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.


மாநில நிர்வாகிகள் வருகை !!!

கழக நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆணைக்கிணங்கவும், மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனின் அறிவுறுத்தலின்படியும் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், வருகை தரும் மாநில நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, தொழிற்சங்க உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் அமைப்பு பணிகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

thoothukudileaks


கூட்டத்தில் ...

அண்ணா தொழிற்சங்க மண்டலச் செயலாளர் கல்விக்குமார், தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் ஆனந்த், மாவட்ட ஆட்டோ சங்கத் தலைவர் நிலாச்சந்திரன் ..ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மேலும், மண்டல இணைச் செயலாளர் லட்சுமணன், நீதி பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் பார்வதி, வீரபாகு, அன்பரசு, பிரபாகர், உத்தரபாண்டி, ஒலிமுத்து, எம்பி குமார், திருமணி, பாலகுமார், வைரமணி, ரத்தினமணி, திருப்பதி, ராமு, சின்னு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க பொறுப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டு ஆலோசனையில் பங்கேற்றனர்.

thoothukudileaks


பட விளக்கம்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்ற அண்ணா தொழிற்சங்க வளர்ச்சி குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திங்கள், 29 ஜூன், 2026

அதிமுக அமைப்புச் செயலாளராக நியமனம் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன்


Tamil Nadu updates

தூத்துக்குடி, ஜூன் 29:

அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

thoothukudileaks



அதிமுக அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, கடந்த 28.06.2026 அன்று சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்த எஸ்.பி. சண்முகநாதன், பூங்கொத்து வழங்கி மரியாதை செலுத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி அவருக்கு வாழ்த்து தெரிவித்து, புதிய பொறுப்பை சிறப்பாக மேற்கொள்ள வாழ்த்துகளை தெரிவித்தார்.


thoothukudileaks


இந்த சந்திப்பின்போது மாநில அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட கழகப் பொருளாளர் சேவியர், மாவட்ட அம்மா பேரவை செயலாளரும் ஆழ்வார் திருநகரி கிழக்கு ஒன்றிய செயலாளருமான விஜயகுமார், பகுதிச் செயலாளர்கள் முருகன், சுடலைமணி, ஒன்றிய செயலாளர்கள் காசிராஜன், ராஜ் நாராயணன், உரக்கடை குணசேகரன், அப்பாதுரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம். பெருமாள், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர்கள் கே.ஜெ. பிரபாகர், ஜாக்சன் துரைமணி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் சுரேஷ்பாபு, திருச்செந்தூர் ஆர்.எம்.கே.எஸ். சுந்தர், மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட துணைச் செயலாளர் தெர்மல் ஆனந்தராஜ், மாவட்டக் கலைப் பிரிவு செயலாளர் வீரபாண்டியப்பட்டணம் சுரேஷ், வடக்கு மாவட்ட மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கோசல்ராம் ராஜா, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எம்.ஆர்.வி. கவியரசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மணிகண்டன், சொக்கலிங்கம் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திங்கள், 8 ஜூன், 2026

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நெகிழ்ச்சி சந்திப்பு!

 Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி, ஜூன் 8:

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

​இன்று (08.06.2026) சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், அவருக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

thoothukudileaks


ஆலோசனை!!! 

​இந்த சந்திப்பின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் செயல்பாடுகள், உட்கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 

உற்சாகம்!!!

கட்சியின் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையேயான இந்த முக்கிய சந்திப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 1 ஜூன், 2026

அதிமுக நிர்வாகி தற்கொலை: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கண்ணீர் அஞ்சலி!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஜூன் 1

அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து உருக்கமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

 மனமுடைந்து தீக்குளித்த நிர்வாகி

தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், தீவிர அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர், கட்சியில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடுமையான மனமுடைவுக்கு ஆளாகியுள்ளார். இதனால் வேதனையடைந்த அவர், தன் உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் துயரச் செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி..

, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று, மறைந்த பூக்கடை மகேந்திரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடியில் அஞ்சலி சுவரொட்டி & மரியாதை

இதன் தொடர்ச்சியாக, இன்று (01.06.2026) மாலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு மறைந்த பூக்கடை மகேந்திரனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி, மகேந்திரனின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தினார்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, பகுதிச் செயலாளர்கள் ஜெய்கணேஷ்,பொற்கிழி ஜான்சன் தேவராஜ், சுடலைமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், கே.ஜே. பிரபாகர், அருண் ஜெபக்குமார், தனராஜ்.

thoothukudileaks


வழக்கறிஞர் பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு:

 மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவண பெருமாள், சரவணகுமார், வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ஆபிரகாம், ராஜ்குமார், தெர்மல் ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம்.

வட்டச் செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள்:

வட்டச் செயலாளர்கள் கொம்பையா, பூர்ண சந்திரன், ஜெரால்டு, மாடசாமி, சண்முகபுரம் மாடசாமி, பண்ணைவிளை சேகர், பிராங்கிளின் ஜோஸ், சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பால ஜெயம், சாம்ராஜ், பரிபூரண ராஜா, சகாய ராஜா, தளவாய் ராஜ், சிதம்பரம் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டு மறைந்த பூக்கடை மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



வியாழன், 14 மே, 2026

மீண்டும் அதிகாரப்பூர்வ நாளிதழ், ஊடகத்தை பறிகொடுத்த அதிமுக!

சென்னை மே14

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் தொடர்ந்து உருவாகி வரும் உள்கட்சி பிளவுகள், கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, அதிமுக மீண்டும் தனது அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

thoothukudileaks

இது பற்றி செய்தியாவது...

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழாக நீண்ட காலம் செயல்பட்டது ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் பின்னணியில், அந்த நாளிதழ் டிடிவி தினகரன் அணியின் கட்டுப்பாட்டுக்கு சென்றது. அதேபோல், அதிமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி ஊடகமாக இருந்த ‘ஜெயா டிவி’ சசிகலா தரப்பின் வசமாகியது.


இதையடுத்து, சசிகலா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், அதிமுகவுக்கென புதிய அதிகாரப்பூர்வ ஊடகமாக ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி மற்றும் ‘நமது அம்மா’ நாளிதழ் தொடங்கப்பட்டது. இவ்விரு ஊடகங்களும் முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோரின் தலைமையில் செயல்பட்டு வந்தன.


ஆனால் தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள புதிய உள்கட்சி மோதலால், சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதனைத் தொடர்ந்து, ‘நமது அம்மா’ மற்றும் ‘நியூஸ் ஜெ’ ஊடகங்களில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக தலைமையுடன் தொடர்புடைய செய்திகள் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.


இந்த சூழ்நிலையில், அதிமுகவுக்கு மீண்டும் தனி அதிகாரப்பூர்வ நாளிதழ் மற்றும் தொலைக்காட்சி ஊடகம் உருவாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருத்து நிலவி வருகிறது.

வெள்ளி, 17 ஏப்ரல், 2026

தூத்துக்குடி பெரிய ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக உட்பட ஐந்து கட்சிகள் அதிரடியாக கட்சி பிரச்சாரம் செய்திட தள்ளுமுள்ளு பரபரப்பு காவல்துறை திணறல்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி செய்தி புகைப்படங்கள் அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 17

தூத்துக்குடி பெரிய  ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அதிமுக திமுக தவெக கட்சி பிரச்சாரத்தில் தள்ளுமுள்ளு   திணறி போன் தூத்துக்குடி காவல்துறை.

தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் (ஏப்ரல் 17)  இன்று வெள்ளிக்கிழமை ஆதலால் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வருவார்கள்

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் குல்லா அணிந்தவாறு...


காத்துகிடந்த அதிமுக!!!

இதை கருத்தில் கொண்டு அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் முன்னதாக தொழுகை நேரத்தில் இருந்து ஜாமியா பள்ளிவாசல் உள்ளே அலுவலக அறையில் காத்திருந்தார்.

 அப்போது அனுமதி பெற்றதை காட்டுங்க என்ற போலீஸ் பெண் அதிகாரி கேட்டதும் இன்று ஷாட் பிரச்சார விவரத்தை காவல்துறை இடம் காட்டினார். 

ஜாமியா பள்ளி வாசல் தொழுகை முடிந்ததும் மக்கள் வெளிவர ... தொடங்கினர் அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன்  தலைமையில் குல்லா அணிந்து வாறு தனது கட்சியினர் இம்ரான் நாசர் ஜெய்கணேஷ்  ஜான்சன் தேவராஜ் தங்க மாரியம்மன் மிக்கேல் ஆகியோர் உடன் அதிமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்கி தொடங்கினர் நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது 

பதறி போன திமுக!!!

இதைப் பார்த்த திமுக வினர் ரொம்பவே பதறி போய் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பள்ளி வாசல் உள்ளே வந்து திமுக வாக்குறுதி துண்டு பிரசுரங்கள் வழங்க வந்தார்கள்.

thoothukudileaks
திமுக கவுன்சிலர் சுரேஷ் உள்ளிட்டோர் 


 பிரச்சனை வரும் என கருதி நீங்களும் அனுமதி பெறாமல் உள்ள வர வேண்டாம் என்று தடுக்க அதை மீறி பள்ளி வாசல் உள்ளே வந்து அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் துண்டு பிரசுரங்கள் வழங்கும் அவர் அருகிலே உதயசூரியன் ஒட்டு போடுங்கள் என கூறியபடி  துண்டு பிரசுரங்கள் வழங்க பரபரப்பு உண்டானது. கைகலப்பு மோதல் ஏற்படும் சூழல் உருவாகியது .

thoothukudileaks
வேட்பாளர் கிதர் பிஸ்மி 


போலிஸ் திணறிய நிலையில் வேல்முருகன் கட்சியான தமிழக வாழ்வுரிமைக் வேட்பாளர் கிதர் பிஸ்மி அவரது சின்னமான கேமிரா உடன் வந்தார் 

வேட்பாளர் ஏசாதுரை 

அடுத்து சசிகலா கட்சி புரட்சி  முன்னேற்ற கழக வேட்பாளர் ஏசாதுரை தனது கட்சி நிர்வாகிகள் உடன் ஓடோடி வந்து சேர்ந்தார்.

பறந்தோடி வந்த தவெக !!!

கடைசியாக இந்த செய்தி கேள்விப்பட்ட விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ரசிகர்கள் இளைஞர்கள் பட்டாளத்துடன் பறந்தோடி வந்து துண்டுபிரசுரங்கள் வழங்க போலீசார் சில மணி திணிறித்தான் போனார்கள்

thoothukudileaks
தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் 


ஒரே நேரத்தில் பல கட்சிகள் குவிந்ததால் போலீஸார் சிறிது நேரம் திணறிப் போனாலும், பின்னர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

thoothukudileaks


தேர்தல் நெருங்க நெருங்க வழிபாட்டுத் தலங்களும் அரசியல் களமாகி வருவது இந்த சம்பவம் மூலம் தெளிவாகிறது.

thoothukudileaks


— தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்





புதன், 15 ஏப்ரல், 2026

மோடி பிரச்சாரத்துக்குப் பிறகு தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமி க்கு எஸ்.பி. சண்முகநாதன் வரவேற்பு குறுகிய ஆலோசனை காரணமாக பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 15

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாரத பிரதமரின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சென்னை நோக்கி பயணம் மேற்கொள்ள தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி க்கு அதிமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

thoothukudileaks


அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ் பி சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.


இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, “அ.தி.மு.க. வெற்றி நிச்சயம்” என கோஷமிட்டனர். 


விமான நிலையம் பகுதி முழுவதும் கட்சியினரின் வருகையால் உற்சாகமான சூழல் நிலவியது.

குறுகிய ஆலோசனை!!!

பின்னர், தேர்தல் பணிகள் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி குறுகிய ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர் 

இதனால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அவர் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.




அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஏப்ரல் 15

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

thoothukudileaks
மாநில தலைவர் அருள்வேலன்,


புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்து சேனா தேசிய பேரியக்கம், தமிழகத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமைப்பின் தேசிய தலைமையின் ஆலோசனை மற்றும் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் பேசிய மாநில தலைவர் அருள்வேலன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, மக்கள் தேவைகளை உணர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதாக பாராட்டினார்.


 குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் அரசு எடுத்த துரிதமான நடவடிக்கைகள் மக்களின் உயிரைக் காக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

thoothukudileaks
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 


 மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது பொறுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வெற்றிக்காக பணியாற்றுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கோவை செந்தில்குமார், சென்னை மாவட்ட தலைவர் பழனிவேல், வேலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், சென்னை தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திங்கள், 6 ஏப்ரல், 2026

ஸ்ரீவைகுண்டத்தில் எஸ்.பி. சண்முகநாதன் வேட்பு மனு தாக்கல் உற்சாக ஊர்வலம்

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 6

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

thoothukudileaks


முன்னதாக, ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டநாத பெருமான் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொண்ட பின்னர், அங்கிருந்து உற்சாக ஊர்வலமாக புறப்பட்ட வேட்பாளர் மற்றும் ஆதரவாளர்கள், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகம் சென்றடைந்தனர்.

அங்கு தேர்தல் அலுவலர் செந்தில்வேல்முருகனிடம் எஸ்.பி. சண்முகநாதன் தனது வேட்பு மனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

இந்த நிகழ்வில் பா.ஜ.க. மாவட்ட தலைவர் சித்தாரஞ்சன், ஸ்ரீவைகுண்டம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் காசிராஜன், அ.ம.மு.க. சுப்பிரமணியன் உள்ளிட்ட அ.தி.மு.க. தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

வேட்பு மனு தாக்கல் நிகழ்வை முன்னிட்டு, பகுதி முழுவதும் உற்சாகமான அரசியல் சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று பரபரப்பு தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல்

 தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஏப்ரல் 6:

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளில் தூத்துக்குடியில் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது.

வேட்பு மனுத் தாக்கல் இன்று  பரபரப்பு: தூத்துக்குடியில் காவல்துறையினருடன் அதிமுகவினர் மோதல் ஏற்பட்டது 

அதிமுக -காவல்துறை மோதல் 

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன், டுவிபுரத்தில் உள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்ய சப் கலெக்டர் அலுவலகத்தை சென்றடைந்தார்.

thoothukudileaks


தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி, வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளருடன் நான்கு பேர் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. 

வெளியேறுங்கள் !!!

இதன்படி அதிகாரிகள் அனுமதி வழங்கியிருந்த நிலையில், கூடுதலாக ஒருவர் உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபு, “ஒருவர் வெளியே சென்றால் மட்டுமே வேட்பு மனு பெற முடியும்” என தெரிவித்தார்.


இதற்கிடையில், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவேகம் ரமேஷ் உள்ளிட்டோர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றபோது, பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்தனர். “ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது” என கூறியதால், அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.


இதையடுத்து வெளியே இருந்த விவேகம் ரமேஷ் அழைத்ததன் பேரில், வேட்பாளர் செல்லப்பாண்டியன் வெளியே வந்து காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

 “என்னை வேட்பு மனுத் தாக்கல் செய்ய விடாமல் தடுக்கிறீர்களா?” என அவர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விதிமுறைகளை விளக்கியும், வாக்குவாதம் சில நேரம் நீடித்தது.

இதே நேரத்தில், அலுவலகத்துக்குள் இருந்த முன்னாள் நகர மன்ற தலைவர் இரா. ஹென்றி அவரை சிலர் வெளியே செல்லும்படி காவல்துறையினர் வெளியேற்றினார்கள்.


மோதல்!!!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹென்றியும் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் தொடங்கிய இந்த வாக்குவாதம் வெளியிலும் தொடர்ந்ததாக கூறப்படுகிறது.


சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த வாக்குவாதம் பின்னர் அமைதியானது. தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள விதிமுறைகளை காவல்துறையினர் கடைப்பிடித்த நிலையில், இந்த வாக்குவாதம் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


✍️ Thoothukudi Leaks செய்தியகம்

அதிமுக கூட்டணி கட்சிகளின் அமோக வரவேற்புடன் தூத்துக்குடியில் சட்டமன்றத் தேர்தல் சித செல்லப்பாண்டியன் வேட்புமனு தாக்கல் பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் | நாளிதழ் செய்தி

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஏப். 6:

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சித செல்லப்பாண்டியன் இன்று தனது வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்தார்.

thoothukudileaks


தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்தில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி தேர்தல் அலுவலர் பிரபு விடம் அதிமுக வேட்பாளர் செல்லப்பாண்டியன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 


இதனை முன்னிட்டு, அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

வீடியோ பார்க்க 

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக, நகரின் முக்கிய பகுதிகளில் இருந்து பேரணி அமைத்து சப் கலெக்டர் அலுவலகம் நோக்கி வந்தார். 

அப்போது ஆதரவாளர்கள் முழக்கங்கள் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித செல்லப்பாண்டியன்,

“மக்களின் நம்பிக்கையை வென்று, தூத்துக்குடி தொகுதியில் வளர்ச்சியை கொண்டு வர உறுதி மேற்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.


தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வேட்பாளர்களின் வேட்புமனு தாக்கல் நிகழ்வுகள் மாவட்டத்தில் அரசியல் சூழலை பரபரப்பாக மாற்றியுள்ளன.

வியாழன், 19 மார்ச், 2026

2026 தேர்தல் அதிமுக–பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு விவரம் வெளியீடு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


சென்னை/டெல்லி, மார்ச் 20: 

வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு அதிமுக–பாஜக கூட்டணியின் உத்தேச தொகுதி பங்கீடு குறித்த விவரங்கள் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


அதன்படி, அதிமுகக்கு மொத்தம் 163 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் புரட்சிபாரதம் கட்சிக்கு 1 தொகுதி ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘தாமரை’ சின்னத்தில் 40 தொகுதிகள் போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளது. 

இதில் பாஜக 31 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், கூட்டணி கட்சிகளான ..

புதிய நீதிக்கட்சி – 2, 

ஐஜேக – 2, 

பார்வேர்ட் ப்ளாக் – 1, பெருந்தலைவர் மக்கள் கட்சி – 1, தமமுக – 2, 

புதிய தமிழகம் – 2 ஆகியவற்றுக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல், அமமுகக்கு 9 தொகுதிகள் ‘குக்கர்’ சின்னத்தில் வழங்கப்படுவதோடு, தமாகா 4 தொகுதிகளில் தனிச்சின்னத்தில் போட்டியிடும் என்றும், பாமக 17 தொகுதிகளில் ‘மாம்பழம்’ சின்னத்தில் களமிறங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உத்தேச பட்டியல், டெல்லியில் முகாமிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் Edappadi K. Palaniswami மற்றும் இந்திய உள்துறை அமைச்சர் Amit Shah முன்னிலையில் இறுதி செய்யப்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது.

எனினும், இந்த தொகுதி பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 16 மார்ச், 2026

தூத்துக்குடியில் அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

 Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி: மார்ச் 17

தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகள் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம் ஆகியவற்றை கட்டுப்படுத்தத் தவறியதாக குற்றம் சாட்டி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகிலுள்ள எம்.ஜி.ஆர் திடலில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   மற்றும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர் கடம்பூர் செ. ராஜு எம்எல்ஏ  ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.


கண்டன ஆர்ப்பாட்டம் வீடியோ பார்க்க 

ஆர்ப்பாட்டத்தில் கழக வர்த்தக அணி செயலாளர் சி.த. செல்லபாண்டியன், எம்.ஜி.ஆர் அணி துணைச் செயலாளர் ஆறுமுக நயினார், அமைப்பு செயலாளர் சின்னத்துரை, அவை தலைவர் திருப்பாற்கடல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


மேலும் முன்னாள் மத்திய கூட்டுறவு தலைவர் சுதாகர், முன்னாள் எம்.பி ஜெயசிங் தியாகராஜ் நடராஜ், த.மா.க மாவட்ட தலைவர் விஜயசீலன், முன்னாள் எம்.எல்.ஏ மோகன், பொருளாளர் சேவியர், வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் ரவீந்திரன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூமணி மற்றும் சுகந்தன் ஆதித்தன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் நாசரேத் ஜூலியட், முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸ் போக்குவரத்து கல்வி குமார்,வின்சென்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் மாவட்ட மற்றும் ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்று திமுக அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டம் தூத்துக்குடியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஞாயிறு, 1 மார்ச், 2026

ஓ.பன்னீர்செல்வம் முடிவுக்கு எதிர்ப்பு கூண்டோடு விலகிய நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் எஸ் ஏசாதுரை தலைமையில் இன்று தூத்துக்குடியில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடந்தது என்ன?

Tamil Nadu updates,

 photo news by Arunan journalist 1-3-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 1 

தூத்துக்குடியில் ஒபிஎஸ் அணியில் பரபரப்பு நிலவி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்ததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு விலகல் அறிவித்து அதிரடி முடிவு எடுத்துள்ளனர்.

thoothukudileaks


அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எம்ஜிஆர், ஜெயலலிதா தொண்டர்களை கொண்டு தனித்த அணியை நடத்தி வந்த ஓபிஎஸ், அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரை  சந்தித்து திமுகவில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த முடிவை கடுமையாக எதிர்த்த 12 மாவட்ட செயலாளர்கள் கொதித்து எழுந்துள்ளனர்.

தூத்துக்குடியில் மா செ ஏசாதுரை தலைமையில் ரகசிய ஆலோசனை கூட்டம்!!!

இந்நிலையில், இன்று (01-03-2026) மாலை 5 மணியளவில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பிலுள்ள கனி ரெஸ்டாரன்ட் கூட்டரங்கில், மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ரகசிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

thoothukudileaks



thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், “புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோர் தீய சக்தி என உரக்கக் கூறிய திமுகவுடன் இணைந்ததை ஏற்க முடியாது” எனக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பலர், “நமக்கு உரிய மரியாதை கிடைத்தால் அதிமுகவில் மீண்டும் இணையலாம்” என கருத்து தெரிவித்தனர். சிலர் “சின்னம்மா சசிகலா அணியுடன் இணையலாம்” எனவும் முன்மொழிந்தனர்.

thoothukudileaks


மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை தனது உரையில்,

 “உங்கள் கருத்தே என் எண்ணமும் செயலுமாகும். ஜெயலலிதா அவர்கள் தீய சக்தி என குறிப்பிட்ட திமுகவில் ஒபிஎஸ் இணைந்ததை ஒருபோதும் ஏற்க முடியாது. அது மிகுந்த வேதனையை அளிக்கிறது. 

ரகசிய ஆலோசனை கூட்டம் என்பதால் தங்கள் இடம் தெரிவிக்கிறேன்  தற்போது அதிமுக எடப்பாடி தரப்பிலும், சின்னம்மா தரப்பிலும் இருந்து அழைப்புகள் வந்துள்ளன. நமக்கு மரியாதை தருபவர்களுடன் இணைவது குறித்து இன்னும் இரண்டு நாளில் தீர்மானிக்கலாம்” என தெரிவித்தார்.

இதற்கு கூட்டத்தில் இருந்த நிர்வாகிகள் பலத்த கைதட்டலுடன் ஆதரவு தெரிவித்தனர். தூத்துக்குடி அரசியல் வட்டாரத்தில் இந்த ரகசிய ஆலோசனை கூட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks





திங்கள், 23 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா 78-வது பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் என்னென்ன செய்தார் முழு விவரம்

Tamil Nadu updates, 24-2-2026

photo news by Arunan journalist 

தூத்துக்குடி பெ 24

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (24.02.2026 – செவ்வாய்க்கிழமை) அதிமுக வர்த்தக அணி சார்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி விழா தொடங்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டதுடன், விழா சிறப்பாக தொடங்கியது.

தூத்துக்குடி லீக்ஸ்




தூத்துக்குடி லீக்ஸ்

இதனைத் தொடர்ந்து இன்று 24-2-2026 காலை 9.30 மணியளவில் அண்ணா நகர் மெயின் ரோடு, டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி லீக்ஸ்


பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், திரேஸ்புரம் பஜார், மட்டகடை பஜார், வட்ட கோயில், 2-ம் கேட் வடபத்திரகாளி அம்மன் கோயில் தெரு, லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், அண்ணா நகர் மெயின் ரோடு, 3-வது மைல் திருவிக நகர், பிரையன்ட் நகர் 12-வது தெரு, சுமங்கலி திருமண மண்டபம் அருகே, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், முத்தையாபுரம் தோப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பிரியாணி விருந்து -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!!

மேலும், 10 ஆயிரம் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதுடன், இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அசைவ உணவு வழங்கப்பட்டு மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா அனைத்தும் அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.