தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 ஏப்ரல், 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: நாளை ஏப்ரல் 21 மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு தேர்தல் ஆணையம் கடும் வழிமுறைகள்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி ஏப்ரல் 20

தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பரப்புரை நாளை (21.04.2026) மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் 23.04.2026 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

thoothukudileaks


இதனை முன்னிட்டு, 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 126ன் கீழ், தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதன்படி, நாளை மாலை 6 மணிக்குப் பிறகு எந்தவொரு தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் போன்றவை நடத்தவோ, ஒருங்கிணைக்கவோ, பங்கேற்கவோ கூடாது. 

வாட்ஸ் அப் தடை!!!

மேலும், திரைப்படம், தொலைக்காட்சி, வானொலி, வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு ஊடகங்களிலும் தேர்தல் தொடர்பான பிரசாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

2ஆண்டுகள் சிறை தண்டனை !!!

பொது மக்களை ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, கேளிக்கை நிகழ்ச்சி அல்லது பிற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலம் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவும் அனுமதி இல்லை. இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொகுதி வெளியிலிருந்து வந்துள்ள அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள், வாக்காளர்கள் அல்லாதோர் அனைவரும் 21ஆம் தேதி மாலை 6 மணிக்குள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அதிகாரிகள் கண்காணிப்பு!!!

கல்யாண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட இடங்களில் வெளியாட்கள் தங்கியுள்ளனரா என அதிகாரிகள் கண்காணிப்பை அதிகரித்துள்ளனர்.

வேட்பாளர்களுக்கான வாகன அனுமதிகளும் மாலை 6 மணிக்குப் பிறகு செல்லாது ஆகும். வாக்குப்பதிவு நாளன்று, வேட்பாளருக்கு ஒரு தனிப்பட்ட வாகனம், தேர்தல் முகவருக்கொரு வாகனம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட அனுமதிகள் மட்டுமே வழங்கப்படும்.

வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர அல்லது திரும்ப அழைத்துச் செல்ல வேட்பாளர் அல்லது அவரது முகவர் வாகனங்களை பயன்படுத்துவது முறைகேடாக கருதப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாக்குச்சாவடிக்கு 100 மீட்டர் தூரத்திற்கு வெளியே, இரண்டு நபர்கள் மட்டுமே கொண்ட தேர்தல் அலுவலகம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற கூட்டம் கூடாதபடி கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.

thoothukudileaks

thoothukudileaks


அனைத்து வாக்காளர்களும் தங்கள் வாக்குரிமையை சீராக பயன்படுத்துமாறு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார்.

சனி, 18 ஏப்ரல், 2026

தூத்துக்குடி மாவட்ட ஆறு சட்டமன்றத் தொகுதி 2026 தேர்தல் கள நிலவரம்

Tamil Nadu updates 18-4-2026

 photo news by அருணன் செய்தியாளர் 

தமிழக சட்டமன்ற தேர்தலில் கடந்த வாரம் முதல் தொலைக்காட்சி நாளிதழ் வார இதழ்கள் யாருக்கு வெற்றி வாய்ப்பு என கணிப்புகள் கள நிலவரம் வெளியீட்டு வருகின்றனர் இதில் பல மீடியாவில் திமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்றும் சில மீடியாவில் அதிமுக கூட்டணி வெற்றி வாய்ப்பு என்றும் தவெக பற்றி கருத்து சொல்ல முடியாத புதிர் கேள்வி இளைய தலைமுறையினர் மக்களிடம் போராதரவு விஸ்வருவமாக இருப்பதாக உண்மை கூறும் அரசியல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்

thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் சட்டமன்றத் தொகுதி ஆறு இருக்கிறது தூத்துக்குடி லீக்ஸ் என்றென்றும் தனித்தன்மை எப்போதும் உண்டு ஒவ்வொரு தொகுதியிலும் மக்களோடு மக்களாக இருந்ததில் பொதுமக்களின்  கருத்துக்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி தற்போதைய கள நிலவரம்

திருச்செந்தூர்  

இருமுனை போட்டி 

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் தவெக வேட்பாளர் முருகன் 

இந்த தொகுதியில் இரு முனை போட்டி நிலவுகிறது தொடர்ந்து வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் ஒரு பக்கம் இவருக்கு பல  இடங்களில் மக்கள் எதிர்ப்பு கண்கூடாக தெரிகிறது 


thoothukudileaks
பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 


பாஜக முன்னிலை!!!

இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் உள்ளார்.  

ஓட்டப்பிடாரம் 

இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக களத்தில் ராம ஜெயம் லோக்கல் திமுக கட்சியிலே பல எதிர்ப்புடன் நிறுத்தப்பட்டுள்ளார் புதிய தமிழகம் சார்பில்  தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீண்டும் போட்டியிடுகிறார் அதிமுக பாஜக கூட்டணி அமமுக வேட்பாளர் ஆக சுந்தர் ராஜன் 

அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் 

இங்கு திமுக அமமுக இருமுனை போட்டி கடுமையாக தெரிகிறது அதிமுக பாஜக கூட்டணி பலத்தால் அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில் தெரிகிறார் 


விளாத்திகுளம் 

திமுக -அதிமுக இழுபறி!!!

திமுக வேட்பாளர் ஆக மீண்டும் மார்க்கண்டேயன் நிறுத்தியுள்ளார்கள்  அதிமுக சார்பில் சத்யா

thoothukudileaks
அதிமுக வேட்பாளர் சத்யா 


 விளாத்திகுளம் 

அதிமுக – ஆர். சத்யா

திமுக - மார்க்கண்டேயன்

தமிழக வெற்றி கழகம் – காசிராம்

நாம் தமிழர் – பாலாஜி    

மீண்டும் திமுக வேட்பாளர் ஆக மார்க்கண்டேயன் இங்கு தொடர்ந்து நிறுத்தப்பட்டு வருவது தொகுதியில் மக்கள் இடையே சலிப்பும் தொகுதி வளர்ச்சி இல்லை என குற்றச்சாட்டும் கூறுகிறார்கள் கவனிப்புகளால் மக்கள் மறக்கவில்லை 

thoothukudileaks
திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 

அதிமுக முன்னிலை!!!

இந்த தடவை தவெக  வேட்பாளர் காசி ராம் மற்றும் நாம் தமிழர் பாலாஜி பிரிக்கின்ற ஒட்டுக்கள் அதிமுக வேட்பாளர் சத்யா வுக்கு சாதகமாக இருக்குமா? அதிமுக முன்னிலை!!!

 திமுக அதிமுக இந்த தொகுதியில் இழுபறி நிலை   


ஸ்ரீவைகுண்டம் 

இருமுனை போட்டி

அதிமுக முன்னிலை!!!

இந்த தொகுதியில் திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அமிர்தராஜ் மீண்டும் நிறுத்தியுள்ளது அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் போட்டியிடுகிறார் தொகுதியில் இருமுனை  போட்டிதான் நிலவுகிறது 

thoothukudileaks


இதில் அதிமுக வேட்பாளர் சண்முகநாதன் பக்க பலமாக பாஜக அமமுக கட்சிகள் வெற்றி வாய்ப்பு தேடி தரும் அதிமுக சண்முகநாதன் முன்னிலையில் இருக்கிறார் 

கோவில் பட்டி  

இருமுனை போட்டி

இந்த தொகுதியில். 

திமுக – கா. கருணாநிதி

அதிமுக – கடம்பூர் ராஜு

தமிழக வெற்றி கழகம் – பாலசுப்பிரமணியன்

நாம் தமிழர் – பாண்டி  

ஆகியோர் நிற்கிறார்கள் ஆயினும் இந்த தொகுதியில் அதிமுக திமுக இருமுனை போட்டி கடுமையாக தெரிகிறது ஏனெனில் கடந்த முறை தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்பிரமணியன் அதிக வாக்குகள் கிடைத்தன 

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜூ 


அதிமுக முன்னிலை 

அதனால் திமுக -அதிமுக இழுபறி  தற்போது கடம்பூர் ராஜூ முன்னிலை  


தூத்துக்குடி     

தமிழக வெற்றி கழகம் – ஸ்ரீநாத் 

அதிமுக – சி.த. செல்லப்பாண்டியன்

திமுக – கீதா ஜீவன்

அகில இந்திய புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் ஏசாதுரை

நாம் தமிழர் – ஜேக்கப் தேவதாஸ் த வா க கிதா பிஸ்மி   ஆகியோர் களத்தில் நின்றாலும்...

thoothukudileaks


இரு முனை போட்டி!!!

 முதலில் மும் முனை போட்டி நிலவி வந்த நிலையில் தற்போது இருமுனை போட்டி தான் மாறியது .

அதிமுக வேட்பாளர் சித செல்லப்பாண்டியன் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார் 

அதே போல திமுக வேட்பாளர் கீதா ஜீவன் நிலையும் இருப்பது தெரிகிறது அதனால் களம் தீவிரம் அடைந்துள்ளது 

மாறியது களம் 

ஆனால்?

 களம் விஜய் கட்சி தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் சாதகமாக மாறி வருகிறது தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு 52 வார்டுகள் வருகிறது .

இதில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்ற போது நடிகராக விஜய் பாதிப்பு ஏற்பட்டவர்களை இரவோடு இரவாக டூவீலர்ல பயணம் செய்து ஆறுதல் உதவி மற்றும் தொடர்ந்து உறுதியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிறார் விஜய் 

மேற்கண்ட திமுக -அதிமுக இரு கட்சிகள் பொதுமக்கள் போராட்டம் பண்ணிய போதும் அமைதியாக ஸ்டெர்லைட் ஆலைக்கு முழுஆதரவாக இருந்துவிட்டு? பெரிய அளவில் தமிழகம் முழுவதும் பிரச்சனை வெடித்து கொதிப்பு பரவிய பின்னர் தான் வந்து நின்றார்கள் 

thoothukudileaks


வீடியோ பார்க்க 

பலம்!!

 தூத்துக்குடி மக்களிடையே ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தில் விஜய் ஆதரவு உடன் இருந்துள்ளார் இது தான் விஜய் ன் தூத்துக்குடி வேட்பாளர் ஸ்ரீநாத் பலம்  என சொல்கிறார்கள் 

மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையை வேறு உருவத்தில் வரகூடாது அதற்கு தவெக விஜய் ஆதரிக்க வேண்டும் என வெளிப்படையாக பேசுகின்றனர் .

அதிமுக திமுக மீது நம்பிக்கை இல்லை என்கிறார்கள் 

அரசியல் மாற்றம் உருவாக வேண்டும் என கொள்கை கொண்டுள்ளார் விஜய் என பற்றி உயர்வாக பேசுவது கேட்க முடிகிறது.

தவெக  முன்னிலையில்..

காலேஜ் படிக்கும் இளைஞர்கள் இளைஞிகள்  இளம் தலைமுறையினர் தூத்துக்குடியில் சாதிமதபேதமின்றி  ஒவ்வொரு வீட்டிலும் விஜய் ரசிகர்கள் தம்பி தங்கைகள் இருப்பது தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் பிளஸ் முன்னிலை தருகிறது      

 

உள் குத்து அரசியல்!!!

தற்போது உள்ளூர் ல 20 மேற்பட்ட கவுன்சிலர்கள் உள் குத்து அரசியலாக ஆதரவு தெரிவித்து விசில் அடித்து வருகின்றனர் .

இதனால் இங்கு இரு முனை போட்டி  தான் ஏற்கனவே கடந்த மாதம் வரை  

தங்கள் உரிமைகளை கேட்டு போராடி விரக்தியான தூய்மை பணியாளர்கள் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு,வருவாய் சர்வேயர் கள் போக்குவரத்து கழக ஊழியர்கள், ஆசிரியர்கள், இவர்களின் குடும்ப ஒட்டு வங்கி தவெக- அதிமுக பக்கம் என சாய்கிறது என்கிறார்கள். 

வீடியோ பார்க்க 


புதன், 15 ஏப்ரல், 2026

மோடி பிரச்சாரத்துக்குப் பிறகு தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமி க்கு எஸ்.பி. சண்முகநாதன் வரவேற்பு குறுகிய ஆலோசனை காரணமாக பரபரப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி ஏப்ரல் 15

கன்னியாகுமரியில் நடைபெற்ற பாரத பிரதமரின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, சென்னை நோக்கி பயணம் மேற்கொள்ள தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்தடைந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி க்கு அதிமுக கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

thoothukudileaks


அவரை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான எஸ் பி சண்முகநாதன் பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.


இந்நிகழ்வில் பல்வேறு கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு, “அ.தி.மு.க. வெற்றி நிச்சயம்” என கோஷமிட்டனர். 


விமான நிலையம் பகுதி முழுவதும் கட்சியினரின் வருகையால் உற்சாகமான சூழல் நிலவியது.

குறுகிய ஆலோசனை!!!

பின்னர், தேர்தல் பணிகள் தொடர்பாக  எடப்பாடி பழனிசாமி குறுகிய ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர் 

இதனால் விமான நிலையம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அவர் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றார்.




அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி: ஏப்ரல் 15

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்து சேனா தேசிய பேரியக்கம் தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

thoothukudileaks
மாநில தலைவர் அருள்வேலன்,


புது டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்து சேனா தேசிய பேரியக்கம், தமிழகத்தில் பல்வேறு சமூக நலப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், அமைப்பின் தேசிய தலைமையின் ஆலோசனை மற்றும் மாநில செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு கடிதம் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் பேசிய மாநில தலைவர் அருள்வேலன், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, மக்கள் தேவைகளை உணர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதாக பாராட்டினார்.


 குறிப்பாக, கொரோனா பேரிடர் காலத்தில் அரசு எடுத்த துரிதமான நடவடிக்கைகள் மக்களின் உயிரைக் காக்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், வரவிருக்கும் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் நோக்கம் என தெரிவித்தார்.

thoothukudileaks
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 


 மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தங்களது பொறுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வெற்றிக்காக பணியாற்றுவார்கள் என்றும் உறுதியளித்தார்.

இந்த நிகழ்வில் மாநில செயலாளர் கோவை செந்தில்குமார், சென்னை மாவட்ட தலைவர் பழனிவேல், வேலூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், சென்னை தீனதயாளன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2026

ஸ்ரீவைகுண்டத்தில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனுக்கு பெருகும் மக்கள் ஆதரவு

#Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஏப்ரல் 10

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதியில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் தீவிரமான சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

thoothukudileaks


தொகுதியின் பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு கோரி வரும் அவர், மக்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகளை கேட்டறிந்து வருகிறார்.

thoothukudileaks


அவரின் பிரச்சாரத்திற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதுடன், தினந்தோறும் ஆதரவாளர்கள் திரளாக இணைந்து வருவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

thoothukudileaks


இந்நிலையில், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதனின் பிரச்சாரம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதால் தேர்தல் போட்டி பரபரப்பாகி வருகிறது.


வீடியோ பார்க்க