கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 26 ஜூலை, 2022

இளஞ் ஜோடிகள் இருவரையும் துடிதுடிக்க வெட்டி கொன்ற பயங்கரம் பெண்ணின் தந்தை கைது

காதலித்து திருமணமாகிய இளஞ் ஜோடிகள் இருவரையும் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.   

துடிதுடிக்க கொலை செய்ய ப்பட்ட இளம் ஜோடிகள் 


இந்த இரட்டை கொலையில் பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம் அடுத்த வீரப்பட்டி.   இக்கிராமத்தைச் சேர்ந்த 50 வயது விவசாயி முத்து குட்டி.   சொந்தமாக வேன்,  லாரி வைத்துக்கொண்டு வாடகைக்கு  விடும் தொழில் செய்துவந்திருக்கிறார்.   

 இவரது 20 வயது மகள் ரேஷ்மா கோவில்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். முத்து குட்டியின் வீட்டுக்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர் வடிவேல்.   


அவரது மகன் மாணிக்கராஜ்( வயது26).   கூலித்தொழிலாளியான மாணிக்கராஜுக்கும் ரேஷ்மாவுக்கும் காதல் ஏற்பட்டு இருக்கிறது.   இவர்களின் காதல் விவகாரம் முத்துக்குட்டிக்கு தெரிய வர கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.   உறவினர்கள் தான் என்றாலும் பணம் சம்பந்தப்பட்ட அந்தஸ்தின் காரணமாக முத்துக்குட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். மாணிக்கராஜ் ரேஷ்மா காதல் உறுதியாக இருப்பது தெரிய வந்ததும் தனது மகளுக்கு அவசர அவசரமாக வரன் பார்த்து திருமண நிச்சயம் செய்திருக்கிறார்.  


இந்த நிலையில் திடீரென்று கடந்த 29ஆம் தேதி அன்று காதலர்கள் மாணிக்கராஜ் -ரேஷ்மா இருவரும் ஊரை விட்டு வெளியேறி மதுரையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று அங்கே கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.   அங்கேயே தங்கியிருந்துள்ளார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் இருவரும் சொந்த ஊரான வீரப்பட்டி கிராமத்திற்கு வந்திருக்கிறார்கள் . 

அங்கே மாணிக்கராஜன் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்திருக்கிறார்கள்.   நேற்று காலையில் மாணிக்க ராஜின் தாயார் மகாலட்சுமி வேலைக்குச் சென்றிருக்கிறார்.   


இதனால் புதுமண தம்பதிகள் மாணிக்கராஜ், ரேஷ்மா இருவரும் வீட்டில்இருந்திருக்கிறார்கள்.  மாலையில் வேலை முடிந்தது மகாலட்சுமி வீட்டுக்கு வந்து இருக்கிறார்.   அப்போது மாணிக்க ராஜும் ரேஷ்மாவும் அரிவாளால் வெட்டப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்திருக்கிறார்கள்.   இதை பார்த்து கதறி அழுதிருக்கிறார்.சத்தம் கேட்டு வந்த  அக்கம்பக்கத்தினர் எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் சொன்னதும்,  விளாத்திகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சென்றனர்.  தடையைகள் நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர். புதுமண தம்பதிகளின் உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்,   இரட்டை படுகொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்ததில்,  இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு இருந்தது தெரிய வந்தது.  இதை அடுத்து முத்துக்குட்டி குடும்பத்தினரிடம் துருவித்துருவி விசாரித்த போது அவர் தான் கொலை செய்தது தெரிய வந்தது.  மகள், மருமகன் என்றும் நினைக்காமல் அரிவாளால் சரமாரியாக வெட்டி அவர்தான் கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து முத்துக்குட்டி தலைமறைவாக இருப்பதும் தெரிய வந்ததால் அவரை தேடி வந்த நிலையில்  கைதாகி இருக்கிறார். 


திங்கள், 30 மே, 2022

விவசாயி படுகொலை நீதி கேட்டு தமிழர் களம் சாலைமறியல்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, ஆத்தூர் அருகேயுள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்த விவசாயி ராமசாமி மகன் சண்முகராஜ் (வயது 45) என்பவர் நேற்று (29.05.2022) மாலை வேலைக்கு சென்று விட்டு வரும் பொழுது  சில ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.




இந்தப் படுகொலைக்கு நீதி கேட்டு தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளும் இன்று (30.05.2022) தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் ஆத்தூர் பஸ் நிலையம் முன்பாக சாலை மறியல் செய்தனர். 

கலெக்டர்-எஸ்.பி பேச்சு வார்த்தை


சாலை மறியல் நடந்த இடத்திற்கு உடனடியாக வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் சமூக அமைப்புகளின் தலைவர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் சமூக மக்களிடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.



இந்த பேச்சுவார்த்தையில் தமிழர் விடுதலைக் களத்தின் தலைவர் வழக்கறிஞர் ப.ராஜ்குமார், ஆத்தூர் விவசாய சங்க தலைவர் C.P. செல்வம், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு ஆத்தூர் பா. ராஜேந்திரன்,தமிழர் விடுதலைக் கள வடக்கு மாவட்ட செயலாளர் வே. காளிராஜ்,தெற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் பாண்டியன் மற்றும் அப்பகுதியில் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.!

வெள்ளி, 25 மார்ச், 2022

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் கஞ்சா வியாபாரிகொலையில்24மணிநேரத்தில் மூன்று பேர் கைது தூத்துக்குடி காவல்துறை அதிரடி நடவடிக்கை

நேற்று (24.03.2022) மாலை தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய வாளகத்தில் டீக்கடை முன்பு  கஞ்சா வியாபாரி புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு முத்துபாண்டி (45) என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் பயங்கர வெட்டி கொலை செய்யப்பட்டார்.

 தூத்துக்குடி பேருந்து நிலையம் பகுதியில் இச் சம்பவம் நடைபெற்ற தால் பெரும் பரபரப்புஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த வடபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ்குமார், இ.கா.ப மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.



 இது தொடர்பாக தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்  மேற்பார்வையில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின்ஜோஸ்  தலைமையில் உதவி ஆய்வாளர் சிவராஜா மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிடப்பட்டது.


மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முன்விரோதம் காரணமாக நேற்று முத்துப்பாண்டியை, புதுக்கோட்டை கீழகூட்டுடன்காடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் லட்சுமணன் (23) மற்றும் தூத்துக்குடி கேடிசி நகரைச் சேர்ந்த பழனிச்சாமி மகன் கருப்பசாமி (27), புதுக்கோட்டை வாட்டர் டேங்க் தெருவைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன் செல்வகணேஷ் என்ற வடை (22) மற்றும் ஒருவருடன் சேர்ந்து சம்பவ இடத்தில் வைத்து முத்துப்பாண்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்ததுடன் அங்கு இருந்த அவரது மனைவி மற்றும் முத்துப்பாண்டியின் சகோதரர் செல்வக்குமார் என்பவரையும் கொலை மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரியவந்தது.


 இதனையடுத்து சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாணை மேற்கொண்டு 1) லட்சுமணன், 2) கருப்பசாமி மற்றும் 3) செல்வகணேஷ் என்ற வடை ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.


மேலும் கொலையுண்ட முத்துப்பாண்டி மீது தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் 3 திருட்டு வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா, கொலை முயற்சி வழக்கு உட்பட 6 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு உட்பட மொத்தம் 11 வழக்குகளும் இருக்கிறது.


இன்று (25-3- 2022 )கைதான  லட்சுமணன் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் கஞ்சா, கொலை முயற்சி வழக்குகள் உட்பட 6 வழக்குகளும், சிப்காட் காவல் நிலையத்தில் ஒரு கொலை வழக்கும், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், குரும்பூர் காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட மொத்தம் 11 வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

புதன், 13 அக்டோபர், 2021

ஓட்டப்பிடாரத்தில் அரிவாளால் கொடூரமாக பெண் வெட்டி கொலை!!! தப்பி ஓடியவர் இன்று கைது தூத்துக்குடி காவல்துறை அதிரடி!!!

ஓட்டப்பிடாரம்  ஆவாரங்காடு பகுதியைச் சேர்ந்த பச்சைக்கிளி என்பவரது மனைவி முத்துலெட்சுமி (40) என்பவர் நேற்று (12.10.2021) அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். கொலையாளி தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




இதுகுறித்து தகவலறிந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலெட்சுமி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  சம்பவ இடத்தை பார்வையிட்டார்.




 மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் மேற்பார்வையில் ஓட்டப்பிடாரம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் முத்துராமன் தலைமையில் உதவி ஆய்வாளர் முத்துராஜா, பொன்முனியசாமி, காவலர்கள் கொடிவேல், பிரபாகரன், விடுதலை பாரதிக்கண்ணன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை கண்டுபிடித்து விரைந்து கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.


அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் வடக்கு ஆவாரங்காடு நடுத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் ராமர் (50) என்பதும், பொதுப்பாதை சம்மந்தமாக ஏற்பட்ட நிலப்பிரச்சனையில் முத்துலெட்சுமியை கொலை செய்தது தெரியவந்தது,



 இதனையடுத்து தனிப்படை போலீசார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில் தப்பியோடிய ராமரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.


மேற்படி எதிரியை உடனடியாக கைது செய்த தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்  பாராட்டினார்.

தூத்துக்குடி லீக்ஸ் பதிவு : 13.10.2021.


வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதி ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!! கடலூர் சாதி ஆணவக் கொலையாளிகளுக்கு தண்டனை நீதிமன்றத் தீர்ப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

 thoothukudileaks 24.9.2021

கடலூர் மாவட்டம், விருத்தாசலத்திற்கு அருகில் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் 2003ம் ஆண்டு நடைபெற்ற கொடூரமான சாதி ஆணவக் கொலை மற்றும் எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை வழக்கில் கடலூர் எஸ்.சி., / எஸ்.டி. நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பையும், தீர்ப்பினை வழங்கிய நீதிபதி  உத்தமராஜ் அவருக்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.



                பட்டியலின வகுப்பைச் சார்ந்த பொறியியல் பட்டதாரி முருகேசன் என்பவருக்கும், அதே கிராமத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த கண்ணகி என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 05.05.2003 அன்று பதிவு திருமணம் செய்து கொண்டனர். கண்ணகியினுடைய உறவினர்கள் இவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்து 8.7.2003 அன்று  ஊருக்கு கொண்டு வந்து கொடூரமாக தாக்கி சித்ரவதை செய்துள்ளனர். இருவரையும் பட்டப்பகலில் சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று இருவருடைய வாயிலும், காதுகளிலும் விஷத்தை ஊற்றி அதிகாலை 5.30 மணியளவில் படுகொலை செய்து பிணங்களை எரித்து விட்டனர்.


                இத்தகைய கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்து விடுங்கள் என அவர்கள் கதறி அழுதது யார் காதிலும் விழவில்லை. எங்களை பிரித்து கண்ணகியை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடுங்கள் என்ற முருகேசனின் கதறலையும் செவி மடுக்காமல், ஏராளமானோர் திரண்டு நிற்க, அவர்கள் முன்னிலையில் இளம் தம்பதியினரை கொடூரமாக கொலை செய்து தீ வைத்து கொளுத்திய கொடுமை அரங்கேற்றப்பட்டது.


                இவ்வளவையும் செய்ததோடு காவல்துறையினரின் உதவியை பயன்படுத்தி முருகேசனுடைய தந்தை சாமிக்கண்ணு உள்ளிட்ட நான்கு பேர் முருகேசனை விஷம் கொடுத்து கொன்றதாகவும், கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியன் உள்ளிட்ட நான்கு பேர் கண்ணகிக்கு விஷம் கொடுத்து கொன்றதாகவும் பொய் வழக்கு பதிவு செய்து எட்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


                இச்சம்பவத்தை கேள்விப்பட்டவுடன் இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், உண்மையான குற்றவாளிகளை கைது செய்திடவும்,பொய் வழக்கினை ரத்து செய்திட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருத்தாசலம் நகரில் மாபெரும் ஆர்ப்பாட்டமும், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. முருகேசனுடைய தந்தை சார்பில் வழக்கறிஞர்கள் ரத்தினம் மற்றும் மனித உரிமை அமைப்பைச் சார்ந்தவர்கள் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இவ்வழக்கு 22.04.2004 அன்று சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.


                தொடர்ந்து வழக்கறிஞருடைய வற்புறுத்தலால் விசாரணையை மேற்கொண்ட சிபிஐ விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்து கண்ணகியினுடைய உறவினர்கள் 11 பேர் மீதும், பொய் வழக்கு போட்டு வழக்கை திசைதிருப்பவும், சாட்சிகளை மறைக்கவும் உதவி செய்த உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் மற்றும் ஆய்வாளர் செல்லமுத்து ஆகிய இரண்டு போலீஸ் அதிகாரிகள் மீதும் கொலை வழக்கு, எஸ்.சி / எஸ்.டி வழக்கு பதிவு செய்து சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதிலும் முருகேசனுடைய உறவினரான அய்யாசாமி, குணசேகரன் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்க்கக் கூடாது என்பதை சிபிஐ அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டனர்.


                இந்த வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக செங்கல்பட்டு சிபிஐ நீதிமன்றத்திலும், கடலூர் எஸ்.சி / எஸ்.டி நீதிமன்றத்திலும் நடைபெற்றது. குற்றவாளிகள் வழக்கை நடத்த விடாமல் தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வந்தனர். சாட்சிகளை கலைப்பதற்கும் கடுமையாக முயற்சிகளை மேற்கொண்டனர். குற்றம் சுமத்தப்பட்ட இரண்டு போலீஸ் அதிகாரிகளும் தமது முழு அதிகாரங்களை பயன்படுத்தி சாட்சிகளை மிரட்டி கலைப்பதற்கு முயற்சித்தனர். இவர்களுக்கு அடிபணிந்து சிலர் பிரழ் சாட்சியாகவும் மாறினார்கள். திரு செல்வராஜ் என்ற நேரடி சாட்சி இவர்களின் மிரட்டலால் பணிந்து நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியை அளிப்பதற்கு முதல் நாள் 31.08.2017 அன்று தற்கொலை செய்து கொண்டார். குற்றம் சுமத்தப்பட்டவர்களின் மிரட்டலால் தனது கணவர் தற்கொலை செய்து கொண்டார் என செல்வராஜின் மனைவி அளித்த புகாரின் மீது விருத்தாசலம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு போதுமான ஆதாரங்கள் இல்லை என விருத்தாசலம் காவல்துறை வழக்கை முடித்து விட்டது.


                பல தடைகளை கடந்து இன்று (24.09.2021) கடலூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பில் கண்ணகியினுடைய சகோதரர் மருதுபாண்டியனுக்கு மரண தண்டனையும், மற்ற 11 பேருக்கு கிரிமினல் சதி செய்தது, கொலை செய்தது, வன்கொடுமை இழைத்தது என்கிற அடிப்படையில் மூன்று  ஆயுள் தண்டனையும், உடந்தையாக இருந்து குற்றத்தை மூடி மறைக்க முயற்சித்த போலீசாருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. முருகேசனுடைய உறவினர் இரண்டு பேரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அனைத்து குற்றவாளிகளுக்கும் தலா ஐம்பதாயிரம் அபராதம் விதித்ததோடு ஏற்கனவே காவல்துறையினரால் பொய் வழக்கு புனையப்பட்டு கைது செய்யப்பட்ட முருகேசனின் உறவினர்கள் 3 பேருக்கு தலா இரண்டு லட்சம் இழப்பீடு  வழங்க வேண்டுமெனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.


                சாதிய வன்மத்தோடு நடத்தப்பட்ட ஆணவப்படுகொலை வழக்கு என்பதோடு எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குரியதாகும். இவ்வழக்கில் தொடர்ந்து கண்காணித்து உதவிய வழக்கறிஞர்கள் பொ.இரத்தினம், கோ. சுகுமாறன் உள்ளிட்ட அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.


                தமிழகத்தில் தொடர்ந்து வரும் இத்தகைய ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்தவும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறவும் தமிழக அரசு ஆணவப்படுகொலை தடுப்புக்கென தனி சட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென கோருகிறோம். உசிலம்பட்டி விமலாதேவி ஆணவக் கொலை வழக்கில் நீதியரசர் வி.ஆர். சுப்பிரமணியம் அவர்கள் வழங்கிய வழிகாட்டுதல்களை அமல்படுத்த வேண்டுமெனவும் முன்வைக்கிறோம். மேலும் அடித்தட்டு கிராமப்புற உழைப்பாளி மக்களான பட்டியலின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் சாதிய மோதல்களில் ஈடுபடாமல் தங்களது வாழ்வாதார பிரச்சனைகளுக்கு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.

(கே. பாலகிருஷ்ணன்)


மாநில செயலாளர்

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

வாணியம் பாடி வசீம் அக்ரம் படுகொலை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் மாநில பொது செயலாளர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம்!!!

இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.



திருப்பத்தூர் மாவட்டம், வாணியம் பாடியை சேர்ந்த வசீம் அக்ரம் மனித நேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துனை செயலாளராக பொறுப்பு வகித்தவர்.முன் விரோத காரணத்தால்  கூலிப்படையினரை எவி விட்டு வசீம் அக்ரம் படு கொலை செய்ய பட்டார் என்கிற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது.

 இந்த கொடூர சம்பவத்தை  முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது .


வசீம் அக்ரமை படு கொலை செய்த சமூக விரோதிகள் அனைவரையும் காவல் துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டும். கூலிப்படையினரை எவி இந்த படு கொலை செய்ய காரணமாக இருந்த நபர்களையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது.


வசீம் அக்ரமை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்தள்ள வசீம் அக்ரம் குடும்பத்திற்க்கு இழப்பிடு ரூ50 லட்சமும்  அரசு வேலையும் தமிழக அரசு தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச் வலியுறுத்துகிறது. 


தமிழகத்தில் போதை பொருளாளன கஞ்சாவினால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்க பட்டு வருகிறார்கள். 


இளைஞர்களை கஞ்சா பழக்கத்திலிருந்து மீட்டு எடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம். மேலும் இளைஞர்களை சீரழித்து வரும் கஞ்சா வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து தமிழகத்தில் கஞ்சாவை ஓழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை முஸ்லிம் ராஷ்டிரிய மன்ச்யின் சார்பாக கேட்டு கொள்கிறோம்.


எனவே : அமைதி பூங்காவனமாக தமிழகத்தில் இது போன்ற அரசியல் பிரமகர்களை சமூக விரோதிகள் படு கொலை செய்வதனால்  சட்ட ஓழுங்கு பாதிப்பு பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. ஆகயினால் படு கொலை சம்பவங்களை செய்து வரும் கூலிப்படையினர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என முஸ்லிம் ராஷ்டிரிய மன்சியின் சார்பாக தமிழக அரசை கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

திங்கள், 30 ஆகஸ்ட், 2021

தூத்துக்குடியில் நண்பனை கொலை செய்த நண்பர்கள்? நள்ளிரவில் பயங்கரம்!!!! சிசிடிவி பதிவு காட்சி மூலம் தூத்துக்குடி காவல்துறை அதிரடி !!! 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேர் கைது!!!

தூத்துக்குடி லீக்ஸ் : 30.08.2021



தூத்துக்குடியில் மொட்டை மாடியில் உறங்கிய  நண்பனை கொலை செய்த  நண்பர்கள்? ??

 கடந்த 26-08-2021 அன்று நடந்த திருமண நிகழ்ச்சியில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

 இதனால் நேற்று 29-08-2021 அன்று சங்கர் தனது இன்னொரு நண்பரான டேவிட் என்பவரது வீட்டில் மொட்டைமாடியில் தூங்கிகொண்டிருந்தார். அவரை நள்ளிரவில் அரிவாள் மற்றும் கத்தியால் பயங்கரமாக  கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடினார்கள்.



இது பற்றிய செய்தியாவது :-


தூத்துக்குடி தெர்மல்நகர் கேம்ப் I பெருமாள்நகரைச் சேர்ந்த சங்கர் மகன் ராமநாதன் (எ) ரமேஷ் (20) என்பவர் கடந்த 28.08.2021 அன்று சிப்காட்  முருகேசன் நகருக்கு சென்று குழந்தை துரை மகன் டேவிட் (23) என்பவரது வீட்டு மொட்டை மாடியில் தனியாக தூங்கிக்கொண்டிருந்துள்ளார்.


 இந்நிலையில் 29.08.2021 அன்று அதிகாலையில் மொட்டை மாடியில் ராமநாதன் (எ) ரமேஷ் மர்ம நபர்களால் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.


இதுகுறித்து தகவலறிந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமநாதன் (எ) ரமேஷின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.



இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜெயக்குமார்  சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.


 தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு அவர்கள் மேற்பார்வையில் சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர்  சண்முகம் தலைமையில் உதவி ஆய்வாளர் ஹென்சன் பால்ராஜ், தனிப்பிரிவு உதவி ஆய்வாளர்  நம்பிராஜன் மற்றும் தலைமை காவலர் பென்சிங், முதல் நிலை காவலர்கள் சாமுவேல்,  மகாலிங்கம், செந்தில்,  திருமணி மற்றும்  முத்துபாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.


 தனிப்படை போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை பார்வையிட்டு, பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு ரோந்து பணியில் ஈடுபட்டபோது ....?

இன்று சந்தேகத்திற்கிடமாக சென்று கொண்டிருந்தவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் தூத்துக்குடி Pரூவு காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் 1) ராஜபாண்டி (21), தூத்துக்குடி பாளை ரோடு 3வது மைல்  பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் 2) முத்துக்குமார் (எ) முத்துப்பாண்டி (21) மற்றும் தூத்துக்குடி 3 செண்ட் அந்தோணியார்புரத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் 3) மூர்த்தி (எ) மீரான் (19), தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த குழந்தைதுரை மகன் 4) டேவிட்ராஜ் (23), தூத்துக்குடி வள்ளிநாயகபுரம் பகுதியை சேர்ந்த 5) 17 வயது இளஞ்சிறார் மற்றும் தூத்துக்குடி திரு.வி.க நகர் பகுதியை சேர்ந்த வாசுதேவன் மகன் 6) பரத் விக்னேஷ்குமார் (22) என்பதும், இவர்கள் 6 பேரும் கொலையான ராமநாதன் (எ) ரமேஷ் என்பவரின் நண்பர்கள், இவர்களுக்கும் கொலையுண்ட ராமநாதன் (எ) ரமேஷ் என்பவருக்கும் கடந்த 26.08.2021 அன்று தங்களது நண்பரின் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தபோது, அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. 








இதை மனதில் வைத்துக்கொண்டு மேற்படி 6 எதிரிகளும் சேர்ந்து ராமநாதன் (எ) ரமேஷ் என்பவரை நேற்று (29.08.2021) அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கி கொலை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.


இதனையடுத்து தனிப்படை போலீசார் மேற்படி எதிரிகள் 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து கொலைக்கு பயன்படுத்திய ஒரு அரிவாள், ஒரு கத்தி மற்றும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். 


மேலும் தனிப்படைப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேற்படி எதிரிகளில் ராஜபாண்டி என்பவர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், கஞ்சா வழக்கு உள்ளிட்ட 5 வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்படி எதிரிகளான 17 வயதுடைய இளஞ்சிறார் உட்பட ராஜபாண்டி, முத்துக்குமார், டேவிட், மூர்த்தி, மற்றும் பரத் விக்னேஷ்குமார் ஆகிய 6 பேரையும் விரைந்து கைது செய்தார்கள்.