கலெக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலெக்டர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 ஜூலை, 2026

தோட்டக் கிணற்று மண் எடுத்த விவகாரம்: எட்டு பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு நடந்தது என்ன விளக்கம்

Tamil Nadu updates தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி அருணன் செய்தியாளர் 

தவறான வழக்குகளை ரத்து செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மேலஈரால் கிராம மக்கள் மனு

தூத்துக்குடி, ஜூலை 31:

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் வழக்குகளை ரத்து செய்யக் கோரி,

அக்கிராம பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவர்களிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர். 

thoothukudileaks


அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கடந்த 24.06.2026 அன்று மேலஈரால் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நான்கு கோவில்களின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த கண்மாய் மற்றும் குடிநீர் கிணறு சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும், இதுகுறித்து பலமுறை அரசுத் துறையினரிடம் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து, கோவிலுக்கு எதிரே அமைந்திருந்த சேதமடைந்த கிணறு மற்றும் கண்மாயால் விபத்து ஏற்படக்கூடாது என்ற நோக்கில், ஊர் மக்கள் தங்களது சொந்த செலவில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதற்காக கிராமத்தைச் சேர்ந்தவர்களின் தோட்டக் கிணற்றில் தோண்டப்பட்ட சரள்மண்ணை டிராக்டர் மூலம் கண்மாய் மற்றும் கோவில் பகுதிக்கு கொண்டு வந்தபோது, எட்டயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் செந்தில்வேல்முருகன் வாகனத்தை நிறுத்தி விசாரணை நடத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.



அப்போது, மேலிடத்திலிருந்து புகார் வந்திருப்பதால் காவல் நிலையத்திற்கு வந்து மனு அளிக்குமாறு போலீசார் கூறியதாகவும், பின்னர் வாகனம் மற்றும் ஓட்டுநரை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.


இதையடுத்து, காவல் ஆய்வாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கோவில் பணிக்காகவே மண் எடுத்துச் செல்லப்பட்டதால் வழக்குப் பதிவு செய்யாமல் வாகனத்தையும் ஓட்டுநரையும் விடுவிப்பதாகவும், இனி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் உறுதியளித்ததால் போராட்டத்தை கைவிட்டதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


ஆனால், 21.07.2026 அன்று மேலஈரால் கிராமத்தைச் சேர்ந்த எட்டு பேருக்கு சம்மன் வழங்கப்பட்டு, 22.07.2026 அன்று காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டதாகவும், அப்போது 12.06.2026 தேதியிட்ட குற்ற எண்கள் 240/2026 மற்றும் 241/2026-இல் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


எனவே, மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி, பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள தவறான வழக்குகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மேலஈரால் கிராம மக்கள் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



thoothukudileaks


படவிளக்கம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன் அவரிடம் மனு அளித்த பின்னர் மேலஈரால் கிராம பொதுமக்கள் குழுவாக நின்ற காட்சி.

செவ்வாய், 12 மே, 2026

தூத்துக்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு பரபரப்பு ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரத்தில் எரிக்கப்பட்ட வாகனம் அந்த துறை இன்னும் வழங்கப்படவில்லை தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உழவர் சந்தையில் கட்டிமுடிக்கப்பட்டும் திறக்க ப்படாமல் பூட்டு தொங்கும் அவலம்

Tamil Nadu updates 12-5-2026

 photo news by அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடியில் வேளாண்மை உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார் கடந்த பல வருடங்களாக  ஆட்சியர் ஆக இருந்தவர்கள் இப் பகுதிக்கு வந்தது இல்லை என்பதால் வேளாண்மை அதிகாரிகள் வட்டாரத்தில் தீடீர் பரபரப்பு ஏற்பட்டது 

thoothukudileaks
ஆய்வு


இது பற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை உயிர் உர உற்பத்தி மையத்தில் மாவட்ட ஆட்சியர் விஷு  மகாஜன் இன்று (12-5-2026) காலை 11 மணியளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது உயிர் உரங்கள் தயாரிக்கும் முறைகள், விவசாயிகள் பயன்படுத்தும் நடைமுறைகள் மற்றும் உயிர் விதைகள் உற்பத்தி தரச்சான்று தொடர்பான செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வகத்தின் அனைத்து பிரிவுகளையும் சுற்றிப்பார்த்து அங்குள்ள பணிகள் குறித்து வேளாண்மை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், வேளாண்மை துணை இயக்குநர் மனோரஞ்சிதம், தரக்கட்டுப்பாட்டு வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன், திலி வேளாண் விற்பனை கூட செயலாளர் எழில், புதுக்கோட்டை வேளாண்மை உழவர் இணை அதிகாரி சுரேஷ், விதை பரிசோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் ஷேக் நூருல், உயிர் உர உற்பத்தி மைய அதிகாரி சகாயமேரி, அக்மார்க் தர சோதனை ஆய்வக வேளாண்மை அலுவலர் வினித், திருச்செந்தூர் வேளாண் வணிக அலுவலர் விக்னேஸ்வரி, தூத்துக்குடி உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


பழுது அடைந்து 

காணப்பட்ட கட்டிடம் !!!  

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவரால் கடந்த அதிமுக ஆட்சியில் திறந்து வைக்கப்பட்ட தூத்துக்குடி ஒழுங்கு முறை விற்பனை கூடம் அக்மார்க் ஆய்வு கட்டிடம் பராமரிப்பு இன்றி மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தது. 

thoothukudileaks
பழுது அடைந்த கட்டிடம் 


தூத்துக்குடி உழவர் சந்தையில் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் திறக்கப்படாமல் பூட்டு போட்டு தொங்கும் வேளாண் அலுவலகம்!!!

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் உள்பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை காய்கறிகள் விற்பனையகம் அதில்  வேளாண் இயக்குநர் அலுவலகம் கடந்த 2023ஆண்டில் இருந்து கட்டி  முடிக்கப்பட்டது சுவர் வெள்ளையடிப்பு முதற் கொண்டு முடிந்த நிலையில் இன்று வரை திறக்க படாமல் கிடக்கும் அவல நிலை 

thoothukudileaks
கட்டி முடிக்கப்பட்டும் திறக்க படாமல்? 
பூட்டு தொங்கும் அவலம் 


இது ...ஏதும் யாருக்கோ கமிஷன் இத்யாதிகள் கவனிக்க மறுத்த பிரச்சனையா என்கிறார்கள் கட்டி முடிக்கப்பட்டும் பூட்டு தொங்கும் பரிதாபம்!!!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரம் போராட்டக்காரர்கள் தூத்துக்குடி புதிய பேருந்து உழவர் சந்தையில் நின்ற வேளாண் துறை பயன் படுத்திய  ஜீப் எரித்தனர் இன்று வரை...மீண்டும் ஜீப் வழங்க படாதது ஏன்??

அதே போல... கடந்த காலங்களில் வேளாண் அதிகாரிகள் பயன் படுத்தி வந்த ஜீப் வாகனம் 2018 ல் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்ப்பு போராட்டத்தில் கலவரக்காரர்கள் வேளாண் அதிகாரிகள் பயன் படுத்தி வந்த ஜீப் ஜ உழவர் சந்தையில் நின்றது அதை  🔥 தீ வைத்து எரிக்கப்பட்டது 

thoothukudileaks
ஸ்டெர்லைட் எதிர்ப்பு கலவரத்தில் எரிக்கப்பட்ட 
வேளாண் துறை  வாகனம் இன்னும் தூத்துக்குடி உழவர் சந்தையில்!!


அதன் பிறகு இன்று வரை வேளாண் இயக்குநர் அதிகாரிக்கென்று எரிக்க பபட்ட வாகனத்திற்கு பதிலாக வாகனம் வசதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏற்படுத்தி தரவில்லை நடந்தோ ஆட்டோவில் தான் செல்கின்றனர். 


>

வெள்ளி, 7 நவம்பர், 2025

கலெக்டர், ஆணையர் புறக்கணிப்பு; ஆயர் தலைமையில் பேரணி பசுமைப் பயணம்: கன்னியாகுமரி-சென்னை மிதிவண்டி பேரணி தூத்துக்குடியில் கொடியசைத்துத் தொடங்கியது

Tamil Nadu updates, 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, நவம்பர் 7, 2025 - "இயற்கையைக் காப்போம், வாழ்வுரிமையை மீட்போம்" என்ற முழக்கத்துடன் கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடத்தப்படும் மாபெரும் பசுமைப் பயண மிதிவண்டி பேரணி இன்று தூத்துக்குடியில் கொடியசைத்துத் தொடங்கியது.

நவம்பர் 5 முதல் 20 வரை 16 நாட்கள் நடைபெறும் இப்பேரணி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து தமிழக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தமிழக துறவியர் பேரவை, அய்கஃப் கல்லூரி மாணவர் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து நடத்துகின்றன.

ஆயர் தலைமையில் கொடியசைவு

தூத்துக்குடி பனிமய மாதா கோவில் முன்பு காலை நடைபெற்ற நிகழ்வில் தூத்துக்குடி மறைமாவட்ட மேதகு ஆயர் ஸ்டீபன் தலைமை வகித்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி ஜார்ஜ் சாலை, தெற்கு காட்டன் சாலை, மேற்கு காட்டன் சாலை, கடற்கரைச் சாலை, மரியன்னை கல்லூரி, பூபாலராயர் புரம், இஞ்ஞாசியார் புரம் மற்றும் மாப்பிள்ளையூரணி விலக்கு வழியாக சாத்தூரை நோக்கிச் சென்றது.


கொடியசைத்து துவக்கி வைத்த ஆயர் ஸ்டிபன்

தூத்துக்குடி குறித்து...

நான்கு முக்கிய கோரிக்கைகள்

பேரணியில் பங்கேற்றோர் தூத்துக்குடி மாவட்டத்திற்கான நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்:


தேசிய தர நிலைகளை அடையாத பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் நான்கு நகரங்கள் உள்ளன.

அதில் ஒன்றாக தூத்துக்குடி இருக்கிறது என்பதை தாங்கள் அறிவீர்கள்.

தூத்துக்குடியில் அனுமதிக்க வேண்டாம்!!!

எனவே நிலம் காற்று மாசு படுத்தும் எந்த ஆபத்தான ஆலைகளையும் தூத்துக்குடியில் நிறுவ அனுமதிக்க வேண்டாம்  என கேட்டுக்கொள்ளுகிறோம்

தூத்துக்குடியில் சாலை அமைப்பில் தரக்குறைவு!!!

தூத்துக்குடியில் சாலைகளை அமைக்கும்போது, தமிழக அரசின் அரசானையை கடைபிடிக்காமல் ? பழைய சாலையின் மேலையே, புதிய சாலையை போடுகின்றனர்

இதனால் சாலையின் மட்டம் உயர்ந்து, வடிகால் வசதிகளும், குடியிருப்புகளும் பள்ளமாகி போகிறது 

இதனால் மழைகாலத்தில் மக்கள் பெரும் துயரை சந்திக்கின்றன.

எனவே அரசின் ஆனையின்படி தூத்துக்குடியில் பழைய சாலை அங்கிருந்ததை அகற்றிவிட்டு

புதிய சாலை அமைப்பதை உறுதி செய்ய வேண்டுமென வேண்டுகின்றோம்.

முக்கிய கோரிக்கை வீடியோ 

தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் சட்ட மீறல்களுக்கு நடவடிக்கை:

சுற்று சூழல் சட்டங்கள், விதிமுறைகளை மீறுகின்ற தொழிற்சாலைகள், பெரும் நிறுவனங்கள் எதுவாயினும் அவைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆணையிட.வேண்டும்

இனி பள்ளி கல்லூரிகளில்...!!!

பருவ நிலை மாற்றத்தை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்களை மாணவர்களுக்கு நடத்திட. அரசு வழிவகை செய்திட கேட்டுக்கொள்கிறோம்


ஆயிரக்கணக்கானோர் மேற்பட்டோர் பங்கேற்பு !!!

தூய மரியன்னை கல்லூரி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி, புதுக்கிராமம் திருச்சிலுவை மனையியல் கல்லூரி, புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பதாகை ஏந்தி கலந்துகொண்டனர். நகரப் பள்ளி மாணவர்கள் சாலை ஓரங்களில் பச்சைக் கொடியசைத்து வரவேற்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் இயக்கத்தினர், மதுவிலக்கு சபையினர், வின்செந்தியன்கள், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், வணிகப் பெருமக்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பசுமை நடவடிக்கைகள் !!!

நிகழ்வின் ஒரு பகுதியாக முத்துநகர் கடற்கரை தூய்மைப்படுத்தப்பட்டது. 1,500 விதைப் பந்துகள், 1,000 மஞ்சள் பைகள், 500 மரக்கன்றுகள் மற்றும் 500 விதை பாக்கெட்டுகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. மாணவர்கள் சுற்றுச்சூழல் பாடல்கள் பாடினர், மரங்களை வெட்டக்கூடாது என்ற கருத்தில் வீதி நாடகம் அரங்கேற்றப்பட்டது.

கலெக்டர், ஆணையர் புறக்கணிப்பு சர்ச்சை !!!

நிகழ்வில் மிகப்பெரிய சர்ச்சையாக அமைந்தது, பசுமை பயணம் விழிப்புணர்வு பேரணி அழைப்பிதழில் பெயர் அச்சிடப்பட்டிருந்த போதிலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம் பகவத் மற்றும் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் நிகழ்வுக்கு வரவே இல்லை. காலை 8 மணி முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அமைப்பினர் காத்திருந்த போதிலும், காலை 10 மணிக்கு மேலாகியும் அவர்கள் வராதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஆதங்கத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியது. மக்கள் பிரதிநிதிகள் யாரும் கலந்துகொள்ளாதது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

செயிண்ட் மேரீஸ் கல்லூரி முன் கலெக்டர் மற்றும் ஆணையர் பெயருடன் வைக்கப்பட்ட பேனர்!!!



அழைப்பிதழ் பார்க்க 

முதல்வரைச் சந்திக்க திட்டம்!!!

நவம்பர் 20 அன்று பேரணி சென்னையில் நிறைவடையும் போது, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்படவுள்ளது.

தமிழக துறவியர் பேரவைத் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி, மறைமாவட்டப் பொருளாளர் அருள்சகோதரர் அன்பு, வீராங்கனை இயக்கம் அமைப்பின் பேராசிரியை பாத்திமா பாபு உள்ளிட்ட பலர் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினர்.

செய்தியாளர் ரோஜா அருணன் 

வியாழன், 9 அக்டோபர், 2025

இன்னும் தொடரும் அவலம்?தெருக்களின் சாதிப் பெயர்கள் மாற்ற அரசாணை - தூத்துக்குடி மாவட்டத்தில் அமல் படுத்த வேண்டும்

Tamil Nadu updates, Arunan journalist தூத்துக்குடி லீக்ஸ்

பள்ளிகள் மற்றும் தெருக்களின் சாதிப் பெயர்கள் மாற்ற அரசாணை - தூத்துக்குடி மாவட்டத்தில் அமல்படுத்த வேண்டும் 

"சமத்துவ சமூகத்திற்கான வரலாற்று நடவடிக்கை"

தூத்துக்குடி, அக்டோபர் 9 – தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்டும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.



அரசாணை விவரங்கள்:

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய் நிர்வாகம் – அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகளில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள், இன்னும் போன்ற கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

1. வரலாற்று பின்னணி: தமிழ்நாடு அரசு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 3-ஆம் தேதி முதல் சமூக நீதிக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் உள்ள சாதிப் பெயர்களை நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2. திருக்குறள் வழிகாட்டுதல்: "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொளிவா செய்தொழில் வேற்றுமை யாண்" என்ற திருக்குறள் வழிகாட்டுதலின்படி, பிறப்பினால் அனைவரும் சமம், செய்யும் தொழிலில் காட்டும் திறமையினால் மட்டுமே வேறுபாடு காணப்படுவது என்ற கொள்கையை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

3. முதலமைச்சர் உத்தரவு: மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளை எண்.310, நாள் 29.04.2025 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களிலும் இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுகிறது.


4. உள்ளூர் அமைப்புகளின் பொறுப்பு: குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பெரிய உட்கட்டமைப்புகள் போன்றவற்றின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குதல்/மாற்றுபெயரிடுதல் தொடர்பான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து உள்ளூராட்சி அமைப்புகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.


5. இவ்வாணையை இணையப்பக்கத்தில் பார்க்கலாம்: இந்த அரசாணை முழு விவரங்களையும் தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் பார்வையிடலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் மாற்றப்படாத பெயர்கள்:

அரசாணை வெளியாகி பல ஆண்டுகள் ஆகியும், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் சில இடங்களில் சாதிப் பெயர்கள் தாங்கிய தெருக்கள் மற்றும் பள்ளிகள் உள்ளன என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில்:

மட்டக்கடை நாடார் தெரு

தெற்கு காவல் நிலையம் பகுதி - தேவர்புரம்

சண்முகபுரம் வண்ணார் தெரு

மேலும் பல தெருக்களில் சாதிப் பெயர்கள் இன்னும் நீடிக்கின்றன

பள்ளிகளின் பெயர்களிலும்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில பள்ளிகளின் பெயர்களிலும் சாதிப் பெயர்கள் இன்னும் தாங்கி உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சமூக ஆர்வலர்களின் கருத்து:

"அரசாணை வெளியாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் சாதிப் பெயர்கள் மாற்றப்படாமல் உள்ளன. உடனடியாக இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

வீடியோ பார்க்க 

இந்த நடவடிக்கை சமூக நீதி மற்றும் சமத்துவத்தை நோக்கிய முக்கியமான படியாக பாராட்டப்பட்டாலும், அதன் முழுமையான அமலாக்கம் இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

உடனடி நடவடிக்கை தேவை:

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்தி, மீதமுள்ள அனைத்து சாதிப் பெயர்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

(அரசாணைப்படி அறிவிப்பு)

கூடுதல் தலைமைச் செயலாளர்

சட்ட மற்றும் சட்டமன்ற துறை

தமிழ்நாடு அரசு


வியாழன், 18 செப்டம்பர், 2025

சங்கரபேரி பூங்கா ஆட்டைய போட்டுட்டாங்க – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி லீக்ஸ் செய்தி

சங்கரபேரி பூங்கா ஆட்டைய போட்டுட்டாங்க – மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

தூத்துக்குடி: தூத்துக்குடி நகரின் முக்கிய இடமாகத் திகழ்ந்த சங்கரபேரி பூங்கா தற்போது ஆட்டைய போடப்பட்டிருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

thoothukudileaks


thoothukudileaks

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த பதிலில், அந்த இடம் அரசு புறம்போக்கு நிலம் எனவும், பூங்கா இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பூங்கா இருப்பது தகவல் உரிமை சட்டம் பதில் பார்க்க 
தூத்துக்குடியில் உள்ள கோயம்பேடு டாஸ்மாக் அருகே இந்த பூங்கா இருக்கிறது 

 இதுபோன்ற நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ஜிஜிபி (JCB) இயந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யப்படுவது யார் சார்பாக நடைபெறுகிறது என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

“அரசு தரப்பா? அல்லது ஆக்கிரமிப்பு கும்பலா?” என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்கம் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



👉 

திங்கள், 11 ஆகஸ்ட், 2025

கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் சாபக்கேடு !!!தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

இதனால் தான் சொல்கிறார்கள்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் சோதனை சாபக்கேடு என விளிக்கிறார்கள்.

தலையில் நாரு வட்டு இடுப்பில் அருவா பெட்டி, மேல் சட்டை இன்றி அரை நிர்வாணமாக,....


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!

தூத்துக்குடி: ஆகஸ்ட் 11
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலையில் ...

 தலையில் நாரு வட்டுக் கயிறு, இடுப்பில் அருவா பெட்டி, மேல் சட்டை இன்றி அரை நிர்வாணம், கையில் மண் பானை கலையத்து  உடன்— இப்படியான தோற்றத்தில் வந்தவர், நேராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

thoothukudileaks
குளச்சல் ராஜா சிங் 
மனு கொடுத்தவர் 

அந்த மனுவின் விவரம் விசாரிக்கப்பட, அதில் “கள் இறக்க அனுமதி” கோரிக்கை இருப்பது தெரியவந்தது



சமீபத்தில் திருச்செந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சியினர் “கள் இறக்க போராட்டம்” நடத்தி சென்றதற்குப் பிறகு, இப்போது நேரடியாக அனுமதி கோரும் மனுக்களும் வரத் தொடங்கியுள்ளன.

கள் இறக்க தமிழக அரசு தடை!!!

தற்போது, தமிழக அரசு தடை செய்துள்ள கள்ளு விற்பனையை, சில அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் திறந்தவெளியில் அனுமதி கேட்பது குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.

“டாஸ்மாக் போலவே கள்ளுக்கடையும் திறந்து, இளைஞர் தலைமுறையை மேலும் சீரழிவு செய்யப் போகிறார்களா?” என்ற அச்சமும், அரசின் நிலைப்பாட்டை அறிய பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

தொடர்ந்து வரும்...  சாபக்கேடு!!!!

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து வரும் மனுக்கள் என்ன சோதனையோ சாபக்கேடோ தெரியல ...

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் காவல்துறை துப்பாக்கி சூடு

 16 பேர் உயிரிழப்பு 

அதன் பின்னர்  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் அகற்ற உத்தரவு 

அப்படி இருந்தும் படிப்பறிவு இல்லாதவர்களா? தெரியல 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...

மாவட்ட ஆட்சியர் இடம் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என மனு அளிக்க வருகின்றனர் வார வாரம் 

கள் இறக்குவது குற்ற செயல் என தமிழக அரசு தடை உத்தரவு காவல் துறை முலம் நடவடிக்கையும் எடுத்து வருகிறது 

நிலைமை இப்படி இருக்க ..

கள் இறக்க அனுமதி வேண்டி மனு அளிக்க வருகின்றனர் 

இதனால் தான் சொல்கிறார்கள்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் சோதனை சாபக்கேடு என விளிக்கிறார்கள்.




செவ்வாய், 6 மே, 2025

பள்ளி வாகனத்தில் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும் எனமாவட்ட ஆட்சியர் இளம் பகவத், அறிவித்தார்பள்ளி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை – பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகள் நேரில் கண்காணிப்பு

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி, மே 6:

பள்ளி கல்லூரி வாகனங்களில் செல்லும் மாணவ மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட போக்குவரத்து அலுவலகத்தில் இன்று 6-5-2025 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களுக்கு ஃபிட்னஸ் சோதனை நடைபெற்றது. 








இதில்  தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மற்றும் மாவட்ட ஆர்.டி.ஓ. சரவணன் ஆகியோர் பங்கேற்று வாகனங்களை நேரில் ஆய்வு செய்தனர்.


வாகனங்களில் முன் மற்றும் பின்புறக் கேமரா, பிரேக் முறை, ஏர் கண்டிஷனர், வாகனத்தின் தயாரிப்பு வருடம் உள்ளிட்ட அம்சங்கள் பரிசோதிக்கப்பட்டன. 







சோதனையின் பின், பள்ளி வாகனங்களுக்கு ...

இந்த வருட 25- டூ 26  ஃபிட்னஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.


நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி வாகன டிரைவர்கள் பங்கேற்று தங்கள் வாகனங்களை ஆய்வுக்காக கொண்டு வந்தனர். 


தொடர்ந்து நடைபெற்ற பயிற்சியில், விபத்து நேரத்தில் முதற்கட்ட உதவிகளை வழங்குவது, 108 அவசர எண்கள் மூலம் உதவி பெறுவது குறித்து மருத்துவர்கள் செய்முறை விளக்கம் அளித்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் தீ விபத்து நேரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும்  demonstratIon வழங்கினர்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், பேசுகையில்...

 “ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் கட்டாயமாக பெண் உதவியாளர் ஒருவர் வாகனத்தில் இருக்க வேண்டும். இது பின்பற்றப்படாவிட்டால், உரிய பள்ளி-கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என எச்சரித்தார்.


இந்நிகழ்ச்சி மாணவ மாணவிகள் மற்றும் வாகன ஒட்டுநர் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தில் சிறப்பாக நடத்தப்பட்டது.



-


வெள்ளி, 3 ஜனவரி, 2025

சட்டவிரோத செம்மர வெட்டு: தூத்துக்குடி வன அலுவலர் மீது புகார்

#சட்டவிரோத செம்மர வெட்டு: தூத்துக்குடி வன அலுவலர் மீது புகார்


தூத்துக்குடி, ஜனவரி 4, 2025


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள 195 செம்மரங்களை சட்டவிரோதமாக வெட்டுவதற்கு அனுமதி வழங்கியதாக மாவட்ட வன அலுவலர் மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.



## விவகாரத்தின் முக்கிய அம்சங்கள்:


மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் கடந்த டிசம்பர் 10, 2024 அன்று சென்னையைச் சேர்ந்த RMV International Traders நிறுவனத்திற்கு மரம் ஒன்றுக்கு ₹20,000 வீதம் வெட்டி எடுக்க அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் பல்வேறு விதிமீறல்கள் காரணமாக டிசம்பர் 24 அன்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையிலும், ஏற்கெனவே 20க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.


## சர்ச்சைக்குரிய அம்சங்கள்:


- அனுமதி கோரிக்கை சமர்ப்பிக்காத நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது

- அரசு ஆவணங்களில் மரங்களின் எண்ணிக்கையில் முரண்பாடு

- நில உரிமை தொடர்பான சர்ச்சைகள்

- சுமார் ₹3 கோடி மதிப்புள்ள மரங்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட முயற்சி



தற்போது நிலம் Amazo solar farm LLP நிறுவனத்தின் பெயரில் இருப்பதாகவும், பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இந்த மரங்களின் மீது உரிமை கோரி வருவதாகவும் தெரிகிறது.


விவசாய ஆர்வலர் அக்ரி பரமசிவன், இந்த விவகாரம் குறித்து மாவட்ட ஆட்சியர், வன அலுவலர் மற்றும் வனத்துறை கள இயக்குநர் ஆகியோர் விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

வெள்ளி, 13 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் இதென்ன பிரமாதம் ஒரே பித்தலாட்டம் இருக்குடா என் பொதுமக்கள் புலம்பல்

Tamil Nadu updates,

13-12-2024

அருணன் செய்தியாளர்


தூத்துக்குடியில் பிரதமர் மோடி ஆண்டுக்கு ரூ 5 லட்சம் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குதல் நடைபெறுகிறது

அழைப்பு!!!

பொதுமக்கள் தூத்துக்குடி மாநகரப் பகுதியில் நடைபெறும் முகாம் பெற்று கொள்ளலாம் என தெரு முனையில் இருந்து அழைக்கின்றனர்

கவுன்சிலர்கள்!!!

 அந்தந்த ஏரியா கவுன்சிலர்கள் முன் இருந்து பொதுமக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெற செல்கின்றனர்

₹50 தந்தால் தான் அட்டை 

அவர்களிடம் 

 ஒவ்வொருக்கும் ₹ 50 பெற்று கொண்டு PM மருந்துவ காப்பீடு ₹5 லட்சம் அட்டை ? 

அதுவும் வழங்கி வருகிறார்களா?

என்றால் இல்லை என்ற பதில் தான் வருகிறது 

இலவச மின்றி....

 ₹50 என்ன காரணத்திற்காக பெற்று கொண்டு காப்பீடு அட்டை வழங்குகிறார்கள் தெரியவில்லை 

ஒரு குடும்பத்தில் ஜந்து பேர் என்றால் ₹ 250 வந்து விடுகிறது


 அது சரி ?

PM Jay card மாடல் 
இப்படி தான் இருக்கும் 



PM Jay காப்பீடு அட்டை வழங்காமல்..

இவர் களோ... பலருக்கு

ABHA Card எடுத்து கொடுத்து அனுப்பி விடுகின்றனர்

ABHA Card மாடல் வழங்கப்படுவது...



இரண்டு கார்டு களுக்கு உள்ள வித்தியாசம் பார்க்க 

இது வெறுமனே அடையாளம் மட்டுமே சிகிச்சை பதிவு பெற்ற டிஜிட்டல் விவரம் மட்டுமே தெரியும்

 அதாவது ABHA Card மருத்துவ தகவல்களுக்கான அடையாளம் மட்டுமே என்கிறார்கள்.


பித்தலாட்டம் !!!

PM Jay ₹5 லட்சம் காப்பீடு அட்டை வழங்க வேண்டும் அது விடுத்து ரூபாய் 50 பிடுங்கி கொண்டு இதென்ன பித்தலாட்டம் என விவமறிந்த பலர் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் 

சம்பந்தப்பட்டவர்கள் இதை கவனிப்பார்களா ???  

திங்கள், 2 டிசம்பர், 2024

சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கலெக்டரிடம் வழங்கிய பரபரப்பு புகார் மனு.தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

thoothukudi leaks 2-12-2024


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

இதுபற்றிய செய்தியாவது:-


இன்று 2-12-2024

தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகராட்சி பகுதிகள், மாப்பிள்ளையூரணி , வேப்பலோடை, புதியம்புத்தூர், ஏரல் பெருங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்திற்கு உட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புல எண் 130/3 மற்றும் 130/4 ஆகியவை சுமார் 6.51 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டதாகும்.

இந்து அறநிலையத்துறை 

மேற்கண்ட கோவில் நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலரின் முழு நிர்வாக கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

தமிழ்செல்வி!!

 இத்திருக்கோவில் நிர்வாக செயல் அதிகாரியாக இருப்பவர் திரு/திருமதி வீ.தமிழ்ச்செல்வி ஆகும். இவரின் நிர்வாக பணியின் கீழ்தான் ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

போலி ஆவணங்கள் வழங்கல்!!!

இவ்வாறான தூத்துக்குடி கோமஸ்புரம் திருக்கோவில் நிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு 12×20 அளவு கொண்ட மற்றும் 10×12 அளவு கொண்ட சுமார் 122 வணிக கடைகளும், பல்வேறு இருப்பு வணிக நிறுவனங்களும், ஆட்டுச்சந்தை வணிகம் ஏற்படுத்திட பல்வேறு வகையில் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், விதிமுறைகளை மீறியும் போலி ஆவணங்கள் வழங்கியுள்ளார்.



உடந்தையாக....?

மேலும் திருக்கோவிலின் புஞ்சை நிலத்தில் வணிக நோக்கில் சட்ட விதிகளை மீறி செயல்பட அதன் புல எண்: 130/3 ன் 4.60 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன் தொகையாகவும், புல எண்: 130/4 ன் 1.92 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன்தொகையாக பெற்று, அக்கோவில் நிலத்தில் மின் இணைப்பு, ஊராட்சி மற்றும் வருவாய் நிர்வாக ஆவணங்கள் பெற உடந்தையாக இருந்துள்ளார்.

துஷ்பிரயோகம் 

பல லட்சம் நிதி இழப்பு

மேற்படி தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் திரு/ திருமதி வீ.தமிழ்ச்செல்வி என்பவர் அமைச்சர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் என பல்வேறு அரசு அதிகாரமிக்கவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, பல லட்சம் ரூபாய் பொருளாதார வருவாய் பெறும் நோக்கில், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அரசுக்கு பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் வருவாய் நிதியிழப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

பணிநீக்கம் செய்க!!!

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரிகள் மேற்கண்ட இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் வீ.தமிழ்ச்செல்வி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்திட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

02.12.2024


Collectorate Petition: 2024/9005/28/437853/1202 date: 02.12.2024

ஞாயிறு, 24 நவம்பர், 2024

பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு இந்த விவகாரம் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை வெளிச்சமிடுகிறது..

thoothukudi leaks 25-11-2024


தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோயில் (கோமஸ்புரம்) குத்தகை நிலத்தில் போலியாக/விதிமுறைகளை மீறி சொத்துவரி ஆவணங்கள் வழங்கி, பல லட்சம் ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் மனு.



இது பற்றிய செய்தியாவது 


தூத்துக்குடி சிவன் கோயில் சொந்தமான அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள்!!!

தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான மாப்பிள்ளையூரணி கிராம புல எண்: 130/3 மற்றும் 130/4 ஆகியவற்றின் பரப்பளவான சுமார் 6.51 ஏக்கர் புஞ்சை நிலையானது தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள இடமாகும்.


வீதிமீறல்!!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியின் நிலமானது வணிக பயன்பாட்டிற்கு அல்லாத புஞ்சை வகை சார்ந்ததாகவும், இத்தகைய புஞ்சை நிலத்தில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கான குத்தகை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்கிற விதிகள் உள்ளன.

வணிக வளாகங்கள்!!!

 ஆனால் இக்கோவில் நிலத்தில் சட்டவிதிகளை மீறி வணிக நோக்கத்துடன் ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி எனும் வணிக வளாக பகுதியில் சுமார் 21 வியாபார கடைகள், வணிக கட்டுமானங்கள், வணிக நிறுவனங்கள் முறைகேடான வகையில் கடந்த நான்கு மாதங்களாக செயல்பட்டு வந்துள்ளன.


தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் முறைகேடாக செயல்பட்டு வந்த ECR மார்க்கெட் - சூர்யா அங்காடி உள்ளிட்ட 21 கடைகளுக்கும், ஏற்படுத்தப்படாத வணிக கடைகள்/ இல்லாத வணிக கடைகளுக்கு போலியான வகையில் விதிமுறைகளை மீறி சுமார் 51 வணிக நிறுவனங்களுக்கு சொத்துவரி ஆவணங்களை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் வழங்கி உள்ளார்.


தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத்தில் சார்பில் விதிமுறைகளை மீறி கோமஸ்புரம் வார்டு எண் 2 ற்கு கதவு இலக்க எண்கள் 2/36/19 -ல் இருந்து தொடங்கி தொடர்ச்சியாக 2/36/70 வரையிலான சுமார் 51 கதவு இலக்கங்களைக் கொண்டு, சொத்து வரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/5637 முதல் 2024-2025/27/1/11/5668 வரை 23.08.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6165 முதல் 2024-2025/27/1/11/6168 வரை 05.09.2024 அன்றும், சொத்துவரி ஆவணங்கள்: 2024-2025/27/1/11/6217 முதல் 2024-2025/27/1/11/6232 வரை 06.09.2024 அன்று முறைகேடான வகையில் வழங்கப்பட்டுள்ளன.

போலி ஆவணங்கள்!!!

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோமஸ்புரம் பகுதியில் சட்ட விதிகளுக்கு எதிராக பல்வேறு தரப்பினர் ஆக்கிரமிப்பு செய்திடவும், புஞ்சை நில கோவில் குத்தகை நிலத்தில் வணிக நிறுவனங்கள் ஏற்படுத்திடவும், அரசின் விதிமுறைகளுக்கு எதிரான போலி ஆவணங்கள் ஏற்படுத்தியும், இல்லாத வணிக கடைகளுக்கு/ஏற்படுத்தப்படாத வணிக நிறுவனங்களுக்கு கதவு எண், சொத்து வரி உள்ளிட்ட பல்வேறு போலி ஆவணங்கள் வழங்கியதன் மூலம் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வருவாய் குற்றங்களை புரிந்துள்ளார்.

நடவடிக்கை!!!

உயர்திரு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தணிக்கை உதவி இயக்குநர் ( ஊராட்சிகள்) ஆகியோர் மேற்படி ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் முறைகேடான வகையில்/போலி ஆவணங்களை வழங்கி பல்வேறு சட்டவிதிமீறல்களில்/குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணகுமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

25.11.2024


Collectorate Petition: 2024/9005/28/437799/1125 date: 25.11.2024

பாக்ஸ் நியூஸ்!!!


தூத்துக்குடி மாவட்டத்தில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி தலைவரான சரவணகுமார் மீது பல லட்சம் ரூபாய் முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளனர்.

 முறைகேடுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்படுமா, நடவடிக்கைகள் எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து காண வேண்டியது. 

இந்த விவகாரம் ஊராட்சி நிர்வாகத்தில் உள்ள சீர்கேடுகளை வெளிச்சமிடுகிறது.

வெள்ளி, 22 நவம்பர், 2024

படுமோசமாக மாப்பிள்ளையூரணி சாலை கண்டு கொள்ளுமா? மாவட்ட நிர்வாகம்!!!

சர்க்கஸ் மைதானமாக மாறிய தூத்துக்குடியிலிருந்து மாப்பிள்ளையூரணி செல்லும் சாலை 



               தூத்துக்குடி அருகே எட்டயபுரம் செல்லும் சாலையில் மாப்பிள்ளையூரணிக்கு செல்லும் முகப்பு பகுதியில் தாா்சாலையானது பெரும் பள்ளமாக கிடக்கிறது வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலை அந்தப் பள்ளத்தினால் வாகனங்கள் செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறதுு

இது போல் பள்ளி மாணவ மாணவிகள் .மாப்பிள்ளையூரணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு . வங்கிக்கு வருகின்ற மக்கள் பெரிதும் கஷ்டப்படுகிறாா்கள் .




 மாவட்ட நிா்வாகம் துரித நடவடிக்கை எடுத்து சாலையை சீா் படுத்த பொது மக்கள் எதிா்பார்க்கிறாா்கள்

சனி, 5 அக்டோபர், 2024

தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் இஆப ஆகியோர் பங்கேற்பு

 ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃55-10_ 2024  photo news 

by Abirami nathan

தூத்துக்குடி வ உ சி கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்  இளம்பகவத் இஆப ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்கள் .



இது பற்றிய செய்தியாவது:-


தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று (05.10.2024)

 தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார்  கல்லூரியில்  மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


 முகாமில் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான  கீதாஜீவன்  கலந்துகொண்டு உரையாற்றினார்.



பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்.



வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர்  இளம்பகவத் இஆப.,  தலைமையில் நடைபெற்றது.


 இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர்  பிரம்மநாயகம், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  விக்னேஸ்வரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சையது முகமது, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் மற்றும் மாநகர திமுக செயலாளர்  ஆனந்தசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


திட்ட இயக்குனர் மல்லிகா வரவேற்புரை ஆற்றினார்.

இம் முகாமில் வேலை தேடி வரும் இளைஞர்கள் இளைஞிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வெள்ளி, 4 அக்டோபர், 2024

கனிமொழி எம்பி இடம் நாங்கள் படித்தால் வேலை கிடைக்குமா? இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கள் கஷ்டத்தை தெரிவித்த இளம் பெண்கள்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃-4-10-2024  photo news 

by sunmugasunthram Reporter 

Photo "காலை 🔥 தீபம்" (நாளிதழ்)  நன்றி 

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  கனிமொழி எம்பி இடம் நாங்கள் படித்தால் வேலை கிடைக்குமா? என தங்கள் கஷ்டத்தை தெரிவித்த இளம் பெண்கள்.



இதுபற்றி செய்தியாவது;-

மறுவாழ்வு முகாமில்..

 3 கோடியை 70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை திறந்துவைத்து..


 மரக்கன்றுகளை நட்டி பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி மருத்துவத்துறை கையெடுகளை வெளியிட்டு கனிமொழி எம்பி பேசியதாவது.....


 தமிழகத்தில் இதுபோன்ற முகாம்களில் குடியிருந்து வருபவர்களில் புலம் பெயர்ந்த மக்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மனநிலை!!!

 முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் இதுபோன்ற வீடுகளை தமிழகம் முழுவதும் கட்டிக் கொடுத்தமைக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 



முகாமில்..இளம் பெண் கேட்ட கேள்வி?

நான் ஒரு முகாமில் இளம்பெண்ணை சந்தித்த போது நன்றாக படி என்று கூறினேன்.


 நான் படித்து என்ன செய்வது என்று திருப்பி கேள்வி கேட்டார். 

எங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை!!

எதற்கு என்றால் புலம் பெயர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.


 ஆண்கள் பல இடங்களுக்கு வேலைக்கு சென்று அதன் மூலம் தான் வாழ்கிறோம் என்றார். 


பெண்கள் தொழில் செய்வதற்கு படிப்பும் அவசியம் என்பதை உணர செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் படித்தால் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று திமுக ஆட்சியில் உத்திரவாதம் கொடுக்கப்பட்டது.

குடியுரிமை!!!


 "தொடர்ந்து இந்த மக்களுக்கு குடியுரிமை பெறுவதற்கு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது."


நாங்கள் இருக்கிறோம்!!!

இதையும் தமிழகம் முதலமைச்சர் உணர்ந்து கொண்டு நாடு கடந்து வந்த மக்களின் நலன் கருதி ஒர் இடத்தில் இருந்த ஒரு மரம் வேறாரு சாய்க்கப்பட்டு மாற்று இடத்திற்கு புலம் பெயர்ந்து வரும் போது அவர்களுக்காக சில கவலைகளை மறக்கும் வகையில் நாங்கள் இருக்கிறோம் என்ற அடிப்படையில்  ஹெல்த் திட்டம் உருவாக்கப்பட்டது.



 அது உங்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. இந்த பிரச்சனையை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு படியாக பாதுகாக்கவும் எதிர்காலத்தில் எல்லோரையும் போல் தகுதியுள்ளவர்களாக வரவேண்டும் என்று தான் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்றி வருகிறார் என்று கனிமொழி எம்பி பேசினார். 



அடுத்து...

அமைச்சர் நாசர் பேசியதாவது...

 தமிழக முதலமைச்சர் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும். 


அதன் மூலம் இந்த நாடும் வளர வேண்டும் என்று பணியாற்றுகின்ற காரணத்தால் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். 


தமிழகம் முழுவதும் உள்ள இதுபோன்ற மறுவாழ்வு குடியிருப்புகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. 


" இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள மூப்பத்தி இரண்டாயிரத்தி நூற்றி முப்பத்தி இரண்டு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 18 இலட்சம் பேருக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து உலகத்திற்கே வழிகாட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார்."


 இப்படி ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்யும் முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மடிக்கணினி, சைக்கிள் என எல்லாவற்றையுமே வழங்கி எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறார் என்று அமைச்சர் நாசர் பேசினார்.





தூத்துக்குடி ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.

 கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஐஸ்வர்யா வரைவேற்புரையாற்றினார். 


அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திட்ட உரையாற்றினார்.





 விழாவில் சண்முகையா எம்எல்எ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், கோட்டாட்சியர் பிரபு, எஸ்.பி.அல்பர்ட்ஜான், எஎஸ்பி.மதன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார்கள் முரளிதரன், சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாணிக்கவாசகம், உதவி அலுவலர் மகேஷ்வரி, பொறியாளர் ரவி, மேற்பார்வையாளர் முத்துராமன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல்; அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி அமைப்பாளருமான சுரேஷ்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசுராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மைக்கேல்ராஜ், பிலோமின்ராஜ், ராமர், மாநகர திமுக துணைச்செயலாளர் கீதா முருகேசன், சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின், நற்பணிமன்ற அமைப்பாளர் பாரி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ரத்தினகுமார், அன்பு, ரமேஷ், வேல்ராஜ், முருகன், சந்திரசேகர், சண்முகத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், சுகாதார ஆய்வாளர் வில்சன், டாக்டர் விக்னேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து மற்றும் கப்பிக்குளம் பாபு, கௌதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசுத்துறை அலுவலர், பயனாளிகள் கலந்து கொண்டனர். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

திங்கள், 16 செப்டம்பர், 2024

முதல் பரிசு ரூ 1 லட்சம் புகைப்பட போட்டி விதிமுறைகள் முழு விவரம்வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

16-9-2024 photo news 

by Arunan journalist

மிகச்சிறந்த புகைப்படத்திற்கு

முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு

ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும் என செய்தி மக்கள் தொடர்பு தூத்துக்குடி அலுவலகம்

வெளியிட்டுள்ளது




தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தூத்துக்குடி 5ஆம்

புத்தகத் திருவிழா வருகின்ற 03.10.2024 முதல் 13.10.2024 வரை சங்கரப்பேரி திடலில்

நடைபெறவுள்ளது,



இப்ப புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு தூத்துக்குடி புகைப்பட

கலைஞர்கள் மற்றும் பொதுமக்களுக்கான புகைப்பட கண்காட்சி போட்டிக்கான

இணையதளம் மற்றும் இலட்சையினை மாண்புமிகு தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்

கனிமொழி கருணாநிதி அறிமுகப்படுத்தினார்கள் .

https://thoothukudi.nic.in/




தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 5ஆவது புத்தகத் திருவிழா மாவட்ட

நிர்வாகத்தின் சார்பில் மிகவும் சிறப்பாக நடத்தப்படவுள்ளது.


தினமும் நட்சத்திர பேச்சாளர்கள் சிறப்புரை கூட்டம்!!!


இப்புத்தகத் திருவிழாவில்

தமிழகத்தின் தலைச்சிறந்த எழுத்தாளர்கள்

சாகித்ய அகாதமி விருது பெற்ற

எழுத்தாளர்கள், கலைஞர்கள் மிகச்சிறந்த சமூக சிந்தனைப் பேச்சாளர்கள்

அரசியல்

ஆளுமைகள் நட்சத்திரப் பேச்சாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கவிஞர்கள்

கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றவுள்ளார்கள்.




புகைப்பட போட்டி!!!


இப்புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு. தூத்துக்குடி புகைப்படக் கலைஞர்கள் மற்றும்

பொதுமக்களுக்கான புகைப்படக் கண்காட்சிப் போட்டி நடத்தப்படவுள்ளது.


தலைப்பு விவரம்!!"


இப்புகைப்படப்

போட்டிக்காக.....

தூத்துக்குடியின் கலாச்சாரம், பாரம்பரியம், தெரு வாழ்க்கை, மதத்

திருவிழாக்கள், நினைவுச் சின்னங்கள், மக்கள் வாழ்க்கை முறை, மீனவ சமூகத்தின்

வாழ்க்கை, தூத்துக்குடி இயற்கை காட்சிகள் (கடற் பரப்புக்கள் நதிக் காட்சிகள், ஈர

நிலங்கள், நகர்புற காட்சிகள்) வனவிலங்குகள் மற்றும் ஈரநில பறவைகள், தொழிலாளர்கள்

(தொழில்துறை, மீன்பிடித்தல்), விளையாட்டு போன்ற தலைப்புகளில் இருத்தல் வேண்டும்.


கடை பிடிக்க வேண்டிய வீதிமுறைகள்!!!


1. புகைப்படங்கள் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த படங்களாக மட்டுமே இருக்க

வேண்டும்.


2. இந்தியாவிலிருந்து எந்த வயதினரும் விண்ணப்பிக்கலாம்.


3. விண்ணப்பதாரர் அதிகபட்சம் ஐந்து படங்களை சமர்ப்பிக்கலாம்.


4. விண்ணப்பதாரர் தனது சொந்த படங்களை மட்டுமே அனுப்ப வேண்டும்


5. கிராபிக்ஸ் மற்றும் AI உருவாக்கிய படங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.



புகைப்படங்கள் சமர்ப்பிக்கும் அளவுகோள்கள்


1. படங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்


2. படங்கள் 100 dpi இல் நீண்ட பக்கத்தில் 3000 பிக்சல்கள் கொண்ட RGB கோப்புகள்

பரிந்துரைக்கப்படுகிறது



3. கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அனுப்பலாம்



4. ஒவ்வொரு புகைப்படமும் புகைப்படத்திற்கான தலைப்புடன் இருக்க வேண்டும்


5. ஒவ்வொரு புகைப்படமும் குறைந்தபட்சம் 5MB க்கு குறைவாக இருத்தல்

வேண்டும்.



கோப்பு விபரக்குறிப்பு

சமர்ப்பிக்கப்பட வேண்டிய புகைப்படங்கள் பின்வரும் விவரக் குறிப்புகளை பூர்த்தி செய்ய

வேண்டும்:



பயன்பாடு



1. வெற்றி பெற்ற போட்டியாளர்கள் முழு தெளிவுத்திறன் கொண்ட

RAW/TIFF படங்களை அச்சிடுவதற்கும் / உண்மை தன்மையினை

அறிவதற்கும் சமர்ப்பிக்கும்படி கேட்கபடுவார்கள்.


2. படங்களில் பார்டர்கள் 1 லாட்டர் மார்க்க்ஸ் அல்லது எந்தவித

அடையாளமும் இருத்தல் கூடாது.



1. பட்டியலிடப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் கண்காட்சி,

சமூக ஊடகங்கள், ஆன்லைன் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளிவர

பயன்படுத்தப்படும்.



2. நடுவர்களின் முடிவே இறுதியானது.


3. விண்ணப்பிக்கும்

விண்ணப்பதாரர்கள்

எடுக்கும் அனைத்து வகையான முடிவு

ஆவார்கள்.


இரண்டு பிரிவுகளில் போட்டி

அனைவரும் நிர்வாகம்

கட்டுப்பட்டவர்கள்

இப்புகைப்படப் போட்டியானது இரண்டு பிரிவுகளின் கீழ் நடத்தப்படும் இப்புகைப்படப்

போட்டியில் கலந்துகொள்ள 18 வயது வரையிலான நபர்கள் ஒரு பிரிவாகவும்,18 வயதிற்கு

மேற்பட்ட நபர்கள் ஒரு பிரிவாகவும் என இரண்டு பிரிவுகளின் கீழ் போட்டியில்

கலந்துகொள்ளலாம்

ஆறுதல் பரிசுகள் உண்டு!!!


. மேலும், புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்கள்

அனைத்தும் தகுதிவாய்ந்த தேர்வு குழுவினரால் கூராய்வு செய்யப்பட்டு முதல், இரண்டாம்

மற்றும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்படும்.



இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் தெரிவு செய்யப்படும் மிகச்சிறந்த புகைப்படத்திற்கு

முதல் பரிசாக ரூ.1 இலட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரமும், 10 புகைப்படங்களுக்கு

ஆறுதல் பரிசாக தலா ரூ. 5 ஆயிரமும் வழங்கப்படும்.



மேலும், ஒவ்வொரு பிரிவிலும்

மிகச்சிறந்ததாக தெரிவு செய்யப்படும் புகைப்படம் புத்தகக் கண்காட்சி நடைபெறும்

அனைத்து நாட்களிலும், பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படும்.


ஒரு நபர்

அதிகபட்சமாக 5 புகைப்படக்களைத் தேர்வுக்காக அனுப்பலாம்.



எனவே, புகைப்படக் கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் தங்களது படைப்புகளை

செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதிக்குள் அணுப்பி வைக்க வேண்டும்.



புகைப்படப் போட்டிக்காக அனுப்பப்படும் புகைப்படங்களை மாவட்ட நிர்வாகத்தின்

அதிகாரப்பூர்வமான இணையதளமான https://thoothukudi.nic.in/


இல் வெளியிடப்படும்

இணைப்பில் (LINK) பதிவேற்றம் செய்யலாம்.



வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தூத்துக்குடி