இதனால் தான் சொல்கிறார்கள்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் சோதனை சாபக்கேடு என விளிக்கிறார்கள்.
தலையில் நாரு வட்டு இடுப்பில் அருவா பெட்டி, மேல் சட்டை இன்றி அரை நிர்வாணமாக,....
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு!
தூத்துக்குடி: ஆகஸ்ட் 11
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலையில் ...
தலையில் நாரு வட்டுக் கயிறு, இடுப்பில் அருவா பெட்டி, மேல் சட்டை இன்றி அரை நிர்வாணம், கையில் மண் பானை கலையத்து உடன்— இப்படியான தோற்றத்தில் வந்தவர், நேராக கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

குளச்சல் ராஜா சிங்
மனு கொடுத்தவர்
அந்த மனுவின் விவரம் விசாரிக்கப்பட, அதில் “கள் இறக்க அனுமதி” கோரிக்கை இருப்பது தெரியவந்தது
சமீபத்தில் திருச்செந்தூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சியினர் “கள் இறக்க போராட்டம்” நடத்தி சென்றதற்குப் பிறகு, இப்போது நேரடியாக அனுமதி கோரும் மனுக்களும் வரத் தொடங்கியுள்ளன.
கள் இறக்க தமிழக அரசு தடை!!!
தற்போது, தமிழக அரசு தடை செய்துள்ள கள்ளு விற்பனையை, சில அரசியல் கட்சி மற்றும் சமூக அமைப்புகள் திறந்தவெளியில் அனுமதி கேட்பது குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர்.
“டாஸ்மாக் போலவே கள்ளுக்கடையும் திறந்து, இளைஞர் தலைமுறையை மேலும் சீரழிவு செய்யப் போகிறார்களா?” என்ற அச்சமும், அரசின் நிலைப்பாட்டை அறிய பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தொடர்ந்து வரும்... சாபக்கேடு!!!!
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து வரும் மனுக்கள் என்ன சோதனையோ சாபக்கேடோ தெரியல ...
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் காவல்துறை துப்பாக்கி சூடு
16 பேர் உயிரிழப்பு
அதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவு உச்ச நீதிமன்றம் தீர்ப்பும் அகற்ற உத்தரவு
அப்படி இருந்தும் படிப்பறிவு இல்லாதவர்களா? தெரியல
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ...
மாவட்ட ஆட்சியர் இடம் ஸ்டெர்லைட் ஆலை திறக்க வேண்டும் என மனு அளிக்க வருகின்றனர் வார வாரம்
கள் இறக்குவது குற்ற செயல் என தமிழக அரசு தடை உத்தரவு காவல் துறை முலம் நடவடிக்கையும் எடுத்து வருகிறது
நிலைமை இப்படி இருக்க ..
கள் இறக்க அனுமதி வேண்டி மனு அளிக்க வருகின்றனர்
இதனால் தான் சொல்கிறார்கள்.. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வரும் சோதனை சாபக்கேடு என விளிக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக