நீதிமன்றம் தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீதிமன்றம் தீர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 ஜூன், 2026

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை. ஸ்ரீவைகுண்டம் வழக்கில் அரசியல் அழுத்தமின்றி நடுநிலையான விசாரணை தேவை நடந்தது என்ன? இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜூன் 15:

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தமின்றி, நடுநிலையான மற்றும் சட்டப்படியான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என சட்ட உரிமைகள் கழகம் வலியுறுத்தியுள்ளது.

thoothukudileaks




இதுகுறித்து ..

சட்ட உரிமைகள் கழகத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


பாலியல் குற்றச்சாட்டு எதுவாக இருந்தாலும் அது சட்டப்படி, மரியாதையுடன் மற்றும் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகள் முழுமையாக பாதுகாக்கப்பட வேண்டும்.


மனித நேயம்!!!

அதேநேரத்தில், விசாரணை நிறைவடைவதற்கு முன்பே ஒரு குடும்பத்தையே குற்றவாளி குடும்பமாக சித்தரிப்பதும், பெண்களை சமூகத்தில் அவமானப்படுத்துவதும், அரசியல் மோதல்களுக்குள் சாதாரண குடும்பங்களை இழுத்துச் செல்லுவதும் சட்டநீதிக்கும் மனிதநேயத்திற்கும் எதிரானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் !!! நீதி மன்றம் தான் முடிவு செய்யும்!!!

இந்த வழக்கில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையேயான அரசியல் மோதலாக விவகாரத்தை மாற்றும் முயற்சிகள் கவலை அளிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. 


யார் குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்பதை முடிவு செய்ய வேண்டியது ஊடகங்களோ, அரசியல் மேடைகளோ அல்ல; காவல்துறையின் விசாரணையும் நீதிமன்றத்தின் தீர்ப்பும்தான் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


மன உளைச்சல் !!!

மேலும், அரசியல் பேட்டிகள் மற்றும் சமூக வலைதள விவாதங்களால் பாலசுப்பிரமணியன் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் உறவினர்கள் சமூக அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள் சமூக தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படக் கூடாது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பந்தபடாத ஒரு பெண்ணின் பெயரும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி பேசப்படுவதாக கூறப்படும் நிலையில், தனக்கு எந்த பாலியல் குற்றமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு !!!

அவரது வாக்குமூலம் காவல்துறை அல்லது நீதித்துறை நடுவர் முன்னிலையில் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், அவருக்கு எந்த தரப்பிலிருந்தும் மிரட்டல், அழுத்தம் அல்லது அவதூறு ஏற்படாத வகையில் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.


"நாங்கள் யாரையும் காப்பாற்ற வரவில்லை. யாரையும் முன்கூட்டியே குற்றவாளி என்றும் கூற வரவில்லை. அரசியல் அழுத்தமில்லாத, ஊடக விசாரணை இல்லாத, நடுநிலையான சட்ட விசாரணை நடைபெற வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கையாகும்" என்று டாக்டர் எஸ்.ஆர். செல்வம் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.

உண்மையை கண்டறிய வேண்டும்!!!

மேலும், பாலியல் வழக்குகளில் புகார் அளித்தவரின் அடையாளமும் மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதேபோல், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பப் பெண்கள் மற்றும் சாட்சிகளாக முன்வரும் பெண்களும் அவமானப்படுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் கருத்து வேறுபாடுகளின் பெயரில் குடும்ப உறுப்பினர்களும் பெண்களும் பாதிக்கப்படக் கூடாது என்றும், காவல்துறை எந்தவித அரசியல் அழுத்தத்திற்கும் இடமளிக்காமல் சட்டத்தின் அடிப்படையில் உண்மையை கண்டறிய வேண்டும் என்றும் சட்ட உரிமைகள் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது.


பாக்ஸ் செய்தி

இரண்டு பெண்கள் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு

ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள குற்ற எண் 20/2026 வழக்கு தொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளன

ஒருவர் 

 தனது மனுவில், தனக்கு எந்தவிதமான பாலியல் துன்புறுத்தல் சம்பவமும் நடைபெறவில்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி பொய்யான தகவல்கள் சமூக வலைத்தளங்கள் மற்றும் மீடியாக்களில் பரப்பப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வாக்குமூலம் அளிக்க மிரட்டல், ஆசை வார்த்தைகள் கூறி தூண்டுதல், அவதூறு பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார். தனது உண்மை வாக்குமூலத்தை சட்டப்படி பதிவு செய்து, தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


இதேபோல்,

மற்றொரு ஒருவர் 

 தனது மனுவில், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பாலசுப்பிரமணியனின் மனைவி எனத் தெரிவித்ததுடன், வழக்கு தொடர்பாக அரசியல் அழுத்தம், மீடியா பேட்டிகள் மற்றும் சமூக வலைத்தள அவதூறுகளால் தனது குடும்பத்தினர் மனஉளைச்சலுக்கும் சமூக அவமானத்திற்கும் ஆளாகி வருவதாக கூறியுள்ளார்.

 தாமதம் ஏன்???

மேலும், புகாரின் பின்னணியில் பணப் பரிவர்த்தனை தொடர்பான விவகாரங்கள் உள்ளனவா என்பதையும், புகார் அளிப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணங்களையும் நடுநிலையாக விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

இந்த வழக்கில் உண்மை நிலை சட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் மூலம் மட்டுமே வெளிவர வேண்டும் என்றும், தனது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரு மனுக்களிலும், எந்தவிதமான அரசியல் அழுத்தமும் இன்றி, நடுநிலையான மற்றும் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்பதே முக்கிய கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

.

செவ்வாய், 19 நவம்பர், 2024

இந்து கோவிலை திறக்க தூத்துக்குடி நீதி மன்றம் உத்தரவு

அரசு தரப்பு கருத்தினை ஏற்று 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த கோவிலை பொதுமக்கள் வழிபாட்டிற்கு திறந்திட தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு



      தூத்துக்குடி தாலுகா அல்லிகுளம் கிராமத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.


 இருதரப்பிற்கிடையே ஏற்பட்ட பிரச்சனையால் கோவில் வழிபடமுடியாமல் கடந்த 7 ½ ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்து. 


இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

அரசுதரப்பில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் விதமாக கோவிலில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வழிபாடு செய்ய அனுமதிக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.


 அரசு தரப்பு கருத்தினை ஏற்ற நீதிமன்றம் 7 ½ ஆண்டுகளாக வழிபாடு பூஜை இல்லாமல் இருந்த கோவிலை திறக்கவும் பூஜை மற்றும் வழிபாடு மேற்கொள்ளவும் உரிமையியல் நீதிபதி சுமிதா உத்தரவிட்டார். 


இதற்கு அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார்.

புதன், 6 நவம்பர், 2024

கணவன் மனைவி இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (PCR Court) தீர்ப்பு.

தூத்துக்குடி மாவட்டம் : 06.11.2024


குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நட ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் விதித்து தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் (PCR Court) தீர்ப்பு.

இது பற்றிய செய்தியாவது:- 

கடற்கரை பகுதியில் குடிசை

கேரள மாநிலம் மூணாறு கோதமங்களம் பகுதியைச் சேர்ந்த தேவ சிங் (எ) தேவசியா (எ) சாக்கோ (60/13) மற்றும் அவரது மனைவி மேரி (50/13) ஆகியோர் கடந்த 2013 ஆம் வருடம் தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வந்து கடற்கரை அருகில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோவில் அருகே குடிசை அமைத்து பழைய பேப்பர் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வந்துள்ளனர்.

மனைவி இடம் தவறாக தொந்தரவு!!!

இந்நிலையில் கடந்த 17‌.10.2013 அன்று மேற்படி கணவன் மனைவி தங்கியிருந்த இடத்திற்கு வந்த குலசேகரன்பட்டினம் உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டு பகுதியைச் சேர்ந்த அமச்சியார் மகன் செல்வம் (43/24) என்பவர் மேற்படி மேரியிடம் தவறாக பேசி தொந்தரவு செய்துள்ளார். இதனை மேரியும் அவரது கணவரும் தட்டிக் கேட்டுள்ளனர். 

கணவன் மனைவி இருவருக்கும் அரிவாள் வெட்டு!!!

இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம் மேற்படி மேரி மற்றும் அவரது கணவர் தேவசிங் (எ) தேவசியா (எ) சாக்கோ ஆகிய இருவரையும் அரிவாளால் வெட்டியதில் மேரி சம்பவ இடத்திலும் மேரியின் கணவர் 19.10.2013 அன்று மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். 



கொலையாளி கைது!!!

இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து  செல்வத்தை கைது செய்தனர்.

தூத்துக்குடி நீதீ மன்றம் 

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி சிவில் உரிமை பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 


நீதி பதி தீர்ப்பு!!!

இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி  உதயவேலவன் இன்று (05.11.2024) குற்றவாளியான செல்வம் என்பவருக்கு ஒவ்வொரு கொலைக்கும் தனித்தனியாக ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதம் வித்து தீர்ப்பு வழங்கி மேற்படி தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

பாராட்டு!!!

இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்  கோவிந்தராஜ்  குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் பூங்குமார்  விசாரணைக்கு உதவியாக இருந்த  தலைமை காவலர்  முருகன் ஆகியோரையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் இ‌‌.கா.ப  பாராட்டினார்.

வியாழன், 11 ஏப்ரல், 2024

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு

தூத்துக்குடி அரசு மருத்துவமனை நுழைவு வாயில் பகுதிகளில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி வழக்கு... உயர்நீதிமன்றம் உத்தரவு




இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பு ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் அதிகாரிகள் பதில் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது. 


தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா அய்யனாரூத்து பகுதியைச் சேர்ந்த மொட்டையசாமி என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்தார் 


மனுவில், சமீபத்தில் நானும் எனது உறவினரும் காரில் தூத்துக்குடிக்கு சென்றோம். 


அப்போது எனது உறவினருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.


 இதனால் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அவரை காரில் அழைத்து சென்றோம்.


 அங்கு மருத்துவமனை நுழைவாயிலில் பல்வேறு கடைகள் ஆக்கிரமித்து இருந்தது.


இதனால் மருத்துவமனைக்குள் அவசரமாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை ஊழியர்களை ஸ்டெச்சரை எடுத்து வரச்சொல்லி எனது உறவினரை மருத்துவமனைக்குள் அழைத்து சென்று, உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினோம்.


 என்னை போல ஏராளமானவர்கள் உயிருக்கு போராடியவர்களை அழைத்துக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.


ஆனால் மருத்துவமனை நுழைவாயிலில் உள்ள ஆக்கிரமிப்புகளால் நோயாளிகள் அவதிப்படும் நிலைதான் உள்ளது. எனவே இதுபோன்ற நிலையை தவிர்க்க, தூத்துக்குடி அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அவசரமாக வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.


இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தூத்துக்குடி மாவட்ட அரசு அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு, விசாரணையை 3 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

வியாழன், 29 பிப்ரவரி, 2024

மக்களின் பக்கம் நின்று திடமாக வாதாடிய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி #பேரா. பாத்திமா பாபு ஒருங்கிணைப்பாளர் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் 2024 லீப் வருட பிப்ரவரி 29 ல் கிடைத்திட்ட மகத்தான தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள், உயர்நிதிமன்ற நீதியரசர்கள், அனைவரையும் இவ்வேளையில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

#தூத்துக்குடி லீக்ஸ்

செய்தி புகைப்படங்கள்

ரோஜா அருணன் செய்தியாளர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக முடிட...  # உச்சநீதிமன்ற தீர்ப்பு

வெளிவந்த உடன்.....

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் வியாபாரிகள் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அளவுகடந்த மகிழ்ச்சி தூத்துக்குடியில் பல இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



இதுபற்றி தூத்துக்குடி அக்கா பேராசிரியை பாத்திமா பாபு பரபரப்பு அறிக்கை விடுத்துள்ளார்

அதில் தெரிவித்தாவது:- 
கடந்த 29 ஆண்டு கால மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி.


அதற்காக நாங்கள் சந்தித்த இழப்புகள் அதிகம். 15 உயிர்கள்  என்பதை மறந்தும் கடக்க முடியாது... மன்னிக்கவும் முடியாது..


பட்ட வேதனைகள், பட்ட அவமானங்கள், பேசிய அவதூறுகள், வைத்த பொய் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் வாயடைக்க கிடைத்த மகத்தான தீர்ப்பு.



போராட்டத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும், போராட்டத்தில் காயம் பட்டவர்களுக்கும், அவர்கள் குடும்பத்தாருக்கும், போராடிய அனைத்து மக்களுக்கும், குழுக்களுக்கும் போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அனைத்து அமைப்புகள், திறம்பட வாதாடிய அனைத்து வழக்கறிஞர்கள், லீப் வருட பிப்ரவரி 29 ல் கிடைத்திட்ட மகத்தான தீர்ப்பு வழங்கிய நீதியரசர்கள், உயர்நிதிமன்ற நீதியரசர்கள், அனைவரையும்

இவ்வேளையில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.


மேலும் மக்களின் பக்கம் நின்று திடமாக  வாதாடிய தமிழக அரசிற்கும் மிக்க நன்றி.


எண்ணூர் விஷவாயு கசிவு போராட்டம்!!!

மேலும் அன்றைய தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் போராட்ட குரலுக்கு செவி சாய்க்காது 100 நாட்கள் போராடவிட்டது போல....?

 இன்றைய தமிழக அரசு எண்ணூர்  விஷவாயு கசிவு போராட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை 100 நாட்கள் போராட வைத்து விடக்கூடாது என்றும் இந்த தருணத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் சார்பாக கேட்டு கொள்கிறோம்.




பேரா. பாத்திமா பாபு

ஒருங்கிணைப்பாளர்

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம்

செவ்வாய், 20 பிப்ரவரி, 2024

தூத்துக்குடி மாவட்டம் நகை கடை உரிமையாளரை அடித்து தாக்கியவருக்குஇரண்டு ஆண்டுகள் சிறை!!!

தூத்துக்குடி உடன்குடி நகை கடை உரிமையாளரை தாக்கி நகைகடையை சேதப்படுத்திய நபருக்கு இரண்டு ஆண்டு சிறை . தூத்துக்குடி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது 



இதுபற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஜாரில் நகை கடை நடத்தி வருபவர் கிருஷ்ணன் ஆசாரி மகன் மந்திரம் இவருக்கும் ராமசாமி ஆசாரி மகன் பரமசிவம் மற்றும் அவரது சகோதரருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது.


இதன் காரணமாக கடந்த 28.1.2017 அன்று மந்திரத்தின் நகைக்கடைக்குள் நுழைந்த பரமசிவம் மந்திரத்திடம் தகராறு செய்து இரும்பு பட்டையால் அவரை தாக்கியதோடு நகை கடை ஷோ கேசையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார்.


இந்த வழக்கை விசாரித்த தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் 19.2.24 அன்று குற்றம் சாட்டப்பட்ட பரமசிவத்திற்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.


இந்த வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் திரு. மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.

வெள்ளி, 22 செப்டம்பர், 2023

சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி பரபரப்பு தீர்ப்பு

 தூத்துக்குடி லீக்ஸ் 22-9-2023

த.சண்முகசுந்தரம் 

மூத்த பத்திரிகையாளர் 

தூத்துக்குடியில் சலவை துறைக்கு வழங்கிய 1 கோடி மதிப்புள்ள நிலத்தை உரிமை கோரிய வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்து பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாடு அரசு தூத்துக்குடி நகராட்சிக்கு சலவை துறைக்காக மாப்பிள்ளையூரணி கிராமத்தில் ஒதுக்கிய சர்வே எண்: 223/6 நிலத்தில் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பகுதி நிலத்தை தங்களுக்குரியது என போலி பட்டா தாக்கல் செய்து உரிமை கோரி துரைசிங்கம் என்பவர் குடும்பத்தினர் தமிழ்நாடு அரசு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது தாக்கல் செய்த வழக்கு மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

விசாரணை செய்த நீதிபதி சுமிதா மேற்படி வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். அரசு சார்பில் அரசு வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார். 

இச்சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெள்ளி, 15 செப்டம்பர், 2023

வி ஏ ஒ கொலையில் தூத்துக்குடி நீதிமன்றம் விரைவாக பரபரப்பு தீர்ப்பு மணல் கடத்தல் கொலை விவகாரம் குற்றவாளிகள் 2 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு.

 தூத்துக்குடி லீக்ஸ் 15.09.2023


 வி.ஏ.ஓ கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலை நடந்த 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, 143 நாட்களில் குற்றவாளிகள் 2 பேருக்கும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு.

இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முறப்பநாடு கிராம நிர்வாக அலுவகத்தில் கடந்த 25.04.2023 அன்று கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் சேவியர் அவர்கள் குற்றவாளிகள் மீது மணல் கடத்துவதற்கு எதிராக புகார் அளித்ததன் பேரில் ஏற்பட்ட கோபத்தில்   மேற்படி கிராம நிர்வாக அலுவலரைக் கொலை செய்தனர். 

ராமசுப்பிரமணியன் (எ) ராமசுப்பு


இவ்வழக்கில் கலியாவூரைச் சேர்ந்த ராமசாமி மகன் ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (38) மற்றும் முருகன் மகன் மாரிமுத்து (31) ஆகிய இருவரையும் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் உடனடியாக கைது செய்தனர்.

மாரிமுத்து 


 அதனைத் தொடர்ந்து இருவரும் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.  

 இந்நிலையில் இவ்வழக்கை தூத்துக்குடி ஊரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சுரேஷ் அவர்கள் தலைமையிலான போலீசார் திறம்பட புலன் விசாரணை செய்து சம்பவம் நடந்த 57 நாட்களில் (21.06.2023 அன்று) குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த மதிப்பிற்குரிய கனம் நீதிபதி திரு. எம். செல்வம் அவர்கள் இன்று (15.09.2023) குற்றவாளிகளான ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவருக்கும் இந்திய தண்டனைச்சட்டம் 302 பிரிவின்படி ஆயுள் தண்டனையும், ரூபாய் 2000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டம் 449ன்படி 5 வருடம் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூபாய் 1000/- அபராதமும், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 506(ii)ன்படி ஒரு வருடம் கடுங்காவல் சிறைத் தண்டணையும் விதித்து ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.


இந்த சம்பவம் நடந்து 57 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து 143 நாட்களில் குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்றுத்தந்தது குறிப்பிடத்தக்கது. 


இவ்வழக்கை அரசு சிறப்பு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல்  திறம்பட வாதிட்டார்.

திங்கள், 3 ஏப்ரல், 2023

அரசு நிலத்தில் உரிமை கோரி தாக்கல் செய்த வழக்கு தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி

 thoothukudileaks 4-4-2023

photo news by shanmuga sunthram 

அரசு நிலத்தில் உரிமை கோரி தாக்கல் செய்த வழக்கை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பொட்டல்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் முள்ளக்காடு கிராமம் சர்வே எண் 744ல் தனது முன்னோர்கள் காலத்திலிருந்து வீடு கட்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருவதாக தெரிவித்து மேற்படி சொத்து எனக்கு சொந்தமானது என உரிமை கோரியும் அரசு தனக்கு எந்த இடஞ்சலும் செய்யக்கூடாது என்றும் தூத்துக்குடி மாவட்ட முன்சீப் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். 



அரசு தரப்பில் மேற்படி நிலம் அரசுக்கு சொந்தமான பாதை என அரசு வழக்கறிஞர் சுபேந்திரன், அரசுக்கு ஆதரவாக வாதித்த இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்தார்.

 நீதிபதி சுமிதா பொட்டல்காடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.

புதன், 22 பிப்ரவரி, 2023

அதிமுக பொது செயலாளர் எடப்பாடியார் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு லட்டு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். தூத்துக்குடி காவல்துறை க்கு வாயில் லட்டு ஊட்டி மகிழ்ச்சி தெரிவித்த அதிமுகவினர் முன்னாள் மேயர்!!!

thoothukudileaks 23-2-2023

news Photo by Roja arunan 

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வார் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பால் பன்னீர்செல்வம் தரப்பு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 



ஒபி எஸ் தனிகட்சி?

ஒபிஎஸ் க்கு ஆதரவு தெரிவித்து நம்பி வந்த புதிய மா.செ. மற்றும் தொண்டர்கள் ?

 ஒபி எஸ் அணியினர் நிலைகுலைந்து போயுள்ளனர். இனி ஒபிஎஸ் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியல் பண்ணுவாரா ?!அல்லது ஆளும் கட்சிகளான மத்திய மாநில பாஜக திமுக வில் தன்னை இனைத்து கொள்வாரா ஊடகங்களில் வாதம் அரங்கேறி வருகிறது.

இதுபற்றிய செய்தியாவது -

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

எடப்பாடியார் தரப்பு

விசாரணையில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தை பொருத்தமட்டில் கட்சியின் விதிகள் எந்த ஒரு இடத்திலும் மீறப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், கட்சியின் செயல்பாடுகள் முடங்கிப் போய் உள்ளது. 

நிர்வாக ரீதியிலான பிரச்னைகளை ஏற்படுத்தவே இதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


மேலும் அனைத்து தரப்பு ஒப்புதலுக்கு பிறகு தான் கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுகவின் உச்ச பட்ச அதிகாரங்களைக் கொண்ட ஒரு அமைப்பு தான் அதிமுக பொதுக்குழு ஆகும். எனவே அதற்கு தான் அனைத்து அதிகாரங்கள் உண்டு. அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது’’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.

ஒ.பி பன்னீர் செல்வம் தரப்பு

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பி.எஸ் தரப்பு, ‘‘அதிமுகவில் இல்லாத இரண்டு பதவிகளை உருவாக்க வேண்டும் என்று கேட்டதே எடப்பாடி பழனிசாமி தரப்பு தான். 

இருப்பினும் அதுதொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் சரியாக சென்று கொண்டு இருந்த போது, தற்போது அவர்களே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இரண்டு பதவிகளும் நீக்கப்பட வேண்டும் என்று சொல்கின்றனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரண்டு பதவிகளும் காலியாகும் போது, அடுத்த ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் நியமிக்கப்படும் வரை ஏற்கனவே இருந்தவர்களால் நியமிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளால் தான் தொடர்ந்து கட்சி நடத்தப்பட வேண்டும் என்றும், தேர்தல் நடத்தப்பட்டு இரண்டு பதவிகளும் நிரப்பப்பட வேண்டும் என்பதும் அதிமுகவின் சட்ட விதிமுறை ஆகும்’’ என தெரிவிக்கப்பட்டது.


அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த மாதம் 11ம் தேதி ஒத்தி வைத்திருந்தது. இந்தநிலையில் ...மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (23-2-2023)காலை தீர்ப்பு வழங்கியது..

அதிமுக எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடர்வார் என்று உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. உறுதி செய்த உச்சநீதிமன்றம் .

தூத்துக்குடியில்...




தீர்ப்பு வெளியானதும் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாடி வருகிறார்கள் 

தூத்துக்குடியில்...காவல்துறையினருக்கு லட்டு வழங்கும் வீடியோ தூத்துக்குடி முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ்

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதில் ஈரோடு இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அதிமுக வுக்கு  மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக  ஈரோடு வேட்பாளர் வெற்றி க்கு அச்சாரமான அதிமுகவினர் தெரிவிக்கிறார்கள்.


புதன், 25 ஜனவரி, 2023

தமிழகத்தில் குட்கா- புகையிலை -பான் மாசாலா தடை ரத்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பிப்பு இதனால் பான்ப்ராக் பாக்கு போடுவர் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுதுள்ளது

 thoothukudileaks 25-1-2023

Photo news by Roja arunan 

தமிழகத்தில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கான தடை உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

இது பற்றிய செய்தியாவது:-

உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



கடந்த 2006-ம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, சுவையூட்டப்பட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். ஆண்டுதோறும் இது தொடர்பான அறிவிப்பாணைகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.


இந்த உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக குற்ற நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இதனால், அரசின் அறிவிப்பாணையை எதிர்த்தும், குற்ற நடவடிக்கையை எதிர்த்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதேபோல, தடையை மீறியதாக ஒரு நிறுவனத்துக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸை ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை எதிர்த்தும் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் மேல் முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்குகள் அனைத்தும் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்குகளை விசாரித்த நீதிபதிகள்,

"உணவின் பாதுகாப்பு மற்றும் தரத்தை உறுதி செய்வதற்காக கொண்டு வரப்பட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தில் புகையிலையை உணவுப் பொருளாக சுட்டிக்காட்டவில்லை. சிகரெட் மற்றும் பிற புகையிலைப் பொருட்கள் விளம்பரப்படுத்த தடை மற்றும் விநியோக முறைப்படுத்தல் சட்டத்தில் புகையிலைப் பொருட்களை விளம்பரப்படுத்துவதை முறைப்படுத்துவதைப் பற்றியே தெரிவிக்கப்பட்டுள்ளது.


புகையிலைப் பொருட்களுக்கு முழு தடை விதிக்க இந்த இரு சட்டங்களும் வழிவகை செய்யவில்லை. தடை விதிக்கும் அதிகாரத்தையும் வழங்கவில்லை. குறிப்பிட்ட வழக்குகளில் நீதிபதிகள், உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் அவசர நிலை கருதி தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, உணவு பாதுகாப்பு ஆணையர் தனது அதிகாரத்தை மீறி, புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து, அவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.


இந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்வதாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.