ஸ்டெர்லைட் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்டெர்லைட் எதிர்ப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 செப்டம்பர், 2026

தமிழக அரசின் நிலைப்பாடு சிபிஐ(எம்) எதிர்ப்பு தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்த்தில் துப்பாக்கிச்சூடு கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு: கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது உறுதியான நடவடிக்கை தேவை!

தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்

தூத்துக்குடி: செப் 1

2018-ஆம் ஆண்டு தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

thoothukudileaks


இதுகுறித்து 01.09.2026 அன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-ஆம் ஆண்டு ஸ்டெர்லைட்டை எதிர்த்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும், இதில் 13 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்ததாகவும், அதில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் உட்பட 17 காவல்துறையினர், மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வட்டாட்சியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை மேற்கொள்வதுடன், குற்ற வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்ததாகவும் சிபிஐ(எம்) மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.


தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு சிபிஐ(எம்) எதிர்ப்பு

31.08.2026 அன்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த கருத்துகள், கொலைக்கு காரணமான அதிகாரிகளை பாதுகாக்கும் நோக்கத்தைக் கொண்டதாக இருப்பதாக சிபிஐ(எம்) மாநில செயலாளர் பெ.சண்முகம் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மக்கள் சுட்டிக்காட்டிய சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகமோ அல்லது அரசு அமைப்புகளோ உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய சம்பவம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தற்போதைய தமிழக அரசு, முந்தைய திமுக அரசு மேற்கொண்ட நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமானதாக ஆணையத்தால் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய துறைவாரியான நடவடிக்கை மற்றும் குற்ற வழக்குகளைப் பதிவு செய்து சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் ஆணையம் பரிந்துரைத்த இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசை சிபிஐ(எம்) வலியுறுத்தியுள்ளது.

— பெ.சண்முகம், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ(எம்))



செய்தி புகைப்படங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வெள்ளி, 22 மே, 2026

தூத்துக்குடி மக்கள் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை? தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டுமென ஜனநாயக முறையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தார்கள் போலீசாரால் அநியாயமாக துப்பாக்கி சூடு 16 பேர் படுகொலை இறப்பு படுகொலை செய்தவர்களுக்கு தண்டனை எப்போது ? ஸ்டெர்லைட் ஆலை தளவாடங்கள் முழுவதும் அகற்றுவது எப்போது ? ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு பரபரப்பு பேட்டி அன்று நடந்தது என்ன தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு கட்டுரை

Tamil Nadu updates, 22-5-2026

செய்தி கட்டுரை புகைப்படங்கள் 

ரோஜா அருணன் செய்தியாளர் 

தூத்துக்குடி மே‌ 22

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையர்க்கு எட்டாம் ஆண்டு  வீர வணக்கம் தமிழகத்தை உலுக்கிய கரும் பகலை தூத்துக்குடி மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை   ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் மற்றும் மின்னல் அம்ஜத் தலைமையில் தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில் கண்ணீர் மல்க மெழுகு வர்த்தி 🔥 தீபம் ஏற்றி சிகப்பு ரோஜா இதழ்கள் தூவி அஞ்சலி நடைபெற்றது.

thoothukudileaks


இது பற்றி செய்தியாவது:-

கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

 

thoothukudileaks

அன்றைய தினத்தில் ..

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை வேற எங்கோ ஓடி விட்டார்? 

ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்ற கோரி கோஷமிட்டபடி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது காலை பதினொரு மணியளவில் பொதுமக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி  திட்டமிட்டபடி  முந்தைய இரவு இருந்தே குவிக்கப்பட்ட தமிழக காவல்துறை பெரும் படை  ஈவு இரக்கமின்றி பொதுமக்கள் நோக்கி ராணுவத்தில் பயன் படுத்த கூடிய நவுன ரக சினேப்பர் துப்பாக்கி முதற் கொண்டு வந்து  துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இதில் 13 பேர் சம்பவ நாளிலும் மீதி முன்று பேர் மறுநாட்களிலும் பலியாகினர்.

அன்றைய தினம் ஆலை பக்கம் யாரும் வந்து விடாது  என   ஸ்டெர்லைட் ஆலைக்கு முன் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.


அது போக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஆயிரக்கணக்கான  பொதுமக்கள் மீது காவல் துறை காட்டுதர்பார்  நடத்தி விரட்டி கொண்டு இருந்தார்கள் 

வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் இளைஞர்கள் இருட்டறையில் .. அடித்து சித்ரவதை!!! 

போராட்டத்தில் வந்தவர்களை ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடு தளம் போலீஸ் வேன்களில் பிடித்து கொண்டு போய் இருட்டறையில் அடித்து சித்ரவதை செய்தனர் பெற்றோர்கள் தங்கள் மகன்களை காணவில்லை என தேடி னார்கள்.

அதை அறிந்து களத்தில் இறங்கிய தூத்துக்குடி வழக்கறிஞர்கள் அனைவரும் முயற்சி எடுத்து காவல்துறையிடம் இருந்து அவர்களை மீட்டெடுத்தனர்.வழங்கறிஞர்கள் அனைவரும் பெரும் உதவி செய்தார்கள்.

 அப்பவும் விடாமல் தூத்துக்குடி இளைஞர்களை இரவில் வீடுவீடாக சுவர் ஏறிகுதித்ததும்... தேடிப்பிடித்து காவல்நிலையத்தில் கொண்டு வந்து  அடித்தார்கள் வழக்கு பதிவு செய்தனர் .

ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க.. ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது. 

துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட வெளியுலகிற்கு போட்டோ வீடியோ தெரியக்கூடாது என ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் நெட் போன் இனைப்பை முழுவதும் துண்டித்தனர்.

தூத்துக்குடி தனி தீவு என மாறியது மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது !!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அதன் அன்பளிப்பு கவனிப்புகளுக்கு விசுவாசமாக மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இருந்தது.

அப்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் வீட்டைவிட்டு சில பகுதிகளில் சிறு குழந்தைகள் நடமாட முடியவில்லை? தெருத்தெருவாக போலீஸ் குவிப்பு வாகனம் நிறுத்தினார்கள் 

 அந்த வாரம் முழுவதும் பொதுமக்களை ஓட ஓட அடித்து நொறுக்கியும் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு இருந்தார்கள் 


போலீஸ் துப்பாக்கியால் சுட்டு விட்டு  போலீஸ் தனது பூட்ஸ் காலால் மிதித்து புரட்டியபடி நடிக்கிறான் இவன் சாகவில்லை எக்களிப்பும் இன்னும் யாரும் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பது தான் இஃது போன்ற நினைவுலைகள் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் வெளிப்பட்டது.

நீதி கிடைக்க வில்லை !!!

 மேலும் 16 பேர் மீது துப்பாக்கி சூடு படுகொலை செய்தவர்களுக்கு அதிமுக- திமுக ஆட்சியில் அதற்குரிய தண்டனை  தர வேண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் கூட்டமைப்பு கள் போராடியும் இன்னும் நீதி கிடைக்க வில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை 

விசாரணை கமிஷன் அறிக்கை!!!

இதில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளிகள் யாரென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது 

ஸ்டெர்லைட் இன்றும் தளவாடங்கள் அகற்ற வில்லை!!!

அடுத்து தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலை தனது தளவாடங்கள் அப்புறப்படுத்த உத்தரவு வந்தும் மூன்று மாதம் அவகாசம் கொடுத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது 

வருடங்கணக்காகியும் திமுக அரசு மற்றும் நிர்வாகம் தூத்துக்குடி ஆட்சியர் தூத்துக்குடி எம்பி தூத்துக்குடி அமைச்சர் எவரும் மக்கள் பிரச்சனை இதுவென கருதி  செயல்படுத்த முன் வரவில்லை 

பசுமை தாமிரமா? 

மீண்டும் அதிர்ச்சி !!!

தூத்துக்குடி மக்களின் பெரும் சோகம் இந்த இலட்சுணத்தில் பசுமை தாமிரம் என்ற மாற்று பெயரில் மீண்டும் குடிபுக தீட்டப் தீட்டி  வருவதாக சொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது .

இது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கினறனர். 

வியாபாரிகள் அஞ்சலி!!

தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையருக்கு எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சொ. தெர்மல் ராஜா. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ஜவகர் மத்திய வியாபார சங்கம் பொருளாளர் விக்னேஷ் பாளைரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நவமணி தங்கராஜ்,பெத்து மாரியப்பன், முத்து கனி, சட்ட ஆலோசகர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மின்னல் அம்ஜத் தலைமையில்.. தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில்... 

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் 16 பேருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது 

thoothukudileaks


இந்த நிகழ்ச்சியில் மின்னல் அம்ஜத் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு,  முன்னாள் தூத்துக்குடி எம்பி அப்பாதுரை, சின்ன கோயில் பாதர்,

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


திரு இருதய நண்பர்கள் இயக்கம் பொது செயலாளர் மற்றும் இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா, பிரின்ஸ் கர்டோசா புரட்சி கர இயக்கம் சுதிஷ், வாழ்வுரிமைக் கட்சி கிதார் பிஸ்மி , புரட்சி பாரதம் மாரி செல்வம், மற்றும் தியாகிகளின் குடும்ப உறவுகள்  கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். 

thoothukudileaks


இன்றும்....

எட்டாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை அங்காங்கே குவிக்கப்பட்டு வருவோர் போவோர் அனைவரையும் கண்காணிப்பு செய்தபடியே இருந்து வந்தார்கள் .

thoothukudileaks


ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.


வியாழன், 12 மார்ச், 2026

வேடநத்தம் மாணவி படுகொலை கண்டித்து தூத்துக்குடியில் விடுதலை சிறுத்தைகள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் — 12 மார்ச் 2026, வியாழக்கிழமை


thoothukudileaks


தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தொழிலாளி  சுப்புராஜ் —  காளீஸ்வரி தம்பதியினரின் இரண்டாவது மகள் பிளஸ் 2 பள்ளி மாணவி  கொலை செய்யப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

thoothukudileaks


 இந்த மிகவும் கொடூரமான படுகொலையை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரியும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முழு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கமும் இணைந்து 12-3-2026 அன்று தூத்துக்குடி அண்ணா நகர் 7வது தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின.

thoothukudileaks


இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் வீராங்கனை அமைப்பின் தலைவருமான பேராசிரியர் பாத்திமா பாபு  உரையாற்றுகையில், ...

தென் மாவட்டங்களில் இளம் மாணவிகள் மீதான வன்முறை சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது மிகவும் வேதனையான விஷயம் என்றும், இதற்கு அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

thoothukudileaks



ஏஐசிசிடியு தொழிற்சங்கத்தின் தேசிய செயற்குழு உறுப்பினரும் மாவட்ட தலைவரும் ஆன தோழர் மின்னல் அம்ஜத்  கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். 

விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிரவீனா அவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து பேச்சாளர்கள் கடும் கோபம் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து மதுரை — தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை என்னும் இடத்தில் சுமார் ஐந்து மணி நேரம் தொடர் மறியல் நடைபெற்றது. 

thoothukudileaks

thoothukudileaks


உண்மையை கண்டறியும் நோக்கில் தமிழக வணிகர்களின் மத்திய சங்கத்தின் மாவட்ட செயலாளரும் வழக்கறிஞருமான தெர்மல் ராஜா , ..நெய்தல் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் நெய்தல் அன்டோ  உடன் வந்து மாணவி பிரதீபாவின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் வழங்கினர். 


காவல்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, கொலையாளிகளை நெருங்கிவிட்டதாகவும் அன்றே கைது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். இதனை ஏற்று போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

தென் மாவட்டங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் படுகொலைச் சம்பவங்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும், மாணவர்களிடையே பெருகிவரும் போதை பழக்கங்களை கண்டறிந்து பள்ளிகளில் ஒழுக்க கல்வி வழங்க வேண்டும் என்றும், போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் போராட்ட குழுவின் சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை கொடுக்கப்பட்டது.

திங்கள், 23 பிப்ரவரி, 2026

கிரீன் காப்பர்" என்பது அரிதாரம் பூசிய அவதாரம்! ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கண்டனம்

Tamil Nadu updates, Arunan journalist 

🗞️ தூத்துக்குடி லீக்ஸ் | 23 பிப்ரவரி 2026

தூத்துக்குடி  பெ 23

துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி, இரு நீதிமன்றத் தீர்ப்புகள் — இதற்குப் பிறகும் நச்சு ஆலையை மீண்டும் திறக்க சூழ்ச்சி!

தூத்துக்குடி மாவட்ட மக்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தெருவிலும், நீதிமன்றத்திலும், அரசு அலுவலகங்களிலும் ஸ்டெர்லைட் நச்சு ஆலையை அகற்றக் கோரி இடைவிடாது போராடி வருகின்றனர்.

thoothukudileaks
மதிமுக தலைவர் வைகோ உடன் ...


மே 22, 2018 அன்று அமைதியான போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மே 28, 2018 அன்று தமிழக அரசு ஆணையின்படி ஆலை மூடப்பட்டது.

ஆகஸ்ட் 18, 2020 அன்று சென்னை உயர் நீதிமன்றம், "சுற்றுச்சூழல் வளர்ச்சிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முரண்பாடு ஏற்படும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்" என தீர்க்கமான தீர்ப்பை வழங்கியது.

 இதை வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் சவால் செய்தபோது, "மறுபரிசீலனைக்கு எந்த முகாந்திரமும் இல்லை" என உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உறுதிப்படுத்தியது.

மீண்டும்!!!

இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் இப்போது "கிரீன் காப்பர் — பசுமை மீள்தொடக்கம்" என்ற புதிய போர்வையில் ஆலையை மீண்டும் செயல்படுத்த முயற்சிக்கிறது என்று ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் கடுமையாக சாடியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையின் கள்ளத்தனம் !!!

இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், "பழைய கள்ளத்தனத்திற்கு புதிய மொந்தை போட்டு மாற்ற முயல்கின்றனர். 

2021 கோவிட் நெருக்கடி காலத்தில் ஆலை நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 1050 MT ஆக்சிஜன் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் உண்மையில் 90 MT கூட உற்பத்தி செய்ய முடியவில்லை" என்று அம்பலப்படுத்தியுள்ளனர்.


மக்கள் இயக்கம் அரசிடம் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றுதான் — இந்த ஆலையை அடியோடு அகற்றுங்கள். "பசுமை மீள்தொடக்கம்" என்ற விஷப்பரீட்சையை மக்களின் போராட்டத்தின் மேல் திணிக்காதீர்கள்!

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks
தோழர் திரு உடன் 

thoothukudileaks
 சௌந்தரராஜன்
மாநில தலைவர்
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை 

thoothukudileaks
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்  




ஞாயிறு, 27 ஜூலை, 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மக்களுக்கான நியாயக் குரலை அடக்க நினைக்கும் ஆபத்தான முயற்சி!

Tamil Nadu updates, photo news by Arunan journalist 


🟥 

தூத்துக்குடி, ஜூலை 27:
மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி G.R. சுவாமிநாதன் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடர்ந்திருக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீக்கப்பட வேண்டும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ்


இதே நேரத்தில், நீதிபதி சுவாமிநாதன் மீதான வாஞ்சிநாதன் அளித்த புகாரை உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும் உறுதி கூறப்பட்டுள்ளது.

🔹 மக்களின் உரிமைக்காக நிலைத்து நிற்கும் வாஞ்சிநாதன்
சாதி, மத, பாசிச, கார்ப்பரேட் நலன்களை மீறி மக்களுக்கான உரிமைகளை உரக்க பேசியவரே வாஞ்சிநாதன்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் வழிபட உரிமை, கூடங்குளம் அணுமின் திட்ட எதிர்ப்பு, வைகுண்ட ராஜனின் VV தாது மணல் கொள்ளை, போலீஸ் லாக்கப் டெத், நீதிமன்ற ஊழல், அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, தூத்துக்குடி டோல் கட்டண கொள்ளை, மதநல்லிணக்கத்திற்கான கூட்டமைப்புகள் எனப் பல பரப்பளவுகளில் நீதி, சமத்துவத்தின் குரலாக செயல்பட்டவர்.

🔹 ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரு தூணாக நின்றவர் 


24.03.2018 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், மக்கள் கூட்டத்திற்கு நீதிமன்ற அனுமதி பெற்றுத்தந்தும், மேடையில் உரையாற்றியதுமாக வாஞ்சிநாதன் அடையாளம் பெற்றார்.


பின்னர் பல ஊர்களை ஒருங்கிணைத்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டமைப்பை உருவாக்கி, 25,000 பேருடன் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு பேரணி நடத்த ஆலோசனையளித்தார்.

🔹 60 வழக்குகள் – சிறை அனுபவம் – திரும்பிப் பார்க்காத சேவை
22.05.2018 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் குறிவைக்கப்பட்டு, 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி லீக்ஸ்


 பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு குடும்பத்தோடு வாழும் உரிமையை துறந்து மக்களுக்காக துயரத்தை ஏற்றுக் கொண்டவர்.

🔹 மக்களுக்கு இலவச சட்ட உதவி
மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற முடியாதவர்களுக்கு, அவர் ஜாமீன் பெற்றுத்தந்து, ஒரு காசும் பெறாமல் சமூக நலனுக்காக வழக்குகளில் ஆஜராகி வந்துள்ளார்.
இன்று வரை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகராக உள்ளார்.

🔹 அதிரும் குரல் – அடக்க முயற்சிகள்
அவரைப் போல மக்கள் சார்ந்த வழக்கறிஞர் நீதிமன்றங்களில் இருப்பது சில சக்திகளுக்கு வருத்தமாக இருக்கலாம். அவரை "அவமதிப்பு" என்ற பெயரில் சட்டத்திலிருந்து வெளியேற்ற முயற்சிகள் நடைபெறுகின்றன.
இது ஒரு தனிப்பட்ட தாக்குதலல்ல – இது மக்கள் நீதிக்கு எதிரான தாக்குதல்!

📣 மக்களே! வாய்மையை காக்க குரல் கொடுப்போம்!
வாஞ்சிநாதனை கரங்களை உயர்த்தி ஆதரிப்போம்!
சமூக வலைதளங்களிலும், மக்கள் சந்திப்புகளிலும் இவருக்கு ஆதரவாக குரல் கொடுப்போம்!


✍️ இப்படிக்கு,
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு