Tamil Nadu updates, 22-5-2026
செய்தி கட்டுரை புகைப்படங்கள்
ரோஜா அருணன் செய்தியாளர்
தூத்துக்குடி மே 22
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையர்க்கு எட்டாம் ஆண்டு வீர வணக்கம் தமிழகத்தை உலுக்கிய கரும் பகலை தூத்துக்குடி மன்னிக்கவும் இல்லை மறக்கவும் இல்லை ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் மற்றும் மின்னல் அம்ஜத் தலைமையில் தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில் கண்ணீர் மல்க மெழுகு வர்த்தி 🔥 தீபம் ஏற்றி சிகப்பு ரோஜா இதழ்கள் தூவி அஞ்சலி நடைபெற்றது.
இது பற்றி செய்தியாவது:-
கடந்த 2018 மே 22 ல் ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கையில் மனுவுடன் கலெக்டர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
அன்றைய தினத்தில் ..
தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை வேற எங்கோ ஓடி விட்டார்?
ஆனால் கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்ற கோரி கோஷமிட்டபடி ஜனநாயக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போது காலை பதினொரு மணியளவில் பொதுமக்களை முன்னறிவிப்பு ஏதுமின்றி திட்டமிட்டபடி முந்தைய இரவு இருந்தே குவிக்கப்பட்ட தமிழக காவல்துறை பெரும் படை ஈவு இரக்கமின்றி பொதுமக்கள் நோக்கி ராணுவத்தில் பயன் படுத்த கூடிய நவுன ரக சினேப்பர் துப்பாக்கி முதற் கொண்டு வந்து துப்பாக்கி சூடு நடத்தினார்கள் இதில் 13 பேர் சம்பவ நாளிலும் மீதி முன்று பேர் மறுநாட்களிலும் பலியாகினர்.
அன்றைய தினம் ஆலை பக்கம் யாரும் வந்து விடாது என ஸ்டெர்லைட் ஆலைக்கு முன் நூற்றுக்கணக்கான போலீஸ் குவிப்பு முழு பாதுகாப்பு வழங்கப்பட்டது.
அது போக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது காவல் துறை காட்டுதர்பார் நடத்தி விரட்டி கொண்டு இருந்தார்கள்
வல்லநாடு துப்பாக்கி சூடு தளத்தில் இளைஞர்கள் இருட்டறையில் .. அடித்து சித்ரவதை!!!
போராட்டத்தில் வந்தவர்களை ஐநூறுக்கும் மேற்பட்டவர்களை தூத்துக்குடி வல்லநாடு துப்பாக்கி சூடு தளம் போலீஸ் வேன்களில் பிடித்து கொண்டு போய் இருட்டறையில் அடித்து சித்ரவதை செய்தனர் பெற்றோர்கள் தங்கள் மகன்களை காணவில்லை என தேடி னார்கள்.
அதை அறிந்து களத்தில் இறங்கிய தூத்துக்குடி வழக்கறிஞர்கள் அனைவரும் முயற்சி எடுத்து காவல்துறையிடம் இருந்து அவர்களை மீட்டெடுத்தனர்.வழங்கறிஞர்கள் அனைவரும் பெரும் உதவி செய்தார்கள்.
அப்பவும் விடாமல் தூத்துக்குடி இளைஞர்களை இரவில் வீடுவீடாக சுவர் ஏறிகுதித்ததும்... தேடிப்பிடித்து காவல்நிலையத்தில் கொண்டு வந்து அடித்தார்கள் வழக்கு பதிவு செய்தனர் .
ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்க.. ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு ஆதரவாக காவல்துறை செயல்பட்டது.
துப்பாக்கி சூடு சம்பந்தப்பட்ட வெளியுலகிற்கு போட்டோ வீடியோ தெரியக்கூடாது என ஒருவாரமாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இணைய சேவைகள் நெட் போன் இனைப்பை முழுவதும் துண்டித்தனர்.
தூத்துக்குடி தனி தீவு என மாறியது மறக்க முடியாது மன்னிக்கவும் முடியாது !!!
ஸ்டெர்லைட் ஆலைக்கு முழு பாதுகாப்பு கொடுத்து அதன் அன்பளிப்பு கவனிப்புகளுக்கு விசுவாசமாக மாவட்ட ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை இருந்தது.
அப்போது தூத்துக்குடியில் பொதுமக்கள் வீட்டைவிட்டு சில பகுதிகளில் சிறு குழந்தைகள் நடமாட முடியவில்லை? தெருத்தெருவாக போலீஸ் குவிப்பு வாகனம் நிறுத்தினார்கள்
அந்த வாரம் முழுவதும் பொதுமக்களை ஓட ஓட அடித்து நொறுக்கியும் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டு இருந்தார்கள்
போலீஸ் துப்பாக்கியால் சுட்டு விட்டு போலீஸ் தனது பூட்ஸ் காலால் மிதித்து புரட்டியபடி நடிக்கிறான் இவன் சாகவில்லை எக்களிப்பும் இன்னும் யாரும் மறக்கவும் இல்லை மன்னிக்கவும் இல்லை என்பது தான் இஃது போன்ற நினைவுலைகள் எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் வெளிப்பட்டது.
நீதி கிடைக்க வில்லை !!!
மேலும் 16 பேர் மீது துப்பாக்கி சூடு படுகொலை செய்தவர்களுக்கு அதிமுக- திமுக ஆட்சியில் அதற்குரிய தண்டனை தர வேண்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் மற்றும் கூட்டமைப்பு கள் போராடியும் இன்னும் நீதி கிடைக்க வில்லை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை
விசாரணை கமிஷன் அறிக்கை!!!
இதில் ஒய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையில் குற்றவாளிகள் யாரென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது
ஸ்டெர்லைட் இன்றும் தளவாடங்கள் அகற்ற வில்லை!!!
அடுத்து தூத்துக்குடி மண்ணில் ஸ்டெர்லைட் ஆலை தனது தளவாடங்கள் அப்புறப்படுத்த உத்தரவு வந்தும் மூன்று மாதம் அவகாசம் கொடுத்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வருடங்கணக்காகியும் திமுக அரசு மற்றும் நிர்வாகம் தூத்துக்குடி ஆட்சியர் தூத்துக்குடி எம்பி தூத்துக்குடி அமைச்சர் எவரும் மக்கள் பிரச்சனை இதுவென கருதி செயல்படுத்த முன் வரவில்லை
பசுமை தாமிரமா?
மீண்டும் அதிர்ச்சி !!!
தூத்துக்குடி மக்களின் பெரும் சோகம் இந்த இலட்சுணத்தில் பசுமை தாமிரம் என்ற மாற்று பெயரில் மீண்டும் குடிபுக தீட்டப் தீட்டி வருவதாக சொல்லப்படுவது பெரும் அதிர்ச்சியாக பார்க்கப்படுகிறது .
இது குறித்து தமிழக முதல்வர் விஜய் அவருக்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு கோரிக்கை வைத்துள்ளார் என தெரிவிக்கினறனர்.
வியாபாரிகள் அஞ்சலி!!
தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் சார்பில் ... ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த ஈகையருக்கு எட்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட தலைவர் டாக்டர் சொ. தெர்மல் ராஜா. தூத்துக்குடி நகர வர்த்தகர்களின் மத்திய சங்கம் தமிழ்நாடு வணிகர் சங்கம் பேரவை வடக்கு மாவட்ட செயலாளர் ஜெ. ஜவகர் மத்திய வியாபார சங்கம் பொருளாளர் விக்னேஷ் பாளைரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் நவமணி தங்கராஜ்,பெத்து மாரியப்பன், முத்து கனி, சட்ட ஆலோசகர் தனவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மின்னல் அம்ஜத் தலைமையில்.. தெற்கு புது தெரு சமுதாய கூடத்தில்...
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகள் 16 பேருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் மின்னல் அம்ஜத் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம் ஒருக்கினைப்பாளர் பேராசிரியர் பாத்திமா பாபு, முன்னாள் தூத்துக்குடி எம்பி அப்பாதுரை, சின்ன கோயில் பாதர்,
திரு இருதய நண்பர்கள் இயக்கம் பொது செயலாளர் மற்றும் இந்திய கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கம் தூத்துக்குடி மாவட்டம் ஒருங்கிணைப்பாளர் தங்கையா, பிரின்ஸ் கர்டோசா புரட்சி கர இயக்கம் சுதிஷ், வாழ்வுரிமைக் கட்சி கிதார் பிஸ்மி , புரட்சி பாரதம் மாரி செல்வம், மற்றும் தியாகிகளின் குடும்ப உறவுகள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
இன்றும்....
எட்டாம் ஆண்டு நினைவு தினம் அஞ்சலி தூத்துக்குடி மாநகர் முழுவதும் காவல்துறை அங்காங்கே குவிக்கப்பட்டு வருவோர் போவோர் அனைவரையும் கண்காணிப்பு செய்தபடியே இருந்து வந்தார்கள் .
ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்று தான் சொல்ல தோன்றுகிறது.











கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக