தமிழக வெற்றி கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழக வெற்றி கழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அமைச்சர் மதன் ராஜா தலைமையில் நடைபெற்றது

தூத்துக்குடி: ஆகஸ்ட் 9
தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழகச் செயலாளரும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருமான மாண்புமிகு மதன் ராஜா, BE., MLA தலைமையில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மற்றும் கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று (9-8-2026)மாலை 5 மணியளவில் நடைபெற்றது.

thoothukudileaks
அமைச்சர் மதன் ராஜா -வுக்கு அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு 


முதற்கட்டமாக நடைபெற்ற தூத்துக்குடி மத்திய ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், தூத்துக்குடி மத்திய ஒன்றிய செயலாளர்  ஜெபஸ்துராஜ், இணைச் செயலாளர் திருவடி  தினேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்த், சதீஷ்குமார், செல்வராஜ், முத்து ஜெயகலா, பொருளாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர் ராஜேஷ் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

தொடர்ந்து கருங்குளம் வடக்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர்   முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

thoothukudileaks


thoothukudileaks
ஆலோசனை கூட்டத்தில்.. அமைச்சர் மதன் ராஜா பேசுகையில் 

மகளிரணியினருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்

முன்னதாக, புறநகர் மாவட்ட மகளிரணி செயலாளர் வனிதா  ஏற்பாடு செய்திருந்த கேக்கை அமைச்சர் மதன் ராஜா தனது கையால் வெட்டி, மகளிரணி நிர்வாகிகளுக்கு கேக் துண்டுகளை ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்வில் புறநகர் மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் வனிதா கந்தசாமி, ராமகிருஷ்ணன், காளிஸ்வரி, சுகன்யா, பிரியதர்ஷினி, சண்முகப்ரியா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வீடியோ பார்க்க 

கூட்டத்தில் ஒன்றிய மற்றும் கிளை அளவிலான கட்சி பணிகள், நிர்வாக செயல்பாடுகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


திங்கள், 3 ஆகஸ்ட், 2026

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தூத்துக்குடியில் தவெக கட்சி ஆர்ப்பாட்டம்

 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  புகைப்படம் அருணன் செய்தியாளர் 

உதயநிதி ஸ்டாலின் பேச்சை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் த.வெ.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

முன்னாள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று (04.08.2026) தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

அரைமணி நேர ஆர்ப்பாட்டம்!!!

அதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாநகரில் 12-வது வாசல் மையவாடி அருகிலுள்ள மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள்  கலந்து கொண்டு, உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

thoothukudileaks

thoothukudileaks


ஆர்ப்பாட்டத்தில் பேசிய நிர்வாகிகள், அரசியல் நாகரிகத்தை பின்பற்ற வேண்டும் என்றும், எதிர்க்கட்சியினரையும் மக்களின் கருத்துகளையும் மதிக்கும் வகையில் பொது வாழ்க்கையில் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சியினர் வழக்கத்தை விட குறைந்த எண்ணிக்கையில் நூறுக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டனர் 

ஞாயிறு, 21 ஜூன், 2026

முதல்வர் ஜோசப் விஜய் 52-வது பிறந்த நாள் விழா தூத்துக்குடியில் மா செ எஸ்டிஆர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாட்டம் பரபரப்பு

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி


தூத்துக்குடி, ஜூன் 22:

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு இன்று காலை 11 மணியளவில் சிறப்பான கொண்டாட்டம் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks


மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கட்சியினர் பட்டாசுகள் வெடித்து மகிழ்ச்சி தெரிவித்ததுடன், கேக் வெட்டி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, முதல்வர் ஜோசப் விஜயின் நீண்ட ஆயுளும், மக்கள் பணியும் சிறக்க வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.



இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாக பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks



thoothukudileaks

புகைபட விளக்கம்:

தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முதல்வர் ஜோசப் விஜயின் 52-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சாமுவேல் தலைமையில் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள்.

பிறந்த நாள் வாழ்த்து பதிவு பிரபல திரைப்பட நடிகர் விஜய் அவர்களுக்கு இன்று 52 ஆவது பிறந்த நாள் 


அவர்களுக்கு நம் தூத்துக்குடி லீக்ஸ்  சார்பாக பிறந்தநாள் 

வாழ்த்துக்கள்

thoothukudileaks


முதல்வர் ஜோசப் விஜய் இது வரை....

சென்னையில் 1974ம் ஆண்டு ஜூன் 22ம் தேதி எஸ்.ஏ. இயக்குநர் சந்திர சேகர், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக பிறந்தார். இவருக்கு வித்யா என்ற ஒரு தங்கை இருந்தார். கோடம்பாக்கத்தில் உள்ள பாத்திமா பள்ளியில் தனது படிப்பை தொடங்கியவர் விருகம்பாக்கத்தில் உள்ள பாலலோக் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.


பின் சென்னை லயோலா கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேசன் படிப்பை தொடர்ந்தார். ஆனால் நடிப்பின் மீதிருந்த ஈர்ப்பால் பாதியிலேயே கைவிட்டார்.


விஜய் தன் ரசிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவருக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்


thoothukudileaks


விஜய் தன் சிறு வயதில் இருந்தே தந்தை எஸ்.ஏ. சந்திர சேகரின் படங்களில் நடித்துள்ளார். வெற்றி, வசந்தராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி, நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.


இதன் தொடர்ச்சியாக கதா நாயகனாக நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார். இதையடுத்து, செந்தூரப்பாண்டி, ரசிகன், ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். ஆனாலும் விக்ரமன் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக படம் தான் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக இருந்தது. 


இதைத்தொடர்ந்து 90 களில் விஜய்யை நடிப்பின் உச்சத்தில் வைத்து தமிழ் ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர். காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, ப்ரியமுடன், நிலாவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என ஏராளமான படங்களில் பெரும் புகழ் பெற்றார்.


90 களில் தொடங்கிய இந்த வெற்றிப்பயணம் 2000ஆம் ஆண்டுகளில் கில்லி, பிரியமானவளே, குஷி என கடைசியாக பீஸ்ட் வரை நீடிக்கிறது .


இப்படி தன் படங்களால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டி வைத்துள்ள விஜய் தற்போது அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். ஏற்கனவே விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.


 அவர் 10 ,12ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா நடத்தியதே விஜய் அரசியலுக்கு வருவதற்கான அச்சாரமாகவே பார்க்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடக்கம் 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி ஆரவாரப்படுத்தியது. வரும் 2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்.


அவர் கூறியபடியே சட்ட சபை தேர்தலில் வென்று தமிழகத்தின் முதலமைச்சராக தேர்வு பெற்று உள்ளார் 


தமிழக முதல்வராக பிறந்தநாள் கொண்டாடும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்களுடன் இணைந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பிலும் வாழ்த்துக்கள் இன்று தெரிவித்து வருகின்றனர்.


சனி, 20 ஜூன், 2026

தமிழக அமைச்சர்கள் செல்போன் நம்பர் மற்றும் இமெயில்கள்

Tamil Nadu updates,

தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி ஒரு புதிய அதிரடி முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. 


அதன் ஒரு பகுதியாக, முதலமைச்சர் தொடங்கி அனைத்து அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளன.

thoothukudileaks


இதில், முதலமைச்சருக்கு மின்னஞ்சல் முகவரி (Email ID) மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.


 ஆனால், மற்ற அனைத்து அமைச்சர்களுக்கும் மின்னஞ்சல் முகவரிகளுடன் சேர்த்து, அவர்களின் மொபைல் எண்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.


அமைச்சர்களின் இந்த எண்களுக்கு வரும் அழைப்புகளை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் கையாளுவார்கள் என்றும், பிரச்சனைகளின் தன்மை மற்றும் தீவிரத்தைப் பொறுத்து அவை சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Thiru C. Joseph Vijay* - Email-Id: mlaperambur[at]tn[dot]gov[dot]in




*Thiru N. Anand(Minister for Rural Development and Water Resources)*

Email-Id: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in

Tel.No  : 90039 33964


*Thiru Aadhav Arjuna*

*Minister for Public Works and Sports Development*

Email-Id: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99624 99599


*Dr. K.G. Arunraj*

*Minister for Health, Medical* *Education and Family Welfare*

Email-Id: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94459 53976



*Thiru K A. Sengottaiyan*

*Minister for Revenue and Disaster Management*

Email-Id: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 63852 49393



*Thiru P. Venkataramanan*

*Minister for Food and Civil Supplies*

Email-Id: mlamylapore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98412 73454


*Thiru R. Nirmalkumar*

*Minister for Energy Resources and Law*

Email-Id: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99625 66341



*Thiru Rajmohan*

*Minister for School* *Education, Tamil Development, Information and Publicity*

Email-Id: mlaegmore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 90030 83602



*Dr. TK. Prabhu*

*Minister for Natural Resources*

Email-Id: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95853 65217




*Selvi S. Keerthana*

*Minister for Industries*

Email-Id: mlasivakasi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 97902 73544


*Thiru P. Viswanathan*

*Minister for Higher Education*

Email-Id: mlamelur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96002 14442



*Thiru S. Rajesh Kumar*

*Minister for Tourism*

Email-Id: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in

Tel.No : 94431 03539


*Thiru A.M. Shahjahan*

*Minister for Minorities Welfare*

Email-Id: mlapapanasam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99659 04553


*Thiru Vanni Arasu*

*Minister for Social Justice*

Email-Id: mlatindivanam[at]tn[dot]gov[dot]in

Tel.No : 95515 11006


*Thiru A. Vijay Tamilan Parthiban*

*Minister for Transport*

Email-Id : mlasalemsouth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99421 98999


*Thiru B. Rajkumar*

*Minister for Housing and Urban Development*

Email-Id: mlacuddalore[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99422 24532



*Thiru V. Sampath Kumar*

*Minister for Backward Classes Welfare*

Email-Id: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98422 60733, 86681 81155



*Thiru M. Vijay Balaji*

*Minister for Handlooms, Textiles and Khadi*

Email-Id: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in

Tel.No : 98947 23460



*Thiru K. Vignesh*

*Minister for Prohibition and Excise*

Email-Id: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99448 17417



*Thiru K. Thennarasu*

*Minister for Non-Resident Tamils Welfare*

Email-Id : mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in

Tel.No : 99406 19268



*Thiru J. Mohamed Farvas*

*Minister for Labour Welfare and Skill Development*

Email-Id : mlaaranthangi[at]tn[dot]gov[dot]in

Tel.No : 96005 98729


*Thiru V. Gandhiraj*

*Minister for Co-operation*

Email-Id :mlaarakkonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :94439 14383


*Tmt K. Jegadeshwari*

*Minister for Social Welfare and Women Empowerment*

Email-Id :mlarajapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95978 68633


*Thiru Vinoth*

*Minister for Agriculture - Farmers Welfare*

Email-Id :mlakumbakonam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :63820 10408



*Tmt C. Vijayalakshmi*

*Minister for Milk and Dairy Development*

Email-Id :mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :70100 12002



*Thiru D. Sarathkumar*

*Minister for Human Resources Management*

Email-Id :mlatambaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :96001 33546



*Thiru Ramesh*

*Minister for Hindu Religious* *and Charitable Endowments*

Email-Id :mlasrirangam[at]tn[dot]gov[dot]in

Tel.No    :85240 88410



*Thiru P. Mathan Raja*

*Minister for Micro, Small and Medium Enterprises*

Email-Id :mlaottapidaram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90257 95100



*Thiru N. Marie Wilson*

*Minister for Finance,* *Planning and Development*

Email-Id :mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98409 41770



*Thiru Srinath*

*Minister for Fisheries* *- Fishermen Welfare*

Email-Id :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :98844 81636



*Tmt S. Kamali*

*Minister for Animal Husbandry*

Email-Id :mlaavanashi[at]tn[dot]gov[dot]in

Tel.No    :73588 63314



*Thiru R. Kumar*

*Minister for Artificial Intelligence, Information Technology and Digital Services*

Email-Id :mlavelachery[at]tn[dot]gov[dot]in

Tel.No    :90920 60100



*Thiru R.V. Ranjithkumar*

*Minister for Forests*

Email-Id :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :95001 11371, 94432 56202



*Thiru D. Logesh  Tamilselvan*

*Minister for Commercial* *Taxes and Registration*

Email-Id :mlarasipuram[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99944 77272



Thiru Rajeev

*Minister for Environment and Climate Change*

Email-Id :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in

Tel.No    :99946 72212

ஞாயிறு, 14 ஜூன், 2026

தவெக மாவட்டச் செயலாளர்களுக்கு தலைமை அறிவுரை: அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என முதல்வர் எச்சரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

சென்னை, ஜூன் 14:

தவெக கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று பனையூரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக முதல்வர், கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு முக்கிய அறிவுரைகளையும் எச்சரிக்கைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

thoothukudileaks


கூட்டத்தில் பேசிய முதல்வர், "ஒயின்ஷாப் பார் லைசன்ஸ் எடுக்கிறேன், காவல் நிலையங்களில் சென்று கட்டப்பஞ்சாயத்து செய்கிறேன் என்ற பெயரில் எந்தவித அடாவடி செயல்களிலும் யாரும் ஈடுபடக்கூடாது" என கடுமையாக அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ...

"உள்ளூர் அளவில் செல்வாக்கு மிக்க நபர்கள் பல்வேறு சிபாரிசுகள் மற்றும் ஆதரவுகளுக்காக பணம் வழங்க முயற்சிக்கலாம். அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டாம். மேல்மட்டத்தில் உள்ள அமைச்சர்கள் யாரும் கமிஷன் பெறமாட்டார்கள். தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அதனால் பாதிக்கப்படுவது நீங்களாகவே இருப்பீர்கள்" என எச்சரித்தார்.


அத்துடன், "மக்களின் கோரிக்கைகள் மற்றும் நலத் திட்டங்கள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆனால், சிபாரிசுகளுக்காக தனிநபர்களை அழைத்து வருவதை தவிர்க்க வேண்டும்" என்றும் முதல்வர் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thoothukudileaks


கட்சி நிர்வாகிகள் மக்கள் நலன் சார்ந்த பணிகளில் முழு கவனத்துடன் செயல்பட்டு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

.

திங்கள், 8 ஜூன், 2026

த.மா.கா. மாநில பொதுக்குழு உறுப்பினர் பெஸ்கிராஜா தமிழக வெற்றி கழகத்தில் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி, ஜூன் 8:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைத் தலைவருமான புதியம்புத்தூரைச் சேர்ந்த ஏ.எக்ஸ். பெஸ்கிராஜா, தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

thoothukudileaks


கடந்த 7-ம் தேதி ஓட்டப்பிடாரம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர். கனகராஜ் மற்றும் புதியம்புத்தூர் நகர செயலாளர் எம்.பி. அன்பரசன் ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளரும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சருமான பி. மதன்ராஜா, எம்.எல்.ஏ. அவரை  மாவட்ட கழக அலுவலகத்தில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், தமிழக வெற்றி கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

வீடியோ பார்க்க 



thoothukudileaks


thoothukudileaks


இந்நிகழ்ச்சியில் புதியம்புத்தூர் பேரூராட்சியைச் சேர்ந்த அமைச்சர் உதவியாளர் எம். வினோத்குமார், மாவட்ட கழக உதவியாளர் ஜெ. கணேஷ், நகர பொருளாளர் எஸ்.எம். செந்தில்குமார், இளைஞரணி தெற்கு ஒன்றிய செயலாளர் எஸ். பாரத் கமல் (பி.காம்), ஒன்றிய பொருளாளர் ஆடிட்டர் ஏ. ஸ்ரீனிவாசன், மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளர் பி. பொன்சேகர், டி. கார்த்திக், மாணவரணி ஒன்றிய செயலாளர் எம். காசிராஜா, என். ஜெயக்குமார், எம். சக்தி கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயற்குழு உறுப்பினர், மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெ. டஸ் நேவிஸ் ராணி, ஆவுடையம்மாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


வெள்ளி, 15 மே, 2026

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு எம்.எல்.ஏ. சரவணனுக்கு உற்சாக வரவேற்பு – பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு வழங்க உறுதி

Tamil Nadu updates 15-5-2026

photo news 

by Arunan journalist 

தூத்துக்குடி மே15

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் நன்றி தெரிவிப்பு பயணமாக சென்ற எம்.எல்.ஏ. சரவணனுக்கு ராமசந்திராபுரம், புல்லாவழி மற்றும் கோவங்காடு பகுதிகளில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

thoothukudileaks


கழக நிர்வாகிகள் மற்றும் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றதுடன், குழந்தைகள் பட்டாசு வெடித்து மலர் மாலைகள் அணிவித்து மகிழ்ச்சி வெளிப்படுத்தினர்.

ராமசந்திராபுரம் பகுதியில் முதியோர் சிலர், கடந்த சில மாதங்களாக ரேஷன் கடை ஊழியர்கள் வீடு தேடி வந்து பொருட்கள் வழங்காததால் மிகுந்த சிரமம் அனுபவித்து வருவதாக எம்.எல்.ஏ.விடம் மனு அளித்தனர்.

thoothukudileaks



 இதற்கு பதிலளித்த சரவணன் எம்.எல்.ஏ., “கவலைப்பட வேண்டாம், உடனடியாக இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கிறேன்” என உறுதியளித்தார்.

thoothukudileaks


அதேபோல் புல்லாவழி பகுதியில் அரசு பள்ளியின் தரத்தை உயர்த்தி, மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க டியூஷன் வசதி ஏற்பாடு செய்து தரப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் அந்த பகுதியில் சாலை வசதி, குடிநீர் தொட்டி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.


உப்பள தொழிலைத் தவிர வேறு வேலைவாய்ப்புகள் இல்லாமல் மக்கள் சிரமப்படுவதாக அப்பகுதி பெண்கள் தெரிவித்தனர். 

அதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., “நம்ம விஜய் ஆட்சியில் நல்ல தீர்வு கிடைக்கும். வேலைவாய்ப்புகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.


மேலும், “நம் பகுதியில் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுகிறவர்கள் யாரேனும் இருந்தால் தெரியப்படுத்துங்கள். அவர்களுக்கு என் சொந்த செலவில் தினமும் உணவு அனுப்ப ஏற்பாடு செய்கிறேன்” என மனிதநேயத்துடன் தெரிவித்தது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றது.

video புல்லா வழி பார்க்க 

கோவங்காடு பகுதியில் மக்கள் பஸ் நிறுத்தம், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர். அனைத்தையும் விரைவில் செய்து தருவதாக எம்.எல்.ஏ. சரவணன் உறுதியளித்தார்.

வீடியோ பகுதி 2 கோவங்காடு பகுதியில் ..

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் வடக்கு ஒன்றிய செயலாளர் அருள், விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட அமைப்பாளர் திருமணி அஸ்வின், வசந்தன் சித்தன், புல்லாவழி கிளை கழக செயலாளர் அஜித்குமார், துணை கழக செயலாளர் சண்முகவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பால்கிளி, சுரேஷ், கோவங்காடு கிளை கழக பொருளாளர் ஆகாஷ், கிளை கழக செயலாளர் நவீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வியாழன், 16 ஏப்ரல், 2026

தவெ.க.வின் முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் விஜய்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

மக்களின் தேர்தல் அறிக்கை" என்ற பெயரில் த.வெ.க-வின் முழு தேர்தல் அறிக்கை வெளியீடு.. பெற்றுக்கொண்ட விவசாயி நாராயணன்


thoothukudileaks


📌"சாத்தியமானதை மட்டுமே தேர்தல் வாக்குறுதியாக தவெக கொடுக்கிறது"


📌"60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500"


📌"ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு தலா 6 சிலிண்டர்கள்"


📌"மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டு சேலை"


📌தரமான கல்வி வழங்கும் இலவச உறைவிடப் பள்ளிகள்


📌ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடன் உத்தரவாதம்


📌போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு 


📌குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீடு திட்டம்


📌வேலையில்லா பட்டதாரிக்கு மாதம் ரூ.4,000


📌 டிப்ளமோ படித்து வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு ரூ.2500


📌5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்


📌5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி


📌கரும்பு டன்னுக்கு ரூ.4,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் 


#TVK 

திங்கள், 13 ஏப்ரல், 2026

தூத்துக்குடியில் தவெக வில் இருந்து தீடீரென jamp பண்ணிய அஜிதா திமுக கனிமொழி எம்பி முன் இணைந்தார் அவர் போட்ட பிளான் மிரண்டு போன உபிஎஸ்கள் பரபரப்பு

Tamil Nadu updates 14-4-2026 

photo news by Roja Arunan 

தூத்துக்குடி ஏப்ரல் 14

தூத்துக்குடியில் தவெக நிர்வாகியாக அஜிதா ஆர்கனல் சும்மா பற்றி எரியும் தீ கனல் மாதிரி ஆளும் கட்சி திமுக வுக்கு டப் கொடுக்கும் வகையில் திறம் பட செயல் பட்டு கொண்டு இருந்தார் ஆனால்? தவெக கட்சி தலைமை புஸ்ஸிஆனந்த் கை நீட்டிய ? ஒரு சமூகத்தை சேர்ந்த ஒருவரை மாவட்ட செயலாளர் அறிவித்தது இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தவெக கட்சி தலைவர் விஜயை சந்தித்து நியாயம் கேட்க ஆதரவாளர்கள் உடன் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வந்த அஜிதா அப்போது விஜய் வந்த காரை வழிமறித்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கி அங்கு பரபரப்பு ஏற்படுத்தினார். 

பின் சமாதானம் ஆகி வீடு திரும்பிய நிலையில் தற்கொலை அஜிதா முயற்சியிலும் ஈடுபட்ட்டார்  


இதை காரணமாக காட்டி  அஜிதாவுக்கு உள்ளூர் எதிர்தரப்பு கட்சி தலைமையே மிரட்டி உருட்டி பணிய வைக்க பார்க்கிறார் என இவர் மீது வெறுப்பாக தூபம் போட்டனர்.

விஜய் பார்வையில்... டிக் 

 தலைவர் விஜய் பார்வைக்கும் சென்றது இருப்பினும் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியல் மாவட்ட செயலாளர் சாமுவேல் மற்றும் அஜிதா ஆர்கனல் பெயரும் டிக் அடிக்க காத்திருந்தாக கட்சி நம்பிக்கையான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.    

thoothukudileaks


ஆரம்பத்தில் இருந்தே அஜிதா வளர்ச்சி விரும்பாமல் மாவட்ட செயலாளர் சாமுவேல் மற்றும் முருகன் ஒத்து போகாமல்  தனித்தே செயல்பட்டனர் தூத்துக்குடி விவிடி சிக்னல் ஆர்ப்பாட்டம் மேடையில் கூட அஜிதா ஆர்கனல் பேசும் போது சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய வேட்பாளர்!!!

 இதையெல்லாம் கருத்தில் கொண்டு அஜிதா ஆர்கனல் சாமுவேல் என  இருவருமே வேண்டாம் வீணான சச்சரவுகள் வரும் என விஜய் நெருங்கிய நண்பரும் தூத்துக்குடி மண்ணின் மைந்தருமான ஸ்ரீநாத்  வேட்பாளர் ஆக நிறுத்தினார்.

விஜய் எண்ணம்!!!

அஜிதா ஆர்கனல் சமுகத்தை சேர்ந்தவர் என்பதால் இவர் மறுப்பேதும் செய்யாமல் செயல் படுவார்கள் என தவெக தலைவர் விஜய் நினைத்தார் அஜிதா ஆர்கனல் க்கு  பின் வரும் உள்ளாட்சி தேர்தல்களில் நிச்சயம் வாய்ப்பு வழங்கலாம் என விஜய் கருதியதாக தெரிவிக்கிறார்கள்.   

விஜயை தவிர்த்த அஜிதா!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடு படுத்தி அனல் வீசும் நிலையில் தவெக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தூத்துக்குடி ரோடு ஷோ விசிட் போது அஜிதா ஆர்கனல் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார் 

திமுக தாவல் !!!

இதுவும் தவெக தலைமைக்கு நோட் சென்றதும் குறிப்பிடத்தக்கது இந்நிலையில் தீடீரென கடந்த 12-4-2026 அன்று தவெக தொண்டர்கள் 100 பேருடன் தூத்துக்குடி கனிமொழி எம்பி  சந்தித்து அஜிதா ஆர்கனல் திமுக வில் இணைந்து பரபரப்பை ஏற்படுத்தினார் 


இந்நிகழ்வில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகயயா உட்பட ஆல் பிரசன்ட்   தூத்துக்குடி அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் இனைப்பு நிகழ்வில் அங்கில்லை என்பது விரும்ப வில்லை என பேசும் பொருளாக உள்ளது. 


மேயர் வேட்பாளர் டிமாண்ட்!!!

 காணாதற்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் வருகையில் மேயர் வேட்பாளராக வேண்டும் என டிமாண்ட் இருப்பதாக கூறப்படுவதும் மேலும் தூத்துக்குடி திமுக உடன் பிறப்புகள் கட்டி காக்கின்ற வர்களுக்கு கவலை கலக்கம் தருகிறது .

வீடியோ பார்க்க ...

சூழ்ச்சி செய்யும் அரசியல் கட்சிகள் !!!

திமுக அதிமுக திராவிட கட்சிகள் அரசியல் என்பது இரு பேர்களை போட்டி மனப்பான்மை ஏற்படுத்தி  மாவட்டத்தில் யார் பெரியவர் என காட்டுங்க என இருவருமே உசுப்பி விட்டு குளிர் காய்ந்து வருவது தான் திமுக !!!


இதில் திறம் பட தூத்துக்குடி மாவட்ட செயலாளர் ஆக முரட்டு பக்தன் பெரிய சாமி இருந்த நிலையில்.... அவர் உயிரோடு இருந்த காலத்திலே அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் ஜோயல் கொண்டு வந்து மனம் நோகடித்தனர் 

அனிதா ஃபுல் சப்போர்ட்!!!

 அடுத்து கீதா ஜீவன் அனிதா ராதாகிருஷ்ணன் என தொடர்கிறது இந்நிலையில் அஜிதா களத்தில் திமுக இறங்கியுள்ளதால் ...

தற்போது மேயர் ஜெகன் பெரியசாமி கீதா ஜீவன் ஆகியோருக்கு தூத்துக்குடி மேயர் வேட்பாளர் தேர்வில். அனிதா ராதாகிருஷ்ணன் ஃபுல் சப்போர்ட் உடன் அஜிதா பெரும் தலைவலியாக  இருப்பார் என்பதில் ஐயமில்லை என்கிறார்கள் இங்கேயும் ஏமாற்றம் இல்லாமல் இருக்கட்டும் அவரது ஆதரவாளர்கள் வேண்டுகிறார்கள்

ஞாயிறு, 22 பிப்ரவரி, 2026

மாப்பிள்ளையூரணியில் மகளிர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவி விழா – 500க்கும் மேற்பட்டோருக்கு நலப்பொருட்கள் வழங்கல்

Tamil Nadu updates 22-2-2026

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி பெ22

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகர் குடியிருப்புப் பகுதியில் மகளிர் அணி சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மக்கள் சேவகன்  தளபதி A. சுதாகர்  கலந்து கொண்டு, சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, சேலை உள்ளிட்ட அத்தியாவசிய நலத்திட்ட பொருட்களை வழங்கினார்.

விழாவில் தூத்துக்குடி மத்திய மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் . விஜூ, தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயற்குழு உறுப்பினர் கெளதம் பாண்டியன், . அருண்பிரகாஷ், . தீனதயாளன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


மேலும், தூத்துக்குடி வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர்  சேவியர், தூத்துக்குடி புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் . முனீஸ்வரன், புறநகர் மாவட்ட இளைஞரணி இணை அமைப்பாளர்கள் அருண்குமார், கண்ணன், அருள் அஜய் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அத்துடன் தூத்துக்குடி வடக்கு ஒன்றிய இணை செயலாளர். லெட்சுமணன், பொருளாளர் . சந்தன முத்து, செயற்குழு உறுப்பினர் . ராஜா மற்றும் நிர்வாகிகள் அருள் சஞ்சய், மணிகண்டன், ஈஸ்வர், பாஸ்கர், ரியால்சன், ஆனந்த், சந்தனம், ஹரி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அப்பகுதி மகளிர் அணியினர், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை பெற்றுச் சென்றனர்.

thoothukudileaks


 நிகழ்ச்சி சமூக ஒற்றுமையையும் சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

செவ்வாய், 23 டிசம்பர், 2025

தவெக-விலும் சாதி அரசியல் குற்றச்சாட்டு விஜய்-ன் தவெககட்சியில் பெண் என்பதால் பதவி மறுப்பா !!!

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாவட்டம் 6 தொகுதிகளிலும் எந்த ஒரு சாதியும் பெரும்பான்மை அல்ல; ஒவ்வொரு தொகுதியிலும் 2–3 சாதிகள் தான் வெற்றியை நிர்ணயிக்கின்றன என்ற முக்கிய அரசியல் தகவல் வெளியாகியுள்ளது 

இது பற்றிய செய்தியாவது:-

சென்னை | 23.12.2025

தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) பல ஆண்டுகளாக களப்பணியாற்றியும், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் நிர்வாகி அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய், தமிழக வெற்றி கழகத்தை தொடங்குவதற்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை “விஜய் மக்கள் இயக்கம்” என்ற பெயரில் நடத்தி வந்தார். 


அந்த இயக்கத்தில், திமுகவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக உள்ள பில்லா ஜெகன் (ஜெகன்) மற்றும் அவரது சகோதரர் சுமன் ஆகியோர் முக்கிய பொறுப்புகளில் இருந்தனர். விஜய் படம் வெளியான போது தோரணம் கட்டுதல், ரசிகர்களை முதல் காட்சிக்கு திரட்டுதல், இயக்கத்தின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வந்தனர்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய் கட்சி தொடங்கியதையடுத்து, அவர்கள் ஏற்கனவே திமுகவில் செயல்பட்டு வந்ததால் ரசிகர் மன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகினர். இதன் பின்னர், பில்லா ஜெகனின் தங்கை அஜிதா ஆர்க்னஸ் தவெக கட்சியில் இணைந்து தீவிரமாக பணியாற்றத் தொடங்கினார்.


கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகள், மாலையணிவிப்பு, அன்னதானம், நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிப் பணிகளில் அஜிதா ஆர்க்னஸ் தொடர்ந்து செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.


விஜய் கட்சியில்

பெண் என்பதால் பதவி மறுப்பு தெரிவித்தார்களா!!!


 இருப்பினும், அவர் பெண் என்பதாலும், தூத்துக்குடி மாவட்டத்தின் சமூக அரசியல் சமநிலை காரணமாகவும், மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



தூத்துக்குடி மாவட்டத்தில் எந்த சாதிக்கும் பெரும்பான்மை இல்லை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் எந்த ஒரு சாதிக்கும் பெரும்பான்மை கிடையாது என்பதே அரசியல் யதார்த்தம். 

இங்கு ஒவ்வொரு தொகுதியிலும் அங்காங்கே இரண்டு அல்லது மூன்று சாதிகள் மட்டுமே தேர்தல் வெற்றி–தோல்வியை நிர்ணயிக்கும் நிலையில் உள்ளன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி,

விளாத்திகுளம் – ரெட்டியார், நாயக்கர்

கோவில்பட்டி – நாயக்கர், தேவர்

ஓட்டப்பிடாரம் – தலித், வேளாளர்(பிள்ளை)

திருவைகுண்டம் – 

தேவர், வேளாளர் ( பிள்ளை), தேவேந்திர குல வேளாளர், நாடார்

திருச்செந்தூர் – பரதர், முஸ்லிம், தலித், நாடார், யாதவ்

தூத்துக்குடி – பரதர் (மீனவர்), வேளாளர் (பிள்ளை), நாடார், தேவேந்திர குல வேளாளர்

என ஒவ்வொரு தொகுதியிலும் சமூக அரசியல் சமநிலை மாறுபட்டு காணப்படுகிறது.

இதன் காரணமாகவே, கடந்த தேர்தல்களில் பாஜக தமிழிசை சௌந்தரராஜன், அதிமுக வேலுமணி உள்ளிட்ட வேட்பாளர்கள் தங்களது சாதி அடையாளங்களை முன்னிறுத்தியும் தோல்வியை சந்தித்தனர். 

வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கனிமொழி இடம் டெபாசிட் இழந்தது குறிப்பிடத்தக்கது. இது, ஒரே சமூக அரசியலை முன்னிறுத்தி வெற்றி பெற முடியாது என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த சில வருடங்களாக  அதிமுக, திமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்களையே மாவட்ட செயலாளர்களாக நியமித்து வருவதால் தேர்தல் தோல்வியை சந்தித்து வருகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

தவெக-விலும்  சாதி அரசியல் குற்றச்சாட்டு

தவெக கட்சியிலும், நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையே தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்க வேண்டும் என பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், நடிகர் விஜய்க்கு யோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் அதிருப்தி ஏற்படுத்தி இருக்கின்றது.


இதன் விளைவாக, நாடார் சமூகத்தைச் சேர்ந்த எஸ்டிஆர் சாமுவேல்ராஜ் என்பவருக்கு தவெக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அவரும் கட்சித் தலைவர்களின் பிறந்தநாள், நினைவு நாள்களில் மாலையணிவிப்பு, அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு தேர்தலை சந்திப்பதற்கு முன்பே தவெக கட்சிக்குள் கடும் கோஷ்டி பூசல் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அஜிதா ஆர்க்னஸ் தனது ஆதரவாளர்களுடன் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். 


ஆனால் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் அவரை அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது. பாதுகாப்பு பணியாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாதுகாப்பு தடையால் உணர்ச்சிவசப்பட்ட அஜிதா ஆர்க்னஸ் அலுவலகம் முன்பு கதறி அழுததாக கூறப்படுகிறது. இதைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் கோஷங்களை எழுப்பினர்.


வீடியோ பார்க்க 

பின்னர், தவெக கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், அஜிதா ஆர்க்னஸுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து,

“தலைமை மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. உயிருள்ளவரை தமிழக வெற்றி கழகத்தில் விஜய்க்காக பயணிப்போம்”

எனக் கூறி, அஜிதா ஆர்க்னஸ் தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

🗞️ தூத்துக்குடி லீக்ஸ்

👉 

திங்கள், 17 நவம்பர், 2025

தூத்துக்குடியில் எஸ்.ஐ.ஆர் பணியில் திமுகவினர் தலையீடு ? போட்டோ ஆதாரத்துடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த தவெக நிர்வாகி ஆனந்தகுமார்

தூத்துக்குடி, நவ. 17:

வாக்காளர் பட்டியல் சுருக்கப் பணியில் (எஸ்.ஐ.ஆர்.) ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, தவெக நிர்வாகியும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான ஆனந்தகுமார் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார். 

அங்கு உள்ளவர்களுக்கு போட்டோ ஆதாரத்தை காட்டினார் 

 தவெக நிர்வாகி ஆனந்தகுமார் (முன்னாள் நகராட்சி கவுன்சிலர்)


முக்கிய குற்றச்சாட்டுகள்

தவெக நிர்வாகி ஆனந்தகுமார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பின்வருமாறு:

முத்துகிருஷ்ணாபுரம் (வார்டு-23) பகுதியில் முறைகேடுகள்: பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்களை நேரில் வழங்க வேண்டும் என்ற நடைமுறை சரியாக கடைபிடிக்கப்படவில்லை என்றும், மாறாக ஆளும் கட்சியினர் மொத்தமாக விண்ணப்பங்களை வாங்கி தங்கள் விருப்பப்படி வழங்கி வருகிறார்கள் 



வெளியூர் சென்றவர்களுக்கு வாக்குரிமை வழங்கும் முயற்சி: முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் சுமார் 5,500 வாக்காளர்கள் பழைய பட்டியலில் இருப்பதாகவும், இதில் சுமார் 2,500 பேர் வெளியூர் சென்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



ஆனால் இவர்களை வாக்காளர் பட்டியலில் தொடர்ந்து வைத்திருக்கும் முயற்சி நடப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஒரே இடத்தில் அமர்ந்து பணி: கோவில் முன்பு இரவு நேரத்தில் ஆளும் கட்சியினரும் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து பணி செய்வதாகவும், வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொள்ளாமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்

ஆனந்தகுமார் மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள்:

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் செயல்பட உறுதி செய்ய வேண்டும்

அரசியல் தலையீடுகளுக்கு உடன்படாமல் செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும்

முத்துகிருஷ்ணாபுரம் பகுதியில் வீடு வீடாக சென்று வெளியூர் வாக்காளர்களை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இறந்தவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் பெயர்களை நீக்க கண்காணிப்பு வேண்டும்

தவெக போராட்டம்

எஸ்.ஐ.ஆர். பணியில் முறைகேடுகள் நடப்பதை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 



எஸ்.ஐ.ஆர். பணியின் நோக்கம் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள், வெளியூர் சென்றவர்கள், இரட்டைப் பதிவு செய்தவர்கள் ஆகியோரின் பெயர்களை நீக்கி துல்லியமான வாக்காளர் பட்டியலை உருவாக்குவதாகும். இந்நிலையில் ஆளும் கட்சியினர் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.



தவெக நிர்வாகி ஆனந்தகுமாரின் இந்த கோரிக்கை தூத்துக்குடி  மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது கவனிக்கத்தக்கது.

செய்தி புகைப்படங்கள் 

காலை தீபம் (நாளிதழ்)

ஞாயிறு, 16 நவம்பர், 2025

SIR குளறுபடிகள் தவெக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடியில் ‘கோஷ்டி அரசியல்’ வெடிப்பு தூத்துக்குடி மாவட்ட கலெக்டருக்கு நேருக்கு நேர் சவால் விட்ட தவெக நிர்வாகி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு

Tamil Nadu updates, photo news by Arunan journalist 

தூத்துக்குடி, நவம்பர் 16:
தமிழக மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தூத்துக்குடி மாவட்ட தவெக சார்பில் 12வது வாசல் மையவாடி – சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 12 மணிக்கு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, புதிய பெயர் சேர்ப்பதில் ஏற்பட்ட தவறுகள், பணியில் வெளிப்படைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.

பொதுமக்களின் வாக்குரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணையம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், SIR செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அனுமதி நேர குழப்பம் – ஆர்ப்பாட்டத்துக்கு முன் சர்ச்சை

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கான காவல் அனுமதி நேரத்தைப் பெற தவெக நிர்வாகிகள் தனித்தனியாக கோஷ்டி யாக காவல்துறையை சந்தித்தனர்.

காவல்துறை கண்டிஷன் !!!

தனித்தனி கோஷ்டி அரசியலுக்கு செக்!!!

தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் தனித்தனியாக காவல்துறையை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். முதலில் வெவ்வேறு நேரங்களை தருவதாக கூறிய காவல்துறை அதிகாரிகள் கைவிரித்தனர் அனைவருக்கும் இறுதியில் இன்று காலை  ஒரே அனுமதி என்றார்கள் 

இதனால் தூத்துக்குடி தவெக ஒரே கட்சியில் தனித்தனியாக கோஷ்டியாக மாலை அணிவித்து செல்ஃபி கோஷ்டி அரசியல் பண்ணிட  முடியாமல் போயிற்று 

 ஆர்ப்பாட்டத்தில் ...

தனித்தனியாக தாங்கள் அழைத்துவந்தவர்களுடன் குழுவாகச் சேர்ந்து செல்ஃபி மற்றும் போட்டோ எடுத்து படி இருந்தது காண முடிந்தது 

செல்ஃபி 



தங்களுக்கு விருப்பமான நிர்வாகி வரும் வரை ஒரமாக ஒதுங்கி இருப்போம் என நின்றவர்கள் 


அதிகாலை 10 மணிக்கே வந்த பொதுமக்கள் மற்றும் ( ரசிகர்கள்) கழக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் 12 மணிக்குப் பிறகே ஆரம்பமானது.

மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் !!!

ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில்.. மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் வந்ததும் கூட்டத்தில் உற்சாகம்  விசில் சத்தமும் அதிகரித்தது.

ஆனால் அவர் மேடை ஏறும் போது, சிலர் தரப்பில் அவரோடு வந்தவர்களிடம் சலசலப்பு காரணமாக அவர் சங்கடத்துடனும் அதிருப்தியுடனும் இருந்ததாக தெரிய வந்தது. இதே உணர்வு அவருடைய நன்றியுரையிலும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது.

இதனால்  அவரது நன்றியுரை வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது

 

மேடையில் ஏற்பட்ட சலசலப்பு ரியாக்ஷன் 




முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு

ஆர்ப்பாட்டத்தில்  சாமுவேல்ராஜ், ஆனந்தகுமார், கௌதம், பிரைட்டர் பாலா, சம்பத், சரவணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா, முருகன் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தவெகின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ 

மாவட்ட ஆட்சியருக்கு தவெக நிர்வாகி சவால்!!!


செல்ஃபி அரசியல் களைகட்டியது

ஆர்ப்பாட்ட களத்தில் நிர்வாகிகள் தனித்தனியாக தங்களுடன் அழைத்து வந்தவர்களுடன் மட்டும் "ஒரே செல்ஃபி" வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் என்பதை விட தனித்தனி கோஷ்டி ஆர்ப்பாட்டமாக மாறியதாக களத்தில் இருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.





அரசியல் பார்வையாளர்கள் கருத்து

வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற முக்கிய பொது பிரச்சினையில் நடந்த ஆர்ப்பாட்டம், அமைப்பின் உள் பிளவுகளை வெளிக்காட்டியுள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த தலைமையும், தெளிவான திசையும் இல்லாத போராட்டங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.

தூத்துக்குடி லீக்ஸ் 

சிறப்பு நிருபர் ரோஜா அருணன்