Tamil Nadu updates, photo news by Arunan journalist
தூத்துக்குடி, நவம்பர் 16:
தமிழக மக்களின் வாக்குரிமையை பாதிக்கும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடைமுறையில் ஏற்பட்டிருக்கும் குளறுபடிகளை கண்டித்து, தமிழக வெற்றி கழகம் சார்பில் இன்று தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட தவெக சார்பில் 12வது வாசல் மையவாடி – சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் பகுதியில் காலை 12 மணிக்கு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வாக்காளர் பட்டியலில் உண்மையான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது, புதிய பெயர் சேர்ப்பதில் ஏற்பட்ட தவறுகள், பணியில் வெளிப்படைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிட்டனர்.
பொதுமக்களின் வாக்குரிமையை பாதுகாக்க தேர்தல் ஆணையம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், SIR செயல்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அனுமதி நேர குழப்பம் – ஆர்ப்பாட்டத்துக்கு முன் சர்ச்சை
இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கான காவல் அனுமதி நேரத்தைப் பெற தவெக நிர்வாகிகள் தனித்தனியாக கோஷ்டி யாக காவல்துறையை சந்தித்தனர்.
காவல்துறை கண்டிஷன் !!!
தனித்தனி கோஷ்டி அரசியலுக்கு செக்!!!
தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் தனித்தனியாக காவல்துறையை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கேட்டிருந்தனர். முதலில் வெவ்வேறு நேரங்களை தருவதாக கூறிய காவல்துறை அதிகாரிகள் கைவிரித்தனர் அனைவருக்கும் இறுதியில் இன்று காலை ஒரே அனுமதி என்றார்கள்
இதனால் தூத்துக்குடி தவெக ஒரே கட்சியில் தனித்தனியாக கோஷ்டியாக மாலை அணிவித்து செல்ஃபி கோஷ்டி அரசியல் பண்ணிட முடியாமல் போயிற்று
ஆர்ப்பாட்டத்தில் ...
தனித்தனியாக தாங்கள் அழைத்துவந்தவர்களுடன் குழுவாகச் சேர்ந்து செல்ஃபி மற்றும் போட்டோ எடுத்து படி இருந்தது காண முடிந்தது
![]() |
| செல்ஃபி |
![]() |
| தங்களுக்கு விருப்பமான நிர்வாகி வரும் வரை ஒரமாக ஒதுங்கி இருப்போம் என நின்றவர்கள் |
அதிகாலை 10 மணிக்கே வந்த பொதுமக்கள் மற்றும் ( ரசிகர்கள்) கழக தொண்டர்கள் வெயிலில் காத்திருந்த நிலையில், ஆர்ப்பாட்டம் 12 மணிக்குப் பிறகே ஆரம்பமானது.
மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் !!!
ஆர்ப்பாட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில்.. மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆர்கனல் வந்ததும் கூட்டத்தில் உற்சாகம் விசில் சத்தமும் அதிகரித்தது.
ஆனால் அவர் மேடை ஏறும் போது, சிலர் தரப்பில் அவரோடு வந்தவர்களிடம் சலசலப்பு காரணமாக அவர் சங்கடத்துடனும் அதிருப்தியுடனும் இருந்ததாக தெரிய வந்தது. இதே உணர்வு அவருடைய நன்றியுரையிலும் ஆக்ரோஷமாக வெளிப்பட்டது.
இதனால் அவரது நன்றியுரை வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது
முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
ஆர்ப்பாட்டத்தில் சாமுவேல்ராஜ், ஆனந்தகுமார், கௌதம், பிரைட்டர் பாலா, சம்பத், சரவணன், மாநில மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா, முருகன் உள்ளிட்ட தூத்துக்குடி மாவட்ட தவெகின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வீடியோமாவட்ட ஆட்சியருக்கு தவெக நிர்வாகி சவால்!!!
செல்ஃபி அரசியல் களைகட்டியது
ஆர்ப்பாட்ட களத்தில் நிர்வாகிகள் தனித்தனியாக தங்களுடன் அழைத்து வந்தவர்களுடன் மட்டும் "ஒரே செல்ஃபி" வரிசையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது ஒரு ஒருங்கிணைந்த போராட்டம் என்பதை விட தனித்தனி கோஷ்டி ஆர்ப்பாட்டமாக மாறியதாக களத்தில் இருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அரசியல் பார்வையாளர்கள் கருத்து
வாக்காளர் பட்டியல் திருத்தம் என்ற முக்கிய பொது பிரச்சினையில் நடந்த ஆர்ப்பாட்டம், அமைப்பின் உள் பிளவுகளை வெளிக்காட்டியுள்ளது என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த தலைமையும், தெளிவான திசையும் இல்லாத போராட்டங்கள் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்பது அவர்களின் கருத்தாக உள்ளது.
தூத்துக்குடி லீக்ஸ்
சிறப்பு நிருபர் ரோஜா அருணன்








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக