ஞாயிறு, 16 நவம்பர், 2025

தூத்துக்குடியில் பக்தர்களுக்கு அழைப்பு கடன்தொல்லை நீங்கி செல்வம் பெருக சிறப்பு வழிபாடுதூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் வரும் 19-ம்தேதி மஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் — சிறப்பு செய்தி

தூத்துக்குடி நவ17

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி – காலபைரவர் சித்தர் பீடம், தென்தமிழகத்தில் அரிய தனிச்சிறப்பான தெய்வஸ்தலமாகும். இங்கு மிகப்பிரம்மாண்டமாக எழுந்தருளி உள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி தினமும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

thoothukudileaks


பிரத்தியங்கிராதேவிக்கு அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இவ்வழிபாடுகளில் பங்கேற்றி தேவியை வணங்கினால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்ற அபார நம்பிக்கை பக்தர்களிடையே நிலவுகிறது.


இந்நிலையில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு வரும் 19-ம்தேதி (புதன்கிழமை) பக்தர்களின் கடன்தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகிட ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவிக்கு மிளகாய் வற்றல் மஹா யாகம் நடைபெறுகிறது.

இந்த யாகம் ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெறுகிறது.


அன்றைய தினம் காலை 10.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் வழிபாடுகள் தொடங்கும். பின்னர் 11.00 மணிக்கு மஞ்சள், பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட அபிஷேகங்கள் பிரத்தியங்கிராதேவிக்கு நடைபெறும்.


பக்தர்கள் கடன்தொல்லை, எதிரித்தொல்லை நீங்கி திருமண வரம், குழந்தை பாக்கியம், நல்ல வேலை வாய்ப்பு, குடும்பத்தில் செல்வ வளம் பெருகிட வேண்டி மதியம் 12.30 மணிக்கு மிளகாய் வற்றல் கொண்டு மஹா யாகம் நடைபெறுகிறது.


இதனை தொடர்ந்து மஹா காலபைரவர் மற்றும் மஹா பிரத்தியங்கிராதேவிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இறுதியாக பங்கேற்கும் பக்தர்களுக்கு மகா அன்னதானம் வழங்கப்படும்.


மஹா யாகத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்களால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக