திறப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திறப்பு விழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 டிசம்பர், 2024

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தினம் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது

Tamil Nadu updates,

17-12-2024

அருணன் செய்தியாளர்

தூத்துக்குடியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தினம் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.



 இது பற்றிய செய்தியாவது:-

இன்று  ஓய்வூதிய/ குடும்ப ஓய்வூதியர் கள் அனைவருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க தினம். 

நகரா -வின்

நீதி மன்றம் தீர்ப்பு 

இன்றைய நாளில்  நகரா எனபவரின் சீரிய முயற்சியினால் ஓய்வூதியம் நமது உரிமை என்ற தீர்ப்பினை பெற்று தந்த நாள். 

இன்று 17-12-2024அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தின நாளாக கொண்டாடப்படுகிறது.


தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு தூத்துக்குடி புற நகர் கிளை

தூத்துக்குடியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் அகில இந்திய ஓய்வூதியர் உரிமை தினம் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல் பலகை 


தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் போக்குவரத்து தூத்துக்குடி மண்டலம் முன்பு  ஓய்வூதியர்கள் இன்று காலை 10 மணியளவில் திரளாக கூடினர்

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 

தமிழ் நாடு அரசு போக்குவரத்து ஒய்வூதியர் நல அமைப்பு தகவல் பலகை !!!

 போக்குவரத்து தூத்துக்குடி மண்டலம் கிளை முன்பு

வி .பூபதி தலைமையில் தமிழ் நாடு அரசு போக்குவரத்து நல அமைப்பு தகவல் பலகை மாலை அணிவித்து திறந்து வைத்தார் .

கொடியேற்றம் 


பின்னர் (REWA) ஓய்வூதியர் சங்க கொடியை எஸ் எட்டப்பன் ஏற்றினார்கள்.

அடுத்து அப் பகுதியில் இனிப்பு வழங்கினார்கள்.


இந்நிகழ்ச்சியில்.. முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர் 

மது சேகர் தனவன், பொன்னுசாமி, மற்றும் பொன்னம்பலம், சகாய ராஜ், பால் ராஜ், ஜான் கென்னடி, சுப்பிரமணியன், செல்வம், சின்னதம்பி மற்றும் ஏராளமான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர் .




ஞாயிறு, 15 டிசம்பர், 2024

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு

Tamil Nadu updates,

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி: புதிய பேருந்து நிலையத்தில் "யூத் சலூன்" திறப்பு



இளைய சமுதாயம்  

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ள "யூத் சலூன்" இன்று 15-12-2024 ஞாயிறு திறக்கப்பட்டது.


 இந்த சலூன், இளைய சமுதாயத்திற்கேற்ப நவீன உள் கட்டமைப்புகளை வழங்கும் நோக்கத்தில் துவங்கப்பட்டுள்ளது.

எங்குமில்லாத நவீன கட்டமைப்பு 

சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்ட இந்த சலூன், நவீன வசதிகளுடன் கூடியது.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளே .... "யூத் சலூன்" 

  

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியான தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம்  உள்பகுதியில் அமைந்துள்ளதால், இது பொதுமக்களிடையே சிறப்பான வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவீன முறையில் பல சலுகைகள் வழங்கப்படுவதாக சுதீப் தெரிவித்தார் கள்.


சலூன் திறப்பு விழாவில் சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.


வரவேற்பு 

இந்நிகழ்ச்சியில் யூத் சலூன்

 சார்பில் 

சு.சுதிப்

சு.அஸ்வின்

சு. பேச்சீராஜ்

பா சண்முக சுந்தரம்

ரா சஞ் சய்

வீ.ஸ்ரீராம்

ப ராகுல். ஆகியோர் கலந்து கொண்டவர்களை வரவேற்றனர் .


வெள்ளி, 4 அக்டோபர், 2024

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம்

தூத்துக்குடி ஐந்தாவது புத்தக திருவிழாவில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அமைந்துள்ள   செந்தமிழ் சிற்பிகள் அரங்கம் போன்று 5வது புத்தகத் திருவிழாவிலும் தூத்துக்குடி மாவட்ட எழுத்தாளர்கள் கவிஞர்களின் புகைப்பட அரங்கம்

முத்தமிழ் முத்துக்கள் என்னும் தலைப்பில் முத்து அரங்கத்தில் வரிசைப்படுத்தப்பட்டு அவர்கள் குறித்த புத்தகங்களும் வாசிப்புக்காக வழங்கப்பட்டுள்ளது..



வாழ்க்கைக்கு பயனுள்ள  அறிஞர்களின் நூல்கள்!!

 கல்லூரி மாணவர்கள் இப்பகுதியினை அதிக அளவில் பயன்படுத்தி கால்டுவெல் ஜி யு போப்

 வ உ சி ,சாத்தூர் பிச்சை குட்டி சோ தர்மன் 

கி ராஜநாராயணன் பூமணி, இளம்பாரதி சாத்தான்குளம் சீனிவாசன் சீ பா  ஆதித்தனார் ,

ஜி யு போப் வீரமாமுனிவர் முத்துசாமி தீட்சிதர் சங்கரதாஸ் சுவாமிகள் விளாத்திகுளம் நல்லப்ப சுவாமிகள் காருக்குறிச்சி அருணாசலம் என அனைவரது புகைப்படங்களும் அவர்களுடைய நூல்களும் இந்த அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ளன.


 கல்லூரி மாணவர்கள் இந் நூல்களை படித்து அது குறித்து விமர்சனங்களையும் ஆய்வுகளையும் வழங்கி வருகிறார்கள்..


 கல்லூரி மாணவர்கள் மிகவும் கவர்ந்த அரங்கமாக முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கம் இருக்கின்றது.

கனிமொழி எம்பி இடம் நாங்கள் படித்தால் வேலை கிடைக்குமா? இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கள் கஷ்டத்தை தெரிவித்த இளம் பெண்கள்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃-4-10-2024  photo news 

by sunmugasunthram Reporter 

Photo "காலை 🔥 தீபம்" (நாளிதழ்)  நன்றி 

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில்  கனிமொழி எம்பி இடம் நாங்கள் படித்தால் வேலை கிடைக்குமா? என தங்கள் கஷ்டத்தை தெரிவித்த இளம் பெண்கள்.



இதுபற்றி செய்தியாவது;-

மறுவாழ்வு முகாமில்..

 3 கோடியை 70 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 56 குடியிருப்புகளை திறந்துவைத்து..


 மரக்கன்றுகளை நட்டி பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கி மருத்துவத்துறை கையெடுகளை வெளியிட்டு கனிமொழி எம்பி பேசியதாவது.....


 தமிழகத்தில் இதுபோன்ற முகாம்களில் குடியிருந்து வருபவர்களில் புலம் பெயர்ந்த மக்கள் மனம் புண்படக் கூடாது என்பதற்காக மறுவாழ்வு முகாம் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

மனநிலை!!!

 முகாமில் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களின் மனநிலையை புரிந்து கொண்டு தமிழக முதலமைச்சர் இதுபோன்ற வீடுகளை தமிழகம் முழுவதும் கட்டிக் கொடுத்தமைக்கு முதலில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 



முகாமில்..இளம் பெண் கேட்ட கேள்வி?

நான் ஒரு முகாமில் இளம்பெண்ணை சந்தித்த போது நன்றாக படி என்று கூறினேன்.


 நான் படித்து என்ன செய்வது என்று திருப்பி கேள்வி கேட்டார். 

எங்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை!!

எதற்கு என்றால் புலம் பெயர்ந்த மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம்.


 ஆண்கள் பல இடங்களுக்கு வேலைக்கு சென்று அதன் மூலம் தான் வாழ்கிறோம் என்றார். 


பெண்கள் தொழில் செய்வதற்கு படிப்பும் அவசியம் என்பதை உணர செய்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சர் படித்தால் வேலைவாய்ப்பு உருவாக்கி கொடுக்கப்படும் என்று திமுக ஆட்சியில் உத்திரவாதம் கொடுக்கப்பட்டது.

குடியுரிமை!!!


 "தொடர்ந்து இந்த மக்களுக்கு குடியுரிமை பெறுவதற்கு ஒன்றிய அரசுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது."


நாங்கள் இருக்கிறோம்!!!

இதையும் தமிழகம் முதலமைச்சர் உணர்ந்து கொண்டு நாடு கடந்து வந்த மக்களின் நலன் கருதி ஒர் இடத்தில் இருந்த ஒரு மரம் வேறாரு சாய்க்கப்பட்டு மாற்று இடத்திற்கு புலம் பெயர்ந்து வரும் போது அவர்களுக்காக சில கவலைகளை மறக்கும் வகையில் நாங்கள் இருக்கிறோம் என்ற அடிப்படையில்  ஹெல்த் திட்டம் உருவாக்கப்பட்டது.



 அது உங்கள் நலன் பாதுகாக்கப்பட்டது. இந்த பிரச்சனையை உணர்ந்து கொண்டு ஒவ்வொரு படியாக பாதுகாக்கவும் எதிர்காலத்தில் எல்லோரையும் போல் தகுதியுள்ளவர்களாக வரவேண்டும் என்று தான் தமிழக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை உருவாக்கி வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி வாக்களிக்காத மக்களுக்கும் பணியாற்றி வருகிறார் என்று கனிமொழி எம்பி பேசினார். 



அடுத்து...

அமைச்சர் நாசர் பேசியதாவது...

 தமிழக முதலமைச்சர் அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்க வேண்டும். 


அதன் மூலம் இந்த நாடும் வளர வேண்டும் என்று பணியாற்றுகின்ற காரணத்தால் இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கு எல்லாம் முன் உதாரணமாக முதலமைச்சர் ஸ்டாலின் பணியாற்றி வருகிறார். 


தமிழகம் முழுவதும் உள்ள இதுபோன்ற மறுவாழ்வு குடியிருப்புகள் தமிழகம் முழுவதும் திறக்கப்பட்டு வருகிறது. 


" இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள மூப்பத்தி இரண்டாயிரத்தி நூற்றி முப்பத்தி இரண்டு பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்பு வரை படிக்கும் 18 இலட்சம் பேருக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து உலகத்திற்கே வழிகாட்டும் முதலமைச்சராக ஸ்டாலின் விளங்குகிறார்."


 இப்படி ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்து பார்த்து செய்யும் முதலமைச்சர் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை மடிக்கணினி, சைக்கிள் என எல்லாவற்றையுமே வழங்கி எண்ணற்ற சாதனைகளை செய்து வருகிறார் என்று அமைச்சர் நாசர் பேசினார்.





தூத்துக்குடி ,ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி சிலுவைப்பட்டியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவிற்கு கலெக்டர் இளம்பகவத் தலைமை வகித்தார்.

 கூடுதல் கலெக்டர் வளர்ச்சி ஐஸ்வர்யா வரைவேற்புரையாற்றினார். 


அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி திட்ட உரையாற்றினார்.





 விழாவில் சண்முகையா எம்எல்எ, மேயர் ஜெகன் பெரியசாமி, ஊராட்சிமன்ற தலைவர் சரவணக்குமார், கோட்டாட்சியர் பிரபு, எஸ்.பி.அல்பர்ட்ஜான், எஎஸ்பி.மதன் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய்சீனிவாசன், தாசில்தார்கள் முரளிதரன், சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் சரவணவேல்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் பானு, மாணிக்கவாசகம், உதவி அலுவலர் மகேஷ்வரி, பொறியாளர் ரவி, மேற்பார்வையாளர் முத்துராமன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி, தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சூழல்; அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி, முன்னாள் ஆவின் சேர்மனும் மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி அமைப்பாளருமான சுரேஷ்குமார், தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ஹரிபாலகிருஷ்ணன், கணேசன், ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, சேசுராஜா, தங்கமாரிமுத்து, ஒன்றிய மகளிரணி அமைப்பாளர் ஜெஸிந்தா, மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் மைக்கேல்ராஜ், பிலோமின்ராஜ், ராமர், மாநகர திமுக துணைச்செயலாளர் கீதா முருகேசன், சட்டமன்ற தொகுதி உதயநிதி ஸ்டாலின், நற்பணிமன்ற அமைப்பாளர் பாரி, மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், கிளைச் செயலாளர்கள் காமராஜ், ரத்தினகுமார், அன்பு, ரமேஷ், வேல்ராஜ், முருகன், சந்திரசேகர், சண்முகத்தாய், கிராம நிர்வாக அலுவலர் அமலதாஸ், சுகாதார ஆய்வாளர் வில்சன், டாக்டர் விக்னேஷ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி லிங்கராஜா, மின்வாரிய தொழிற்சங்க தலைவர் பேச்சிமுத்து மற்றும் கப்பிக்குளம் பாபு, கௌதம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன்பாண்டியன் உள்பட அரசுத்துறை அலுவலர், பயனாளிகள் கலந்து கொண்டனர். அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை இணை இயக்குநர் ரமேஷ் நன்றியுரையாற்றினார்.

வியாழன், 5 செப்டம்பர், 2024

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகம் -அலுவலகம் திறப்பு

  ▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

6-9-2024 photo news 

by John posco reporter


தூத்துக்குடி மாவட்டத்தில்....

தமிழக வெற்றிக் கழகம்  அலுவலகம் திறப்பு பரபரப்பு 



இது பற்றிய செய்தியாவது:-

தற்போது ஆளும் கட்சி எதிர் கட்சி மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படும் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் ஆரம்பத்திலுள்ள தமிழக வெற்றி கழகம் சமீபத்தில் அவரது கட்சி கொடி அறிமுகப்படுத்தினார் .



இதையொட்டி...

தமிழக முழுவதும்..

த வெ க கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாகம் அடைந்து மாவட்டங்களில் கட்சி அலுவலகம் திறந்து பொதுமக்கள் மத்தியில் தீவிர கட்சி பணியாற்ற தொடங்கி விட்டார்கள்.





        தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகரில் பூபாலராயர் புரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கிளை அலுவலகத்தை மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் MSC. BEd  திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.



இந்நிகழ்வில் அண்டோ  தலைமையில் தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகத் தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர் 

.... பொதுமக்களுக்கு இனிப்புகளும், குளிர்பானங்களும் வழங்கப்பட்டது. 



ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2024

முதல்வர் ஸ்டாலின் தூத்துக்குடியில் நாளை மாநகராட்சி மாநாட்டு மையம் திறப்பு விழா முன்னாள் நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்க படுமா என எதிர்பார்ப்பு!!!

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

11-8-2024 photo news 

by Arunan journalist 

தூத்துக்குடியில் மாநகராட்சி பகுதியில் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு மையம் நாளை 12-8-2024 தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார்.



இதுபற்றி செய்தியாவது:-


தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களின் வாயிலாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.


12. 8. 2024 திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் காணொலிக் காட்சியின் வாயிலாக  தூத்துக்குடி மாநகர மாநாட்டு மையம் வளாகத்தில் திறந்து வைக்க உள்ளார்கள்.



தூத்துக்குடி 2 ம் ரயில்வே கேட் அருகே உள்ள பகுதியில் மாநகராட்சி மாநாட்டு மையம் புதியதாக கட்டப்பட்டுள்ளது.

புதிய கட்டிடம் முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் "பெரிய சாமி "பெயர் வைத்து அறிவிப்பு வருமா எதிர் பார்ப்பு !!!



இதற்கு கடந்த  மாதம் 31-7-2024 அன்று நடைபெற்ற தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ...

திமுக கவுன்சிலர்கள் தற்போது இருக்கும் அமைச்சர் கீதா ஜீவன்- மேயர் ஜெகன் ஆகியோரின் தந்தையும் முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் ஆக இருந்த பெரியசாமி (Ex  MLA) பெயர் வைக்க வேண்டும் என மாமன்றத்தில் தெரிவித்தனர். 

அதற்கு மேயர் ஜெகன் பெரியசாமி இது பற்றி உங்கள் விருப்பத்தை... மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு எடுத்து செல்கிறேன் என்றார்.

இதனால் புதியதாக கட்டப்பட்ட மாநகராட்சி மாநாட்டு மையம் கட்டிடத்திற்கு மறைந்த முன்னாள் தூத்துக்குடி நகர் மன்ற தலைவர் பெரிய சாமி பெயர் வைக்கப்படுமா? அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



சனி, 7 அக்டோபர், 2023

வஉசி துறைமுகம் என்ற பெயர் இருட்டடிப்பு தூத்துக்குடி புதிதாக திறக்கப்பட்ட உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் புதிய துறை முகம் என்று எழுதி இருப்பதை வ உ சி துறை முகம் என் உடனே மாற்றம் செய்ய வேண்டும் தமிழ்நாடு வ உ சி எழுச்சிப் பேரவை நிறுவனத் தலைவர் மா.தமிழ்ச்செல்வன் தமிழக அரசுக்கும் மற்றும்தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு ஜெகன் அவர்களுக்கும் வ உ சி எழுச்சி சார்பாக கோரிக்கை

தூத்துக்குடி லீக்ஸ் 7-10- 2023


தூத்துக்குடி புதிதாக திறக்கப்பட்ட உள்ள அண்ணா பேருந்து நிலையத்தில் வஉசி துறைமுகம் என்ற பெயர் இருட்டடிப்பு

தமிழ்நாடு வ உ சி எழுச்சிப் பேரவை நிறுவனத் தலைவர் மா.தமிழ்ச்செல்வன் தமிழக அரசுக்கும் மற்றும்தூத்துக்குடி மாநகராட்சி மேயர் திரு ஜெகன் அவர்களுக்கும் வ உ சி எழுச்சி சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்



இது பற்றிய செய்தியாவது:-

08/10/2023 அன்று தூத்துக்குடி யில் புதியதாக திறக்கப்பட உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள வழித்தடங்கள் பெயரில் புதிய துறைமுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


மாற்றம் செய்யப்பட்ட டெல்லி கேஜட் அறிவிப்பு உத்தரவு 


தூத்துக்குடி புதிய துறைமுகம் என்ற பெயர் 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வ உ. சிதம்பரனார். துறை முகம் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது ஐயா வ உ சி யின் பெயரை இருட்டடிப்பு செய்து இருக்கிறார்கள்.இந்த செய்தி கூட தெரியாமல் தூத்துக்குடி மாநகராட்சி வழித்தடங்கள் புதிய துறைமுகம் என்று குறிப்பிட்டுள்ளது .


தற்போது புதிய துறை முகம் என்பதை  உடனே நீக்கிவிட்டு வ.உ. சிதம்பரனார் துறைமுகம் குறிப்பிட வேண்டும் என்று தமிழ்நாடு வ உ சி எழுச்சி பேரவை. நிறுவனத் தலைவர் எம் தமிழ்ச்செல்வன் அவர்கள் தமிழக அரசுக்கும் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிய சாமி அவருக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல் அரசு போக்குவரத்து கழகம் உடனடியாக பேருந்துகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.




.

வியாழன், 5 அக்டோபர், 2023

2023oct 8 ல் தூத்துக்குடி பேருந்து நிலையம் அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார்.கனிமொழி எம்.பி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என அமைச்சர் கீதாஜீவன் தகவல்

 தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் நேரு 8ம் தேதி திறந்து வைக்கிறார். அமைச்சர் கீதாஜீவன் இன்று 6-10-2023 தகவல் தெரிவித்தனர்.

இதுபற்றி செய்தியாவது:-

       தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் 53 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது-. அதன் இறுதி கட்டப் பணிகள், வேகமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு பணிகளை நல்ல முறையில் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டார்.



      பின்னர் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில்..


 தூத்துக்குடி பழைய அண்ணா பேருந்து நிலையம் மற்றும் அதன் அருகில் இருந்த போக்குவரத்து கழக பணிமனை ஆகிவற்றை அகற்றிவிட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 



ஆனால், அதிமுக ஆட்சியில் 2 ஆண்டில் வெறும் 10 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்றது. 


தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். 



இதனையடுத்து தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் கட்டும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. 


நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, கனிமொழி எம்.பி. வந்து பார்வையிட்டு பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தனர். 



தற்போது, இறுதிகட்ட பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. 


சுமார் ரூ.53 கோடி மதிப்பில் 4 தளங்களாக பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. 


தரைத்தளத்தில் 29 பேருந்துகள் ஒரே நேரத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது-. 


தரை தளத்தில் 20 கடைகளும், முதல் தளத்தில் 49 கடைகள், 2வது மற்றும் 3வது தளத்தில் 29 கடைகள் என சுமார் 120 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. 



பேருந்து உள்ளே வருவதற்கும் மற்றும் பயணிகளை ஏற்றி இறக்க வருகை தரும் கார், ஆட்டோ, உள்ளிட்ட வாகனங்கள் வருவதற்கென்றும் 9 வழிகள் அமைக்கப்பட்டுள்ளது. 



கார் மற்றும் இருசக்கர வாகன பார்க்கிங் முதல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ளது-. 


பேருந்து நிலையம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பேருந்து நிலையத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் மாவட்டத்தின் சிறப்புகளை குறிக்கும் வகையில் திருச்செந்தூர், குலசேகரபட்டினம் கோவில்கள், பனிமயமாதா பேராலயம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை போன்றவை வரையப்பட்டு வருகிறது. பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் பொன்மொழிகளும் இடம்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் திறக்கப்பட்ட அன்றே இங்கிருந்தே அனைத்து பேருந்துகளும் இயக்கப்படும். 


ஏற்கனவே பழைய பேருந்து நிலையமாக இருந்த போது, அண்ணா பேருந்து நிலையம் என்று அழைக்கப்பட்டது. 


அதே போன்று ஸ்மார்ட் சிட்டி பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் என்றே அழைக்கப்படும் வரும் 8ம் தேதி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கிறார். 


கனிமொழி எம்.பி, உள்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று தெரிவித்தார்.

     ஆய்வின் போது கலெக்டர் செந்தில்ராஜ், மாநகராட்;சி ஆணையர் தினேஷ்குமார், இணை ஆணையர் ராஜராம், செயற்பொறியாளார் பாஸ்கர், பொறியாளர் சரவணன், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், சேகர், மற்றும் கருணா, மணி, அல்பட், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

2023 oct 13 ல் வீரமாமுனிவர் ராவ்பகதூர் குரூஸ் ஜயா மணிமண்டபம் முதல்வர் ஸ்டாலின் திறப்பு

 thoothukudileaks 6-10-2023

Photo news by sunmugasunthram journalist 

தூத்துக்குடியில் ராவ்பகதூர் குரூஸ்  ஸ்டாலின் மணிமண்டபத்தினை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் தகவல்

இதுபற்றி செய்தியாவது:-

    தூத்துக்குடி மாநகராட்சி எம்.ஜி.ஆர் பூங்காவில் ரூ.77.87 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் ராவ்பகதூர் குரூஸ் ஸ்டாலின் மணிமண்டப கட்டுமானப் பணிகளை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.



அப்போது செய்தி்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:-

மக்களுக்காக அரும்பணியாற்றிய ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்து மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர்  ஆணைக்கிணங்க சட்டமன்றத்திலே அறிவிக்கப்பட்டது. 

தூத்துக்குடியில் ஜயா ராவ் பகதூர் ஜயா மணிமண்டபம் 

சுமார் ரூ.77.87 லட்சம் மதிப்பில் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. மணிமண்டபத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 13ம் தேதி காணொலிகாட்சி மூலம் திறந்து வைக்கிறார்.  

    பொதுமக்களின் கோரிக்கையாக சில ஆலோசனைகள் படி இந்த சிலை விரைவாகவும், நேர்த்தியாகவும் அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் உத்தரவின்படி இந்தபணிகளை செய்தித்துறை மூலமாக செய்து வருகிறோம். 

காம நாயக்கன் பட்டியில் ..வீரமாமுனிவர் 

 தூத்துக்குடி மாவட்டத்தில்  வாழ்ந்த வீரமாமுனிவர் காமநாயக்கன்பட்டியில் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

அதையும் 13ம் தேதி திறந்து வைக்கிறார். இதுபோன்ற பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பார்வைக்கு ஓப்படைக்கப்பட்டு வருகிறது. 

பரமக்குடியில் தியாகி இமானுவேல் அரங்கம் 

இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்திற்கும் அரசாணை வழங்கப்பட்டிருக்கிறது. சமீபத்தில் கூட பரமக்குடியில் சமூக நீதிக்காக குரல் கொடுத்த தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தையும் பார்வையிட்டு வந்துள்ளோம். 

பசும்பொன்னில் ஜயா முத்துராமலிங்கம் நினைவு மண்டபம் 

அதேபோல் பசும்பொன்னில்  அவரது சொந்த ஊரிலே அவரது நினைவிடம் அருகில் மண்டபம் வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வந்திருக்கிறது. அதையும் ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம். இதுவரை அறிவிக்கப்பட்ட அனைத்து திட்டங்களுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

கோரிக்கை வரவர நிதிநிலைக்கேற்ப பணிகளை செய்து வருகிறோம். 

தேர்தல் நேரத்திலே அறிவித்த வாக்குறுதியான பத்திரிக்கையாளர் நலவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

உரியமுறையில் அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், அலுவல்சாரா உறுப்பினர்கள் 5 முறை கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து பத்திரிகையாளர்களுக்கு உரியமுறையிலே அதற்கான பணிகளை செய்திருக்கிறோம். 


வாரியத்திலே இருக்கக்கூடிய அலுவலர் சார்ந்த உறுப்பினர்களானாலும் சரி, அலுவல் சாரா உறுப்பினர்களானாலும் சரி தங்களுடைய கருத்துக்களை கூறும் போது அதை ஏற்றுக்கொள்ளப்பட்டு உரியமுறையில் பரிசீலித்து வருகிறோம். பத்திரிகையாளர்களுக்கு உதவிகள் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது. பத்திரிகையாளர்களை ஊழியர் என்று ஏற்றுக் கொண்டால் அதற்குரிய சான்றிதழ் எங்களுக்கு வேண்டும். 


வாரியத்திலே பதிவு செய்து கொள்பவர்களுக்கு சில விதிமுறைகள் இருக்கிறது. விதிமுறைகள் அடிப்படையில் உரிய சான்றிதழ் வழங்கினால் யாராக இருந்தாலும் உதவிகள் செய்து கொடுக்கப்படும். சில நிறுவனங்கள் நியூஸ் ஏஜெண்ட் என்று அவர்களுக்கு சான்று வழங்க மறுக்கிறார்கள். போலி பத்திரிக்கையாளர்கள் குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. 


அதை உரிய முறையில் பரிசீலித்து கொண்டிருக்கிறோம். அரசு நிச்சயமாக அதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர்கள் குழு அமைத்து அதன் மூலமாக அதை ஆய்வு செய்து உண்மையான பத்திரிக்கையாளர்கள், போலி பத்திரிக்கையாளர்கள் யார் என்பதை கண்டறிந்து செய்தித்துறை நிச்சயமாக அதற்குரிய நடவடிக்கை எடுக்கும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன்  தெரிவித்தார்.

       நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, ஆணையர் தினேஷ்குமார், துணை மேயர் ஜெனிட்டா, செய்தித்துறை இணை இயக்குநர் தமிழ்செல்வராஜன், பொதுப்பணித்துறை கோட்டப்பொறியாளர் தம்பிரான், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், வட்டாட்சியர்கள் பிரபாகரன், மல்லிகா  எட்டயபுரம் பேரூhட்சி மன்றத் தலைவர் ராமலெட்சுமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாநில மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், கவுன்சிலர்கள் ராமகிருஷ்ணன், கந்தசாமி, கனகராஜ், பொன்னப்பன், ரெங்கசாமி, இசக்கிராஜா, பவாணி, ரெக்ஸின், மாவட்;ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், அரசு வழக்கறிஞர் ஆனந்தகபரியேல்ராஜ், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, வக்கீல் கிருபாகரன், கபடிகந்தன், பிரபாகர், ஜோஸ்பர், அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்;ந்து எட்டயபுரத்தில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் அறிந்துகொள்ள உதவும் வகையில் விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ரூ.5.06 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஒளி-ஒலிகாட்சியின் செயல்பாட்டினை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் தொடங்கி வைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்று படத்தினை பார்வையிட்டார்.