நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாம் தமிழர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 மார்ச், 2026

பழங்குளம் பகுதியில் தெரு விளக்கு, பொது கிணறு பாதுகாப்பு கோரி நாம் தமிழர் கட்சி மனு

Tamil Nadu updates 9-3-2026

தூத்துக்குடி மார்ச் 9:

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்குளம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த கோரி நாம் தமிழர் கட்சி நிர்வாகி வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தார்.

thoothukudileaks


பழங்குளம் ஊரில் இருந்து நாசரேத் – சாத்தான்குளம் நெடுஞ்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை ஓரங்களில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

thoothukudileaks


 மேலும், பழங்குளம் ஊரில் உள்ள இரண்டு பொதுக் கிணறுகளுக்கு மேல்மட்ட மூடி அமைத்து குடிநீரை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகளை நிறைவேற்றிட இன்று (09.03.2026) சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் இடம் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் தட்டார்மடம் சகாய சீலன் மனு அளித்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து விரைவில் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

சனி, 12 ஏப்ரல், 2025

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்

Tamil Nadu updates

Photo news by Arunan journalist 

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடி:

வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





தூத்துக்குடி 12வது வாசல், மையவாடி எதிர்புறம் உள்ள மைதானத்தில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது. 


இதில் மாநில மாணவர்பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபுபக்கர் தலைமையேற்க, மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பு அலங்காரபரதர் மற்றும் குளாரியான்  நாடாளுமன்ற பொறுப்பாளர் கிங்ஸ்டன் ராஜசேகர் கலந்து கொண்டனர் 






ஆர்ப்பாட்டத்தில்  தூத்துக்குடி மண்டல செயலாளர்கள் இசக்கி துரை வேல்ராஜ், முன்னிலை வகித்தனர் 



செ. பரதேசி, தகவல் தொடர்பு செயலாளர் மாரிமுத்து, ஒட்டப்பிடாரம் கிழக்கு தொகுதி செயலாளர் அன்ன லட்சுமி, மேற்கு தொகுதி செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வக்ஃப் வாரிய சட்டம் பொதுமக்கள் உரிமைகளை மீறுவதாகும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.


---

திங்கள், 24 பிப்ரவரி, 2025

சீமானை விட்டு காளியம்மாள் விலகல் பரபரப்பு அறிக்கை

Tamil Nadu updates,

காளியம்மாள் பிரகாசன்
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,
நாம் தமிழர் கட்சி
தேதி : 24.02.2025





இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன்..கட்சியில் பயணித்த
ஒவ்வொரு கணமும் உண்மையும். நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து
வந்தேன். 



இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது.
பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன்
பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். 


நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான்,
தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும்.
அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில்
நான் பெருமை கொள்கிறேன்.


 ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும்
நினைக்கவில்லை, 


கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து
எவ்வளவு போராட முடியுமோ. என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும்,
நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். 



எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி,
வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை
மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். 

இங்கு பயணித்ததில் பலரின்
அன்பு, அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில்
நிலைநிறுத்தியுள்ளேன், 

வேதனை வேதனை!!!

என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த,
களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும், உண்மையான
உழைப்பாளர்களுக்கும், உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு
என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.



ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த
நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த
நன்றிகள். 

நெருக்கடி!!!

எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள
நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக
இருந்தேன் 

வருந்துகிறேன்????

ஆனால் இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம்
வருந்துகிறேன். 


அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு
மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும்
கடமை பட்டவளாக இருப்பேன். 


என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்,எனக்கும் தான்.
காலத்தின் வழிநடத்தல்
என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்....
நன்றி,வணக்கம், 

இவ்வாறு தனது அறிக்கையில் காளியம்மாள் தெரிவித்துள்ளார்.

பாடல் வீடியோ பார்க்க 

திங்கள், 2 செப்டம்பர், 2024

நாம் தமிழர் கட்சி உடைந்தது?!!! புரட்சி தமிழர் கட்சி உதயம்

நாம் தமிழர் கட்சி நடத்தி வருபவர் சீமான் 



  தமிழ் தேசிய தலைவர் வழியில் பின் தொடர்வதாகவும் இங்குள்ள மக்கள் பிரச்சினைகளில்  சீமான் பரபரப்பு அரசியல் பண்ணி வந்தார்.

சமீபகாலமாக இவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டு விமர்சனங்கள் கட்சி நிர்வாகிகள் மீதும் முன்பை விட தமிழக காவல்துறை நடவடிக்கை தொடர்ந்து பாய்ந்து கொண்டு இருக்கிறது .


இதனால்...

 நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அதிருப்தியுடன் முக்கிய நிர்வாகிகள் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கின்றார்கள் 

இந்நிலையில்...

நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள், ‘புரட்சித் தமிழர் கட்சி’ என்ற புதிய கட்சியை தொடங்கினர்!



சென்னையில் கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்து வைத்து செய்தியாளர் சந்திப்பு நடத்தினர்.

சீமான் மீது குற்றச்சாட்டு !!!

மக்களிடம் இருந்து பெறப்படும் திரள் நிதியில் ...

சீமான் சொத்துக்களை வாங்கி குவித்திருப்பதாக நாம் தமிழரில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் குற்றச்சாட்டு.



இதனால் நாம் தமிழர் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

இலங்கை படையினரை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் தூத்துக்குடி கலெக்டர் இடம் மனு அளித்தனர்

▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂ 

12-8-2024

இலங்கை படையினர் கைது செய்த தருவை 22 மீனவர்களை விடுவிக்க கோரி தூத்துக்குடி கலெக்டர் இடம் நாம் தமிழர் கட்சி யினர் மனு அளித்தனர்.



இது பற்றிய செய்தியாவது:-

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதி தருவைகுளத்தை சேர்ந்த 22 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.



எனவே இதனை கண்டித்து இன்று 12/8/25 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்   மனு  அளித்தனர்.. 


நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

வே.வேல்ராஜ், தலைமையில்... மாவட்ட தலைவர் செயசீலன், பொருளாளர் செந்தில்குமார்,

தூத்துக்குடி தொகுதி செயலாளர் வே. மாரி சிவா,தொகுதி தலைவர்

பாக்கியராஜ், தொகுதி செயலாளர் தாமஸ், ஓட்டப்பிடாரம்

தொகுதி தலைவர்

வைகுண்டமாரி உட்பட தூத்துக்குடி மத்திய மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 29 மார்ச், 2024

சீமான் தூத்துக்குடி திரேஸ்புரம் தேர்தல் பரப்புரை

நாம் தமிழர் சீமான் இன்று தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் தேர்தல் பரப்புரையில் பரபரப்பு.



இதுபற்றி செய்தியாவது:-

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் தேர்தல் பரப்புரை பரபரப்புடன் சூடுபிடித்துள்ளது.



தமிழகத்தில் முதல் முதலாக மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தான் தங்கள் கட்சி சார்பில் நிற்க போகும் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு எந்த கூட்டணி யும் இன்றி நாம் தமிழர் தனித்து போட்டியிடுவதாக கூறி அசத்தியது.



இரண்டு தடவையாக வேட்பாளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட்டது.

அதன் படி தேர்தல் பரப்புரையிலும் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கிளம்பி விட்டார்.

தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டி லிடும் வேட்பாளர் 

ரவீனா ரூத் ஜென் ஆதரவு கேட்டு இன்று 

 சனிக்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  செந்தமிழன் சீமான் திரேஸ்புரம்  பகுதியில்  ஆதரித்து வாகன பரப்புரை செய்தார்...

பரப்புரை நிகழ்ச்சியில் திரளாக நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.


உற்சாகமிகு பரப்புரை 



நாம் தமிழர்


வே.வேல்ராஜ்

9865587441

தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர்

திங்கள், 11 மார்ச், 2024

நாம் தமிழர் சீமான் அதிரடியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அறிவிப்பு

▂▃▅▇█▓▒░𝚝𝚑𝚘𝚘𝚝𝚑𝚞𝚔𝚞𝚍𝚒 𝚕𝚎𝚊𝚔𝚜░▒▓█▇▅▃▂11-3-2024

Photo news by

roja arunan

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதிரடியாக தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர்  பெயரை அறிவிப்பு செய்துள்ளார்

பெயர் . :  ரொவினா ரூத் ஜேன் 
பிறந்த தேதி    : 14.4.1991
படிப்பு  :  B.D.S
தொழில் :பல் மருத்துவர் 
சொந்த ஊர்:தூத்துக்குடி
தூத்துக்குடி வேட்பாளர்ரொவினா ரூத் ஜேன்  அருகில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் தூத்துக்குடி எம்பி தொகுதி வேட்பாளரை இன்னும் அறிவிக்க முடியாமல் பிரபல அரசியல்கட்சி கள் நேர்காணல் என ரொம்பவே திணறி கொண்டு இருக்கின்றது.

அதே வேளையில் .... அதிரடியாக முதன்முதலாக ஒவ்வொரு தொகுதிகளிலும் நாம் கட்சி வேட்பாளர் யாரென வேட்பாளர் பெயர் பட்டியல் வெளியிட்டு அசத்தியுள்ளார். நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்.
தூத்துக்குடி மாவட்டசெயலாளர்

வேல்ராஜ் வலது கரத்தை
 பிடித்தபடி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
இதனால் நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் மற்றும் தம்பிகள் உற்சாகமடைந்து அறிவிக்க ப்பட்ட வேட்டாளர்களுடன் இப்போதே களத்தில் குதித்துள்ளார்கள்.


வெள்ளி, 1 மார்ச், 2024

ஸ்டெர்லைட் மூடல் தீர்ப்பை வரவேற்று நாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்

 t░h░o░o░t░h░u░k░u░d░i░l░e░a░k░s░

           2-3-2024       11.00am

ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல் தீர்ப்பை வரவேற்று நாம் தமிழர் கட்சி தூத்துக்குடியில் பொது மக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கி கொண்டாட்டம்



தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடல்

 #உச்ச நீதிமன்ற தீர்ப்பு


 வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு கடந்த 2024 பெப்ரவரி 29ம் தேதி பரபரப்பாய் வெளியானதும்... ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் தூத்துக்குடி மாநகரமெங்கும் பேரூந்து நிலையம் மற்றும் பல பகுதிகளில் மகிழ்ச்சி உடன் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு லட்டு வழங்கி கொண்டாடுவருகிறார்கள்



இந்நிலையில்

 2-3-2024 இன்று தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு 11 மணி அளவில் நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ் தலைமையில் நாம் தமிழர் கட்சி தோழர்கள் ஸ்டெர்லைட் நிரந்தர மூடல் தீர்ப்பை வரவேற்று பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு இனிப்பு லட்டு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்.

மத்திய மாவட்ட செயலாளர் வேல்ராஜ்  தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ் ,

தொகுதி தலைவர்கள் வைகுண்டமாரி, பாக்கியராஜ், முன்னாள் திருவைகுண்டம் தொகுதி செயலாளர் பட்டாணி , மற்றும் நிர்வாகிகள் சுப்புராம் ,ஜெபஸ்டின், கார்த்திக் ,ஜென்சன் , ரமேஷ் , சகாயம் , ரெஜிஸ்குமார் ,சாமிகாளை சில்வஸ்டர் உட்பட பலர் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியில் 50 -க்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர்

புதன், 19 அக்டோபர், 2022

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? நாம் தமிழர் சீமான் பரபரப்பு மேலும் படிக்க...

 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு துப்பாக்கிச்சூட்டுக்குக் காரணமான அரசு அதிகாரிகள், காவல்துறையினர், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீது கொலைவழக்குப் பதிவுசெய்து கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல் 



இதுபற்றிய செய்தியாவது:- 

தூத்துக்குடியிலுள்ள ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிராக மண்ணின் மக்கள் நடத்திய மக்கள்திரள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி நடத்தியும் 14 உயிர்களைப் பறித்த முந்தைய அதிமுக அரசின் அரசப்பயங்கரவாத நடவடிக்கையை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் இறுதி அறிக்கை பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. 


சமூக விரோதிகள் என முத்திரைக் குத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட மண்ணின் மக்களுக்கான நீதியை நிலைநாட்டும்விதமாக, போராட்டக்களத்தில் நடந்த உண்மைகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.அம்மையார் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 


தூத்துக்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடும் அநீதியை மக்கள் மன்றத்திலும், ஆணையத்தின் முன் நேர்நின்றும் தொடர்ச்சியாக எடுத்துரைத்து வந்தேன். அவற்றைப் பிரதிபலிப்பது போல, சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது 


ஆணையத்தின் அறிக்கை. தூத்துக்குடி மக்களின் மீது சுமத்தப்பட்ட அவப்பெயரையும், பழிச்சொல்லையும் முழுமையாகப் போக்கி, ஆளும் வர்க்கத்தின் கோரப்படுகொலைகளைத் தோலுரித்த அம்மையார் அருணாஜெகதீசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமானப் பாராட்டுகளையும், பெரும் நன்றியையும் 

தெரிவித்துக்கொள்கிறேன். 


ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற அறப்போராட்டத்தின் நூறாவது நாளில், பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிப் பேரணியாய் வந்தபோது... அவர்களை நோக்கித் தடியடியும், துப்பாக்கிச்சூடும் நடத்தி, அடக்குமுறையையும், ஒடுக்குமுறையையும் கட்டவிழ்த்து விடப்பட்டது. 


பேரணி நடைபெற்ற இடத்திற்குத் தொடர்பே இல்லாது தொலைதூரத்திலுள்ள பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் அம்மையார் ஜான்சி படுகொலை செய்யப்பட்டார் என்பதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டிலும் ஒருவர் பலியானார் என்கிற இரு சம்பவங்களே, இத்துப்பாக்கிச் சூடு திட்டமிட்டு நிகழ்த்தியப் பச்சைப்படுகொலை என்பதற்கான சாட்சியங்களாகும். 


காவல்துறையினர் போராட்டக்காரர்களின் முட்டிக்குக் கீழே சுடுகிற வகையில் வெள்ளை ஏகாதிபத்திய ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விதிமுறையையே நாம் ஏற்காதபோது, போராட்டக்காரர்களின் தொண்டை, மார்புப்பகுதிகளைக் குறிவைத்து சுட்டு, தூத்துக்குடி மக்களைச் சுட்டுக் கொன்றொழித்தக் கொடுங்கோன்மையை எப்படி சகித்துக்கொள்ள முடியும்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் தீ வைக்கப்படுவதற்கு முன்பே, அங்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது; 


பொதுமக்கள் தப்பியோடும்போதும் அவர்களைக் குறிவைத்து சுட்டுக் கொன்றிருக்கிறார்கள் என்பதும், அவர்கள் எவ்வித ஆயுதமும் இல்லாத நிராயுதபாணியாக நின்றார்கள் என்பதும் அறிக்கையில் தெளிவாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்காப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்படவில்லை; மாறாக, மக்களைக் கொன்றுகுவிக்கும் நோக்கத்தோடே நிகழ்த்தப்பட்டது என்பதை அம்மையார் அருணா ஜெகதீசன் ஆதாரத்தோடு உறுதிசெய்திருக்கிறார். 


துப்பாக்கிச்சூடு குறித்தான முன் எச்சரிக்கை மக்களுக்குக் கொடுக்கப்படாததும், சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட முட்டிக்குக் கீழே சுடப்படவில்லை என்பதும் இது திட்டமிட்டப் படுகொலை என்பதை ஆணித்தரமாகக் கூற போதுமான காரணமாகும். 


போராட்டக்காரர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையேயான வேறுபாட்டை அறியப் பாதுகாப்புக்கு வரும் காவல்துறையினர் கட்டாயம் சீருடையில்தான் வர வேண்டும் எனும் விதியிருக்கும்போது, சீருடை அணியாத காவலர்கள் அதிநவீனத்துப்பாக்கியோடு எப்படிக் களத்திற்கு வந்தார்கள்? துப்பாக்கிச்சூடு நடக்கப்போகிறது என்பது முன்கூட்டியே எப்படி அவர்களுக்குத் தெரிந்தது? கூட்டத்தைக் கலைக்க வழிவாய்ப்புகள் இருந்தும் அதனைச் செய்யாது, துப்பாக்கிச்சூட்டைக் கையிலெடுத்தது எதற்காக? எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமலும், கூட்டத்திலிருந்து தப்பியோடியவர்களைக்கூட விடாமலும், காவலர்கள் வாகனத்தின் மீது ஏறி நின்று, போராட்டக்காரர்களைக் குறிவைத்துச் சுட்டுக்கொன்றது எதனால்? போராட்டத்தில் சுடப்பட்டவர்கள், காயம்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில்கூட துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டிய தேவையென்ன வந்தது? இவ்வளவு பெரிய போராட்டம் நகரத்தில் நடந்து கொண்டிருக்கும் நாளன்று, தூத்துக்குடியில் இல்லாது மாவட்ட ஆட்சியர் கோவில்பட்டிக்கு ஏன் சென்றார்? துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி அளித்தது வட்டாட்சியர்கள்தான் எனக்கூறுவது உண்மைக்குப் புறம்பானது இல்லையா? நாடே உற்றுநோக்கிக்கவனிக்கிற ஒரு போராட்டத்தில், மத்திய/மாநில அரசின் அனுமதியில்லாமல் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியளிக்கிற அளவுக்கு வட்டாட்சியர்களுக்கு இந்த அமைப்பில் அதிகாரமும், வலிமையும் இருக்கிறதா? என நீளும் கேள்விகள் யாவும் வேதாந்தா குழுமத்துக்கு ஆதரவாக மண்ணின் மக்களைக் கொன்றொழிக்க அன்றைய அரசுகள் நிகழ்த்திய சதிச்செயலை அம்பலப்படுத்துகிறது. 


நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையத்தின் அறிக்கையில், காக்கை, குருவிகளைப் போல, மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; 


காவல் துறையினர் ஒளிந்துகொண்டு தப்பித்து ஓடியவர்களையும் சுட்டுப்படுகொலை செய்துள்ளனர் எனக்கூறி, 17 காவல்துறையினர் பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்குப் பரிந்துரை அளிக்கப்பட்டிருக்கிறது. 


மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி சுடலைக்கண்ணு மட்டும் 17 சுற்றுகள் சுட்டுள்ளார் எனவும், 4 இடங்களில் அவரைச் சுட வைத்ததன் மூலம், அடியாள் போல காவல்துறை பயன்படுத்தியுள்ளது எனவும், காவல்துறை தலைமையின் அப்பட்டமான தோல்விதான் தூத்துக்குடி படுகொலை எனவும் கூறியுள்ளது 

ஆணையத்தின் அறிக்கை. 14 உயிர்களைப் பலிகொண்ட படுகொலைகளுக்கு முழுமுதற் பொறுப்பேற்க வேண்டிய அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ‘தொலைக்காட்சியைப் பார்த்துதான் துப்பாக்கிச்சூட்டைத் தெரிந்துகொண்டேன்’ எனக்கூறிய பொருந்தா வாதம் முழுமையானப் பொய்யென்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது ஆணையத்தின் அறிக்கை. 


துப்பாக்கிச்சூடு குறித்தான ஒவ்வொரு செய்தியும் முதல்வருக்குத் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கிறது என்பதன் மூலம் அதிமுக அரசால் நிகழ்த்தப்பட்டப் படுகொலையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு என்பது தெளிவாகிறது. 


முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  எதற்காகத் துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதியளித்தார்? எதற்காகப் பச்சைப்படுகொலைகளை அரங்கேற்றினார்? யாருக்காக இதுவெல்லாம் நடந்தது? அனில் அகர்வாலை மனம் நிறைவடையச் செய்யவா? பிரதமர் மோடியை மனம்நிறைவடையச் செய்யவா? இது மன்னிக்கவே முடியாத கொடுந்துரோகம்! வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களையே அரச வலிமையைக் கொண்டு, படுகொலை செய்திட்ட இக்கொடுஞ்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது.


ஆகவே, நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, துப்பாக்கிச்சூட்டுக்குப் பலியானோர் குடும்பத்தினருக்கு 

50 இலட்ச ரூபாயும், காயமுற்றவர்களுக்கு 10 இலட்ச ரூபாயும் துயர்துடைப்புத்தொகை உடனடியாக வழங்க வேண்டுமெனவும், துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்திய 17 காவல்துறையினர் மீது மட்டுமல்லாது, சுட ஆணையிட்ட அரசு அதிகாரிகள், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலைவழக்குப் பதிவுசெய்து, அவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

-செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி