Tamil Nadu updates
Photo news by Arunan journalist
வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடியில் நாம் தமிழர் கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி:
வக்ஃப் வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், நாம் தமிழர் கட்சி சார்பில் தூத்துக்குடியில் இன்று (ஏப்ரல் 13) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி 12வது வாசல், மையவாடி எதிர்புறம் உள்ள மைதானத்தில் காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் துவங்கியது.
இதில் மாநில மாணவர்பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அபுபக்கர் தலைமையேற்க, மாநில மீனவர் பாசறை ஒருங்கிணைப்பு அலங்காரபரதர் மற்றும் குளாரியான் நாடாளுமன்ற பொறுப்பாளர் கிங்ஸ்டன் ராஜசேகர் கலந்து கொண்டனர்
ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி மண்டல செயலாளர்கள் இசக்கி துரை வேல்ராஜ், முன்னிலை வகித்தனர்
செ. பரதேசி, தகவல் தொடர்பு செயலாளர் மாரிமுத்து, ஒட்டப்பிடாரம் கிழக்கு தொகுதி செயலாளர் அன்ன லட்சுமி, மேற்கு தொகுதி செயலாளர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், "வக்ஃப் வாரிய சட்டம் பொதுமக்கள் உரிமைகளை மீறுவதாகும். இது அரசியலமைப்புக்கு எதிரானது. எனவே உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" என கோஷங்களை எழுப்பினர்.
---
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக