முன்னாள் அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முன்னாள் அமைச்சர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

பரபரப்பு முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து தூத்துக்குடியில் சாலை மறியல்

முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் போராட்டம்  நூற்றுக்கணக்கான திமுகவினர் கைது

தூத்துக்குடி, ஆக. 4:

தமிழக முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி மாநகர் மாவட்ட திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை அண்ணா பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

thoothukudileaks


முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திமுக நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு கைது நடவடிக்கையை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் அண்ணா பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பின்னர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினரை கைது செய்து காவல் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அண்ணா பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

thoothukudileaks


புகைப்பட விளக்கம்:
முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து, தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் முன்பு முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் அமர்ந்து முழக்கமிட்ட திமுகவினர்.

வெள்ளி, 3 ஜூலை, 2026

முன்ஜாமீன் தள்ளுபடியான 90 நிமிடங்களில் அதிரடி ஆய்வுப் பணியில் இருந்த திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஸ்பாட்டிலேயே கைது!

 

ஆத்தூர் (03.07.2026):

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பொதுவெளியில் ஒருமையில் அவதூறாகப் பேசிய வழக்கில், திமுக முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் காவல்துறையினரால் இன்று அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

thoothukudileaks



முதலமைச்சருக்கு எதிராக அவமரியாதையான முறையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகப் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தன் மீதான கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் பொருட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இன்று அதனை அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் இன்று ஆத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ளாட்சித் துறை சார்ந்த பல்வேறு ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

90 நிமிடங்களுக்குள்...

மனு தள்ளுபடியான அடுத்த 90 நிமிடங்களுக்குள் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய தமிழக காவல்துறை, அவர் ஆய்வுப் பணியில் இருந்த ஆத்தூர் ஸ்பாட்டுக்கே நேரடியாகச் சென்று அவரைச் சுற்றி வளைத்து அதிரடியாகக் கைது செய்தது. 

வீடியோ 

நீதிமன்ற உத்தரவு வெளியான மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் காவல்துறை நடத்திய இந்தத் துரிதக் கைது நடவடிக்கை, தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் பரபரப்பான விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.



திங்கள், 8 ஜூன், 2026

எடப்பாடி பழனிசாமியுடன் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் நெகிழ்ச்சி சந்திப்பு!

 Tamil Nadu updates

 photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி, ஜூன் 8:

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் இன்று நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

​இன்று (08.06.2026) சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் இல்லத்திற்குச் சென்ற தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன், அவருக்கு பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து வழங்கி மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

thoothukudileaks


ஆலோசனை!!! 

​இந்த சந்திப்பின் போது, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் செயல்பாடுகள், உட்கட்சி வளர்ச்சிப் பணிகள் மற்றும் மக்கள் நலப் பிரச்சினைகள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. 

உற்சாகம்!!!

கட்சியின் தலைமைக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் இடையேயான இந்த முக்கிய சந்திப்பு அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள், 1 ஜூன், 2026

அதிமுக நிர்வாகி தற்கொலை: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கண்ணீர் அஞ்சலி!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, ஜூன் 1

அதிமுகவில் நிலவி வரும் தற்போதைய சூழலால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட அதிமுக நிர்வாகியின் திருவுருவப் படத்திற்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து உருக்கமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.

 மனமுடைந்து தீக்குளித்த நிர்வாகி

தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளரும், தீவிர அதிமுக தொண்டனுமான பூக்கடை மகேந்திரன் என்பவர், கட்சியில் தற்போது ஏற்பட்டு வரும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் கடுமையான மனமுடைவுக்கு ஆளாகியுள்ளார். இதனால் வேதனையடைந்த அவர், தன் உடலில் தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தத் துயரச் செய்தியை அறிந்த அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி..

, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அன்னாரது இல்லத்திற்கு நேரில் சென்று, மறைந்த பூக்கடை மகேந்திரனின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

thoothukudileaks


thoothukudileaks


தூத்துக்குடியில் அஞ்சலி சுவரொட்டி & மரியாதை

இதன் தொடர்ச்சியாக, இன்று (01.06.2026) மாலை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் டூவிபுரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகம் முன்பு மறைந்த பூக்கடை மகேந்திரனின் திருவுருவப்படம் வைக்கப்பட்டது.

மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கி, மகேந்திரனின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி தனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் செலுத்தினார்.

நிகழ்வில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள்:

மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, பகுதிச் செயலாளர்கள் ஜெய்கணேஷ்,பொற்கிழி ஜான்சன் தேவராஜ், சுடலைமணி, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், கே.ஜே. பிரபாகர், அருண் ஜெபக்குமார், தனராஜ்.

thoothukudileaks


வழக்கறிஞர் பிரிவு மற்றும் தொழில்நுட்ப பிரிவு:

 மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் சுகந்தன் ஆதித்தன், இணைச் செயலாளர்கள் ஆண்ட்ரூமணி, சரவண பெருமாள், சரவணகுமார், வழக்கறிஞர்கள் ராஜ்குமார் ஆபிரகாம், ராஜ்குமார், தெர்மல் ஆனந்தராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தூத்துக்குடி மணிகண்டன், சொக்கலிங்கம்.

வட்டச் செயலாளர்கள் மற்றும் கழக தோழர்கள்:

வட்டச் செயலாளர்கள் கொம்பையா, பூர்ண சந்திரன், ஜெரால்டு, மாடசாமி, சண்முகபுரம் மாடசாமி, பண்ணைவிளை சேகர், பிராங்கிளின் ஜோஸ், சுந்தர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பால ஜெயம், சாம்ராஜ், பரிபூரண ராஜா, சகாய ராஜா, தளவாய் ராஜ், சிதம்பரம் உள்ளிட்ட திரளான அதிமுகவினர் கலந்துகொண்டு மறைந்த பூக்கடை மகேந்திரனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



திங்கள், 23 பிப்ரவரி, 2026

தூத்துக்குடியில் புரட்சித் தலைவி ஜெயலலிதா 78-வது பிறந்த நாள் விழா முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் என்னென்ன செய்தார் முழு விவரம்

Tamil Nadu updates, 24-2-2026

photo news by Arunan journalist 

தூத்துக்குடி பெ 24

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வரும், ஜெ. ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்த நாள் விழா இன்று (24.02.2026 – செவ்வாய்க்கிழமை) அதிமுக வர்த்தக அணி சார்பில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.

நள்ளிரவு 12 மணியளவில் பழைய பேருந்து நிலையம் முன்பு கேக் வெட்டி விழா தொடங்கப்பட்டது. பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம் நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கப்பட்டதுடன், விழா சிறப்பாக தொடங்கியது.

தூத்துக்குடி லீக்ஸ்




தூத்துக்குடி லீக்ஸ்

இதனைத் தொடர்ந்து இன்று 24-2-2026 காலை 9.30 மணியளவில் அண்ணா நகர் மெயின் ரோடு, டூவிபுரம் 5-வது தெரு சந்திப்பில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி லீக்ஸ்


பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


 தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம், திரேஸ்புரம் பஜார், மட்டகடை பஜார், வட்ட கோயில், 2-ம் கேட் வடபத்திரகாளி அம்மன் கோயில் தெரு, லூசியா மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு இல்லம், அண்ணா நகர் மெயின் ரோடு, 3-வது மைல் திருவிக நகர், பிரையன்ட் நகர் 12-வது தெரு, சுமங்கலி திருமண மண்டபம் அருகே, சத்யா நகர், எம்ஜிஆர் நகர், முத்தையாபுரம் தோப்பு தெரு உள்ளிட்ட இடங்களில் அம்மா அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பிரியாணி விருந்து -குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!!!

மேலும், 10 ஆயிரம் பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதுடன், இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கி விழா சிறப்பிக்கப்பட்டது. பல்வேறு இடங்களில் அசைவ உணவு வழங்கப்பட்டு மக்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வார்டு, வட்ட, தொழிற்சங்க நிர்வாகிகள், முன்னாள் மற்றும் இன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழா அனைத்தும் அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடியில் புரட்சித்தலைவி ஜெயலலிதா 78வது பிறந்தநாள் விழா – அதிமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்

Tamil Nadu updates photo news by Arunan journalist 

தூத்துக்குடி:பெ 24

மறைந்த தமிழக முதல்வர், இதய தெய்வம், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று காலை 10 மணியளவில் சிறப்பான விழா நடைபெற்றது.

thoothukudileaks


தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா  உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு, விழா கொண்டாடப்பட்டது.

thoothukudileaks


இதனைத் தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


 நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக பங்கேற்றனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்த பல்வேறு நலத்திட்ட  நிகழ்ச்சிகளிலும் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் உற்சாகமாக ஜெயலலிதா பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

திங்கள், 2 பிப்ரவரி, 2026

தென்னாட்டு காந்திபேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினம் – தூத்துக்குடியில் அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் 3-2-2026

தூத்துக்குடி:பெ 3 :

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் “தென்னாட்டு காந்தி” என போற்றப்பட்ட முன்னாள் முதல்வரும், திராவிட இயக்கத்தின் பேரறிஞருமான அண்ணாவின் 57வது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


இதனை முன்னிட்டு அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் பழைய மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு, தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், கழக பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு, பேரறிஞர் அண்ணாவின் புகழைப் போற்றி மரியாதை செலுத்தினர்.


ஞாயிறு, 1 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி அதிமுகவிடம் இருந்து கைவிட்டு போகிறதா? எடப்பாடியார் கவனிப்பாரா? தொண்டர்கள் கவலை

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, ஜனவரி 31 :

2026 சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு தமிழக முழுவதும் அஇஅதிமுக தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பிறந்த நாளான ஜனவரி 17 அன்று, அஇஅதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, முதற்கட்டமாக ஐந்து முக்கிய வாக்குறுதித் திட்டங்களை அறிவித்தார்.



அந்த திட்டங்களை பொதுமக்களிடையே கொண்டு சேர்க்கும் வகையில், துண்டுப் பிரசுரங்கள் மூலம் தேர்தல் அறிக்கையை விளக்கி வழங்க வேண்டும் என கட்சி தலைமையகம் உத்தரவிட்டது. அதன்படி தமிழக முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அஇஅதிமுக தலைவர்கள் ஒன்றிணைந்து களத்தில் இறங்கி, பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்குறுதி துண்டுப் பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.


ஆனால் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் வேறுபட்ட நிலை உருவாகி வருவது கட்சி தொண்டர்களிடையே பெரும் விவாதமாகியுள்ளது. 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட அஇஅதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தனது ஆதரவாளர்களுடன்  துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வருகிறார். 


அதே நேரத்தில், வர்த்தக அணி மாநில செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியனும் தனி அணியாக  களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.


thoothukudileaks


ஏற்கனவே ஒருமுறை வழங்கப்பட்ட பகுதிகளில் மீண்டும் மீண்டும் தனித்தனியாக பிரசுரங்கள் வழங்கப்படுவதால், தூத்துக்குடி தொகுதியில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லை என்ற தோற்றம் உருவாகி வருகிறது என தொண்டர்கள் தெரிவிக்கின்றனர். 

தமிழகத்தில் மற்ற மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் அனைவரும் மனக்கசப்புகளை மறந்து ஒன்றிணைந்து களத்தில் இறங்கி தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மட்டும் முன்னாள் அமைச்சர்கள் தனித்தனியாக செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு பாதகமாகும் என தொண்டர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

“தூத்துக்குடி தொகுதியை அஇஅதிமுக கைவிட்டு விடுகிறதா?” என்ற கேள்வி தற்போது தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையை கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவனித்து, அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே மேடையில் கொண்டு வந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பாரா? என்ற எதிர்பார்ப்பும், அதே நேரத்தில் கவலையும், தூத்துக்குடி அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

thoothukudileaks
இது முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் 



thoothukudileaks
இது முன்னாள் அமைச்சர் சித செல்லப்பாண்டியன் பெயரில் பொதுமக்கள் இடம் வழங்கிய துண்டு பிரசுரம் 

இத்தனைக்கும்... இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அதிமுக தலைமைக்கு விண்ணப்பம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது . 

வியாழன், 29 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் அதிமுக முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு – எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார்

🖤❤️ வெற்றிக்கான பயணம் தூத்துக்குடியில் தொடங்கியது!

#AIADMK #Thoothukudi #Election2026 #SPShanmuganathan #அதிமுக #தூத்துக்குடி #மக்களுடன்_அதிமுக #தேர்தல்2026

தூத்துக்குடி, ஜனவரி 29:

இன்று (29.01.2026) காலை 10.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக சார்பில் முதற்கட்ட தேர்தல் அறிக்கை துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வை தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்   தூத்துக்குடி சிவன் கோவில் முன்பிருந்து துவங்கி வைத்து, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

thoothukudileaks


வ உ சி சந்தை அந்தோனியார் கோவில் தூத்துக்குடி பூ சந்தை பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


பொதுமக்களிடம் நேரடியாக தேர்தல் அறிக்கையை வழங்கி, அதிமுகவின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு உற்சாகமாக ஆதரவு தெரிவித்தனர்.
💪 மக்கள் நலமே முதன்மை – அதிமுக
video பார்க்க 

நிகழ்வின்போது அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள மக்கள் நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு, அதிமுக ஆட்சியின் சாதனைகள் நினைவூட்டப்பட்டன.

இந்த நிகழ்வு தூத்துக்குடி நகரில் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக அமைந்தது.

இச் செய்தியில் புகைப்படம் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 


வெள்ளி, 16 ஜனவரி, 2026

தூத்துக்குடியில் தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி சண்முகநாதன் தலைமையில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாள் விழா

 தூத்துக்குடி: ஜன17

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். 109வது பிறந்தநாள் விழா இன்று விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை சரியாக 10.00 மணிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகம் முன்பும், அதன் பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

thoothukudileaks

Thoothukudileaks


thoothukudileaks


thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை தாங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு புரட்சித்தலைவரின் புகழை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தினர்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.  தமிழக அரசியலில் மக்கள் முதல்வராக உயர்ந்து சமூக நீதியும் மக்கள் நலத் திட்டங்களும் மூலம் கோடானுகோடி மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர் என நிகழ்ச்சியில் பேசப்பட்டு, அவரது வழியில் கட்சியினர் தொடர்ந்து சேவை செய்ய உறுதி எடுத்தனர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


வெள்ளி, 24 அக்டோபர், 2025

அம்மா பேரவையில் வில்சன் புதிய துணைச் செயலாளர் நியமனம்

📰 தூத்துக்குடி லீக்ஸ்

photo news by Arunan journalist 

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் – அரசியல் செய்தி

அம்மா பேரவையில் வில்சன் புதிய துணைச் செயலாளர் நியமனம்

தூத்துக்குடி, அக். 25:
தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவையின் புதிய துணைச் செயலாளராக மாப்பிள்ளையூரனி பகுதியைச் சேர்ந்த வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.



முன்னதாக, வில்சன் அவர்கள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் (AISMK) தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளராகப் பணியாற்றி வந்தார். நடிகர் சரத்குமார் தலைமையிலான இக்கட்சி 12 மார்ச் 2024 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்தது.

சமீபத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய வில்சன், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.

எம்.எக்ஸ். வில்சன் (தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர்)


இதையடுத்து, கடம்பூர் ராஜு , வில்சனை தூத்துக்குடி வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளராக நியமிக்க அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பரிந்துரை செய்தார்.


வீடியோ பார்க்க 

அந்த பரிந்துரையை ஏற்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று அதிகாரப்பூர்வமாக வில்சன் நியமனத்தை அறிவித்துள்ளார்.

அறிவிப்பு வெளியானதும், வில்சன் ஆதரவாளர்கள் உற்சாகம் பொங்கினர். அவர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சி கொண்டாடினர்.

🔸 தூத்துக்குடி லீக்ஸ் செய்தி பிரிவு


இச் செய்தியில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

வியாழன், 18 செப்டம்பர், 2025

அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் திமுக மீது குற்றச்சாட்டு

தூத்துக்குடி, செப்டம்பர் 18: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள் ஆளுங்கட்சி திமுக வினர் மற்றும் அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு கூறியுள்ளார். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

thoothukudileaks


## முறைகேடுகள் அளவு கடந்துள்ளது


அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் தெரிவிக்கையில், 

"தற்போது திமுக அரசும், அதில் பணியாற்றும் சிலர் செய்யும் முறைகேடுகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பதற்கும் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சி திமுகவை சேர்ந்த சிலரும் உடந்தையாக இருந்து வருகின்றனர்" என்றார்.


## மீளவிட்டான் பகுதியில் 97 செண்ட் நிலத்திற்கு பட்டா


மீளவிட்டான் பகுதி-1 கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு அரசு நிலத்தை திமுக கட்சியினர் ஆக்கிரமித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதில் பொன்சிங் மனைவி வீணாம்பிகை சௌதாமினி என்பவருக்கு தூத்துக்குடி வட்டாட்சியர் முரளிதரன் கடந்தாண்டு 10.10.2024 அன்று 97 செண்ட் இடத்திற்கு பட்டா வழங்கியுள்ளதாக தெரிவித்தார்.


### பட்டா விவரங்கள்:

- பட்டா எண் 1233: 18 செண்ட்

- பட்டா எண் 1231: 3 செண்ட்

- பட்டா எண் 1232: 8 செண்ட்

- பட்டா எண் 1230: 40 செண்ட்

- பட்டா எண் 1229: 7 செண்ட்

- பட்டா எண் 1228: 21 செண்ட்


மொத்தம்: 97 செண்ட்


புகார் அளிக்கப்பட்டுள்ளது


இதுதொடர்பாக இராமச்சந்திரன் என்பவர் மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாவட்ட குற்றப்பிரிவு, தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவு, லஞ்சஒழிப்புத்துறை ஆகியவற்றிற்கு புகார் அளித்துள்ளார். 

thoothukudileaks


அரசு ஆவணமான 'அ' பதிவேட்டில் காலிமனை நத்தம் புறம்போக்கு என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலம், கணினியில் பதிவேற்றம் செய்யும்போது தனிநபர் ஒருவருக்கு மாற்றி பட்டா வழங்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.


#கோரம்பள்ளத்திலும் இதே நிலைமை


கோரம்பள்ளம் கிராமம் பகுதி-2-ல் நத்தம் புறம்போக்கு இடம் 2 ஏக்கர் 37 செண்ட் இடத்திற்கும் அதே நாளில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த செல்லப்பாண்டியன், "இந்த புள்ளிவிபரம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிந்து நடந்ததா? அல்லது அதிகாரிகளின் உதவியாளர்கள் உத்தரவின் பேரில் நிறைவேறியதா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

thoothukudileaks


## நடவடிக்கை கோரிக்கை


தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் அமைச்சர்,சித செல்லப்பாண்டியன் மாவட்ட நிர்வாகத்தில் உள்ள சிலரும், திமுக கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருப்பது கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார்.



திங்கள், 2 ஜூன், 2025

தூத்துக்குடியில் அதிமுக ஆலோசனைக் கூட்டம் கட்சி வளர்ச்சி, கிளை அமைப்பு, அமைப்புச் செயலாளர் பணிகள் குறித்து முக்கிய முடிவுகள்!!!

 thoothukudileaks_2-6-2025

தூத்துக்குடி, ஜூன் 2:

அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி  உத்தரவின்பேரில், அதிமுகவின் பூத் பாகக் கிளை அமைப்பு மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து தீவிர ஆலோசனைக் கூட்டம் இன்று (2.6.2025) மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெற்றது.



தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகக் கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.




இந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்களாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர்  P.G. ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.



மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்த, உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க மற்றும் எதிர்கால தேர்தல்களை முன்னிட்டு வாக்குசேகரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.



---

திங்கள், 12 மே, 2025

எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம் எடப்பாடியார் தமிழக முதலமைச்சராக சிறப்பு பூஜை

 #"தூத்துக்குடி லீக்ஸ்" நாளிதழ் செய்தி

##எடப்பாடி பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கோலாகலம்


தூத்துக்குடி, மே 12:

முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமியின் 71-வது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.




 எடப்பாடியார் தமிழக முதலமைச்சராக சிறப்பு பூஜை!!!

தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் தமிழக முதலமைச்சராக வேண்டி தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வுக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்தார்.


முன்னதாக, தூத்துக்குடி கீழரதவீதியில் மாவட்ட இலக்கிய அணி சார்பில் பா. ஜான்சன் தேவராஜ் ஏற்பாட்டில் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்நிகழ்வில் 71 பெண்களுக்கு புடவைகளும், 101 பேருக்கு இனிப்பு லட்டுக்களும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் வழங்கினார்.











பின்னர், தூத்துக்குடி சிவன் கோயில் அன்னதான மண்டபத்தில் ஏழைகளுக்கான அன்னதான நிகழ்ச்சியை ..





முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தொடங்கி வைத்தார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.


எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பொதுமக்கள், அவர் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வரவேண்டும் என வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.