thoothukudileaks_2-6-2025
தூத்துக்குடி, ஜூன் 2:
அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் புரட்சித் தமிழர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்பேரில், அதிமுகவின் பூத் பாகக் கிளை அமைப்பு மற்றும் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து தீவிர ஆலோசனைக் கூட்டம் இன்று (2.6.2025) மாலை 4.30 மணிக்கு தூத்துக்குடியில் நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுகக் கழகத்தின் சார்பில், பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மீனாட்சிபுரம் பிரேமா மெஸ் எதிரில் உள்ள சோலை A/C ஹாலில் இந்த கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கழக செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்களாக செயல்படும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக அமைப்புச் செயலாளர் P.G. ராஜேந்திரன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கல்லூர் வேலாயுதம் ஆகியோர் பங்கேற்று முக்கிய ஆலோசனைகளை வழங்கினர்.
மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்த, உறுப்பினர் சேர்க்கை அதிகரிக்க மற்றும் எதிர்கால தேர்தல்களை முன்னிட்டு வாக்குசேகரிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
---




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக