தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி
📰 01-06-2025
மக்கள் சேவைக்கு அர்ப்பணமான அஞ்சலை அம்மாளுக்கு தமிழக வெற்றிக் கழகத்தினர் மரியாதை!
தூத்துக்குடி:
தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்த, தென்னிந்தியாவின் ஜான்சிராணி என்று புகழப்பட்ட மக்கள் சேவகர் . அஞ்சலை அம்மாள் அவர்களின் 135வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்டத் துறை சார்பில் சிறப்பு மரியாதை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்விற்கு தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A.அஜிதா ஆக்னல் M.Sc., B.Ed., தலைமையிலில், மாவட்ட கழகத் தோழர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டு, அஞ்சலை அம்மாளின் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
அம்மாளின் பணி, சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட போராட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் உரிமைக்காக அவர் ஆற்றிய பணி குறித்து கழகப் பேச்சாளர்கள் நினைவுகூர்ந்தனர்.
இந்நிகழ்ச்சி, அஞ்சலை அம்மாளின் மகத்தான பணிகளை இளைஞர்கள் மனதில் நிலைநாட்டும் விதமாக அமைந்தது.
📸 [புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக