Tamil Nadu updates, photo news by sunmugasuthram press club president
தூத்துக்குடி, ஜூன் 1:
பள்ளி திறப்பை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, மேயர் ஜெகன், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் குழுவினர் பன்முக ஆய்வுகளை மேற்கொண்டனர்.
சாமுவேல்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆய்வில், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகள், நீர் தொட்டிகள், விளையாட்டு மைதானங்கள், ஆங்கில வழிக்கல்வி அறைகள் உள்ளிட்ட கட்டமைப்புகள் நேரில் பார்வையிடப்பட்டன. தேவையற்ற பொருட்கள் அகற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன.
இது குறித்து மேயர் ஜெகன் பேசியதாவது
மாநகராட்சியின் கீழ் 20க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. கோடை விடுமுறை முடிந்து திங்கள் கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவ, மாணவியர்களின் நலனை கருதி முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் அனைத்தும் சீரமைக்கப்பட்டுள்ளன,” என தெரிவித்தார்.
“மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது பெரிதளவில் உயர்ந்துள்ளது. பொது தேர்வுகளில் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். திறனாய்வு தேர்வுகள் மூலம் மாணவர்களின் திறமைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
ஆசிரியர்கள் நேர்த்தியான முறையில் பாடம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு நல்ல பழக்கவழக்கங்களை ஊக்குவிக்கும் பணிகளும் தொடர்கின்றன,” என்றார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் ஆலோசனையின் பேரில் 2021ஆம் ஆண்டு 100 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது ஒவ்வொரு பள்ளியிலும் 900 முதல் 1200 வரை மாணவர்கள் பயின்றுவருவதாகவும், இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கல்வி கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
சில பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளும் தொடங்கவுள்ளன என கூறினார்.
"ஆய்வின்போது சாமுவேல்புரத்தில் உள்ள ஓர் மாணவன் மேயரிடம் புகைப்படம் எடுக்க கேட்ட நிலையில், மேயரும் ஆணையரும் அவனை அரவணைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். “நல்ல பழக்க வழக்கத்துடன் கல்வி பயில வேண்டும்,” என்று மாணவருக்கு அறிவுரை வழங்கினா்."
இந்த ஆய்வில் மாநகராட்சி இளநிலை பொறியாளர் சரவணன், உதவி பொறியாளர் முனீர் அகமது, வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், சுகாதாரக் குழு தலைவர் சுரேஷ்குமார், ஆய்வாளர்கள் ராஜசேகர், ராஜபாண்டி, பகுதிப் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகப் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக