இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2026

பக்தி பரவசத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் திருத்தேர் திருவிழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சிறப்பான அன்னதானம்

Tamil Nadu updates

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா!

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மாபெரும் அன்னதானம் — ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

சேலம்: ஆகஸ்ட் 9 

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா பக்தர்களின் பக்திப் பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


பழமை வாய்ந்ததும், பக்தர்களால் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் திருத்தலமாக போற்றப்படுவதுமான சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருத்தேர் திருவிழாவில், சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து அம்மனை வழிபட்டனர்.


திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் கலந்து கொண்டு அன்னம் பெற்று சென்றனர்.


இந்நிகழ்ச்சியில் அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர், வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா, சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி  ஆலோசனையின்படி நடைபெற்ற இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி, வழக்கறிஞர் சுதன், ஸ்ரீதர், பிரபு, கீர்த்தி ஜெயகாந்த், ரமேஷ், சண்முகவேல், மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மேலும் கவிதா, நேதாஜி, சுந்தரம், பேபி ரமணி, கவிதா, அன்னபூரணா, பத்மா, விக்னேஷ், ரவி, அருண் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழா ஏற்பாடுகளில் சிறப்பாக பணியாற்றினர்.


பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கி நடைபெற்ற இம்மாபெரும் அன்னதான விழா, ஆன்மிகம் மற்றும் சேவை உணர்வை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.


புகைப்படக் குறிப்பு:
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் அன்னதான விழாவை சிறப்பு அழைப்பாளர்கள் தொடங்கி வைத்த காட்சி.


வியாழன், 2 ஜூலை, 2026

இந்து சேனா பேரியக்கத்தில் புதிய நிர்வாகிகள் இணைப்பு

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


சேலம், ஜூலை 2:
சேலம் மாவட்டத்தில் இந்து சேனா மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி-யை நேரில் சந்தித்த ராஜ கணேசன் மற்றும் கிரில் சுப்பிரமணி ஆகியோர், இந்து சேனா பேரியக்கத்தில் தங்களை அதிகாரப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர்.

thoothukudileaks


அப்போது, இயக்கத்தின் வளர்ச்சிக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அமைப்பின் செயல்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்து செல்லுவது குறித்து மாநிலத் தலைவருடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து சேனாவின் பொறுப்பாளர்களான சேலம் ரமேஷ் ஜி, வேலூர் ஆனந்த் ஜி, சேலம் ரவிச்சந்திரன் ஜி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

புதிய உறுப்பினர்களை மாநிலத் தலைவர் அருள்வேலன் ஜி வரவேற்று, இயக்கப் பணிகளில் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு மக்களிடம் அமைப்பின் நோக்கங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்று வாழ்த்துத் தெரிவித்தார்.

வியாழன், 18 ஜூன், 2026

ஜூலை 1 முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு தடை திருச்செந்தூரில்..?

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 


திருச்செந்தூர், ஜூன் 18:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியாவது ;-

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது!!!

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.

thoothukudileaks


சேவைகள்!!!

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!

கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks
தூத்துக்குடி லீக்ஸ் க்காக

செய்தியாளர் அருணன் 

சனி, 30 மே, 2026

தூத்துக்குடி திரவியபுரம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது


தூத்துக்குடி, மே 31:

தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலின் 21-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் மகா கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

thoothukudileaks


விழாவை முன்னிட்டு அதிகாலை 7.35 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மகா அபிஷேக நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

thoothukudileaks


காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தா V.செல்வராஜ் நாடார், ....

காரியதரிசி A.பெரியசாமி நாடார், பொருளாளர் R.சிந்தாமணி நாடார், சந்தனகுமார் நாடார் உதவி தர்மகர்த்தா R.அருணாசலம் நாடார், S.பாலசுப்பிரமணியன் நாடார்,& உதவி காரியதரிசி D.முத்துராஜ் நாடார், L.N.கனகராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.

மேலும், ஆலோசகர்களாக M.தீபேந்திர ராஜா நாடார், S.வேல்சாமி நாடார், P.இளையபெருமாள் நாடார், V.பட்டுராஜ் நாடார், R.மாரியப்பன் நாடார், A.ஜெயராஜ் நாடார்,ஏ.சேர்மத்துரைநாடார்  L.தர்மலிங்கம் நாடார் ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்களாக I.முனியசாமி நாடார், S.சக்திவேல் நாடார், V.பொன்னராஜா நாடார், J.தமிழ்செல்வன் நாடார், N.L.பெருமாள்ராஜ் நாடார், B.சரவணகுமார் நாடார் ஆகியோரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ்

வெள்ளி, 3 ஏப்ரல், 2026

பண்ணாரி மாரியம்மன் குண்டம் பெருந்திருவிழா: பக்தர்களுக்கு உணவு வழங்கிய திருக்கோயில் பாதுகாப்பு சங்கம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

ஈரோடு மாவட்டம் :ஏப் 3

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற குண்டம் பெருந்திருவிழா இவ்வாண்டும் பக்தி உணர்வுடன் சிறப்பாக நடைபெற்றது.

thoothukudileaks


இந்த பெருந்திருவிழாவை முன்னிட்டு, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், பிஸ்கட் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கும் சேவை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை கோவை காமாட்சிபுரம் ஆதீனம் ஶ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், சொர்க்கபுரம் ஆதீனம் ஶ்ரீலஶ்ரீ தண்டபாணி தேசிகபண்டார சந்நிதி சுவாமிகள் மற்றும் ஶ்ரீ மத் பரமஹம்ஹேத்யாதி ஶ்ரீ ரங்க பராங்குச பரகால நம்பி ராமானுஜர் ஜீயர் ஸ்வாமிகள் ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

thoothukudileaks


விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் ஒழுங்காக வரிசையில் நின்று உணவு பொருட்களை பெற்றுக் கொண்டு, ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். 

பக்தர்களின் தேவையை உணர்ந்து சீரான முறையில் சேவை செய்த சங்கத்தின் இந்த முயற்சி பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின் பேரில், சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், நடராஜ், நித்தியானந்தன், குப்புராஜ், சத்யபிரகாஷ், ஆனந்தன், சுமதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிறப்பாக மேற்கொண்டனர்.

thoothukudileaks


வெள்ளி, 6 மார்ச், 2026

தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் சனிபெயர்ச்சி விசேட யாகம் அன்னதானம்

Tamil Nadu updates

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி மார்ச் 6

தூத்துக்குடி அருகே பண்டாரம்பட்டியில் அமைந்துள்ள சனிஸ்வரர் ஆலயத்தில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று (06.03.2026) காலை 7.00 மணி முதல் விசேட யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

thoothukudileaks


இதனை முன்னிட்டு ஆலயத்தில் வேத மந்திரங்கள் ஒலிக்க யாகம் நடைபெற்றது. தொடர்ந்து சனிபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சனிபகவானை தரிசித்து அருளாசி பெற்றனர்.

thoothukudileaks


பின்னர் ஆலய வளாகத்தில் அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஊர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அன்னதானத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வை ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

புதன், 18 பிப்ரவரி, 2026

அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோரிக்கை

Tamil Nadu updates 18-2-2026

கரூர் பெ18

கரூர் மாவட்டம், குளித்தலை அய்யர்மலையில் அமைந்துள்ள அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் வருகின்ற 22.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் நடைபெற உள்ளது.

thoothukudileaks


 மிகவும் பழமை வாய்ந்த மற்றும் பிரசித்திபெற்ற இந்த ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவிற்கு சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மட்டுமல்லாது, தமிழ்நாடு முழுவதும் உள்ள குடிப்பாட்டுக்காரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் பெருமளவில் கலந்து கொள்ள உள்ளனர்.

thoothukudileaks


இந்நிலையில், அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி, மாநில கௌரவ செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆலயத்திற்கு நேரில் வருகை தந்து நடைபெற்று வரும் மஹா கும்பாபிஷேக பணிகளை பார்வையிட்டனர்.

பின்னர், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளதால், அவர்களின் நலன் கருதி தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிட வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 


குறிப்பாக சுகாதாரமான குடிநீர், போதிய கழிப்பறை வசதிகள், மருத்துவ உதவி மையம் மற்றும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யுமாறு திருக்கோயில் அதிகாரியிடம் மனு அளித்து பக்தர்கள் சார்பாக கோரிக்கை வைத்தனர்.

கும்பாபிஷேக விழா சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடைபெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

thoothukudileaks

thoothukudileaks


— 

புதன், 28 ஜனவரி, 2026

திருவானைக்காவலில் இந்து சமய பாதுகாப்பு மாநாடு: மத்திய அரசுக்கு 10 கோரிக்கைகள்

திருச்சி, ஜனவரி 28 - 

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் கோதை நாச்சியார் மண்டபத்தில் இந்து சேனா மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இணைந்து நடத்திய இந்து சமய பாதுகாப்பு மாநாடு சிறப்பாக நடைபெற்றது.

கோவை சிரவை ஆதீனம் 4ஆம் பட்டம் குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை ஏற்று திருவிளக்கு ஏற்றி மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

thoothukudileaks

thoothukudileaks


 மன்னார்குடி ஶ்ரீ சம்பத்குமார இராமானுஜ ஜீயர் சுவாமிகள், காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் மடாதிபதி சுவாமி தர்ஷினி அனுபவானந்த சுவாமிகள், அகில பாரதிய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் தவத்திரு சுவாமி இராமானந்தா மகராஜ், இந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தேசிய தலைவர் விஷ்ணு குப்தா உள்ளிட்ட பல ஆன்மீகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.


கலை நிகழ்ச்சிகளும் விருது வழங்கலும்

மாநாட்டில் பாரம்பரிய பஜனை, இசைக்கச்சேரி, பரதநாட்டியம் உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. இந்து சமயத்தின் சேவை பணிகளை செய்து வரும் ஆன்மீக அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks


மத்திய அரசுக்கு 10 முக்கிய கோரிக்கைகள்

மாநாட்டில் இந்து சமய மக்களின் சார்பாக மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அவற்றுள் முக்கியமானவை:

• இந்து சமய கோயில்களில் பக்தர்களிடையே வேற்றுமை உருவாக்கும் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்

• இந்து சமயத்தைப் பாதுகாக்கவும் இந்து மக்களின் நலனுக்காகவும் இந்து சமய நல வாரியம் உடனே அமைக்க வேண்டும்

• இந்திய கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர், ஆன்மீக அமைப்புகளின் தலைமையில் நிர்வாகம் நடத்த சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும்

• கோயில் திருவிழாக்களில் அந்தந்த மாநிலத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கட்டாயம் நடத்த வேண்டும்

• இந்து சமயம் சார்ந்த கல்வியை பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் கொண்டுவர வேண்டும்

• பல ஆயிரம் ஆண்டுகள் பழமையான, சிதிலமடைந்த கோயில்களை உடனடியாக வழிபாட்டுக்குக் கொண்டுவர வேண்டும்

• சங்கராச்சாரியார்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜீயர் மற்றும் துறவியர்களுக்கு இலவச ரயில்வே சிறப்பு பயண பாஸ் வழங்க வேண்டும்

• மடங்களின் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்க வேண்டும்

• பிரசித்தி பெற்ற இந்து கோயில்களில் வரலாற்று அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும்

• கோயில்கள் சார்ந்த குளங்கள் மற்றும் நதிகளின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்

இந்த மாநாட்டை இந்து சேனா மாநில தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஆலோசனையின் பேரில் மாநில மற்றும் தேசிய பொறுப்பாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.


ஞாயிறு, 7 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் 200க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினர் கைது திருப்பரங்குன்றம் பிரச்சனையை கண்டித்து மாநிலம் தழுவிய அறப்போராட்டம்

தூத்துக்குடி:டிச 7

திருப்பரங்குன்றம் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி முருகப்பெருமானை அவமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இந்து அமைப்புகள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டன. 

thoothukudileaks


தூத்துக்குடியிலும் இந்து முன்னணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்யப்பட்டது.

thoothukudileaks


பரபரப்பு!!!

ஆர்ப்பாட்டம் தொடங்க முயன்றபோது, இந்து முன்னணியினர் மற்றும் காவல்துறையினருக்கு இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. 




திருப்பரங்குன்றம் மலைஉச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதாகவும், இது அரசு சார்பில் திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என இந்து முன்னணி அமைப்புகள் குற்றம் சாட்டி மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தினர்.


தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தூத்துக்குடி மாநகர இந்து முன்னணி   சரவணகுமார்  இசக்கி முத்து குமார் நாரயணராஜ் தலைமையில் ஆண்களும் பெண்களும் இணைந்து 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


அவர்களை தடுக்கும் வகையில் தூத்துக்குடி நகர காவல் துறை எஸ்பி மதன் தலைமையிலான காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்ட இந்து முன்னணியினரை கைது செய்து அருகிலுள்ள தனியார் மண்டபத்தில் பாதுகாப்பாக அடைத்தனர்.

திங்கள், 6 அக்டோபர், 2025

சித்தர்கள் பேரரசில் புதிய வரலாறு — முதல் பெண் ஆதீனம் அறிவிப்பு!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 6-10-2025

ரோஜா அருணன் செய்தியாளர் 

சித்தர்கள் பேரரசில் புதிய வரலாறு — முதல் பெண் ஆதீனம் அறிவிப்பு!

சென்னை :அக் 6
சித்தர்கள் பேரரசு இயக்கத்தின் ஆன்மீகப் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது.


 தமிழ் சித்த நெறி ஆன்மீகத்தின் முதல் ஆதீனமாகவும் முதல் பெண் ஆதீனமாகவும் கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் அருகே தாய் கழகம் நகர், ரமணாதிசின் புதூரைச் சேர்ந்த மத நல்லிணக்க ஞான சூரிய தவத்திரு சித்தினி ஆனந்தி அம்மாள் அம்மையார் ஆதீனமாக நியமிக்கப்பட்டுள்ளார்.


தவத்திரு சித்தினி ஆனந்தி அம்மாள் 
தமிழ் சித்த நெறி முதல் பெண் ஆதீனம் 


அவர் பல மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் தன்னலமற்ற ஆன்மீகச் சேவையால் சமூகத்தில் பெரும் மதிப்பை பெற்றவர். 

வீடியோ பார்க்க..

இப்போது அந்த அரிய சேவை சித்தர்கள் பேரரசு இயக்கத்தின் வழியே உலக தமிழ்ச் சித்த நெறிக்காக தொடரவிருக்கிறது.

இந்நியமனத்தை சித்தர்கள் பேரரசு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் சங்கர் அய்யா , 5.10.2025 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

“சித்த நெறியின் ஒளி இனி பெண் சக்தியால் உலகமெங்கும் பரவட்டும்!” என மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சித்தர்கள் பேரரசில் புதிய வரலாறு — முதல் பெண் ஆதீனம் 
தவத்திரு சித்தினி ஆனந்தி அம்மாள் 


இந்த அறிவிப்பு, சித்தர்கள் பேரரசு இயக்க வரலாற்றில் புதிய ஒளியைப் பரப்பும் முக்கியமான மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


இச் செய்தியில் செயற்கை தொழில்நுட்பம் உபயோகப்படுத்தியுள்ளோம்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2025

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழாவில் மாபெரும் அன்னதான விழா

சேலம், ஆகஸ்ட்10

 - தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது. 


இந்த சக்தி வாய்ந்த மாரியம்மன் கோயிலின் திருவிழாவில் சேலம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.



மாபெரும் அன்னதான விழா


இந்த திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரிசையில் நின்று அன்னம் பெற்று சென்றனர்.


 சிறப்பு அழைப்பாளர்கள்


இந்த அன்னதான விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்ட பெரியவர்கள்:


- அகில பாரதீய சன்னியாசிகள் சங்கத்தின் நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு சுவாமி இராமானந்தா

- சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ தண்டாயுதபாணி தேசிகர்

- கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல்

- செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன்


இந்த பெரியவர்கள் அன்னதான விழாவை தொடங்கி வைத்து ஆசிர்வதித்தனர்.


சங்க நிர்வாகம்


அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்வேலன் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த மாபெரும் அன்னதான விழா ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களான சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன், வழக்கறிஞர் சுதன், பிரபு, ஶ்ரீதர், கீர்த்தி ஜெயகாந்த், கவிதா, காயத்ரி, சக்தி, மதியழகன், மஹாவிஷ்ணு, நேதாஜி, சுந்தரம், கதிர், சசிகலா, புவனேஸ்வரி, நித்தின், சாய், சத்யா, பாலாஜி, ராஜி, லதா, ஸ்ரீசனா, மைனாவதி, அருண் பிரசாத், அருண், ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் இந்த விழாவை வெற்றிகரமாக நடத்தினர்.


இந்த திருவிழா தமிழகத்தின் பாரம்பரிய கோயில் கலாச்சாரத்தை பிரதிபலித்து, பக்தர்களின் மனங்களில் ஆழ்ந்த தாக்கம் ஏற்படுத்தியது.

வெள்ளி, 4 ஜூலை, 2025

போக்குவரத்து மாற்றம் – போலீஸ் அறிவிப்பு திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழா



📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
📅 05 ஜூலை 2025 | தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரவுள்ளதால், ஜூலை 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மாவட்ட காவல்துறையால் வாகன போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



🚧 மாற்றப்பட்ட போக்குவரத்து வழித்தடங்கள்:

  • தூத்துக்குடி, ஆறுமுகநேரி, குரும்பூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் வாகனங்கள், திருச்செந்தூரை தவிர்த்து மாற்று வழித்தடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முக்கிய வழித்தடங்கள்: DCW Jn – நல்லூர் V Jn – ராணிமஹாராஜபுரம் – காந்திபுரம் – காயாமொழி – பரமன்குறிச்சி – உடன்குடி.

🚌 அரசு சிறப்பு பேருந்துகள் – தற்காலிக நிறுத்தங்கள்:

  1. தூத்துக்குடி மார்க்கம் – சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே தற்காலிக பேருந்து நிலையம்.
  2. திருநெல்வேலி மார்க்கம் – ஷபி டிரேடர்ஸ் எதிரே தற்காலிக நிறுத்தம்.
  3. பரமன்குறிச்சி சாலை – FCI குடோன் அருகே தற்காலிக நிறுத்தம்.

இவற்றில் இருந்து கோவிலுக்கு செல்ல சுற்றுப்பேருந்துகள் (Shuttle buses) இயக்கப்படும். பக்தர்களுக்கான வசதிக்காக முக்கிய சாலை வழியாக சுழற்சி பேருந்துகள் இயக்கப்படும்.


🚗 தனியார் வாகனங்கள் – வாகன நிறுத்த இடங்கள் (19 இடங்கள்):

  • தூத்துக்குடி சாலை: JJ நகர், ஆதித்தனார் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI), பிரசாத்நகர்.
  • திருநெல்வேலி சாலை: வியாபாரிகள் சங்கம், அன்புநகர், குமாரபுரம், கிருஷ்ணாநகர்.
  • பரமன்குறிச்சி சாலை: பால்பாயாசம் அய்யர் டண்ட், சுந்தர் டண்ட், செந்தில்குமரன் பள்ளி.
  • TB சாலை, பகத்சிங் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்கள்.

⚠️ பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்:

பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் அல்லது அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்த வேண்டாம். காவல்துறையின் வழிகாட்டுதல்படி ஒழுங்காக வாகனங்களை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடித்து திருவிழாவை அமைதியாக அனுபவிக்க அனைவரும் ஒத்துழைய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


.

ஞாயிறு, 4 மே, 2025

புவனகிரி வடதலைக்குளத்தில் மஹா கும்பாபிஷேக விழா

Tamil Nadu updates, 2025மே 4

புவனகிரி வடதலைக்குளத்தில் மஹா கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது

கடலூர் மாவட்டம் புவனகிரி வடதலைக்குளத்தில் எழுந்தருளியுள்ள 81 அடி உயரம் கொண்ட மஹா வெட்காளியம்மன் ஆலய ராஜகோபுர புணராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.



இந்த விழாவில் சொர்க்கப்புர ஆதீனத்தின் 22வது குரு மகா சந்நிதானம், இந்து சேனா மாநிலத் தலைவர் மற்றும் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி, உலக சித்தர்கள் சர்வ சமய கூட்டமைப்புத் தலைவர் ராஜசேகர் அடிகளார், திருவண்ணாமலை சிவானந்த சரஸ்வதி சுவாமிகள், பூசாரிகள் கோயில் பணியாளர் நல வாரியத் தலைவர் ஆனந்த், இந்து அமைப்புத் தலைவர் ரமேஷ் பாபு மற்றும் சமூக ஆர்வலர் கடலூர் தங்கசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு அருளாசிகள் வழங்கினார்கள்.



ஊர்வலம், வேத மந்திரம் ஒலிக்கும் மையச்சுழற்சி, பஜனை, பூரணகும்ப அலங்காரம் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் பக்தர்களை பரவசப்படுத்தின. சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ச்சி செய்தி இதோ:

இந்த மஹா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கோவிலில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், ஹோமங்கள், யாகங்கள், திருவிளக்கு பூஜை, லட்சார்ச்சனை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன. ராஜகோபுரம் முழுமையாக புனரமைக்கப்பட்டு அஷ்டபந்தன அமைப்புடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கடந்த பல ஆண்டுகளாக பக்தர்களின் பணி மற்றும் நன்கொடை மூலம் இந்த புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அத்துடன், விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, மஹா தீர்த்தவாரி நடைபெற்றது.


பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சாந்தி, சக்தி, நல்வாழ்வு வேண்டி பிரார்த்தனை செய்தனர். விழா நிகழ்வுகளுக்கு காவல்துறை மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


இது போன்ற நிகழ்வுகள் பக்தர்களிடையே ஆன்மீக அன்பையும், சமுதாய ஒற்றுமையையும் வளர்க்கும் என்றும், இவ்விழா அனைத்து தரப்பினராலும் மனமார்ந்த வரவேற்பைப் பெற்றதாகவும் விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


இதனையொட்டி செய்தியாளர்கள் மற்றும் உள்ளுர் ஊடகங்கள் நேரடியாக களத்தில் இருந்து செய்திகளை பகிர்ந்தனர்.


திங்கள், 21 ஏப்ரல், 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலக பழுதுடைந்த சாலை உடனே சீரமைப்பு செய்ய இந்து முன்னணி தலைவர் கோரிக்கை

Tamil Nadu updates

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக பின்புறம் அமைந்த மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் சாலை கடந்த பல நாட்களாக குண்டும் குழியுடன் உள்ளது. 


தொடர்ந்து பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்துக்கு மிகுந்த தடையாகியுள்ளது.


இதனால், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.

சாலையில் கடந்த செல்ல தடுமாறும் மாற்று திறனாளி ... பார்க்க 


இந்நிலையில்...., 

இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் K.S. ராகவேந்திரா, மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தலையிட்டு சாலை பழுது பண்ணும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்


- K.S. ராகவேந்திரா
மாவட்டச் செயலாளர், இந்து முன்னணி, தூத்துக்குடி

9442660566


 

சனி, 12 ஏப்ரல், 2025

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழாவில் தண்ணீர், பிஸ்கட் பாக்கெட்டுகள் மற்றும் கோதுமை பிரட் , பழங்கள் வழங்கினர்:

Tamil Nadu updates 12-4-2025

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு பண்ணாரி மாரியம்மன்  கோயிலில் வருடந்தோறும் குண்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.



அதே போல் இந்த ஆண்டும்  குண்டம் பெருந்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.



இந்த திருவிழாவில் கலந்து கொண்ட பல ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக.,...

 தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகள் கோதுமை பிரட் , பழ வகைகள் போன்றவை சங்கத்தின்  மாவட்ட செயலாளர் சந்திரசேகர் , மாவட்ட கெளரவ செயலாளர்  மாரப்பன் மற்றும் மாவட்டம் மகளிர் அணி செயலாளர் பிரியா தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் சேகர்,   நடராஜ் ஒன்றிய பொறுப்பாளர்கள் குப்புராஜ் , ராஜேந்திரன் , ஆறுமுகம் , கோவிந்தராஜ் ,மோகனப்பிரியா , சொர்ணா , 



தமிழ்வாணன் ,சௌந்தர்ராஜன் மற்றும் உறுப்பினர்கள்  , மகேஸ்வரி ,ராதாமணி , தங்கம்மாள் , புவனேஸ்வரன் , சரஸ்வதி , ஜானகி , ஸ்ரீதேவி ,ராதிகா , பழனியம்மாள் ,ஜோதி ,விஜயகுமாரி , இளவரசன்,மகாலட்சுமி, பிரபு, சீனிவாசன், சுருதி ,வேலுச்சாமி, கோகுல், பாலா, அசோக் ,கௌதம்,ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினர்.

வெள்ளி, 14 பிப்ரவரி, 2025

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா

Tamil Nadu updates,

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.




கரூர்: தமிழகத்தின் முக்கிய தைப்பூச திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும் கரூர் மாவட்டம் குளித்தலையில் இந்த ஆண்டு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. பழனிக்கு அடுத்து அதிக பக்தர்கள் வருகை தரும் இந்த விழாவில், திருச்சி மற்றும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு ஊர் கோயில்களின் உற்ஸவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் காவிரி நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டு, புனித நீராடிய பின்னர் தீர்த்தவாரி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



விழாவின் முக்கிய நிகழ்வாக, அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் இரண்டு நாட்கள் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் பங்கேற்று அன்னம் பெற்றுச் சென்றனர்.


இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக திருச்சி திருஈங்கோய்மலை ஶ்ரீ லலிதா மகிளா சமாஜத்தின் சிவபிரியாம்பா மாதா ஜி, ஜெயாம்பா மாதா ஜி, கீதாம்ருதாம்பா மாதா ஜி, குளித்தலை சாந்திவனம் ஆசிரம தலைவர் டாட்ரீக் சுவாமி ஜி, கிராமியம் நாராயணன் மற்றும் வாழைக்காய் வியாபாரி சேட் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.



சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின்படி, இந்த மாபெரும் அன்னதான விழாவின் ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், கருணாநிதி, சுந்தரேசன், ஆனந்த், வெங்கடேஷ், தியானேஷ்வரன், அர்ச்சகர் கல்யாண வெங்கட்ராமன், அர்ச்சகர் மஹா விஷ்ணு, தினார்த், சந்தோஷ், கோபி, சங்கரன், சரவணன், திருமுருகன், முத்து, சரவணன் ஜி, வீரப்பன், மணி, தினேஷ், முகிலன், கருப்பத்தூர் முரளி செந்தில், தமிழ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


விழாவில் பங்கேற்ற பக்தர்கள், இதுபோன்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமென வாழ்த்தினர்.


வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

பாதயாத்திரையாக நடந்து வருபவர்களுக்கு திருச்செந்தூர் கோயிலில் உள்ளே செல்ல தனி வழி

திருச்செந்தூர் தைப்பூச விழா - பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


தூத்துக்குடி, பிப்ரவரி 8, 2025


திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

தனி வழி !!!

வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.



 மேலும், பக்தர்களின் வசதிக்காக பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:


- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்

- 800 காவலர்கள் பாதுகாப்பு பணி

- பக்தர்களுக்கான அடையாள டேக் வழங்கும் திட்டம்

- அவசர மருத்துவ முகாம் அமைப்பு

- தற்காலிக வாகன நிறுத்துமிடம்


இக்கூட்டத்தில் கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, வட்டாட்சியர் பாலசுந்தரம், அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பர்வீன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.


இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வியாழன், 6 பிப்ரவரி, 2025

பிரதமருக்கு கடிதம்திருப்பரங்குன்றம் மலை மீட்பு: குறித்துஅனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் அதிரடி

திருப்பரங்குன்றம் மலை மீட்பு: அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.



இது பற்றிய செய்தியாவது:-

தமிழ்நாட்டின் மிகப் பிரசித்தி பெற்ற மலைக் கோவில்களில் ஒன்றான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தற்போது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.


 அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் இக்கோவிலின் மலையை மீட்க பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.



### முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள்


முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் எனப்படும் ஆறு முக்கிய முருகன் கோவில்கள் தமிழ்நாட்டில் பரவலாக உள்ளன. 

இவற்றுள் முதல் படை வீடாக கருதப்படுவது திருப்பரங்குன்றம் கோவில் ஆகும்.



### மலையின் சிறப்பியல்புகள்


- மலையின் உச்சியில் பிரசித்தி பெற்ற முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.

- அதே மலையில் பழமை வாய்ந்த மிகச் சக்தி வாய்ந்த சிவன் கோவிலும் நிலைத்து நின்றுள்ளது.

- மலையில் இடைக்கால முஸ்லிம் தர்கா அமைந்துள்ளது.


## சட்ட நிலை

### நீதிமன்ற தீர்ப்பு


1931 மே 31 அன்று வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின்படி, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் ஶ்ரீ முருகன் கோவிலுக்கே சொந்தமாகும் என்பது தெளிவாகியுள்ளது.


### தீர்ப்பாளர்கள்


சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில், இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கியவர்கள்:

- இரண்டு ஆங்கிலேயர்

- ஒரு முஸ்லிம்


## சமீபத்திய சம்பவங்கள்


மலையில் இருக்கும் தர்காவைப் பற்றிய சர்ச்சையை மையமாக வைத்து சில முஸ்லிம் சமூக விரோத வன்முறை சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.


## அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் கோரிக்கை


அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பிரதமரிடம் மேற்கொண்ட கோரிக்கைகள்:


1. பக்தர்களின் நலன் கருதி

2. திருப்பரங்குன்றம் மலையை மீட்க

3. உடனடியாக அனைத்து வகை நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்


இக்கோரிக்கை தற்போது பல்வேறு சமூக மற்றும் சட்ட சிக்கல்களை எழுப்பியுள்ளது. 

இந்திய நாட்டின் மிக உயரிய அதிகாரியான பிரதமரிடம் சமர்ப்பிக்கப்பட்ட இக்கடிதம் மிகுந்த கவனத்திற்குரிய செய்தியாக அமைந்துள்ளது.



திங்கள், 3 பிப்ரவரி, 2025

தூத்துக்குடியில் திருப்பரங்குன்றம் போராட்டம்: 8 பேர் மீது நடவடிக்கை

தூத்துக்குடியில் புதிய பேருந்து நிலையம் உள்ளே திருப்பரங்குன்றம் போராட்டம்: 8 பேர் மீது காவல்துறை நடவடிக்கை

Tamil Nadu updates,

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப். 4-


திருப்பரங்குன்றம் கோயிலில் நடைபெற்ற சர்ச்சை சம்பவம் தொடர்பாக போராட்டம் நடத்த முயன்ற இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த 8 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


மதுரை திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிடப்பட்டதாகவும், ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி அசைவ உணவு உண்டதாகவும் சமூக ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. 

போராட்டம்!!!

இதனைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் போராட்டம் நடத்த முன்வந்தனர்.


போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

தமிழகம் முழுவதும் காவல்துறை கைது நடவடிக்கை!!!

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் பா.ஜ.க. மற்றும் இந்து முன்னணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.


தூத்துக்குடியில்....

தூத்துக்குடி வடக்கு மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சிவலிங்கம், ஓட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவேந்திரா உள்ளிட்ட 8 பேர் திருப்பரங்குன்றம் நோக்கி பயணம் மேற்கொண்டபோது கைது செய்யப்பட்டனர். 


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் போர்வையில் வருபவர்களை பரிசோதனை பாதுகாப்பு பணியில்.. காவல்துறை!!!..


தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 

இவர்களில் 5 பேர் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மதுரை செல்லும் பேருந்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் தற்போது ஒரு திருமண மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

திங்கள், 2 டிசம்பர், 2024

சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன் கலெக்டரிடம் வழங்கிய பரபரப்பு புகார் மனு.தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

thoothukudi leaks 2-12-2024


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் குத்தகை நிலத்திற்கு போலி ஆவணங்களை வழங்கிய செயல் அலுவலர் தமிழ்ச்செல்வியை பணி நீக்கம் செய்ய வேண்டும்.!

இதுபற்றிய செய்தியாவது:-


இன்று 2-12-2024

தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியரிடம் மனு.!


தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் தூத்துக்குடி மாவட்டத்தின் மாநகராட்சி பகுதிகள், மாப்பிள்ளையூரணி , வேப்பலோடை, புதியம்புத்தூர், ஏரல் பெருங்குளம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நிலங்கள் உள்ளன.


தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி கிராமத்திற்கு உட்பட்ட கோமஸ்புரம் பகுதியில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் புல எண் 130/3 மற்றும் 130/4 ஆகியவை சுமார் 6.51 ஏக்கர் நிலப்பரப்பினை கொண்டதாகும்.

இந்து அறநிலையத்துறை 

மேற்கண்ட கோவில் நிலங்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலரின் முழு நிர்வாக கட்டுபாட்டின் கீழ் உள்ளது.

தமிழ்செல்வி!!

 இத்திருக்கோவில் நிர்வாக செயல் அதிகாரியாக இருப்பவர் திரு/திருமதி வீ.தமிழ்ச்செல்வி ஆகும். இவரின் நிர்வாக பணியின் கீழ்தான் ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் பணிகள் அனைத்தும் நடைபெற்று வருகின்றன.

போலி ஆவணங்கள் வழங்கல்!!!

இவ்வாறான தூத்துக்குடி கோமஸ்புரம் திருக்கோவில் நிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு 12×20 அளவு கொண்ட மற்றும் 10×12 அளவு கொண்ட சுமார் 122 வணிக கடைகளும், பல்வேறு இருப்பு வணிக நிறுவனங்களும், ஆட்டுச்சந்தை வணிகம் ஏற்படுத்திட பல்வேறு வகையில் சட்ட விதிகளுக்கு புறம்பாகவும், விதிமுறைகளை மீறியும் போலி ஆவணங்கள் வழங்கியுள்ளார்.



உடந்தையாக....?

மேலும் திருக்கோவிலின் புஞ்சை நிலத்தில் வணிக நோக்கில் சட்ட விதிகளை மீறி செயல்பட அதன் புல எண்: 130/3 ன் 4.60 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன் தொகையாகவும், புல எண்: 130/4 ன் 1.92 ஏக்கர் நிலத்திற்கு ரூ 10,000/- (பத்தாயிரம் ரூபாய் மட்டும்) முன்தொகையாக பெற்று, அக்கோவில் நிலத்தில் மின் இணைப்பு, ஊராட்சி மற்றும் வருவாய் நிர்வாக ஆவணங்கள் பெற உடந்தையாக இருந்துள்ளார்.

துஷ்பிரயோகம் 

பல லட்சம் நிதி இழப்பு

மேற்படி தூத்துக்குடி ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் திரு/ திருமதி வீ.தமிழ்ச்செல்வி என்பவர் அமைச்சர், ஒன்றியக்குழு தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர், கிராம நிர்வாக அலுவலர், மின்வாரிய அதிகாரிகள் என பல்வேறு அரசு அதிகாரமிக்கவர்களோடு கூட்டுச் சேர்ந்து கொண்டு, பல லட்சம் ரூபாய் பொருளாதார வருவாய் பெறும் நோக்கில், அதிகார துஸ்பிரயோகம் மற்றும் அரசுக்கு பல்வேறு வகையில் பல லட்சம் ரூபாய் வருவாய் நிதியிழப்பினை ஏற்படுத்தியுள்ளார்.

பணிநீக்கம் செய்க!!!

 தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் உயரதிகாரிகள் மேற்கண்ட இந்து சமய அறநிலையத் துறையின் தூத்துக்குடி அருள்மிகு ஶ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் நிர்வாக செயல் அலுவலர் வீ.தமிழ்ச்செல்வி மீது துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணிநீக்கம் செய்திட வேண்டுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


இப்படிக்கு...

அக்ரி பரமசிவன்.

02.12.2024


Collectorate Petition: 2024/9005/28/437853/1202 date: 02.12.2024