திருச்செந்தூர் தைப்பூச விழா - பாதயாத்திரை பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, பிப்ரவரி 8, 2025
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் வரும் பிப்ரவரி 11-ஆம் தேதி நடைபெறவுள்ள தைப்பூச திருவிழாவையொட்டி பக்தர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தனி வழி !!!
வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு தனி வழித்தடம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக பின்வரும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன:
- 100-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கம்
- 800 காவலர்கள் பாதுகாப்பு பணி
- பக்தர்களுக்கான அடையாள டேக் வழங்கும் திட்டம்
- அவசர மருத்துவ முகாம் அமைப்பு
- தற்காலிக வாகன நிறுத்துமிடம்
இக்கூட்டத்தில் கோயில் இணை ஆணையாளர் ஞானசேகரன், நகராட்சி ஆணையர் கண்மணி, வட்டாட்சியர் பாலசுந்தரம், அரசு தலைமை மருத்துவர் பாவநாச குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் பர்வீன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக