கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 18 ஜூன், 2026

ஜூலை 1 முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு தடை திருச்செந்தூரில்..?

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

அருணன் செய்தியாளர் 


திருச்செந்தூர், ஜூன் 18:

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கைபேசி பயன்படுத்துவதற்கு வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது பற்றிய செய்தியாவது ;-

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தற்போது!!!

ஏற்கனவே கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் திருக்கோயில்களில் கைபேசி பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவை முழுமையாக அமல்படுத்தப்பட உள்ளன.

thoothukudileaks


சேவைகள்!!!

பக்தர்களின் அவசர பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் பொதுஅறிவிப்பு (Public Addressing System) வசதி, ஒலிபெருக்கிகள், மின்கல ஊர்திகள் மற்றும் சக்கர நாற்காலி உள்ளிட்ட சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மொபைல் டெபாசிட் கவுண்டர்!!!

மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து வைக்க கோயில் வளாகத்தில் சிறப்பு மொபைல் டெபாசிட் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

மொபைல் வைக்க கட்டணம் ரசீது !!!

கைபேசி ஒப்படைப்பதற்காக நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


பக்தர்கள் தங்களது கைபேசிகளை பாதுகாப்பாக ஒப்படைத்து, சுவாமி தரிசனத்தை அமைதியான முறையில் மேற்கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

புதிய நடைமுறை ஜூலை 1, 2026 முதல் முழுமையாக அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

thoothukudileaks
தூத்துக்குடி லீக்ஸ் க்காக

செய்தியாளர் அருணன் 

சனி, 30 மே, 2026

தூத்துக்குடி திரவியபுரம் பத்திரகாளியம்மன் திருக்கோவில் வருஷாபிஷேக விழா ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது


தூத்துக்குடி, மே 31:

தூத்துக்குடி அருகே உள்ள திரவியபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலின் 21-வது ஆண்டு வருஷாபிஷேக விழா மற்றும் மகா கும்பாபிஷேக ஆண்டு நிறைவு விழா வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) சிறப்பாக நடைபெற உள்ளது.

thoothukudileaks


விழாவை முன்னிட்டு அதிகாலை 7.35 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, வேதிகார்ச்சனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள், ஸ்ரீ மகா கணபதி ஹோமம், ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி மற்றும் மகா அபிஷேக நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

thoothukudileaks


காலை 10.30 மணி முதல் 11 மணி வரை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் விமான கோபுரங்கள், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு வருஷாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் தர்மகர்த்தா V.செல்வராஜ் நாடார், ....

காரியதரிசி A.பெரியசாமி நாடார், பொருளாளர் R.சிந்தாமணி நாடார், சந்தனகுமார் நாடார் உதவி தர்மகர்த்தா R.அருணாசலம் நாடார், S.பாலசுப்பிரமணியன் நாடார்,& உதவி காரியதரிசி D.முத்துராஜ் நாடார், L.N.கனகராஜ் நாடார் ஆகியோர் தலைமையில் செய்து வருகின்றனர்.

மேலும், ஆலோசகர்களாக M.தீபேந்திர ராஜா நாடார், S.வேல்சாமி நாடார், P.இளையபெருமாள் நாடார், V.பட்டுராஜ் நாடார், R.மாரியப்பன் நாடார், A.ஜெயராஜ் நாடார்,ஏ.சேர்மத்துரைநாடார்  L.தர்மலிங்கம் நாடார் ஆகியோரும், கமிட்டி உறுப்பினர்களாக I.முனியசாமி நாடார், S.சக்திவேல் நாடார், V.பொன்னராஜா நாடார், J.தமிழ்செல்வன் நாடார், N.L.பெருமாள்ராஜ் நாடார், B.சரவணகுமார் நாடார் ஆகியோரும் விழா ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

– தூத்துக்குடி லீக்ஸ்

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

 📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்திகள்

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா 

தூத்துக்குடி சின்னகண்ணுப்புரம் அருள்மிகு ஶ்ரீ லட்சிய விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜையும் அன்னதானமும் நடைபெற்றது.



இவ்விழாவை ஆலய பொறுப்பாளர் காளிதுரை  துவக்கி வைத்தார். தொடர்ந்து, ஆலய நிர்வாகிகள் கருப்பசாமி, பால சுப்பிரமணியன், கோவிந்த ராஜ், பழனிக்குமார், காளி முத்து, சுரேஷ், நடராஜன், கண்ணன், பால குமார், பரமசிவம், மாரிசெல்வி, ஜீவா, பாக்யலக்ஷ்மி, பூ இசக்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

இதனுடன் பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு விநாயகரின் அருளைப் பெற்றனர்.

வெள்ளி, 4 ஜூலை, 2025

போக்குவரத்து மாற்றம் – போலீஸ் அறிவிப்பு திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக விழா



📰 தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ்
📅 05 ஜூலை 2025 | தூத்துக்குடி மாவட்டம்  திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் வரும் ஜூலை 7ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வரவுள்ளதால், ஜூலை 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக மாவட்ட காவல்துறையால் வாகன போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.



🚧 மாற்றப்பட்ட போக்குவரத்து வழித்தடங்கள்:

  • தூத்துக்குடி, ஆறுமுகநேரி, குரும்பூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு மார்க்கங்களில் இருந்து திருச்செந்தூர் வழியாக செல்லும் வாகனங்கள், திருச்செந்தூரை தவிர்த்து மாற்று வழித்தடங்களில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • முக்கிய வழித்தடங்கள்: DCW Jn – நல்லூர் V Jn – ராணிமஹாராஜபுரம் – காந்திபுரம் – காயாமொழி – பரமன்குறிச்சி – உடன்குடி.

🚌 அரசு சிறப்பு பேருந்துகள் – தற்காலிக நிறுத்தங்கள்:

  1. தூத்துக்குடி மார்க்கம் – சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் எதிரே தற்காலிக பேருந்து நிலையம்.
  2. திருநெல்வேலி மார்க்கம் – ஷபி டிரேடர்ஸ் எதிரே தற்காலிக நிறுத்தம்.
  3. பரமன்குறிச்சி சாலை – FCI குடோன் அருகே தற்காலிக நிறுத்தம்.

இவற்றில் இருந்து கோவிலுக்கு செல்ல சுற்றுப்பேருந்துகள் (Shuttle buses) இயக்கப்படும். பக்தர்களுக்கான வசதிக்காக முக்கிய சாலை வழியாக சுழற்சி பேருந்துகள் இயக்கப்படும்.


🚗 தனியார் வாகனங்கள் – வாகன நிறுத்த இடங்கள் (19 இடங்கள்):

  • தூத்துக்குடி சாலை: JJ நகர், ஆதித்தனார் கல்லூரி, அரசு தொழிற் பயிற்சி பள்ளி (ITI), பிரசாத்நகர்.
  • திருநெல்வேலி சாலை: வியாபாரிகள் சங்கம், அன்புநகர், குமாரபுரம், கிருஷ்ணாநகர்.
  • பரமன்குறிச்சி சாலை: பால்பாயாசம் அய்யர் டண்ட், சுந்தர் டண்ட், செந்தில்குமரன் பள்ளி.
  • TB சாலை, பகத்சிங் பேருந்து நிலையம் மற்றும் நகராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்கள்.

⚠️ பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்:

பக்தர்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் அல்லது அனுமதி இல்லாத இடங்களில் நிறுத்த வேண்டாம். காவல்துறையின் வழிகாட்டுதல்படி ஒழுங்காக வாகனங்களை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

போக்குவரத்து மாற்றம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடைபிடித்து திருவிழாவை அமைதியாக அனுபவிக்க அனைவரும் ஒத்துழைய வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.


.

புதன், 12 மார்ச், 2025

மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழாஅனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் அன்னதானம்

Tamil Nadu updates12-3-2025

 மாசிமக திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதான விழா

கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பவனேஸ்வரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மாசிமக திருத்தேர் திருவிழா இந்த வருடமும் வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து பக்தி பரவசத்தில் ஈடுபட்டனர்.



இந்த திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது. இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அன்னம் பெற்றுச் சென்றனர்.



விழாவின் சிறப்பு அழைப்பாளர்களாக வாழைக்காய் வியாபாரி சேட் மற்றும் சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி கலந்து கொண்டு அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தனர்.



இந்த மாபெரும் அன்னதான விழாவின் ஏற்பாடுகளை சங்கத்தின் பொறுப்பாளர்கள் ராமகிருஷ்ணன், தியானேஷ்வரன், கருணாநிதி, வெங்கடேஷ், மதியழகன், அர்ச்சகர் மஹா விஷ்ணு, சந்தோஷ், வினோத், கோபி, சரவணன், சக்தி, முகிலன், செந்தில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழாவில் பக்தர்கள் ஆரவாரத்துடன் கலந்து கொண்டு இறையருளைப் பெற்றனர்.