மேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேயர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 5 ஜூன், 2026

விரைவில் தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு மூட் அப்செட்டில் திமுக

Tamil Nadu updates, 

கட்டுரை செய்தியாளர் ரோஜா அருணன் 

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல் மேயர் பதவி ரிசர்வ் பரபரப்பு  மூட் அப்செட்டில் தி மு க !!!

தூத்துக்குடி ஜுன் 6

இதுபற்றிய சுவாரஸ்யம் கொஞ்சம்  பார்க்கலாம் ...


தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது அதில்  தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று முதல்வர் ஆக  ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றார் 


சட்ட மன்ற தேர்தலில் தி மு க மற்றும் அ தி மு க தாங்கள் தான் வெற்றி பெறுவோம் என்ற இறுமாப்புடன் போட்டியிட்ட  இந்த இரண்டு கட்சிக்கும் கூட்டணி மற்றும் தங்கள் கட்சி உடைந்து சேதாரம் சொல்ல முடியாத வலியில் இருந்து வருகின்றன.  


அடுத்த கட்டமாக விரைவில்...மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடத்த வேண்டும் அதற்கான ஆயத்தப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன....


திமுக கோட்டையாக சென்னை தூத்துக்குடி!!!

 கடந்த காலங்களில்  தி மு க கோட்டையாக சென்னையும் தூத்துக்குடியும் இருந்து வந்தது


 கடந்த 2021 உள்ளாட்சி மாநகராட்சி தேர்தல் நடைபெற்ற போது தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிப்பு வெளிவர இருந்தது.

 அதை தூத்துக்குடி ரிசர்வ் தொகுதி என வரவிடாமல் சுயநல ஆதிக்க சக்திகள் தங்களது பண பலத்தால்  கவனிப்பு களால் ? ஆட்சி மற்றும் அதிகாரிகள் பொது நிலைக்கு தூத்துக்குடி மாநகராட்சி மாற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர் 

thoothukudileaks


கடந்த 2021 ல் தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி  ஒடுக்கப்பட்ட சமுகத்தை சேர்ந்தவர் மேயராக பொறுப்பு ஏற்றிருக்க வேண்டியது .


தூத்துக்குடி பதிலாக சென்னை!!!

சுழற்றியடித்த சுனாமி சென்னை மாநகராட்சி பக்கம் விசியது   ரிசர்வ் பகுதி என தூத்துக்குடி மாநகராட்சி மாறுவதற்கு பதிலாக...


சென்னை மாநகராட்சி ரிசர்வ் தொகுதி என அறிவிக்கப்பட்டு திமுக மேயராக பிரியா வந்தார்.


 தற்போது இந்த தடவை தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதி ஆக மாறி பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் மேயர் ஆக வருவார் என்கிறார்கள் 


கெத்து காட்டும் திமுக!!!

தமிழகத்தில் அதிகப்படியான இடத்தில் முதல்வர் ஜோசப் விஜயின் ஆளும் கட்சி தவெக வெற்றி பெற்று இருந்தாலும் ...


தூத்துக்குடி மாவட்டத்தில்  தி மு க மூன்று எம்எல்ஏக்கள் வெற்றி பெற்று அனிதா ராதாகிருஷ்ணன் போன்றோர் இப்போது வரை தி மு க கெத்து காட்டி வருகின்றனர்.

தூத்துக்குடி திமுக என்றால்?

தற்போது தூத்துக்குடி  மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி இருந்து வருகிறார்   

இவர் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கீதா ஜீவனின் உடன் பிறந்த தம்பி தான்  தூத்துக்குடியில் திமுக என்றால் மறைந்த முரட்டு பக்தர் பெரியசாமியின் அரசியல் வாரிசுகள் தான்.


வேற யாருக்கும் விட்டுக் தரமாட்டார்கள் என்பது அனைவருக்கும் புரிய வைத்துள்ளார்கள் 

thoothukudileaks


மூடு அப் செட்டில்!!!

வருகின்ற மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவி ரிசர்வ் என ஆகிறது என்றால் இவர்கள் யாரோ பதிவு சுகம் பெற வேலை செய்யனுமா என்ற நிலை வரும் பதவி அதிகாரம் இல்லாத தூத்துக்குடி தி மு க நிச்சயமாக 5 வருடங்கள் தாக்கு பிடிக்க முடியுமா  என அதிர்ச்சியில் மூடு அப் செட்டில் உலவி கொண்டு இருக்கிறார்களாம்   

வீடியோ பார்க்க 

துள்ளி குதிக்கும் ஒரு தரப்பு!!!

தூத்துக்குடி மாநகராட்சி ரிசர்வ் தொகுதியா ஒரு தரப்பு துள்ளி குதித்து கொண்டு இருக்கிறது 

ஏற்கனவே இதுவரை 75 வருடங்களாக  ஆட்சியில் இருந்த அரசியல் கட்சிகளான காங்கிரஸ் திமுக அதிமுக செய்யாத ஒன்று  தவெக நிகழ்த்தி காட்டியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை  அமைச்சர் பதவி என்பது ஆதிக்க சக்திகளுக்கு தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு கிடையாது காங்கிரஸ் திமுக அதிமுக ஆகிய கட்சிகள் வழங்காமல் மறுக்கப்பட்டு  அரசியல் செய்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் ?...

இந்த தடவை 2026 சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ரிசர்வ் தொகுதியில் தவெக  எம்எல்ஏவாக வெற்றி பெற்ற மதன் ராஜா அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து முதல்வர் ஜோசப் விஜய் ஆச்சரியப்படுத்தி உள்ளார். 

தூத்துக்குடி லீக்ஸ் க்காக,...

தகவல் கட்டுரை 

செய்தியாளர் 

ரோஜா அருணன் 

"உலக சுற்றுச்சூழல் தினம்: தூத்துக்குடி பிங்க் பூங்காவில் மரக்கன்றுகள் நட்டு இயற்கை பாதுகாப்பு உறுதிமொழி

Tamil Nadu updates news by Arunan 

தூத்துக்குடி, ஜூன் 5:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை பொதுமக்களிடையே உணர்த்தும் வகையில் இன்று தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பிங்க் பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

thoothukudileaks


 வீடியோ பார்க்க 

நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், பசுமையை வளர்க்கவும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும் என்பதையும் வலியுறுத்தினர்.



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா இ.ஆ.ப., மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி, அந்தோணி மார்சலின்,  ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டனர்.

மேலும் தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


thoothukudileaks


உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, பசுமையான மற்றும் தூய்மையான நகரை உருவாக்கும் நோக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.

புதன், 27 மே, 2026

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம் தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் புகைப்படம்?

Tamil Nadu updates 27-5-2026

photo news by Arunan journalist 

​காரசாரமான தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டம்:  – 48 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

தூத்துக்குடி:மே27

தூத்துக்குடி மாநகராட்சியின் சாதாரண மாமன்ற கூட்டம் இன்று காலை 11 மணியளவில் மாநகராட்சி அலுவலக கட்டிடத்தில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டம் பல்வேறு அரசியல் நகர்வுகளுடனும், பரபரப்புகளுடனும் அரங்கேறியது.

​மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா மற்றும் துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.அதிமுக -காங்கிரஸ் கட்சி சேர்ந்த சிலர் கவுன்சிலர்கள் கூட்டரங்கு வரவில்லை..

thoothukudileaks



​48 தீர்மானங்கள் நிறைவேற்றம்:

​கவுன்சிலர்களின் காரசாரமான விவாதங்களுக்கு இடையே, மாநகராட்சியின் பல்வேறு வார்டு மேம்பாட்டு பணிகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்கள் குறித்த 48 முக்கிய தீர்மானங்கள் இன்றைய கூட்டத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

thoothukudileaks


​தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் 'காணவில்லை' முதல்வர் ஜோசப் விஜய் படம்: கிளம்பும் புதிய சர்ச்சை!

​இன்றைய மாமன்ற கூட்டத்தில் தீர்மானங்களை விட, அரங்கிலிருந்த ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன நடந்தது?

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்ட அரங்கில் தற்போதைய முதல்வர் விஜய்யின் புகைப்படம் இடம் பெறவில்லை. கடந்த மாதங்களில் நடைபெற்ற கூட்டங்களின் போது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதற்கு முன்னதாக முதல்வராக இருந்த மு.கருணாநிதி ஆகியோரின் புகைப்படங்கள் மாமன்ற கூட்ட அரங்கில் தொங்கவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


​தற்போது புதிய அரசியல் மாற்றங்களுக்குப் பிறகு, தற்போதைய முதல்வரின் புகைப்படம் மாமன்ற அரங்கில் வைக்கப்படாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

​— .

thoothukudileaks


ஒரு முன்னாள் ஆளும் கட்சி சேர்ந்த முக்கிய புள்ளி இன்று  வரவில்லை அவரோ த வெ க கட்சியில் சேர்ந்து பதவி பெறபோவதாக சொல்லப்படுகிறது 

புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

செவ்வாய், 24 பிப்ரவரி, 2026

எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது 83 மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கி மேயர் ஜெகன் பெரியசாமி உரை

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 


தூத்துக்குடி, பிப்ரவரி 25:

தூத்துக்குடி ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தமிழக முதல்வரின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி 83 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

thoothukudileaks


விழாவில் மேயர் பேசுகையில்,... "கணினியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அறிவு இன்று நம் கைகளில் வந்துவிட்டது. இது கடுமையான போட்டி நிறைந்த உலகம். கல்வி என்பது வெறும் மதிப்பெண் பெறுவதற்கல்ல — அறிவை வளர்ப்பதற்கானது. பெற்றோர்கள் கனவுகளுடன் பிள்ளைகளை கல்வி கற்க அனுப்புகிறார்கள். அந்தக் கனவை நாம் எப்படி நிறைவேற்றப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டும்" என்றார்.

உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து பேசிய மேயர்,...

thoothukudileaks


 தூத்துக்குடியில் பெண்களுக்கென்று மூன்று தனிப்பட்ட பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். 

மேலும் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை தவிர்க்கவும், மரங்கள் நடவும், சமூக பொறுப்புணர்வுடன் வாழவும் மாணவிகளை வலியுறுத்தினார்.

"எந்தப் பதவியில் இருப்பது முக்கியமல்ல — அந்தப் பதவியில் இருந்து எதை முன்னேற்றினோம் என்பதே முக்கியம். இந்த மேயர் பதவி எனக்கு திருப்தி அளிக்கிறது. இது ஒரு கடல் போன்றது. முடியாதது எதுவும் இல்லை — முயற்சி செய்தால் வெற்றி நிச்சயம். அதற்கு என்னையே எடுத்துக்கொள்ளலாம்" என்று உரையாற்றினார்.

விழாவிற்கு முன்னதாக மாணவிகளிடம் "மடிக்கணினி கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?" என்று மேயர் கேட்டதற்கு, "ப்ராஜெக்ட் செய்வோம்!" என்று மாணவிகள் உற்சாகமாக பதிலளித்தனர்.

விழாவில் கல்லூரி முதல்வர் ரூபா, துணை முதல்வர் மதுரவள்ளி, செயலாளர் ரோசாகுட்டி, உதவி பேராசிரியர் மாரிதங்கம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.



திங்கள், 23 பிப்ரவரி, 2026

சசிகலா புஷ்பா, அந்தோனி கிரேஸ் மீது பாய்ச்சல் "அதிரடி அரசியல் ஆரம்பித்தால் தாங்க மாட்டீர்கள்!மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி பேச்சு!"

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி  photo Arunan journalist 

news by sunmugasuthram press club president 

தூத்துக்குடி, பிப்ரவரி 23:

தூத்துக்குடியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடியாக பேசினார். வடக்கு மாவட்ட செயலாளரும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், முன்னாள் அதிமுக மேயர்களான சசிகலா புஷ்பா மற்றும் அந்தோனி கிரேஸ் ஆகியோர் மீது நேரடியாக குற்றச்சாட்டுகளை வைத்து அவர் ஆவேசமாக கொளுந்துவிட்டு எரிந்தார்.

thoothukudileaks


ரீல் புகழ் சசிகலா புஷ்பா மீது மேயர் பாய்ச்சல்!

சமூக வலைதளங்களில் ரீல் சுற்றுவதில் புகழ்பெற்ற முன்னாள் மேயரும் முன்னாள் எம்பியுமான சசிகலா புஷ்பா மீது மேயர் ஜெகன் பெரியசாமி கடும் விமர்சனங்களை கொட்டினார்.

"2014 வரை மேயராக இருந்த சசிகலா புஷ்பா இந்த ஊருக்கு என்ன செய்தார்? ஒரு மணி நேரத்தில் தண்ணீர் கொண்டுவந்தேன் என்கிறார். 284 கோடி ரூபாய் குடிநீர் சப்ளைக்காக ஒதுக்கப்பட்ட நிதி இன்று வரை பயனற்றுக் கிடக்கிறது. அந்த பணியை நாம்தான் நிறைவேற்றி வருகிறோம். 

அவரது ஆட்சியில் மழைக்காலத்தில் இரண்டு மாதங்கள் பள்ளிக்கூடங்களே திறக்காமல் மூடிக்கிடந்தது. தற்போது அந்த நிலையே இல்லை" என்று மேயர் கூறினார்.

தற்போது பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத்தலைவராக இருக்கும் சசிகலா புஷ்பா, தாம் இருக்கும் கட்சிக்கும் உதவி செய்யவில்லை என்று நையாண்டி செய்த மேயர், "278 கோடி செலவில் 32 குடிநீர் தொட்டிகள் அமைத்து 10 வார்டுகளில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது நாம்தான். 

மாநகராட்சி அலுவலகத்திற்கு மாதம் ஒரு நாள் மட்டும் வந்த சசிகலா புஷ்பா இப்போது என்ன பேசுகிறார்?" என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

கட்டப்பஞ்சாயத்து அந்தோனி கிரேஸ் மீது கடுங்கோபம்!

முன்னாள் மேயர் அந்தோனி கிரேஸ் மீதும் மேயர் வெடித்தார். "அந்தோனி கிரேஸ் மேயராக இருந்தபோது கட்டப்பஞ்சாயத்து நடத்துவதற்காகவே மேயர் அறைக்குள் தனி அறை அமைத்தார்கள். 

பணி நியமனம் தருவதாக கூறி 10 பேரிடம் ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் வாங்கி பணி ஆணையே வழங்கவில்லை. பாவம், அந்த ஏழை மக்கள் செருப்பு தேய அலைந்தது தான் மிச்சம். பின்னர் ஆணையர் ராஜமணிதான் அவர்களுக்கு நீதி வழங்கினார்" என்று வெளிப்படையாக கூறினார்.

மேலும் "ஒரு ஏக்கர் அரசு இடத்தை கைப்பற்ற இறுதி முயற்சி செய்து வருகிறார். 'மூன்று மாதத்தில் அந்த இடத்தை மீட்போம்' என்று பேசுகிறார். நான் உறுதியாக சொல்கிறேன் — ஒரு படி மண்ணு கூட உன்னால் எடுக்க முடியாது!" என்றார் மேயர்.

பிஜேபி வக்கீலுக்கும் எச்சரிக்கை!

பிஜேபியில் அரசு வக்கீலாக இருக்கும் சண்முகசுந்தரம் தேவையில்லாமல் தெப்பக்குளம் பற்றி பேசுவதாக குறிப்பிட்ட மேயர், "140 வருட வரலாற்றை தெரியாமல் பேசுகிறார். 

அவரது ஆதரவாளர் ஒருவரே அந்த இடத்தை ஆட்டை போட்டு வைத்துள்ளார். இதுவரை மாநகராட்சி பகுதியில் 50 கோடி மதிப்புள்ள அரசு இடங்களை நாம் மீட்டுள்ளோம். இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள்" என எச்சரித்தார்.

வெற்றி இலக்கு 200 தொகுதி!

பொதுக்கூட்டத்தில் தொண்டர்களை ஊக்கப்படுத்திய மேயர், "ஒவ்வொருவரும் 50 வாக்குகள் திமுகவிற்கு கொண்டு வர வேண்டும். 200 தொகுதி நமது இலக்கு. 280 பாகம் இருந்த இடத்தில் 360 பாகமாக மாறிவிட்டது. எந்த சலசலப்புக்கும் நான் அஞ்ச மாட்டேன். அதிரடி அரசியல் ஆரம்பித்தால் உங்களால் தாங்க முடியாது — குற்றம் சொல்வதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்!" என்று எதிர்க்கட்சியினரை நேரடியாக சவால் விட்டார்.

— தூத்துக்குடி லீக்ஸ் சிறப்பு செய்தி

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி, பிப்ரவரி 9:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம் இன்று (09.02.2026) காலை 10 மணியளவில் காணொளி காட்சி மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைக்கப்பட்டது.

thoothukudileaks


இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சி அறிஞர் அண்ணா மண்டபத்தில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை செயல்படுத்தினர்.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


விழாவில் பேசிய தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூய்மை பணியாளர்களின் காலை உணவு திட்டத்திற்காக ரூ.2 கோடி 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிதி மூலம் தினமும் சத்தான, சுகாதாரமான உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இன்று தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 13இடத்தில் துவக்கி வைத்தனர் 

1)பழைய மாநகராட்சி அலுவலகம் 

2)அறிஞர் அண்ணா மண்டபம் 

3) அறிஞர் அண்ணா பேருந்து நிலையம்

4) புதிய பேருந்து நிலையம் ward ஆபீஸ்.

5) ஜோதி நகர் RRC மையம்

6) அம்பேத்கர் நகர் ward ஆபீஸ்.

7) மேட்டுப்பட்டி MCC.

8) கால்டுவெல் காலனி வார்டு ஆபீஸ்.

9) முத்தையாபுரம் வார்டு ஆபீஸ்.

10) JS Nagar ward office.

11) சிதம்பரம் நகர் மாநகராட்சி வணிக வளாகம்.

12) டோபி கானா வணிக வளாகம்.

13) P&T Colony ward office.

தூய்மை பணியாளர்களின் நலனை முன்னிறுத்தி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி அவர்களின் உடல்நலம் மற்றும் பணித்திறன் மேம்பட உதவும் எனவும், நகர தூய்மை பணிகளில் உற்சாகம் அதிகரிக்கும் எனவும் விழாவில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

சனி, 27 டிசம்பர், 2025

இரவு முழுவதும் இருசக்கர வாகனத்தில் மாநகரப் பகுதிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன் – பொதுமக்கள் வியப்பு

தூத்துக்குடி லீக்ஸ் – நாளிதழ் செய்தி

தூத்துக்குடி, டிசம்பர் 27: 

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியாமல் சாலைகள் இருளில் மூழ்கியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நேரடியாகச் சென்று மாநகரம் முழுவதையும் ஆய்வு செய்தார்.



video 

காரில் சென்றால் பிரச்சினைகளை சரியாகக் கண்டறிய முடியாது என்ற எண்ணத்தில், இருசக்கர வாகனத்தின் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு இரவு நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரம் மாநகரின் பல்வேறு பகுதிகளை தெருத்தெருவாகச் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, எந்தப் பகுதிகளில் தெருவிளக்குகள் எரியவில்லை என்பது குறித்த குறிப்புகளை எடுத்துக்கொண்ட மேயர், சாலைகளின் நிலை, சாலை விரிவாக்கம், கழிவுகள், குப்பைகள், மணல் தீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் நேரடியாகக் கண்டறிந்தார்.

ஆய்வின் அடிப்படையில், முக்கிய சாலைகளில் எரியாத மின்விளக்குகள் கணக்கெடுக்கப்பட்டு, உடனடியாகப் பொருத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சாலைகளில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய பொறுப்பை உணர்ந்து செயல்படும் விதமாகவும், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு ஆலோசனையின்படியும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னெடுப்பிலும் மேயர் ஜெகன் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரவு நேரத்தில், பாதுகாப்பு அணியுடன் கூட இல்லாமல், இருசக்கர வாகனத்தில் மாநகரம் முழுவதும் சுற்றிப் பார்த்த மேயர் ஜெகனின் இந்த திடீர் ஆய்வை பார்த்த பொதுமக்கள் வியப்படைந்தனர். 

மேலும், மேயர் இரவு நேரத்தில் மாநகரைப் பார்வையிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.



சனி, 20 டிசம்பர், 2025

தூத்துக்குடியில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்றோருக்கு போர்வை வழங்கல் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

தூத்துக்குடி டிச20

தூத்துக்குடி பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்கம் மற்றும் ஆல் கேன் டிரஸ்ட் சார்பில், இரவு நேரத்தில் சாலை ஓரங்களில் உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாத மக்களுக்கு போர்வை வழங்கும் மனிதநேய சேவை நிகழ்ச்சி தூத்துக்குடி மாநகர பகுதியில் நடைபெற்றது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks


இந்நிகழ்ச்சியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்து, போர்வைகளை வழங்கினார். அவருடன் பியர்ல்சிட்டி பத்திரிகையாளர் சங்க செயலாளர் காட்சன், ஆல் கேன் டிரஸ்ட் நிறுவனரும் தூத்துக்குடி மாவட்ட அரசு வழக்கறிஞருமான மோகன் தாஸ் சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவற்றோருக்கு போர்வைகளை வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பணிச்சுமை அதிகம் இருப்பதாலும், வீடு இல்லாத முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உறங்க வேண்டிய சூழ்நிலை நிலவுவதாலும், தற்போது நிலவும் அதிகமான பனிப்பொழிவு காரணமாக அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். 


இதனை கருத்தில் கொண்டு, மனிதநேய அடிப்படையில் இந்த போர்வை வழங்கும் சேவை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், வேம்படி இசக்கி அம்மன் கோவில், பனிமய மாதா கோவில், சிவன் கோவில் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சாலை ஓரமாக உறங்கும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் வீடு இல்லாமல் தங்கிய மக்களுக்கு போர்வைகள் வழங்கப்பட்டன.

.

மனிதநேயத்தை வெளிப்படுத்தும் இச்சேவையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

திங்கள், 13 அக்டோபர், 2025

திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள்” — தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி 

தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கும் விழா போல்பேட்டை முகாம் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சங்க உறுப்பினர்களுக்கு போனஸை வழங்கிய பின்னர், தூத்துக்குடி மேயர் ஜெகன்  பேசினார்.



அவர் கூறியதாவது:
“திமுகவில் கலைஞரின் உறுதியான பக்தனாக இருந்த என் தந்தையார், 20க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து தொழிலாளர்களின் நலனுக்கும், திமுக வளர்ச்சிக்கும் பெரும் பங்களிப்பு செய்தார்.


 ஒவ்வொரு ஆண்டும் உப்பள அதிபர்களுடன் இணக்கமாக பேசி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வை பெற்றுத் தந்தார்.

அவரது மறைவிற்கு பின் தொழிற்சங்க பிரதிநிதிகள் வேண்டுகோளின் பேரில், அந்தப் பொறுப்பை நான் தொடர்ந்து செய்து வருகிறேன். மாநகரின் அடையாள தொழிலான உப்பளத் துறையில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தாங்களே சேமித்த பணத்தை சங்கத்தின் பெயரில் போனஸாக வழங்கி வருவது பெருமை அளிக்கிறது.

என் பார்வையில் திமுகவும் தொழிலாளர்களும் எனக்கு இரு கண்கள் போன்றவர்கள். உங்கள் அடுத்த தலைமுறைவும் திமுகவிற்கும் தளபதியாருக்கும் துணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இந்நிகழ்வில் சங்கத்தின் பொருளாளர் ஆறுமுகநயினார், மாவட்ட திமுக பொருளாளர் ரவீந்திரன், பொது குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, இராஜா, வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், ராஜாமணி, போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், பகுதி சபா உறுப்பினர் ஐசக், சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Photo news by sunmugasuthram press club president 

வெள்ளி, 26 செப்டம்பர், 2025

தூத்துக்குடியில் உலக வெறிநாய் தினம் ரேபிஸ் தடுப்பூசி முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி ஆணையர் பிரியங்கா பங்கேற்பு

தூத்துக்குடி மாநகராட்சி – கால்நடை பராமரிப்பு துறை இணைந்து உலக வெறிநோய் தடுப்பு தின விழா – ரேபிஸ் தடுப்பூசி முகாம்

thoothukudileaks


தூத்துக்குடி : செப் 27

உலக வெறிநோய் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து, தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய மைதானத்தில் ரேபிஸ் (வெறிநாய்) தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது.

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

Thoothukudileaks
   நாய் 🐕 பிடிப்பவர் 

thoothukudileaks


இம்முகாமில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா, மண்டல இணை இயக்குநர் டாக்டர் எம். விஜய் குமார்,துனை இயக்குநர் ஆபிரகாம் கால்நடை பன்முக மருத்துவமனை பிரதம மருத்துவர் டாக்டர் பழநி, மாநகராட்சி நகர நல சுகாதார தலைமை அலுவலர் டாக்டர் சரோஜா, (SO) சுகாதார அலுவலர் ராஜ் குமார், நகர நல சுகாதார ஆய்வாளர் பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

சுவாரஸ்யமான வீடியோ பார்க்க 

முகாமில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள நாய் வளர்ப்போர், தங்களது செல்ல நாய்களுக்கு இலவசமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.


 மேலும் மாநகராட்சி சார்பில்  நாய் பிடிப்பு வண்டி முலம் ஊழியர்கள் தெருநாய்கள் பிடித்து ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த ப்பட்டது.



மாநகராட்சி சார்பில், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, வெறிநோய் தடுப்பு குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

thoothukudileaks

thoothukudileaks


👉

thoothukudi new busstand 

thoothukudileaks

thoothukudileaks

thoothukudileaks

வியாழன், 25 செப்டம்பர், 2025

40 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றல்: மேயர் ஜெகன் அதிரடி நடவடிக்கை

சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று வழித்தடங்கள் மீட்டெடுப்பு

தூத்துக்குடி: செப் 26

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 40 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு மக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த வழித்தடங்களை மேயர் ஜெகன் அதிரடியாக அகற்றினார்.

 வி.இ.ரோட்டில் இருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று வழித்தடங்கள் ஒரே நாளில் மீட்டெடுக்கப்பட்டுள்ளன.


###பல ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு


தூத்துக்குடி நகராட்சி ஆரம்ப காலத்தில் பல்வேறு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்று, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை நிலவி வந்தது. இது தொடர்பாக மாநகராட்சி மேயர் ஜெகன் தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவர் மாநகர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஆங்காங்கே அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறார்.



###மேயரின் நேரடி ஆய்வு


மேயர் ஜெகன்  வி.இ.ரோடு ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மூன்று இடங்களில் வழித்தடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதை நேரடியாக பார்வையிட்டார்.

 மாநகராட்சியில் ஆவணங்களை ஆய்வு செய்து, அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஆக்கிரமிப்பு உறுதி செய்யப்பட்டது.

வீடியோ பார்க்க 


###அதிரடி நடவடிக்கை


மாநகராட்சி நகர அமைப்பு திட்ட உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது உள்ளிட்ட அதிகாரிகள் ஜே.சி.பி. இயந்திரத்துடன் ரத்னா காலனி பகுதிக்கு சென்றனர். 



அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள்:

- ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் 1வது தெரு பகுதிக்கு செல்லும் வழித்தடம்

- ரத்னா காலனியில் இருந்து சண்முகபுரம் பகுதிக்கு செல்லும் மற்றொரு வழித்தடத்தில் ஹாலோ பிளாக் கல்லால் எழுப்பப்பட்ட சுவர்

- வி.இ. ரோட்டில் இருந்து சண்முகபுரத்துக்கு செல்லும் மூன்றாவது பாதையின் ஆக்கிரமிப்பு


###மக்களின் பாராட்டு


30 வருடத்திற்கு மேலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாமல் இருந்த ஆக்கிரமிப்புகளை மேயர் பார்வையிட்ட 12 மணி நேரத்திலேயே அகற்றிய விரைவு நடவடிக்கைக்காக அப்பகுதி மக்கள் மேயர் ஜெகன் பெரியசாமியை உற்சாகத்துடன் பாராட்டினார்கள்.


#குறிப்பிடத்தக்க சாதனை


இந்த ஆக்கிரமிப்பு அகற்றம் மூலம் வி.இ. ரோட்டில் இருந்து சண்முகபுரம் பகுதியின் எந்த தெருவுக்கும் எளிதாக செல்ல முடியும். 


இதுவரை எந்த ஒரு மாநகராட்சி மேயருக்கும் இல்லாத அளவுக்கு சாலை ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை மேயர் ஜெகன் எடுத்துள்ளார். 


40 ஆண்டுகால ஆக்கிரமிப்பை பார்வையிட்ட 12 மணி நேரத்தில் அகற்றிய இந்த அதிரடி நடவடிக்கை பாராட்டுக்குரியது. 

 News by sunmugasuthram 

press club president 

இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது 

சனி, 13 செப்டம்பர், 2025

தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் கனிமொழி எம்பி கனிமொழி எம்பி நிகழ்ச்சியை புறக்கணித்த தூத்துக்குடி கவுன்சிலர் கள்!!!!

தூத்துக்குடி லீக்ஸ் நாளிதழ் செய்தி

Photo news by Arunan journalist 

தூத்துக்குடி : 13.09.2025

முதல் வீடியோ 


தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன் எனத் தெரிவித்தார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“திமுகவை விமர்சிக்க எடப்பாட பழனிச்சாமிக்கு எந்தத் தகுதியும் இல்லை. முதலில் அவர் தனது கட்சியை உடையாமல் காப்பாற்றிக் கொண்டால் நன்று. திமுக கூட்டணி உடையும் என்ற அவரது பகல் கனவு ஒருநாளும் நிறைவேறாது,” என்றார்.

தமிழகத்தில் விரைவில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்க உள்ளேன்



மேலும், இந்தியாவின் 15வது குடியரசு துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்துத் தெரிவித்த அவர்,
“தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர் நிச்சயம் நடுநிலையோடு சிறப்பாக செயல்பட்டு, மாநில உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பார். தமிழ்நாடு எப்போதும் உரிமைக்காக போராடி வருகிறது. புதிய துணை ஜனாதிபதி அதனை உணர்ந்து செயல்பட வேண்டும்,” எனக் கூறினார்.

அதோடு, மணிப்பூர் தேர்தல் நடைபெறவிருப்பதால் தற்போது பிரதமர் அங்கு சென்றிருப்பதாகவும், ஆனால் நாடாளுமன்றத்தில் திமுக முதலில் அந்த பிரச்சினையை கிளப்பியபோது பிரதமர் செல்ல தயங்கியதாகவும் கனிமொழி குறிப்பிட்டார்.

thoothukudileaks


தொடக்கி வைத்த கனிமொழி எம்பி டிமிக்கி கொடுத்த கவுன்சிலர்கள்!!!

தூத்துக்குடி : 13.09.2025

ஏ ஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் தற்போதைய காலக்கட்டத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்றாகும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அம்பேத்கார் நகர் ஸ்டெம்பார்க் மினி திரையரங்கில், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி நடைபெற்றது. 

பயிற்சியை தொடங்கி வைத்து பேசிய கனிமொழி எம்.பி.,...


“தமிழகத்தில் அனைத்து துறைகளும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றன. முதன்முதலில் கம்ப்யூட்டர் பாலிசி திட்டத்தை கொண்டு வந்தவர் கலைஞர். 



இந்நிலையில் ஏ ஐ தொழில்நுட்பம் மூலம் பல்வேறு தகவல்களை அறிந்து பின்னர் முடிவு எடுக்கலாம். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஒரு ‘ஏ ஐ’ போல் செயல்பட்டவர். 


பலரின் கருத்துக்களை கேட்டு முடிவெடுப்பார். அதுபோல், இந்த தொழில்நுட்பத்தையும் எவ்வித தயக்கமின்றி அனைவரும் கற்றுக்கொண்டு பயன்படுத்த வேண்டும்.




ஆனால் எவ்வளவு தொழில்நுட்பம் வந்தாலும் இறுதியில் மனித அறிவும் தீர்மானமுமே முக்கியமானது,” என்றார்.கனி மொழி எம்பி 

thoothukudileaks


இக் கூட்டத்தில் அடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரிய சாமி  ஆணையர் பிரியங்கா ஆகியோர் பேசினர்.

thoothukudileaks



கனிமொழி எம்பி நிகழ்ச்சியை  புறக்கணித்த தூத்துக்குடி கவுன்சிலர் கள்!!!!

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான ஏ ஐ திறன் பயிற்சி இவர்களுக்காக கனிமொழி எம்பி தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் தூத்துக்குடி கவுன்சிலர் கள் வராமல் புறக்கணிப்பு செய்தனர். தூத்துக்குடியில் 60 கவுன்சிலர் களில் ஒரு சிலர் மட்டுமே வந்து கலந்து கொண்டனர்.

மாமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 60 பிரதிநிதிகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பயிற்சிக்கு வந்திருந்தனர்.


இக்கூட்டத்தில் ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா, மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரெங்கசாமி, இசக்கிராஜா, சுரேஷ்குமார், நகரமைப்பு உதவி செயற்பொறியாளர்கள் காந்திமதி, முனீர் அகமது, உதவி பொறியாளர் சரவணன், நகர நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர்கள் ராஜசேகர், நெடுமாறன், ஸ்டாலின் பாக்கியநாதன், திமுக பகுதி செயலாளர் சிவக்குமார், பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜெஸ்பர், லிங்கராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இரண்டாவது வீடியோ 

நடந்து போகும் போது காற்றில் குடை ☂️ பறந்து தரையில் விழுவது போல்!!!


இச் செய்தி புகைப்படங்களில் செயற்கை தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது .

திங்கள், 2 ஜூன், 2025

102வது பிறந்த நாளில் டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு மகிழ்ச்சித் திருநாள் – தூத்துக்குடியில் இனிப்புப் பகிர்வு, பொதுமக்கள் கலந்த கொண்டாட்டம்!

Tamil Nadu updates photo news by Arunan journalist 


📰 தூத்துக்குடி லீக்ஸ்
📅 3 சூன் 2025, செவ்வாய்
✍️ சிறப்புச் செய்தி

தூத்துக்குடி:
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் வரலாற்று தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மகிழ்ச்சியான சூழ்நிலையில் விழாக்கள் நடைபெற்றன.


அவரது சமூகநலப் பணிகளை நினைவுகூரும் விதமாக நகரமெங்கும் பொதுமக்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில், பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு லட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அவர்கள் நேரில் சென்று மக்களுக்கு இனிப்புகள் வழங்கி, "கருணாநிதியின் பிறந்த நாளில் மக்கள் மத்தியில் இருப்பது எனக்கு பெருமை அளிக்கிறது. அவர் காண்பித்த பாதை தான் எங்களை வழிநடத்துகிறது" என்றார்.







தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில், மாநகராட்சி மேயர் . ஜெகன்  பேருந்து பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு (லட்டு) வழங்கினார். பேருந்துக்குள் பயணிக்கவிருந்த மக்களிடம் நேரில் சென்று அவர்களிடம் இனிப்பை பகிர்ந்த மேயர், கலைஞர் அவர்களின் சமூகநீதித் தத்துவங்களை நினைவுகூரும் வகையில் மக்கள் சேவையில் ஈடுபடுவது முக்கியம் என்றார்.


📸 புகைப்படம் விளக்கம்:
தூத்துக்குடி கணேஷ் ஹோட்டல் அருகில் நடைபெற்ற நிகழ்வில், மேயர் ஜெகன் பெரியசாமி மக்களுக்குத்  இனிப்பு வழங்கும் காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.



மேயரிடம் மருத்துவ உதவி கேட்கும் மூதாட்டி !!!


மேலும், தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள வணிக வளாகங்களில், திமுக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து, கருணாநிதியின் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடினர். அந்த இடத்தில் அனைவரும் ஒன்றாக நின்று புகைப்படம் எடுத்தனர், இது அவரின் பணி மற்றும் பாதிப்பை மக்கள் மனதில் இன்னும் உயிரோடு வைத்திருப்பதை உறுதிபடுத்துகிறது.





📸 புகைப்படம் 2 விளக்கம்:

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் 
“தளபதி காபி & டீ ஸ்டால்” முன் நடைபெற்ற இந்த காட்சியில், திமுகவின் நகர நிர்வாகிகள், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கருணாநிதியின் பிறந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுவதைக் காணலாம்.

video அழுத்தி பார்க்க 



இவ்வாறு, தூத்துக்குடி நகரமெங்கும், கலைஞரின் பிறந்த நாள் விழா மகிழ்ச்சியாகவும், பொதுமக்கள் பங்கேற்பு அதிகமாகவும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.