புதன், 25 பிப்ரவரி, 2026

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!வரவு செலவு அறிக்கை பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு தூத்துக்குடி டாஸ்மாக் கடை வாடகை விடுவது குறித்து திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் கடும் எதிர்ப்பு !! தூத்துக்குடி மாநகராட்சியின் புதிய முயற்சிதூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) எந்தெந்த சாலைகள் பெயர் விவரம்!

Tamil Nadu updates 

photo news by Arunan journalist 

தூத்துக்குடி மாநகராட்சி 2026-27 பட்ஜெட்: ரூ.17,697 லட்சம் வருவாய் இலக்கு!

தூத்துக்குடி, பிப்ரவரி 26:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டிற்கான உத்தேச வரவு செலவு அறிக்கை இன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

thoothukudileaks


தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இன்று அவசர/சாதாரண மன்றக் கூட்டம் மாநகராட்சி மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர் பிரியங்கா துறை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நகரின் குடிநீர் விநியோகம், சாலை பழுது பார்க்கும் பணிகள், மழைநீர் வடிகால் திட்டங்கள், தூய்மை பணிகள் மற்றும் சொத்துவரி வசூல் நிலைமை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பொதுமக்கள் குறைகள் தொடர்பாக உறுப்பினர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர்.

நகரில் நடைபெற்று வரும் மேம்பாட்டு திட்டங்கள் குறித்த முன்னேற்ற அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. குறிப்பாக புதிய சாலை அமைப்பு, தெருவிளக்கு பராமரிப்பு மற்றும் கழிவுநீர் கால்வாய் சீரமைப்பு பணிகளை விரைந்து நிறைவேற்ற அதிகாரிகளுக்கு மேயர் அறிவுறுத்தினார்.

மேலும், அரசு நலத்திட்டங்கள் மக்களுக்கு விரைவாக சென்றடைய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சில தீர்மானங்கள் ஒருமனதாகவும், சில தீர்மானங்கள் விவாதத்திற்குப் பிறகும் நிறைவேற்றப்பட்டன.

கூட்டம் முடிவில், நகரின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மேயர் வலியுறுத்தினார்.

மூன்று நிதி வகைகளில் உத்தேச வருவாய்:

நடப்பு ஆண்டான 2026-2027க்காக வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம், குடிநீர் மற்றும் வடிகால் நிதியில் ரூ.342.79 லட்சம், கல்வி நிதியில் ரூ.327.82 லட்சம் உபரியாக வருவாய் ஈட்டப்படும் என உத்தேசிக்கப்பட்டுள்ளது.

வருவாய் நிதி விவரம்:

வருவாய் நிதியில் சொத்துவரி, இதர வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் ரூ.3,802.39 லட்சம், முத்திரை கட்டணம் மற்றும் கேளிக்கை வரியாக ரூ.600 லட்சம், அரசு மானியம் மற்றும் மாநில பகிர்மான நிதியாக ரூ.7,714 லட்சம், 15வது நிதிக்குழு மானியமாக ரூ.1,000 லட்சம், மற்றும் ஏனைய வருமானங்கள் மூலம் ரூ.4,581.03 லட்சம் என மொத்தம் ரூ.17,697.42 லட்சம் வருவாய் எதிர்பார்க்கப்படுகிறது.

செலவு விவரம்:

சம்பளம், ஓய்வூதியம் மற்றும் ஊழியர்கள் தொடர்பான செலவினங்களுக்கு ரூ.8,276.75 லட்சம், நிர்வாக செலவினங்களுக்கு ரூ.817.25 லட்சம், சாலை, கட்டிடங்கள் மற்றும் பராமரிப்பு இயக்க செலவினங்களுக்கு ரூ.6,824 லட்சம், நிதி மற்றும் திட்டமிட்ட செலவினங்களுக்கு ரூ.280.65 லட்சம், பொது நிதி பங்களிப்புக்காக ரூ.1,200 லட்சம் என மொத்த செலவு ரூ.17,398.65 லட்சம் ஆகும்.

இதன்படி வருவாய் நிதியில் ரூ.298.77 லட்சம் உபரி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டான 2025-2026 வரவு செலவு அறிக்கையும் திருத்தப்பட்டு இம்மாமன்றத்தில் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


தூத்துக்குடி மாநகராட்சி பட்ஜெட் 2026-27: பொலிவுறும் மாநகரம்! 278 புதிய சாலைகள், ஸ்மார்ட் குடிநீர் திட்டம் - அதிரடி அறிவிப்புகள்!

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாநகராட்சியின் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநகரின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் இதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

🛣️ சாலை மேம்பாடு மற்றும் போக்குவரத்து

278 புதிய சாலைகள்: நகர்ப்புற சாலை மேம்பாட்டு (TURIP) நிதியின் கீழ் மாநகரம் முழுவதும் 278 சாலைகள் புதிதாக அமைக்கப்படும்.

தூசியில்லா சாலைகள்: NCAP திட்டத்தின் கீழ் கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகள் 'End to End Paving' முறையில் தூசியில்லா சாலைகளாக மாற்றப்படும்.

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்: வி.வி.டி சிக்னல் முதல் 4-ம் கேட் வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு நடைபாதைகள் ஒழுங்குபடுத்தப்படும்.

தூய்மை காற்று திட்டத்தின் (NCAP) கீழ், தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 'தூசி இல்லா சாலைகளாக' (End to End Paving) மாற்றப்படவுள்ள சாலைகளின் விவரங்கள் இதோ:

​கிரேட் காட்டன் ரோடு

​வடக்கு பீச் ரோடு

​தெற்கு பீச் ரோடு

​கீழரத வீதி

​குறிஞ்சி நகர்

​பாளை ரோடு

​வி.வி.டி சிக்னல்

​இந்தச் சாலைகளில் ஓரங்களில் மண் படிவதைத் தடுக்கவும், வாகனங்கள் செல்லும்போது தூசி எழாமல் இருக்கவும் முழுமையாக நடைபாதை வரை தார் அல்லது கற்கள் பதிக்கப்பட்டு (End to End) சீரமைக்கப்படும்..

மிதிவண்டி பிரத்யேக வழித்தடம்: ரஹ்மத் நகர், கடற்கரை சாலை மற்றும் பக்கில் ஓடை பகுதிகளில் மோட்டார் இல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க தனி வழித்தடங்கள் அமைக்கப்படும்.

💧 குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள்

24x7 ஸ்மார்ட் குடிநீர் திட்டம்: மாநகரின் 10 வார்டுகளில் முன்னோட்டமாக 24 மணி நேர குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். இதனை கண்காணிக்க SCADA தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும்.

BIO CNG திட்டம்: கழிவுகளில் இருந்து இயற்கை எரிவாயு தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாதாள சாக்கடை விரிவாக்கம்: விடுபட்ட பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டம் விரிவுபடுத்தப்படும்.

🏫 கல்வி மற்றும் இளைஞர் நலன்

நவீன நூலகங்கள்: மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காகப் புதிய நூலகங்கள் மற்றும் வாசிப்பை ஊக்குவிக்க 'The Hindu' நாளிதழ் வாரந்தோறும் வழங்கப்படும்.

விளையாட்டு மையங்கள்: அம்பேகர் நகரில் தினசரி சந்தை, கிரிக்கெட் மைதானம், ஸ்கேட்டிங் தளம் மற்றும் வில்வித்தை பயிற்சி மையங்கள் அமைக்கப்படும்.

தற்காப்பு கலை: மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்குத் தற்காப்பு கலை பயிற்சிகள் வழங்கப்படும்.

🌳 சுற்றுச்சூழல் மற்றும் பொழுதுபோக்கு

பசுமைத் தூத்துக்குடி: 100 ஏக்கர் பரப்பளவில் மியாசாகி காடுகள், 50 ஏக்கர் பரப்பளவில் பனை காடுகள் மற்றும் 5 இடங்களில் 'தருவைக்குளம்' மாடலில் மினி கோபுர விளக்குகளுடன் பூங்காக்கள் அமைக்கப்படும்.

செங்குத்து தோட்டம்: மாநகரின் அழகுக்காகப் பல இடங்களில் Vertical Gardening மற்றும் வண்ண ஒளிவிளக்குகள் அமைக்கப்படும்.

🏢 இதர முக்கிய அறிவிப்புகள்

CCTV கண்காணிப்பு: பக்கில் ஓடைப்பகுதியில் குப்பைகள் கொட்டுவதைத் தவிர்க்க நவீன CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.

விற்பனை மண்டலங்கள்: நடைபாதைகளில் இடையூறாக இருக்கும் கடைகளை முறைப்படுத்தத் தனி விற்பனை மண்டலங்கள் (Vending Zones) உருவாக்கப்படும்.

இ-ஆபீஸ் திட்டம்: மாநகராட்சி நிர்வாகத்தை வேகப்படுத்த காகிதமில்லா 'E-Office' முறை முழுமையாக அமல்படுத்தப்படும்.

தூத்துக்குடி மாநகரத்தை ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றும் நோக்கில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளதாகப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.


அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு 

பட்ஜெட் எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொறடா மந்திர் மூர்த்தி தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி பத்மாவதி  செண்பக செல்வன் ஜெயராணி ஜெயக்குமார் வெற்றி செல்வன் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர் 

thoothukudileaks


 டாஸ் மாக் கடை தீர்மானம் நிறைவேற்ற   திமுக கவுன்சிலர் கள்  எதிர்ப்பு !!!

20) தூத்துக்குடி மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட டோபிகான வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் மாவட்ட மேலாளர், டாஸ்மாக் லிட்  கடிதம் ந.க.எண் அ7/127/2025 நாள் 12.12.2025 ன்படி மதுபான சில்லரை விற்பனை கடை செயல்படுவதற்கு மாத வாடகையாக ரூ.12,000/- GST உப்பட நிர்ணயம் செய்து தனி மின் மீட்டர் வசதியுடன் 500 சதுரடியில் கட்டிடம் வாடகைக்கு ஒதுக்கீடு செய்து தருமாறு கோரப்பட்டுள்ளது.


டோபிகானா வணிக வளாகத்தில் கடை எண்கள் G3. G4 மற்றும் G5 ஆகிய மூன்று கடைகள் கடைகளின் ஆரம்ப மாத வாடகை தொகை ரூ.4,050.4,600.4600 = ரூ.13,250/-18 சதவீதம் GST ரூ.2385- மொத்தம் ரூ. 15635/- ஆகும். டோபிகானான வணிக வளாகம் 18 முறை ஏலம் மற்றும் ஒப்பந்தபுள்ளிகள் கோரப்பட்டும். ஒரு சில உயர்ந்தபட்ச ஒப்பந்தபுள்ளி கேள்விதாரர்களும் பயன்படுத்த இயலாமல் வணிக வளாகம் செயல்பாட்டிற்கு வராத நிலையிலும், மாநகராட்சியின் ஆரம்ப மாத வாடகை தொகையினை விட குறைவாக ரூ.12000/ GST உப்பட நிர்ணயம் செய்துள்ளது 

thoothukudileaks
எதிர்ப்பு 

தூத்துக்குடி லீக்ஸ்
எதிர்ப்பு தெரிவித்த திமுக மற்றும் கூட்டணி கவுன்சிலர்கள் 


இந்த தீர்மானம் நிறைவேற்ற திமுக கவுன்சிலர்கள் கந்தசாமி ராமகிருஷ்ணன் ரெக்ஸ்லீன் மற்றும் கூட்டணி கவுன்சிலர் கள் எதிர்ப்பு தெரிவித்து மேயர் இடம் முறையிட்டனர் 



- தூத்துக்குடி லீக்ஸ் நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக